ஜோதிஜி 5 வது நாள் - உருப்படியான நபர்கள்
சென்ற முறை நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்ற போது ஒரு நண்பர் மூலம் ஒரு பஞ்சாயத்து உருவானது.
அவர் என் பதிவை குறைத்து மதிப்பீட்டு எழுதி விட்டாய். இவ்வாறு எழுதியது எனக்கு உடன்பாடில்லை. நீக்கி விடு என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் நான் எடுக்கும் முடிவில் என்றுமே பின்வாங்கும் பழக்கம் இல்லை.
சென்ற பதிவில் புலவர் அய்யா சொன்னது போல துவைத்து காயப்போடுவது தான் என் வாடிக்கை.
சீனா அய்யா சொன்னது போல குறிப்பிட்ட பதிவுகள் என்று வலைதளத்தில் உள்ளவற்றை என்னால் அறிமுகம் செய்ய முடியவில்லை. காரணம் ஒரு நல்ல மாமரத்தில் உள்ள எந்த கனி நல்லது என்று எப்படி சுட்டிக் காட்ட முடியும். மொத்த மரமும் இனிப்பாக இருக்கும் போது இந்த பழத்தை மட்டும் உண்டு பாருங்கள் என்று எப்படி சொல்ல மனம் வரும்?
சீனா அவர்களே அடுத்த பதிவில் நீங்க சொன்ன கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுகின்றேன்.
தமிழிலில் உருப்படிகள் என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா? நல்ல உருப்படியான வேலை செய்து இருக்கிறாய்? என்று எங்கள் ஊர் பக்கம் பாராட்டிச் சொல்ல இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றார்கள்.
நான் பார்த்தவரைக்கும் இந்த தமிழ் இணையத்தை தாங்கள் எழுதும் வலைபதிவுகள் மூலம் முடிந்த வரைக்கும் சமூகத்திற்கு சேர வேண்டிய உண்மையான கருத்துக்களை சொல்பவர்கள், இதை ஒரு மாற்று ஊடகமாக கருதுபவர்கள், தங்கள் எழுத்துப் பணியை பொழுது போக்குக்கு அப்பாற்பட்டு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விசயங்களை அப்படியே தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் என்பவர்களை பட்டியலிட்டு உள்ளேன்.
சில குழும வலைதளத்தின் உள்ளே நுழையும் போது நீங்கள் இவர் இந்த பகுதியில் இருந்து கொண்டு தான் எழுதிக் கொண்டு இருக்கின்றாரா? என்பது போன்ற ஆச்சரியங்கள் தோன்றக்கூடும்.
அறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை.
அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.
(இந்த பட்டியல் தொடரும்)
குழும பதிவுகளின் உள்ளே நுழைந்து அதில் உள்ள ஒவ்வொரு பதிவுகளை யும் நீங்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள். பல ஆச்சரியங்கள் கிடைக்கக்கூடும். இந்த குழும பதிவுகளின் மூலம் ஏறக்குறைய 50 பதிவுகளுக்கு மேல் உள்ளதால் உங்கள் தேர்வுக்கு ரசனைக்கு இதனை விட வேறு எதுவும் தேவையிருக்காது. உணர்ந்தால் உத்தமம்.
கடந்த மூன்று நாட்களாக வலைச்சரத்தில் நான் அறிமுகப்படுத்தும் பதிவுகளை, விசயங்களை உள் வாங்கிக் கொண்டிருக்கும் நட்புகளுக்கு என் இனிய வணக்கம். பொதுவாக என் பதிவில் அல்லது என் பதிவு வெளியிடும் எந்த தளத்திற்கும் எவர் விமர்சனம் செய்தாலும் அவர்களுக்கு முடிந்தவரைக்கும் பதில் அளிப்பது எப்போதும் என் வாடிக்கையான வழக்கம். ஆனால் இந்த முறை முடியாமல் போய்விடுகின்றது. மொத்தமாக சனிக்கிழமை அன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளித்து விடுகின்றேன்.
காரணம் தொழில் வாழ்க்கை தினசரி நடவடிக்கையோடு மற்றொரு வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது.
வருகின்ற 27/01/2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூரில் பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் என்னுடைய முதல் புத்தகமான டாலர் நகரம் வெளியாகின்றது. சட்டமன்ற உறுப்பினர், பிரபல எழுத்தாளர்கள், மற்றும் ஏராளமான பதிவர்களின் நிகழ்ச்சியாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதில் தமிழ்ச்செடி, சேர்தளம், தொழிற்களம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்துகின்றது. திருப்பூருக்குள் இருந்து வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை பதிவர்களின் அவர்களைப் பற்றி விபரங்களை உள்ளடக்கிய ஒரு விழா மலர் ஒன்றும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வெளியிட உத்தேசித்துள்ளோம்.
தமிழ்வழிக்கல்வி என்பதை தனது அயராது முயற்சியின் மூலம் திருப்பூரில் எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் மற்றும் திரு. தங்கராசு போன்றவர்கள் தங்களது தாய்த்தமிழ் பள்ளி என்பதன் மூலம் சாதித்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய அறிமுகமும், திரு. தங்கராசு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ் பள்ளிக்குழந்தைகளின் பன்முகத் திறமையை, அற்புத ஆற்றலை உலகத்திறகு எடுத்துச் செல்லும் வண்ணம் அவர்களின் பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை திரு. சகாயம் அவர்கள் கலந்து கொண்டு திருப்பூர் உறவோடு தளம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் மூலம் கண்ட போது ஆச்சரியப்பட்டுப் போனோன் என்பதை விட திகைத்துப் போய்விட்டேன என்பது தான சரியான வார்த்தையாக இருக்கும்.
நாம் எத்தனை விசயங்களை இழந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இதன் மூலம் உணர்ந்து ஒரு குற்ற உணர்ச்சி என் உள்ளே உறுத்திக் கொண்டிருந்த காரணத்தால் இந்த நிகழ்வின் மூலம் இவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
இது குறித்து மேலும் அறிய மேலே உள்ள தளத்தில் உள்ள காணொளி காட்சிகளை கண்டு கொள்ள முடியும். இதனைப் பற்றி தனியாக என் பதிவில் வெளியிட நினைத்துள்ளேன்.
கோவை, ஈரோடு முதல் மற்ற இடங்களில் உள்ள வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சீனா அய்யா நம்பிக்கையுடன் கொடுத்த இந்த வாய்ப்பை முறைப்படி முடித்து வைப்பது தான் நியாயமாகும்.
ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும் நடக்க இருக்கிறது என்பதால் நிச்சயம் பலராலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன். பல நல்ல சமூகம் சார்ந்த மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடிக் கொண்டிருப்பவர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றப் போகின்றார்கள்.
உங்கள் ஆதரவை கோருகின்றேன்.
முழுவிபரங்களை அடுத்த வாரம் என் தேவியர் இல்லத்தில் வெளியிடுகின்றேன். அழைத்துச் சொன்னவுடன் நான் ரயில் முன்பதிவு செய்து விட்டேன் என்ற சீனா அய்யாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஈழப்போர் ஏன் நடந்தது? இலங்கை பெற்ற வெற்றிக்கு பின்னால் உள்ள சர்வதேச சமூகம் என்னவெல்லாம் செய்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவர்கள் மட்டும் சொடுக்க
|
|
வலைச்சர ஆசிரியருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteசின்ன பயணத்தில் இருந்ததால் இன்றுதான் இங்கே வர முடிந்தது.
//அறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை.
அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.//
ஆஹா.... இது..... பிடிச்சிருக்கு!
டீச்சசசசசசசசசசசசசசசசசசசரு
ReplyDeleteவணக்கம் வண்ககம்.
எந்த ஊரு பயணம்?
ஆத்தா நான் பாஸாயிட்டேன் உங்கக்கிட்டே சொல்லத் தோணுது.
காலையில உங்க விமர்சனம் பார்த்து உற்சாகம் கரை புரண்டு ஓடுதுங்கோ.....
” எனது எண்ணங்கள் “ என்ற எனது வலைப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திரு. ஜோதிஜி திருப்பூர் (தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.in அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteஅருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்...
ஜோதிஜி நல்லா ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்க. தேடித்தேடி நல்ல அறிமுகங்களா தரீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை.
ReplyDeleteஅறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.//
உண்மைதான், நல்லவைகளை தேடி கொடுத்தபின் அவற்றை நாடி செல்வது நம் பொறுப்புதான்.
வருகின்ற 27/01/2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூரில் பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் என்னுடைய முதல் புத்தகமான டாலர் நகரம் வெளியாகின்றது..//
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்...
போலித்தன வேடமின்றி, புடமிட்ட தங்கம் போல் பொலிவு தரும் மறுமொழிகள்! நாளும் எழுதுகின்றீர் நன்றி! தொடரட்டும் தங்கள் பணி! பாணி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜோதிஜி,
ReplyDeleteமுதல் மழை,முதல் காதல்,முதல் வேலை,முதல் சம்பளம்,முதல் அயல்நாடுப்பயணம் ,முதல் குழந்தை போல சில முதல்கள் மனதில் நீங்காமல் நிற்கும், அதே போல முதல் புத்தகம் அச்சில் வருவதும் முக்கியமான நிகழ்வு ,என்றும் நினைவில் நிற்கும் , படித்தவர்கள் மனதிலும் நிற்கவும் வாழ்த்துக்கள்!
#உருப்படிகள் எல்லாம் பெரும்படிகள் ஆ தான் இருக்கு ,பெரும்பாலும் நான் ஒரு முறையாவது படித்த உருப்படிகள் என்பதில் எனக்கும் ஒரு சந்தோஷம், வெயிலான்(சேர்தளம்) எல்லாம் 2007 இலேயே நம்ம பதிவுக்கு பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்தவர்.
தி.தமிழ் இளங்கோ,சிவானந்தம்,வழக்கமாக நம்ம பட்டியலில் உண்டு, வெட்டிக்காடு ரவி (சமிபமாக படிக்க ஆரம்பிச்சாச்சு,செல் போன் பதிவுக்கு நீங்க தான் அனுப்பி வச்சிங்க)
உங்கள் அறிமுகங்கள் எனக்கும் அறிந்த முகங்களாக உள்ளதில் ஒரு குதுகளந்தேன் :-))
#ஹி...ஹி ஆனாலும் வலைச்சரத்தினை வழக்கம் போல அலைச்சரமாக்கிட்டிங்க :-))(இதை சொல்லாட்டி மண்டை வெடிச்சிறும்)
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeletethevan maayam
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeletethevan maayam
டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteடாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteடாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteடாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுழும பதிவுகளின் சிறப்பான அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteடாலர் நகரம் புத்தகம் விலை, எத்தனை டாலர்?
ReplyDeleteத.ம. 5
ReplyDeleteகுழும தளங்களில் தொழிற்களம் அறிந்தது! மற்றவை அறியாதவை! அறிய வைத்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteஎனது வலைப் பதிவை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி ஜோதிஜி சார். Blog Description ஆக உள்ள எனது "நினைத்தேன்! சொல்கிறேன்!" என்பதை இனி எனது வலைப பதிவின் பெயரான டி.என்.முரளிதரன், என்பதற்கு பதிலாக வைத்து விடுகிறேன்.
ReplyDeleteமுதல் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள், ஜோதிஜி!
ReplyDeleteபல தள குழுமங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உறவோடு, தொழிற் களம் இரண்டு மட்டுமே நான் அறிந்தது. மற்றவைகளையும் போய்ப் பார்க்கிறேன்.
விறுவிறுப்பாகப் போய் கொண்டிருக்கிறது இந்த வாரம்.
தாமதாமான வருகைக்கு மன்னிக்கவும்.
அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜோதிஜி,
ReplyDeleteதற்போதுதான் கவனித்தேன். எனவே தாமதமான பதில்.
சில அறிமுகங்கள் எனக்கு புதுசு. நீங்கள் அறிமுகப்படுத்துவதால் அதன் தரம் பற்றி சந்தேகம் இருக்காது.
இனி அதையும் லிஸ்டில் சேர்ப்போம்
தங்களின் முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
பயனுள்ள தளங்கள்.
ReplyDelete
ReplyDeleteநன்றி இளங்கோ அய்யா. உங்கள் வயதும் உங்கள் உழைப்பின் ஆர்வமும் பார்த்து பலமுறை வியந்து போய் உள்ளேன். வாழ்த்துகள்.
நன்றி குமார்.
இல்லை பூந்தளிர். இந்த முறை சற்று வேலைப்பளூவினால் சரியாக செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ளே இருக்கிறது.
நன்றி கோமதி அரசு.
வவ்வால் நீர் பலே கில்லாடிய்யா.
கூட்டத்தில் நான் பேச வேண்டும் என்று நினைத்து வைத்திருந்ததை அப்படியே போட்டு உடைத்தால் எப்படி?
உங்க மண்டையை உடைக்கனும் என்றுதானே இந்த மாதிரி சுயவிளம்பரத்தை உருவாக்கினேன். காரணம் நிச்சயம் இந்த புத்தகத்தை அணிந்துரைக்காக படித்தவர்கள் கூறிய வார்த்தைகளில் சொல்லப்போனால் இது மறக்க முடியாத, மறைக்க முடியாத ஆவணம் என்றார்கள். அந்த வகையில் நிச்சயம் இந்த புத்தகம் பலரின் கண்களுக்கும் போய்ச் சேர்க்க வேண்டியது என் கடமை. பாருங்க நஜிமூதின் கூட எத்தனை டால்ர் என்று கேட்டு உள்ளார். முதலீடு போட்ட 4 தமிழ்மீடியா நிச்சயம் அடுத்து இன்னோருவருக்கு இதே போல உதவி புரிய எண்ணம் வர வேண்டும் அல்லவா?
எரிந்த்ரா வித்தியான அற்புதமான பெயர். வாழ்த்துகள்.
மிக்க நன்றி நஜிமூதின்.
ReplyDeleteசுரேஷ்
அவசியம் குழும தளங்களில் போய் பார்க்கும் போது நீங்கள் தேர்ந்தெடுக்க அதிகம் வாய்ப்புள்ளது. அவசர வேலையில் வருபவர்கள் ஒரு தளத்தின் உள்ளே சென்றால் மொத்த பதிவர்களின் அன்றைய தலைப்பு நமக்குத் தெரிய வந்து விடும். தேர்ந்தெடுப்பது மட்டுமே நம்முடைய பொறுப்பு. என்னுடைய பார்வையில் எவரையும் புறக்கணிக்கத் தேவையில்லை. இரண்டு மூன்று வந்து போய் அவர்களின் உழைப்பு, தரம் மற்றும் முயற்சிகளைப் பார்த்தால் எழுதுபவரின் நோக்கம் புரியவரும்., அதன் பிறகு நிரந்தரமாக வரலாமா? என்பது போன்ற எண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொண்டால் தான் நாம் வளர முடியும். நம் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
முரளி ஒரு சின்ன கோரிக்கை.
உலகத்திலேயே ஒரே ஒரு இனத்தில் மட்டும் தான் தனது பெயரை தமிழில் இன்சியல் என்ற பெயரை ஆங்கிலத்திலும் எழுதுகின்றார்கள். அது எனக்குத் தெரிந்து தமிழினம் மட்டும். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் உங்கள் தள பெயரை அறிமுகம் செய்து வைத்தேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முடிந்தால் உங்கள் இன்சியலை தமிழிலில் வைத்து விடுங்க. வேறு ஏதும் காரணம் இருந்தால் இப்படியே வைத்துக் கொள்ளுங்க. இரண்டு மொழிகளை வைத்து எழுதும் போது ஒரு சின்ன உறுத்தல் எனக்குள் வந்து விடும். இது எனக்கான கோட்பாடு. நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம். தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்.
உங்களுக்கு வாய்பிருந்தால் வாங்க அம்மா.
ஊரான் நிறைய எழுதுங்க. நான் உங்கள் வாசகன்.
நன்றி சிவானந்தம்.
நன்றி குணா
புலவர் அய்யாவை அன்போடு திருப்பூருக்கு அழைக்கின்றோம்.
ReplyDeleteபோன பதிவில் என்ன நடந்தது, நான் எப்பொழுதும் பின்னூட்டங்களை படிப்பதில்லை, அதனால் தெரியவில்லை.
ReplyDeleteஉங்களது பதிவுகள் எங்கு எழுதினாலும் மிக சிறப்பாகவே இருக்கிறதே இதுதான் என்னுடைய ஆச்சர்யம்.
அறிமுக பதிவர்கள் பதிவுகளுக்கு சென்றுள்ளேன், படித்துள்ளேன், சிறப்பானதுதான்.
ஜோதிஜி,
ReplyDelete//இது மறக்க முடியாத, மறைக்க முடியாத ஆவணம் என்றார்கள்//
துறை அனுபவமும்,எழுத்தாற்றலும் ஒன்றாக அனைவருக்கும் அமையாது,அப்படி அமைந்து ஒரு படைப்பு உருவானால் சிறப்பாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? அவ்வகையில் உங்கள் படைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஹி...ஹி ஆனால் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு,அதனை முழுசா படிச்சிட்டு சொல்லுகிறேன் ,கடைக்கு எப்போ வரும்னு சொல்லுங்க,வாங்கிடலாம்.
//கூட்டத்தில் நான் பேச வேண்டும் என்று நினைத்து வைத்திருந்ததை அப்படியே போட்டு உடைத்தால் எப்படி?//
# உங்க மனதில் நினைச்சதை சொல்லிட்டனா, டெலிபதி போல எதாவது சிங்க் ஆகிடுச்சா :-))