07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 16, 2013

புஷ்பராகங்கள்!!

கன்னிப்பொங்கல்.

திருமணமாகாத பெண்கள் பொங்கல் பொங்குவதால் இது கன்னிப்பொங்கல் என்றும் உறவினர்கள் ஒருத்தருக்கொருத்தர் கண்டு களிப்பது என்பதால் காணும் பொங்கல் என்று பெயர் பெற்றதாகவும் சிறு பிள்ளைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி கொண்டாடும் நாள் என்பதால் சிறு வீட்டுப்பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள். இது ‘கணுப்பிடி’ என்றும் கூட அழைக்கப்படுகிறது. கோவை பக்கத்தில் ‘பூப்பறிக்கும் திருவிழா’ என்பது இந்த காணும் பொங்கலன்று தான் நடைபெறுகிறது.



மார்கழி மாதம் கோலங்களில் வைக்கும் சாணத்தை [ இதை சாணிப்பிள்ளையார் என்று கூறுவார்களாம்] அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, இது மாதிரி மாதம் முழுவதும் சேர்த்து வைத்திருக்கும் ‘சாணி பிள்ளையார்களை, எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விட்டு, கோவிலில் பொங்கல் படையல் போட்டு கொண்டாடுகிறார்கள். இன்னொரு சமூகத்தில் ‘கணுப்பிடி’ சகோதர, சகோதரிகளுக்காக கொண்டாடப்படுகிறது. முதல் நாளே, சிறிது சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், அவற்றில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு சாதம், வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று ஒவ்வொன்றிலும் உருண்டை பிடித்து வெளியிலிருக்கும் துளசி மாடத்திற்கருகே இஞ்சி இலைகள், மஞ்சள் இலைகள் பரப்பி அவற்றில் வைத்து, கரும்பு, பழங்கள் வைத்து பூஜை செய்து, வீட்டில் பெரியவர்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறி, மஞ்சளும் குங்குமமும் தந்து வீட்டினுள்ளே அனுப்புகிறார்கள். சில ஊர்களில் துளசி மாடத்திற்குப்பதிலாக ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் இந்த ‘ கணுப்பிடி’ நடக்கும்.

புஷ்பராகம்



இந்தக் கல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. ஆங்கிலத்தில் TOPAZ என்று அழைக்கப்படுகிறது!

புஷ்பராகங்களாய் நம்மை அசத்தும் இன்றைய பதிவர்கள்.....

திருமதி.ஏஞ்சலின் கைவினைப்பொருள்களும் சமையலும் செய்வதில் வல்லவர். அவற்றை அழகுற பதிவுகளாகி வருபவர். அவர் செய்த இந்த வாழ்த்து அட்டையைப் பாருங்களேன்!!

74 வயது இளைஞரான GNB பாலியல் வன்முறைக்காளாகும் பெண்களின் அவல நிலைமையை நினைத்துக் குமுறி எழுதியிருக்கிறார் இங்கே! அவரின் எழுத்தில் இருக்கும் உண்மை நெஞ்சை சுடுகிறது!

பொங்கலென்றாலே கூடவே அதன் இனையாக கரும்பும் வரும். கரும்பின் மகிமையை இங்கே சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் பவி!!

ஆயிரம் தான் வசதிகள் வந்து விட்டாலும் வாழ்க்கை தொடர்ந்த விமானப்பயணங்கள் என்று ஆகி விட்டாலும் சின்ன வயதில் ஜன்னலோரப் பேருந்து பயணம் தந்த சுகத்தை எதுவுமே தந்ததில்லை. அதுவும் விடிந்தும் விடியாத பொழுதில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பனிக்காற்று முகத்தில் சில்லென்று மோத, பறவைகளின் ராகங்கள் பின்னணியில் ஆதவன் உதயமாவதை ரசித்தவாறே சென்ற அந்தப் பயணங்கள்..ம்.. பெருமூச்சு தான் எழுகிறது! அதே மாதிரியான பேருந்து பயணத்தை இங்கே தாரணி ப்ரியா ரசனையுடன் எழுதியிருக்கிறார்!

பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் ஆதர்ச ஹீரோ. தான் சந்திக்கும் ஆண்களிடம், முக்கியமாக தன் கரம் பிடித்த கணவரிடம் தன் தந்தையின் பண்புகளைத்தேடும் குணம் மிகுந்து இருக்கும். இங்கே கவிதாவும் தன் தந்தையை ‘ அற்புதமான  அருட்பெருஞ்சோதியே!’ என்று பாசத்துடன் விளித்து, அவரின் நல்லியல்புகள் பற்றி சுவைபட எழுதியுக்கிறார்!

வாழைப்பூவை இப்படிக்கூட ரசித்து உவமானமெல்லாம் கொடுத்து அழகாய் எழுத முடியுமா? மொறு மொறுவென்ற வாழைப்பூ வடை கூட அதன் பிறகு தான் வருகிறது! வாழைப்பூவின் அடுக்குகளை குழந்தையின் பிஞ்சு விரல்களாய் நினைத்து ரசிக்கிறார் துளசி இங்கே!!

குறைந்து போன சிறுநீரக செயல்பாட்டை இஞ்சி ஒத்தடத்தின் மூலம் எப்படி அதிகரிக்கலாம் என்ற மருத்துவ முறையை திரு.வின்செண்ட் இங்கே விரிவாக எழுதியிருக்கிறார். வலைப்பூ முழுவதும் இது போன்ற மிக உபயோகமான குறிப்புகள் இருக்கின்ற‌ன. படித்துப் பயனடையுங்கள்.

தவிப்பு என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல வித உணர்வுகளில் வருவது! ஆனால் தாய்மைப்பாசத்தின் தவிப்பிற்கு முன்னால் மற்ற தவிப்புகளெல்லாம் எம்மாத்திரம்! ஒரு குழந்தையைப்பெற ஒரு தாய் எத்தனை தவமிருக்கிறாள், குழந்தை உருவாகாதபோது எத்தனை விஷ நாக்குகளிடையே அரைபட்டு தினம் தினம் மரணிக்கிறாள், குழந்தை பெற்ற பிறகு எப்படியெல்லாம் தன் இரத்தத்தையே சிந்தி அதை வளர்க்கிறாள், அந்தக் குழந்தை வளர்ந்து அவளையே நோகடிக்கும்போது கூட எப்படியெல்லாம் அந்தக் குழந்தையின் நலனுக்காக உருகிறாள் என்பதை இதை விட எப்படி அழகாகப் பிரதிபலிக்க முடியும் எழுத்தில்? அத்தனை நெகிழ்ச்சியாக அருமையான உவமானங்களுடன் இங்கே நிலாமகள் எழுதியிருந்த சிறுகதையைப் படித்து முடித்த போது நெஞ்சில் கனம் ஏறி நின்றது சில நிமிடங்களுக்கு! அவரின் பதிவுகளில் இது ஒரு மகுடம் என்று கூறி வாழ்த்துகிறேன்!!

ரெய்கியா, அப்படின்னா என்ன என்று கேட்பவர்களுக்கும் அதைப்பற்றி விபரங்கள் அறியாதவர்களுக்கும் அது ஒரு வெளிநாட்டு தியான முறை என்று கூறி, அதைப்பற்றி இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார் சாதாரணமானவள்!

அந்தக் கால விளம்பரங்களையும் இந்தக் கால விளம்பரங்களையும் படங்களுடன் போட்டு அன்றும் இன்றும் எத்தனை வித்தியாசங்கள் என்பதை அழகு பட விவரிக்கிறார் சகோதரர் வெங்கட் நாகராஜ்!

நம்ம ஏரியாவில் அழகான மயில் வரையக்கூடச் சொல்லிக்கொடுக்கிறார்கள்! கோட்டில் படம் வரையச் சொல்வது, கேள்விகள் கேட்டு திணறடிப்பது என்று வாசககனின் மூளைக்கு வேலைகளை நிறையவே தந்து பதிவுகளை சுவாரசியமாகக் கொண்டு சென்று அசத்துகிறார்கள்!!

46 comments:

  1. அன்பின் மனோ - புஷ்பராகங்கள் ஜொலிக்கின்றன - அருமையான அறிமுகங்கள் - பொறுபமியாகச் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அடியேனையும் இன்றைய புஷ்பராகங்களில் ஒன்றாக அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிம்மா. மாலை வந்து மற்றவர்களின் தளங்களையும் படிக்கிறேன்......

    த.ம. 1

    ReplyDelete
  3. நம்ம ஏரியா அறிமுகம் செய்தமைக்கு, எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழு சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றி.
    த.ம 2

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகங்களும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரையாகப்போயி படித்துப்பார்க்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கன்னிப்பொங்கல் விளக்கம் நன்றாக இருக்கிறது நாங்கள் சிறுவீட்டுப்பொங்கல் என்போம். அதற்காக சிறு வீடு கட்டி அல்லது வரைந்து அதில் பெண் குழந்தைகள் பொங்கல் வைப்பார்கள், அல்லது பால் காய்ச்சுவார்கள்.

    சித்ரானங்கள் செய்து எடுத்து சென்று அன்று வைத்த பிள்ளையார்களையும் பிரசாதங்களையும், நீர் நிலைகளில் கரைத்து உறவினர்களுடன் கலந்து பேசி உண்டு மகிழ்வோம்.
    உங்கள் பதிவு பழைய நினைவுகளை மலரவைத்தன.
    இப்போது நான்கு நாள் கொண்டாட்டம் இல்லை பொங்கல், மாட்டுப்பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல் எல்லாம் ஒரே நாளில் நிறைவு செய்யப்படுகிறது.

    குழந்தைகளுக்கு வகுப்புகள், பெரியவர்களுக்கு வேலை என எல்லோரும் அவசர உலகத்தில் இருப்பதால் ஒரே நாளில் நிறைவு
    செய்யப்படுகிறது.

    இன்று நீங்கள் பகிர்ந்து உள்ள வலைபதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. புஷ்ப ராகங்கள் இனிய கீதமிசைக்கின்றன. உடனே சென்று பார்க்க இயலாவிட்டாலும் எனக்குப் புதியவர்களை அவசியம் சென்று பார்க்கிறேன். நல்லறிமுகங்கள் தொடரட்டும். அறிமுகம் பெறற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எங்களைக் குறிப்பிட்டமைக்கு எங்கள் நன்றியுடன், எங்களுடன் அறிமுகமான வெங்கட் நாகராஜ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஜொலிக்கும் புஷ்பராகங்களுக்கு வாழ்த்துகளும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகளும்.

    ReplyDelete
  9. பொறியில் வடை வச்சுப் புடிச்சுட்டீங்களே மனோ:-))))

    அனைத்துப் புஷ்பராகங்களுக்கு இனிய பாராட்டுகளும் அறிமுகத்துக்கு இனிய நன்றிகளும்..

    வடை கூட மஞ்சளா ஜொலிக்குதுல்லே மனோ?

    ReplyDelete
  10. கன்னிப் பொங்கலை காணும் பொங்கல் என்று எங்க ஊர்ப்பக்கம் சொல்லுவார்கள்,ஆற்றங்கரையில் கூடுவதும் குளித்து விட்டு கட்டுசாதம்,அவித்து சுட்டு எடுத்து வந்த பனங்கிழங்கு,கரும்புன்னு ஆற்றங்கரையே அப்போ அட்டகாசமாய் இருக்கும்.இப்போ எப்படின்னு தெரியலை.இப்படி தினமும் ஒரு ரத்தினம் பற்றி பகிரவதும்,இன்றைய புஷ்பராக ரக அறிமுகங்களும் அசத்தல்.நான் நிறைய வாசிக்க வேண்டியுள்ளதே!

    ReplyDelete
  11. கன்னிப் பொங்கல் பற்றிய தகவல்கள் அருமை. திருமதி கோமதி அரசுவின் பின்னூட்டம் உங்கள் தகவலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

    நேற்றே எழுத நினைத்தேன். ஒவ்வொரு நாளும் நவரத்தின கற்கள் பற்றிய விஷயங்கள் நன்றாக இருக்கின்றன.

    நவரத்தினங்களைப் போலவே பதிவர்களும் அவரவர்களுக்கென்று தனி முத்திரையுடன் பதிவுலகத்தில் பவனி வருகிறார்கள்.

    மிகச் சிறப்பான அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. கன்னிப் பொங்கலும் அருமை. வவ் . என்னையும் ஒருவராக அறிமுகப்படுத்தியமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் .

    ReplyDelete
  13. பொங்கல் பற்றிய கருத்துகள் சிறப்பு. சில தெரியாதவை. மிக்க நன்றி சகோதமரி. புஷ்பராக உறவுகளிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. மின்னும் புஷ்பராகங்களாய் அருமையான அறிமுகங்கள் ...

    பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. கன்னிப்பொங்கல், காணும் பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல், கணுப்பிடி, கோவையின் பூப்பறிக்கும் விழா, கோலாட்டம் கும்மி அடிப்பது என்று ஒன்று விடாமல் சொல்லியுள்ளது அழகோ அழகு.

    அதைவிட அழகு தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ள அந்தப்படம்.

    >>>>>>

    ReplyDelete

  16. //இன்னொரு சமூகத்தில் ‘கணுப்பிடி’ சகோதர, சகோதரிகளுக்காக கொண்டாடப்படுகிறது.

    முதல் நாளே, சிறிது சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், அவற்றில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு சாதம், வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று ஒவ்வொன்றிலும் உருண்டை பிடித்து வெளியிலிருக்கும் துளசி மாடத்திற்கருகே இஞ்சி இலைகள், மஞ்சள் இலைகள் பரப்பி அவற்றில் வைத்து, கரும்பு, பழங்கள் வைத்து பூஜை செய்து, வீட்டில் பெரியவர்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறி, மஞ்சளும் குங்குமமும் தந்து வீட்டினுள்ளே அனுப்புகிறார்கள்.

    சில ஊர்களில் துளசி மாடத்திற்குப்பதிலாக ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் இந்த ‘ கணுப்பிடி’ நடக்கும்.//

    ஆம், இது பெரும்பாலும் பெண்களால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்காக மட்டுமே, சிறப்பாகச் செய்யப்படுவது.

    பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பாகவே, தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காக, சகோதரர்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, புஷ்பங்கள், பழங்கள், அரிசி, பருப்பு, வெல்லாம், முந்திரி, திராக்ஷை, தேங்காய் முதலிய சீர் பொருட்களுடன் பணமும் கொடுப்பது இன்றும் ஆங்காங்கே நடைபெற்று வரும் பழக்கமே.

    வெளியூரில் உள்ளவர்களுக்கு கட்டாயமாக பணம் அனுப்பி வைப்பது உண்டு.

    >>>>>>>>

    ReplyDelete
  17. புஷ்பராகம் பற்றிய இன்றைய தங்களின் விளக்கம் அருமை.

    புஷ்பராகங்களாய் நம்மை அசத்தும் இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

    தங்களுக்கு என் அன்பான நன்றிகள்

    தங்களின் அன்புச்சகோதரன்
    VGK

    ReplyDelete
  18. வலைசரத்தில் அறிமுகமாகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
    நேற்று என்னை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி!! மன்னிக்கவும் நேற்று கணினி பக்கம் வர முடியவில்லை!!

    ReplyDelete
  19. மிக்க நன்றி அக்கா .என்னோடு இங்கே அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  20. வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி. GNB என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் கர்நாடக இசைக்கலைஞர். போய்ச் சேர்ந்தவர். நான் GMB .என் பதிவுக்கு வந்து படித்து அறிமுகப் படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  21. அன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு!

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  22. வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  23. வருகைக்கு அன்பு நன்றி கெளதமன்!

    ReplyDelete
  24. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பூந்தளிர்!

    ReplyDelete
  25. கன்னிப்பொங்கல் பற்றிய உங்கள் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது கோமதி அரசு. இங்கே பகிர்ந்து கொன்டதற்கு அன்பு நன்றி! நீங்கள் சொன்னது போல நான்கு நாட்கள் என்றில்லை, பொங்கல் கூட சம்பிராதயங்களை இழந்து பழைய பொலிவை இழந்து தான் நிற்கிற‌து! நேற்று இங்கிருக்கும் என் சினேகிதியின் பெண் சொன்னது, குக்கரில் மொத்தமாக சாதம் வைத்து அதை இரண்டாக பிரித்து, ஒன்றில் பாகு ஊற்றி சர்க்கரைப் பொங்கலாகவும் மற்ற‌தை வெண் பொங்கலாகவும் ஆக்கி விடுவார்களாம்!

    ReplyDelete
  26. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதர்ர் பாலகணேஷ்!

    ReplyDelete
  27. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி சாந்தி!

    ReplyDelete
  29. ஆமாம் துளசி, வடையும் கூட புஷ்பராகம் மாதிரி மஞ்சளாக மினுமினுக்கிறது!
    வருகைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  30. ரசித்துப் பாராட்டியதற்கும் காணும் பொங்கல் பற்றி மேலும் கருத்துரைத்ததற்கும் அன்பார்ந்த நன்றி ஆசியா!

    ReplyDelete
  31. கோமதி அரசு, ஆசியாவின் கருத்துக்கள் கன்னிப்பொங்கலைப்பற்றிய என் தகவல்களுக்கு மேலும் மெருகூட்டியது என்பது உண்மை தான் சகோதரி ரஞ்சனி! பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  32. ‌வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி பவி!

    ReplyDelete
  33. வருகைக்கு அன்பு நன்றி கவிதா!

    ReplyDelete
  34. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் இனிய நன்றி வேதா!

    ReplyDelete
  35. பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  36. வழக்கம்போல தங்களின் நேர்த்தியான பின்னூட்டங்கள் இந்தப் பதிவையே களை கட்ட வைக்கின்றன! தங்களுக்கு என் அன்பு ந்ன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  37. வருகைக்கு இனிய‌ நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  38. வருகைக்கு அன்பு நன்றி சமீரா!

    ReplyDelete
  39. ஒரு எழுத்தை தவறுதலாக எழுதியதற்கு வருந்துகிறேன் GMB சார்! தங்கள் வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  40. வணக்கம்
    மனோ சாமிநாதன்

    இன்று கன்னிப் பொங்கல் பற்றிய பதிவின் விளக்கம் மிக அருமையாக உள்ளது இன்று அறிமுகம் செய்த வலைப்பூக்கள் சிலது எனக்கு புதியவை சிலது பழையவை, அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  41. மீண்டும் வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் அம்மா. எங்க ஊர் இன்று கோவையில் பூப்பறிக்கற நோன்பி என்று கொண்டாடுவார்கள். நானும் என் மகளும் நேற்று கணுப்பிடி வைத்தோம்.

    புஷ்பராகங்கள் அருமை.என்னவரின் அறிமுகமும் இடம்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  43. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் இனிய நன்றி ஆதி! கணுப்பிடி வைத்து கொண்டாடியதறிந்து மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  44. மகிழ்வும் நன்றியும் சகோ...

    இன்றைய சுவையான அறிமுகங்கங்களை கண்டுகொள்ள விழை(ரை)கிறேன்.

    ReplyDelete
  45. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க. தலைப் பொங்கல் என்பதால் இணையம் பக்கம் வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னியுங்கள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது