07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைச்சரம் ஆசிரியர். Show all posts
Showing posts with label வலைச்சரம் ஆசிரியர். Show all posts

Saturday, January 5, 2013

ஜோதிஜி 7வது நாள் - விதைகள் மலடா?

வணக்கம் நண்பர்களே

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் இந்த உலகில், நாம் வாழும் ஊரில் எத்தனையோ மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. நமக்கு எல்லாமே ஏற்புடையதாக இருக்காது. சிலவற்றுக்கு எதிர்க்க வேண்டும் என்று மனதிற்குள் மட்டும் தோன்றும்.

நம் வாழ்க்கை சூழ்நிலை அதை அனுமதிக்காது. அது சுயநலம், பொதுநலம், அக்கறையின்மை என்று என்ன பெயர் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம். 

நாம் யாரையும் திருத்த வேண்டிய அவசியத்தில் பிறக்கவில்லை.  ஆனால் நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும்.  மாற்றங்கள் என்பது மாறிக் கொண்டேயிருப்பது. மாற்றங்கள் என்பது நம்மிடம் இருந்து உருவாவது. நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டியது.  ஆனால் நாம் எல்லோருமே மற்றவர்கள் மாற வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். நம்மை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. ஆனாலும் நாம் மாற்றத்தை எதிர்பார்த்தே காத்துக் கொண்டிருக்கின்றோம்.

நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை நிதர்சனமாக உணர முடியும் என்பதைப் போல நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்பதையும் யோசிக்க முடியும் தானே? 

அரசாங்கம் என்பது மிகப் பெரிய தொழிற்சாலையின் எந்திரம் போல உள்ள நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு விசயம்.  ஆனால் நாம் என்ன உணர்ந்தோம் என்பதைப் பற்றி எழுத முடியும்.  நம் சந்தில் நடந்த அக்கிரமத்தை அப்படியே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதன் பாதிப்புகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? இப்படி மாறிநடந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் எழுத முடியும் தானே?

நாம் எழுதுவதற்கே திரைப்பட நடிகர் நடிகைகளைப் பற்றி மட்டுமே யோசிக்க விரும்பும் போது ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்.

வலை எழுத்துக்கள் சாகாவரம் பெற்றது. உங்கள் தலைமுறைகளை தாண்டி நிற்கப் போவது. உங்களுக்கு எது வேண்டுமானாலும் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்.  ஆனால் இரண்டையும் பற்றி எழுதி வைத்து விடுங்க.

காரணம் இப்போதைய சூழ்நிலையில் உங்களுக்கு பிடிக்காத காரணிகள் நீங்கள் அடுத்த வருடம் அந்த எழுத்தை நீங்களே வாசிக்கும் போது எந்த அளவுக்கு உங்கள் மாறுதல் அடைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள உதவும். 

முடிந்தவரைக்கும் எழுதுங்க.
முயற்சிகளோடு எழுதுங்க.
எழுத்தில் உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் மனம் சார்ந்த வளர்ச்சி.

நிச்சயம் இந்த தளம் போன்ற ஒரு தளத்திற்குள் சென்றால் உங்களுக்குத் தெரிந்தவர் தெரியாதவர், பிடிக்காதவர், பிடிக்காதவர் என்று அத்தனை தளங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.  குறைவான நேரம் உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.


வரைச்சரம் மூலம் தான் உங்களை கண்டு கொள்ள முடிந்தது என்றார் முரளி. அப்படி என்றால் என்ன? 4 வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இன்னமும் உழைப்பு தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.  இங்கு எவரும்  நிச்சயமானவர்கள் இல்லை. வேறு வழியே இல்லை. உழைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். உண்வுக்கு, இருப்பிடத்திற்கு விரும்பும் மற்ற விசயங்களுக்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உழைப்பும் களைப்பும் அண்ணன் தம்பிகள். ஒற்றுமையாக இருக்க வைப்பதில் தான் நம் மனம் முக்கிய பங்கு வகிக்கின்றது.  உண்மையாக உழைத்தால் களைப்பு வரும். இல்லையென்றால் வெறும் கொட்டாவி தான் வரும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டு கெட்ட ஆவிகளை சுமந்த ஜீவனமாகத்தான் வாழ முடியும்.

வாசிப்பு அனுபவம் என்பது வளரவேண்டியது.  குறுகிய குட்டையாக இருந்தால் அதற்கு பெயர் சாக்கடை என்று சொல்லி விடுவார்கள். இது போன்ற தளங்களுக்கும் நீங்கள் செல்ல வேண்டும்.


எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் எனக்கு பிடிக்காத விசயங்கள், இதுவெல்லாம் நமக்கு தேவைப்படாது என்று கருதிய விசயங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாய் மாறிய போது அதன் பின்னே சென்றுள்ளேன்.  

காரணம் எதையும் ஒதுக்குவதில்லை. தேவைப்படுவதை அப்போது எடுத்துக் கொண்டு மற்றவற்றை தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ள தயாராய் இருந்துள்ளேன். காழ்ப்புணர்ச்சி என்பது வாசிப்பில் வந்து விட்டால் உங்கள் ந்யூரான்களை நீங்கள் முடக்கி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

கதவை மட்டுமல்ல.  ஜன்னலையும் திறந்து வைத்து விடுங்க.

ஜாக்கிரதையோடு நாம் வாழப் பழகிக் கொண்டால் தன்னளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ள முடியும் என்பது உறுதி தான்.  ஆனால் உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் கடத்த வேண்டும் என்றால் நீங்கள் திறந்த மனதோடு இருந்தால் தான் முடியும்.  தவறுகள் நடக்கும் போது, தவறுகள் உங்களை சோதிக்க அருகே வரும் போது தான் உங்களின் உண்மையான பலமும் பலவீனமும் உங்களுக்கே தெரியும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்க.

நம்முடைய தவறுகள் நம்முடைய முதல் ஆசான்.

எது குறித்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம் படிக்கலாம். ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றோம் என்பது தான் இங்கே முக்கியம்.  மனம் என்பது குப்பையை அடைத்து வைக்கும் இடமல்ல.  ஆனால் குப்பைகள் சேர்ந்தால்?

நாம் தானே சுத்தமும் செய்ய வேண்டும். முடை நாற்றம் வருவதற்குள் பல சமயம் மூச்சு கூட போய் விடக்கூடிய ஆபத்தை அந்த குப்பைகள் உருவாக்கி விடக்கூடும்.



தமிழ்நாட்டை விட்டு வேறொரு மாநிலத்தில் வேலை நிமித்தமாக உயர் பதவியில் வசிக்கும் இவர் அக்கறைபோடு பகிர்ந்து கொள்வதை படித்துப் பாருங்க.  நேரமில்லை என்பது ஒரு பொய்ச் சாக்கு என்பது மனதிற்கு தெரியும் தானே?

இது போன்ற தளங்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்க.  நாம் இருப்பதை விட்டு விட்டு எத்தனையோ தேவையில்லாத விசயங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பது புரியும்.


நான் நன்றாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும், எனது எழுத்து நடை நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவசியம் வளர்ந்த எழுத்தாளர்களின் தளங்களை போய்ப் பாருங்க.  சுருக்கமாக அவர்களின் வீச்சு எந்த அளவுக்கு நம்மைத் தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  அவர்கள் தான் சிறப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் கற்றுக் கொள்வதில் ஏன் நமக்கு ஒரவஞசகம்.


எனக்கு படிக்க நேரமில்லை என்பவர்கள் மட்டும் இந்த தளத்திற்குள் சென்றால் உள்ளம் கொள்ளை போகும்.

எழுதுவதை கற்றுக் கொண்ட பின்பு உங்களை நிலைநிறுத்திக் கொள்ள இவர் சொல்லும் விசயங்களை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலரின் தள வடிமைப்பு பார்த்து மனதளவில் அதிக ஆச்சரியம் அடைந்துள்ளேன். இப்போது தான் சற்று கற்றுள்ளேன். இவர் பங்கு முக்கியமானது.


நன்றி சீனா அய்யா அவர்களே. எனது வலைச்சரம் ஆசிரியர் பணி இத்துடன் முடிவடைந்தது.

உங்களின் சில விதிகளை உடைத்துள்ளேன் அல்லது மீறியுள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என் வணக்கம்.

கோடுகள் என்பது நாம் உருவாக்குவது.  வானத்தில் இருந்து எவரும் வந்து போட்டு விட்டு போவதில்லை.  கோடுகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நம் எல்லை நமக்குத் தெரிய வேண்டும் என்பதே. ஆனால் நிச்சயம் என் எல்லைக்கோடு என்ன என்பதை உணர்ந்த இந்த வாரத்தில் பயணித்துள்ளேன். காரணம் இது வரைக்கும் பஞ்சாயத்து எதுவும் வரவில்லை என்பதே எனக்கு கிடைத்த அங்கீகாரம்.

நிச்சயம் சிலரை யோசிக்க வைத்துள்ளேன். என்னளவில் சிலரை அறிமுகம் செய்துள்ளேன்.  

ஆனால் இது முழுமையானது அல்ல.  அங்கீகாரம் என்பது சிறிய குழந்தைகள் முதல் சாவுக்கு அருகில் உள்ளவர்கள் வரைக்கும் தேடிக் கொண்டேயிருப்பது தான். நீங்கள் எதிர்பார்த்த தளங்கள் இங்கே அறிமுகம் இல்லாத பட்சத்தில் அது என் நேரக்குறைவின் காரணமாக உழைக்க முடியாத நிலை என்பதாக எடுத்துக் கொள்ளுங்க.  

மறுபடியும் சொல்கின்றேன். எழுதுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்க வேண்டும்.  

விதைகள் உறங்கினால் நாம் பூமிப்பந்தில் பார்க்கும் எந்த காடுகளும், அதன் மூலம் வளர்ந்த உயிரினங்களும், இதன் மூலம் கிடைத்த பல நல்ல காரியங்களும் நம் வாழ்வில் கிடைத்திருக்காது. இந்த வசதியான சுகமான வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்க முடியாது.

கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.

நல்வாழ்த்துகள். 

இந்த 2013 வருடம் உங்கள் உண்மையான எண்ணங்கள் அக்கறையான உழைப்பின் மூலம் வெற்றி அடைய  

தேவியர் இல்லத்தின்  நல்வாழ்த்துகள்.

நன்றி நண்பர்களே.

நன்றி சீனா அய்யா அவர்களே.
மேலும் வாசிக்க...

Friday, January 4, 2013

ஜோதிஜி 6வது நாள் - நில் கவனி செல்


பட்டியலின் தொடர்ச்சி

1. இவரை நீண்ட நாட்களாக கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஆனால் மனுசன் அசராமல் ஆட்ட நாயகனாக இருப்பதோடு, முகநூல் முதல் அத்தனை இடங்களிலும் அசரடித்துக் கொண்டு இருக்கின்றார். இவர் ஒரு காம்ப்ளான் பையன்.

ஸ்ரீவில்லிபுத்தூ... ரத்னவேல் நடராஜன்


2. இவங்க விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.  ஆனால் அதிகம் படித்தவர். குடும்பத் தலைவியாக இருப்பவர். ஆனால் எளிமையாக எப்போதும் படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். இவரின் தள பெயரும் சரி, எழுதும் விசயங்களும் சரி எவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

அம்மாக்களின் வலைப்பூக்கள்


3. நான் ஆச்சரியப்பட்ட மிகச் சிறந்த வாசிப்பாளர். எதையும் அறைகுறையாக வாசிப்பதே இல்லை. தனக்கு தோன்றியவற்றை சமரசம் இல்லாத நிலையில் எழுதக் கூடியவர்

நினைவில் சில கனவுகள்


4. இவர் ஒரு விஞ்ஞானி, எது குறித்தும் பேசுவார். எளிதாக புரியவைப்பார்.
அலைபேசியை பிரித்து மேய்நதுள்ளார் பாருங்க.

பலாபட்டறை

5. இவர் எழுதிய விஸ்வரூபம் பற்றிய கட்டுரையை அதி வேக ரயில் பயணம் போல உங்களால் படித்து விட முடியும்.

விஸ்வரூபம்

மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

ஜோதிஜி 5 வது நாள் - உருப்படியான நபர்கள்


சென்ற முறை நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்ற போது ஒரு நண்பர் மூலம் ஒரு பஞ்சாயத்து உருவானது.  

அவர் என் பதிவை குறைத்து மதிப்பீட்டு எழுதி விட்டாய். இவ்வாறு எழுதியது எனக்கு உடன்பாடில்லை. நீக்கி விடு என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் நான் எடுக்கும் முடிவில் என்றுமே பின்வாங்கும் பழக்கம் இல்லை. 

சென்ற பதிவில் புலவர் அய்யா சொன்னது போல துவைத்து காயப்போடுவது தான் என் வாடிக்கை.

சீனா அய்யா சொன்னது போல குறிப்பிட்ட பதிவுகள் என்று வலைதளத்தில் உள்ளவற்றை என்னால் அறிமுகம் செய்ய முடியவில்லை.  காரணம் ஒரு நல்ல மாமரத்தில் உள்ள எந்த கனி நல்லது என்று எப்படி சுட்டிக் காட்ட முடியும்.  மொத்த மரமும் இனிப்பாக இருக்கும் போது இந்த பழத்தை மட்டும் உண்டு பாருங்கள் என்று எப்படி சொல்ல மனம் வரும்?

சீனா அவர்களே அடுத்த பதிவில் நீங்க சொன்ன கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுகின்றேன்.

தமிழிலில் உருப்படிகள் என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா?  நல்ல உருப்படியான வேலை செய்து இருக்கிறாய்? என்று எங்கள் ஊர் பக்கம் பாராட்டிச் சொல்ல இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றார்கள்.

நான் பார்த்தவரைக்கும் இந்த தமிழ் இணையத்தை தாங்கள் எழுதும் வலைபதிவுகள் மூலம் முடிந்த வரைக்கும் சமூகத்திற்கு சேர வேண்டிய உண்மையான கருத்துக்களை சொல்பவர்கள், இதை ஒரு மாற்று ஊடகமாக கருதுபவர்கள், தங்கள் எழுத்துப் பணியை பொழுது போக்குக்கு அப்பாற்பட்டு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விசயங்களை அப்படியே தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் என்பவர்களை பட்டியலிட்டு உள்ளேன்.

சில குழும வலைதளத்தின் உள்ளே நுழையும் போது நீங்கள் இவர் இந்த பகுதியில் இருந்து கொண்டு தான் எழுதிக் கொண்டு இருக்கின்றாரா? என்பது போன்ற ஆச்சரியங்கள் தோன்றக்கூடும்.

அறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை.
அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.














(இந்த பட்டியல் தொடரும்)

குழும பதிவுகளின் உள்ளே நுழைந்து அதில் உள்ள ஒவ்வொரு பதிவுகளை யும் நீங்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள். பல ஆச்சரியங்கள் கிடைக்கக்கூடும். இந்த குழும பதிவுகளின் மூலம் ஏறக்குறைய 50 பதிவுகளுக்கு மேல் உள்ளதால் உங்கள் தேர்வுக்கு ரசனைக்கு இதனை விட வேறு எதுவும் தேவையிருக்காது. உணர்ந்தால் உத்தமம்.

கடந்த மூன்று நாட்களாக வலைச்சரத்தில் நான் அறிமுகப்படுத்தும் பதிவுகளை, விசயங்களை உள் வாங்கிக் கொண்டிருக்கும் நட்புகளுக்கு என் இனிய வணக்கம். பொதுவாக என் பதிவில் அல்லது என் பதிவு வெளியிடும் எந்த தளத்திற்கும் எவர் விமர்சனம் செய்தாலும் அவர்களுக்கு முடிந்தவரைக்கும் பதில் அளிப்பது எப்போதும் என் வாடிக்கையான வழக்கம்.  ஆனால் இந்த முறை முடியாமல் போய்விடுகின்றது. மொத்தமாக சனிக்கிழமை அன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளித்து விடுகின்றேன்.

காரணம் தொழில் வாழ்க்கை தினசரி நடவடிக்கையோடு மற்றொரு வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. 

வருகின்ற 27/01/2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூரில் பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் என்னுடைய முதல் புத்தகமான டாலர் நகரம் வெளியாகின்றது. சட்டமன்ற உறுப்பினர், பிரபல எழுத்தாளர்கள், மற்றும் ஏராளமான பதிவர்களின் நிகழ்ச்சியாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இதில் தமிழ்ச்செடி, சேர்தளம், தொழிற்களம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்துகின்றது. திருப்பூருக்குள் இருந்து வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை பதிவர்களின் அவர்களைப் பற்றி விபரங்களை உள்ளடக்கிய ஒரு விழா மலர் ஒன்றும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வெளியிட உத்தேசித்துள்ளோம். 

தமிழ்வழிக்கல்வி என்பதை தனது அயராது முயற்சியின் மூலம் திருப்பூரில் எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் மற்றும் திரு. தங்கராசு போன்றவர்கள் தங்களது தாய்த்தமிழ் பள்ளி என்பதன் மூலம் சாதித்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

அவர்களைப் பற்றிய அறிமுகமும், திரு. தங்கராசு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ் பள்ளிக்குழந்தைகளின் பன்முகத் திறமையை, அற்புத ஆற்றலை உலகத்திறகு எடுத்துச் செல்லும் வண்ணம் அவர்களின் பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இந்த குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை திரு. சகாயம் அவர்கள் கலந்து கொண்டு திருப்பூர் உறவோடு தளம்  ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் மூலம் கண்ட போது ஆச்சரியப்பட்டுப் போனோன் என்பதை விட திகைத்துப் போய்விட்டேன என்பது தான சரியான வார்த்தையாக இருக்கும். 

நாம் எத்தனை விசயங்களை இழந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இதன் மூலம் உணர்ந்து ஒரு குற்ற உணர்ச்சி என் உள்ளே உறுத்திக் கொண்டிருந்த காரணத்தால் இந்த நிகழ்வின் மூலம் இவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

இது குறித்து மேலும் அறிய மேலே உள்ள தளத்தில் உள்ள காணொளி காட்சிகளை கண்டு கொள்ள முடியும். இதனைப் பற்றி தனியாக என் பதிவில் வெளியிட நினைத்துள்ளேன். 

கோவை, ஈரோடு முதல் மற்ற இடங்களில் உள்ள வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சீனா அய்யா நம்பிக்கையுடன் கொடுத்த இந்த வாய்ப்பை முறைப்படி முடித்து வைப்பது தான் நியாயமாகும்.  

ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27) காலை 9  முதல் மதியம் 1 மணி வரையிலும் நடக்க இருக்கிறது என்பதால் நிச்சயம் பலராலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன். பல நல்ல சமூகம் சார்ந்த மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடிக் கொண்டிருப்பவர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றப் போகின்றார்கள். 

உங்கள் ஆதரவை கோருகின்றேன். 

முழுவிபரங்களை அடுத்த வாரம் என் தேவியர் இல்லத்தில் வெளியிடுகின்றேன். அழைத்துச் சொன்னவுடன் நான் ரயில் முன்பதிவு செய்து விட்டேன் என்ற சீனா அய்யாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஈழப்போர் ஏன் நடந்தது? இலங்கை பெற்ற வெற்றிக்கு பின்னால் உள்ள சர்வதேச  சமூகம் என்னவெல்லாம் செய்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவர்கள் மட்டும் சொடுக்க
மேலும் வாசிக்க...

Monday, December 31, 2012

அறிமுகம் - ஜோதிஜி திருப்பூர்


எனக்கு சீனா அய்யா கடிதம் அனுப்பியதும் இரண்டு நிமிடம் வரிகளை படித்து முடித்து விட்டு யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஏற்கனவே இதே வலைச்சரத்தில் நாம் ஆசிரியராக இருந்துள்ளோம். பலரும் நம்மை இதே வலைச்சரத்தில் அறிமுகமும் செய்துள்ளார்கள். மீண்டும் நாம் வருவதை விட வேறு எவரையாவது பரிந்துரைக்கலாமா? என்று யோசித்தபோது அப்போது வேறு சில நினைவுகளும் வந்தது. நான் பரிந்துரைத்தவர்கள் நேரமில்லை என்று அப்போது மறுத்து விட்டார்கள்.

சின்ன வயதில் முயல் ஆமை ஓட்டப்பந்தயம் கதை படித்து இருப்பீர்கள் தானே?

என் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிட்டுக் கொண்டேயிருப்பேன். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு என்று மாற்றுவேன். திடீரென்று ஒரு மாதம் முழுக்க அந்த பக்கமே செல்வதில்லை. காரணம் தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா தான்.

குறிப்பிட்ட சில பதிவுகளை தவிர்த்து மற்ற அத்தனை ஒவ்வொரு பதிவுகளும் 20 நாளைக்கு முன் திட்டமிடப்படுகின்றது 15 நாட்களுக்கு முன் எழுத்தாக மாறுகின்றது. அடுத்த 10 நாளில் அதை மற்நது விடுவேன். அதன் பிறகே சமயம் பார்த்து வெளியிடப்படுகின்றது. .பத்து நாளைக்கு முன்பாக என் எழுத்துப் பயணம் இருந்து கொண்டேயிருப்பதால் எந்த எழுத்துப் பயணம் இனிதாக இன்று வரையிலும் இருக்கின்றது.

இதே போல் தினந்தோறும் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஏதோவொன்றைப் பற்றி அறியத் தொடங்கும் போது அது குறித்த புரிதலுடன் என் பயணம் தொடங்குகின்றது. புரியாத விசயங்களுடன் சண்டை போட்டு அதனை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்த நானும் இந்த சமயத்தில் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. 

பத்திரிக்கைகள் கட்டுரையில் பக்கம் முக்கியம். அதை விட அவர்களின் கொள்கை முக்கியம். எனக்கோ வலையுலக வாசிப்பில் வந்த விமர்சனங்கள் முக்கியம். எவர் என் தளத்தில் படிக்கின்றார்கள். அவர்கள் விமர்சனம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்து என்னை நானே ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே வருகின்றேன்.  ஆனால் உண்மைகளை முடிந்த வரைக்கும் புடம் போட்டுப் பார்கின்றேன். முழுமையாக இல்லாவிட்டாலும் கூட என் அனுபவ அறிவுக்கு எட்டியவரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றேன். என் குடும்ப, தொழில், எழுத்து வாழ்க்கையில் முயலாமை, இயலாமை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.

தேடல் தான் நம்மை மனிதராக வைத்து இருக்கின்றது. 

உண்மையான மனிதராகவும் மாற்ற முயற்சிக்கின்றது.

சீனா அவர்களை முதன் முதலாக டீச்சர் துளசி கோபால் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் சந்தித்தேன். உள்ளே நுழைந்த நான் முன்னால் அமர்ந்திருந்த அவர் இருந்த இருக்கைக்கு அருகே சென்று அமர்ந்தேன். என்னை அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை நன்றாக எனக்குத் தெரியும். என்னுடன் நண்பரும் வந்திருந்தார். 

நண்பரிடம் சீனா அவர்கள் காதில் கேட்கும்படி வலையுகில் நீங்கள் பார்த்தவரைக்கும் நேர்முறை எண்ணங்கள், அமைதியான ஆர்ப்பபாட்டம் இல்லாத நதி போல ஒரே நேர்கோட்டில் அடுத்தவருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து எவரையாவது பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு அவர் தான் இவர் என்று சீனா அவர்களிடம் கைகுலுக்கி நான் தான் ஜோதிஜி என்றேன். ஒரு கணம் திகைத்து நெகிழ்ந்து விட்டார்.

அப்போது தான் என் முகம் அவருக்குத் தெரிந்தது.

பொறுமை, விடாமுயற்சி, ஆழ்கடல் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை என்றால் அது எப்படி இருக்கும் என்பதை சீனா அவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் வயதில் நாம் இப்படி ஆரோக்கியமாக இருக்க முடியுமா? என்று பலமுறை யோசித்துள்ளேன். 

அவரிடம் அவருக்குத் தெரியாமலேயே நான் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளை தீர்த்து விடும் பொருட்டு இந்த வாய்பை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இந்த வலைச்சரத்தில் அறிமுகமான, அறிமுகமாகப் போகும் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து கொள்வதை விட என்னை இந்த வலைச்சரத்தின் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த திரு. அப்பாத்துரை அவர்களின் வரிகளை இந்த இடத்தில் இணைத்து விட்டுச் செல்கின்றேன். 

கடந்த நான்கு வருடங்களாக வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு கிடைத்த பல அங்கீகாரத்தில் இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எதையும் சுட்டிக்காட்ட தெரியவில்லை. இந்த சமயத்தில் தேவியர் இல்லம் திருப்பூர் என்ற வலைபதிவிற்கு கோடை விடுமுறை. சீனா அவர்கள் கடிதம் அனுப்பிய நாள் முதல் எழுதி வைத்து விட்டேன்.  

இந்த வாரம் முழுக்க இங்கே இரவு நேரத்தில் மட்டுமே இங்கே வர முடியும். ஒவ்வொரு நாளும் என் பதிவில் உள்ள சிலவற்றை ஒவ்வொரு நாளும் தரும் எண்ணமும் உண்டு. என் வலைபதிவு அனுபவங்களையும் தினந்தோறும் எழுதி வைத்து விடுகின்றேன். தினந்தோறும் நான் அறிமுகம் செய்யப் போவது இரண்டு பதிவுகள் மட்டுமே. ஆனால் அதனை என் விமர்சனப் பார்வையில் வைக்கப் போகின்றேன். பஞ்சாயத்தை கூட்ட விரும்பவர்கள் திருப்பூரில் காந்தி நகரில் உள்ள காந்தி வஸ்திராலயம் அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தடிக்கு அருகே வந்து விடவும்.

உணர்ந்தவர்கள் பெறுவீர்களாக.

வலை என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா? 

ஒரு தகவல் நம் மனதில் ஆழ்மனத்தில் பதிவாக படிந்து போய் இருந்தால் அதை எந்த காலத்திலும் அழித்து விட முடியாது.  நவீன விஞ்ஞானம் இதை மனநல மருத்துவத்தில் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றது. நம் விருப்பங்களை, ஆசைகளை, எண்ணங்களை, நோக்கத்தினை நம்மால் எழுத்துப் பதிவுகளாக மாற்ற முடியும். 

காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள் இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும்,  முதலில் நாம் வணக்கத்தை வைத்து விடுவோம்.  

ஆனால் இந்த தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்ந்த ஈழத் தமிழர்களை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வலைபதிவுகளில் யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?

1. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் பாதி நேரம் பயத்தோடு, பல நேரம் உழைக்க அக்கறையின்றி இருக்கும்  புத்திசாலிகளுக்கு .....

2. என் எழுத்தை அங்கீகரிக்க பத்திரிக்ககை உலகம் மறுக்கின்றது. நானே எனக்கு ராஜா. என் திறமையை இந்த உலகத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நம்பி எழுதுபவர்களுக்கு...........

3. உண்மையான விசயங்களை பத்திரிக்கை உலகம் பொருட்படுத்துவதே இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியமாக இருக்கின்றது. போட்டு உடைத்து கிழித்து மேய்ந்து எழுத கற்றுக் கொண்டவர்களுக்கு.........

4. என் ரசனைகளுக்கு பத்திரிக்கைகள் தீனி போடுவதில்லை. ஒவ்வொருவர் அனுபவங்களையும் அவர்கள் எழுத்தின் மூலமாக நான் அதிகம் வாசிக்க விரும்புகின்றேன்..........

5. உலகம் முழுக்க பரவியுள்ள தமிழர்களைப் பற்றி நான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள....

6. எனக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற்று விட்டேன். பரபரப்பான உலகில் பேச பழக ஆட்கள் கிடைப்பதில்லை. நான் வாசிக்கும் புத்தகங்களையும் மீறி எனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என்பவர்களுக்கு...

7. பதிவுகள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  எனக்கு எப்போதுமே ஜாலியோ ஜிம்கானாதான்.  நானும் நல்ல விசயங்களை தேடிப்போக மாட்டேன். தேடிவருபவர்களையும் முழு நேரமாக கலாய்த்துக் கொண்டிருப்பதே எனது முழு நேர தொழில் என்பவர்களுக்கு................

8. எனக்கு தினந்தோறும் அலுவலகம் முடியும் போது முடிந்த பிறகு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும். அந்த சமயத்தில் எவன் சொல்லும் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை.  நான் எப்போதுமே கும்மி ஆதரவாளன். மொக்கை சங்கத்தின் பொதுச் செயலாளர். அந்த சமயத்தில் தூள் கிளப்பிட்டு தூங்க போயிடுவேன் என்பவர்களுக்கு.....

9. பெற்ற அம்மா ஒரு பெண் என்ற போதிலும் உடன் வாழும் மனைவி, கூடப்பிறந்த சகோதரி, பெற்ற மகள்கள் இருந்த போதிலும் பெண்களை ரசிக்க, ரசித்ததை வார்த்தைகளில் கூச்சமின்றி எழுத அதை பீற்றிக் கொள்ள கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு.....

10. ஆழமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளைத் தேடுவேன். அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை அறிந்து கொள்ள விரும்புவேன். ரசனையான படங்களை பார்க்க விரும்புவேன். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த அக்கறையை எழுத்துக்களின் மூலம் உள்வாங்க விரும்புகின்றேன் என்பவர்களுக்கு......

11. அலுவலகத்தில் வீட்டில் இணையம் வசதி படைத்தவர்களுக்கு .................. தமிழ்நாட்டில் யூபிஎஸ் வசதி பெறற புண்ணிய ஆத்மாக்களுக்கு...........

12. பொழைக்கின்ற பொழைப்பை பார்ப்பதை விட்டு விட்டு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்டதை பார்த்துகிட்டு இருக்கானே(ளே) என்று திட்டு வாங்கிக் கொண்டும் இந்த உலகில் பயணிக்க ஆசைப்படுவர்களுக்கு..................

13. தற்போது இணையத்தில் அரசாங்கத்திற்கு பிடிக்காத கருத்துக்களை(?) எழுதுபவர்களை அடக்க 66 ஏ என்ற சட்டம் தற்போதைய புனித தலைவியின் ஆட்சியில் குண்டா சட்டமாகவும் மாறியுள்ளது. அய்யோ நாம் எழுதினால் களி திங்க வைத்து விடுவார்களோ என்று மனதளவில் பயந்து கொண்டே வேடிக்கை பார்க்க மட்டும் நினைப்பவர்களுக்கு ......

14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................

எதிர்கால உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

தகுதியிருப்பவர்கள் பிழைப்பீர்களாக.

அடுத்த வருடம் சந்திப்போம்.
ஜோதிஜி திருப்பூர்.
படங்கள் 4 தமிழ்மீடியா.காம்


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது