07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, October 15, 2014

தாலப் பருவம்!!!






"இந்த ஜென்மத்துக்கும் எனக்கு ஒரே ஒரு ஆசை தான் யா ...." இப்படி பலர் வாய்மொழிகளை தினம் தினம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும் நமது முழுமூச்சான வாழ்வின் குறிக்கோளே அதுதான்.


அந்த ஆசை... வாழ்வின் குறிக்கோள் எல்லாமே ..

வீடு....வீடு....வீடு...வீடு...
.
ற்கால மனிதர்கள் காடுகளில் இலைதழைகளை சுற்றிக்கொண்டு வேட்டையாடித் திரிந்தாலும் பொழுதடைந்ததும் தமக்கென குடிசை அமைத்துக்கொண்டு அங்கே வசிக்கத் தொடங்கினான். காலங்கள் செல்லச்செல்ல தங்குமிடத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டான். ஓலைக்குடிசை... சுட்ட ஓடு... காரை வீடு இப்படியாக படிப்படியாக வளர்ந்து இன்று வானளாவ கட்டிடங்கள் கட்டி குடியேறும் அளவுக்கு முன்னேற்றம்.



ந்த வர்க்கத்தினராயினும் அவரவர்கள் நிலைக்கேற்ப வீட்டுக்கனவுகள் வாழ்வில் நிலைகொண்டு இருக்கும். பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் தமக்கான வீடு கட்டுவதற்குள் படும் பாடு அப்பப்பா... சொற்களால் அடங்காது அந்த நிலை.

"எலி வளையானாலும் தனி வளை வேணும் ....."
"இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு...."

இப்படி பல பழமொழிகள் வீடுகளை மையப்படுத்தி நம்மிடையே வலம்வருகின்றன.





ந்த நேரத்தில் ஒரு முக்கியமான நபரை சொல்லியே ஆகவேண்டும். அவர் ஒளிவேந்தர் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள். நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் மேல் உள்ள தாகத்தையும் அதற்காக அவர்கள் பாட்டையும் " வீடு " என்ற மிகப்பெரும் திரைக்காவியத்தின் மூலம் நமக்கு படம்பிடித்துக் காட்டினார்.

காலம் கடந்துபோச்சி
காதோரம் நரைச்சி போச்சி!- இந்தக்
கட்டைய சாத்திடத்தான்
குச்சி வீடேனும் கட்டனும்யா .......


ஏனைய மனிதர்களின் ஏகோபித்த புலம்பல்கள் இது.

===============================================================




தாலப் பருவம்!
இன்றைய வலைச்சரப் பிள்ளைத்தமிழில் தாலப் பருவம். "தால் " என்பது நாக்கு... நாக்கை ஆட்டி பாட்டிசைத்து தன் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாடலே தாலாட்டு எனப்பட்டது. அப்படி தாலாட்டு கேட்டு தூங்கும் பருவமே தாலப்பருவம். இப்படியொரு அழகான இன்னிசைத் தாலப்பருவத்தில், நம்மிடையே வீடுகள் பற்றி எழுதியிருக்கும் பதிவர்களைப் பற்றி காண்போம்.
=============================================================




வீடு  வாங்குவது என்பது குதிரைக் கொம்பாகி வரும் இந்தக் காலத்தில், அதில் இருக்கும் ஏமாற்று காரணிகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. அப்படி சிரமப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து வீடோ அல்லது மனையோ வாங்கச் செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை இங்கே விளக்குகிறார்கள். நாமும் தெரிந்துகொள்வோம்.


ஏமாளியாய் நான் ஆனால்
தூற்றாதோ இவ்வுலகம்!
சிறுகச் சிறுக நான் சேர்த்தது
பெருங்காற்றில் போய்விடுமோ?!
உம்மைப்போல் புண்ணியவான்
போட்டுவைத்த பதிவுகள் - எம்மை
விழித்தெழச் செய்கிறதே!!


===================================================================

தோ இந்தியன் குரல் எனும் வலைத்தளத்தில் பாலசுப்ரமணியன் எனும் நண்பர் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பற்றிய காணொளியைப் பகிர்ந்திருக்கிறார். வீடு மனை வாங்கும் பொழுது ஏமார்ந்து போகாமல் இருக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள என விளக்குகிறார். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.


பூக்களால அபிஷேகம் - உமது
பூமலர் பாதத்துக்கு...
புல்லுருவிகள் ஏமாற்றுதலுக்கு
பலியாடு ஆகாமல் - எமை
தடுத்தாட் கொண்டமைக்காக....


=====================================================================





மது ஆருயிர் அண்ணன் திரு.சி.பி.செந்தில்குமார் அவர்கள் தனது அட்ராசக்க தளத்தில், நமக்கு வீடு கட்டும்போது ஏற்படும் சட்ட சிக்கல்களை கேள்வியாக கணைவிடுத்து அதற்கான பதிலையும் தகுந்த நபர்களிடமிருந்து பெற்று நமக்காக பகிர்ந்தளிக்கிறார்.

கூலிங் கிளாஸ்
போட்ட அண்ணே!
கும்பிட்டு வணங்குகிறேன்!
குலசாமி போல நீங்க
குலம்காக்க வந்தீக!
புத்திகெட்டு போகாமல்
புரிந்து நடந்துகொள்ள
புதினமாய் பதிவு தந்து
புண்ணியம் சேர்த்தீக!!!


=============================================================

ட பாவிகளா... இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க என்று சொல்லும் அளவுக்கு  சம்பவங்களை இங்கே நமக்காக கொடுத்து, அப்படி ஒரு ஏமாற்றத்துக்கு நாம் தள்ளப்படாது இருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள் அதிரை கடிதம் எனும் தளத்தில்.

மனமிங்கு புழுங்குது
இதயம்கூட குலுங்குது!
இதயமில்லா மனிதர்களை
இயல்பினில் பார்க்கும்போது!
இடுகாடு சேரானோ என
உள்ளமும் ஏங்குது!!


===============================================================



இளவேனில் எனும் தளத்தில் தமிழ்நதி அவர்கள் அற்புதமான பதிவொன்றை இயற்றியுள்ளார். அந்தரத்தில் இருக்கிறது வீடு. என்னடா இது திரிசங்கு சொர்கமாக இருக்குமோ என்று சற்றே பதைப்புடன் தான் படித்தேன். ஆனால் படிக்க படிக்க... புலம்பெயர் உள்ளங்களும், வெளிநாடு வாழ் உள்ளங்களும் தங்கள் வீட்டின் மேல் வைத்திருக்கும் பற்று மற்றும் தனது சொந்த வீட்டினை நெருங்கும் சமயம் என வார்த்தைகளால் நம்மை மயக்க வைக்கிறார்.
மச்சான் எங்க இருக்கீக...
இதோ இங்கே வந்திட்டேன் புள்ள...
மச்சான் எங்க இருக்கீக..
இன்னும் பத்து நிமிஷத்தில வருவேன் புள்ள....
நீளாண்டுகளுக்குப் பின்
சந்திக்கும் மனதுகள் - அந்த
சுகமான வீட்டில்...........

=============================================================

ங்கள் நெல்லைச்சீமையில் பிறந்த நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன் திரு. வண்ணதாசன் எனும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது தளத்தில் வீடு எனும் தலைப்பில் ஒரு குறுங்கவிதை கொடுத்திருக்கிறார். வரிகள் தான் ஆறு ஆனால் உணர்வுகளோ நூறு.
எங்க ஊர்க்காரர் என
சொல்லுவதில் பெருமை ஐயா...
உமது கவிதைகளின்
சொல்லபடாத மீதங்களே
நாங்களாக இருந்திட ஆசை ஐயா...

==============================================================




நிழலுடன் வாழாதே, நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற முகவரியுடன் கசியும் மௌனம் எனும் வலைத்தளத்தில் திரு.ஈரோடு கதிர் அவர்கள் பிறந்த  மனிதர்களை அடைகாக்கும் கருவறை என்கிறார் வீட்டை.  அழகான உணர்ச்சி ததும்பும் கவிதையை இங்கே காணுங்கள்.
நிழலென்ன நிழலடா
நிஜம்தானே வாழ்க்கையடா...
பிறக்கும் முன்னர்
அடைகாத்தல் தொழிலே!
பிறந்த பின்னும்
அடைகாத்தால் உணர்வே!
அவ் உணர்வினை அழகாய்
கவி புனைந்தீர் மன்னவனே!!

===========================================================

ண்களுக்கு எப்படியோ, ஆனால் பெண்களுக்கு வீடே கோயிலாக மதிப்பர். அதிலும் பெற்ற தாய் தந்தை உடன்பிறந்தோருடன் தாய்வீட்டில் வாழ்ந்த அந்தத் தருணங்கள் அவர்கள் நெஞ்சில் எப்போதும் மாறாத மணம் வீசும் மல்லிகையாய். அப்படித்தான் இங்கே சகோதரி ஆனந்தி தனது அன்புடன் ஆனந்தி எனும் தளத்தில் எங்கள்வீடு என்று கவிதையில் மனம் குளிரச் செய்கிறார்.
எந்த வீடு சென்றாலும்
அந்த வீட்டுக்கு இணையில்லை!
சொர்க்கமே என்றாலும்
அதுவும் என் வீட்டு
புழக்கடைக்கும் அப்புறம் தான்!!

===============================================================




"வீடு" எனபது ஒவ்வொருவர் நெஞ்சிலும் குடிகொண்டிருக்கும் மந்திரச்சொல். அதற்கான பிரயத்தனம் நம் வாழ்நாளில் முக்கால் பாகம். அப்படிப்பட்ட வீடு பற்றி கணக்கில் அடங்காத பதிவுகள் கொட்டிக்கிடக்கின்றன வலைப்பூக்களில். சிலரை இங்கே அடையாளம் காட்டியிருக்கிறேன்.
சுங்குடி சேலை கட்டி
இடுப்பு குலுக்கி போற புள்ளே
மனசு கசங்குதடி - செல்லம்மா
உன் கொசுவத்தில முடிஞ்சிக்கோடி - பொன்னம்மா!!
ன்னங்கருத்த மச்சான்
கொசுவத்தை உருவாதே
வெட்கம் பிடுங்குதய்யா - செல்லையா
பொழுது சாயட்டுமே - பொன்னையா!
நாளெல்லாம் ஏர்பிடிச்சி
நரம்பெல்லாம் வலிக்குதடி
நான்கண்ட சுகமென்ன - செல்லம்மா
நாலுகாசு சேர்க்கலியே - பொன்னம்மா!!
னசு கலங்காதய்யா
நான் கொஞ்சும் செல்ல மச்சான்
நஞ்ச விளையட்டும் - செல்லையா
நாலுகாசு கைக்குவரும் - பொன்னய்யா!!
ந்த நாளைத்தானே
நானும் பார்த்திருக்கேன்
குளத்துக்கு பக்கத்தில - செல்லம்மா
குடிசையொன்னு போடவேணும் - பொன்னம்மா!!
 
 


நாளை அடுத்த பருவத்துடன் சந்திக்கிறேன் அன்பர்களே.....

அன்பன்
மகேந்திரன்












மேலும் வாசிக்க...

Wednesday, November 27, 2013

குடியை விட நினைத்தவனை தழுவிய மரணம்

அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவு ஒரு தீர்வை எதிர் பார்கிறது, சமூக நிகழ்வை அலசுகிறது. இதில் நடைபெறும் உரையாடல் உண்மையே, சம்பவங்களும் உண்மையே.

இந்த உரையாடளில் கலந்து கொண்டவர்கள் நான், சுரேஷ் - தளிர் வலைத்தளம், எழில் - நிகழ்காலம் வலைத்தளம், மயிலன் (மருத்துவ மாணவர்) -மயிலிறகு வலைத்தளம், இன்னொரு சுரேஸ் - வீடு வலைத்தளம்.
தளிர் வலைத்தள நண்பர் சுரேஷ் ஒரு சம்பவத்தை சொன்னார்:

     " இரண்டு நாள் முன்பு கோவிலில் பூஜை செய்துவிட்டு கிளம்பும்போது வந்து நின்றான் அவன். ஒரு ஐம்பது ரூபா இருக்குமா? இருந்தும் இல்லை என்றேன்! ஒரு இருபது!.. ஒரு பத்து..! எதுக்கு என்றேன்? அவசரமாக வேணும் ப்ளீஸ் கவனி நண்பா! என்றான். இரு வரேன் என்று பக்கத்து நண்பர் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் பேசிவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்த போதும் வாசலில் நின்றான். பரிதாபமாக இருந்தது. 1987ல் ஒன்றாக எட்டாம் வகுப்பு படித்தோம்! பத்தாவது வரை ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் நாங்கள்! அன்று அவன் ஒரு மளிகைக் கடை அதிபரின் மகன். செழிப்பான குடும்பம். இன்று வீதியில் இப்படி போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக் கொண்டு இருக்கிறானாம்! திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவனது மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. கிடைக்கும் காசை குடித்து அழிக்கிறான். வியாபாரம் செய்வதில்லை! இவனுடைய அண்ணன்களும் இவனை கவனிப்பது இல்லை! ஒரு வயதான தாய் இருக்கிறாள். அவள்தான் இந்த குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். நல்ல வேளை இவன் மனைவி படித்த பெண்ணாயிருந்தும் குடும்பத்தையோ இவனையோ கை கழுவ வில்லை! இப்படி ஆக என்ன காரணமாக இருக்கும்? யோசித்தேன்! அவனுடைய தந்தை மளிகை வியாபாரம் செய்யும் போது சாராயம் காய்ச்ச வெல்லம் விற்றார். கள்ளச்சாரயம் அப்போது பேமஸ்! இவரும் திருட்டுத்தனமாய் கொள்ளை விலைக்கு விற்றார். இப்போது மகன் குடித்துவிட்டு அழிக்கிறான். ஒன்றாக படித்தவனின் இந்த நிலை வருந்த வைத்தது! # feeling sad"

கலாகுமரன் : குடிக்கு அடிமை வேறு என்ன சொல்ல முடியும். என் அலுவலகத்தில் வேலை செய்தவர் தீபாவளி அன்று இறந்து விட்டார். ஒரு வருசத்துக்கு முன்பு தான் அவருக்கு கல்யாணம் நடந்தது. இவரின் குடிபழக்கத்தை நிறுத்த நாட்டு வைத்தியம் பார்த்திருக்காங்க. அதுவே இவருக்கு எமனாகிடுச்சு. இந்த வைத்தியம் சைட் எபக்ட் ஆகிடுச்சு என்று சொல்றாங்க.

எழில் : உங்களின் பகிர்வு வருத்தமளிக்கிறது கலாகுமரன்
கலாகுமரன் : ஆங்கில மருத்துவத்தில் சைட் எபக்ட் சொல்லலாம். இது புரியல.
எழில் : நான் கேள்விப்பட்ட விஷயம் சரியான்னு தெரியாது ... அரைகுறை நாட்டு வைத்தியர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் ஆர்சனிக் முதலான விஷப் பொருட்கள் கலக்கறாங்களாம்

கலாகுமரன் :  ஆர்சனிக் கொடிய விசமாச்சே...சின்னவயசுல இருந்தே நண்பர் குடிச்சிட்டு இருக்கார். எல்லாம் சேர்த்துவச்சு உடம்ப பாழாக்கிடுச்சு. கடந்த ஆறு மாசமா குடியை விட்டு இருந்தார்.

எழில் : உடனடி வலி நிவாரணியாம்... கொஞ்சமா சேர்ப்பாங்களோ...
கலாகுமரன் : கடந்த ஆறு மாசமா உணவு முறையை சுத்தமா மாத்திட்டாரு. அது பயனில்ல ஆர்கன்ஸ் செயல் இழக்க ஆரம்பிச்சிடுச்சு. நண்பர்கள் சொல்றது இத நிறுத்த முயற்சி செஞ்சிருக்க வேண்டாங்கரது, இது எனக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்கரதா இருந்துச்சு.

எழில் :  எத்தனையோ பேர் சில மது நிறுத்தும் முறைகள் கையாண்டு நலமாகியிருக்கிறார்களே... இவருடைய பிரச்சனை என்னவென்று தெரியவில்லை...
தெரிந்த ஒரு பையன் ஹோமியோ முறையில் ஹன்ஸ் பழக்கத்திலிருந்து மீண்டிருக்கிறானே..

கலாகுமரன் : மருந்து எடுக்க ஆரம்பிச்சப் பிறகு, கணயத்தின் சுரப்பு பாதிக்க ஆரம்பிச்சுது. வயிற்றில் நீர் கோர்க்க ஆரம்பிச்சிடுச்சு. முகம் கால்கள் வீக்கம். அதுக்கு பிறகு ஆங்கில வைத்தியர் கிட்ட போய் அத சரி செஞ்சாங்க. ஆனா பின் விழைவுகள் சரி ஆகல once failed not retrived.

எழில் :  ஓ...பரிதாபம் தான்.

கலாகுமரன் : எழில், போதை பழக்கம் வேற குடி பழக்கம் வேற.
உங்கள் கருத்து மயிலன்

மயிலன் : ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் அற்றது என்பது ஒரு போலி பிம்பம்.. மிளகு சாப்பிட்டால் சலி குணமாகும்.. இஞ்சிக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு.. ஆனால் காரசாரமான இவை தொடர்ந்து உட்க்கொள்ளும் பட்சத்தில் மேல்உணவு குழாய்க்கு புற்றுநோய்க்கான காரணிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.. உடனே பொதுப்புத்தி மிளகு சாப்பிட்டால் புற்றுநோய் வருமென இதனை பொதுமைப்படுத்த பிரயத்தனப்படுத்ல் தவறு.. அலோபதி மருத்துவத்தில் நான்கு நிலை ஆய்விற்கு பின்னரே ஒரு மருந்து புழக்கத்திற்கு வரும்.. அதீத பக்கவிளைவுகள் கொண்டவை புழக்கத்திற்கு வருவதேயில்லை.. தவிர சில மருந்துகள் வெளி சந்தைக்கு வந்தப்பின் எதிர்பாரா பக்கவிளைவுகள் வந்துவிட்டால் உடனே பின்வாங்க படுகிறது... இதனை அங்கீகரிக்க கட்டுப்பாடு குழுக்கள் இருக்கின்றன.. ஆனால் ஆயுர்வேத்த்திற்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுகளும் தணிக்கைகளும் மிக குறைவு.. காலந்தொட்டு நம்பப்படும் பக்கவிளைவற்ற மருத்துவ வடிவம் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படுவது அறியாமை,, பக்கவிளைவுகள் ஆய்வுகள் பெரிதாய் நடப்பதில்லை.. செடிகளை மருந்து என நம்பும் கூட்டம் அரளியும் ஒரு செடி என்பதை மறந்துவிடுகிறது... மேலும்,ஒரு நண்பர் இங்கே சொல்லியிருப்பது போல போலி புல்லுருவிகளின் அயோக்கியத்த்தனமும் இதற்கு காரணம்.. விஷ தாதுக்களை கணிசமான அளவு கலந்து கொடுத்த்து உறுப்புகளை காலிபண்ணுகிறார்கள்.. மேலே இறந்ததாய் கூறப்பட்டவருக்கு குடியால் கெட்ட உறுப்புகளை இந்த தாதுக்கள் முழுதும் நாசமாக்கி இருக்கும்... லெட், காப்பர், ஆர்சீனிக் என எல்லாமே கல்லீரலையும் சிறுநீரகத்தையும் சீக்கிரம் செயலிழக்க வைக்கும்...


கலாகுமரன் :
நன்றி மயிலன்...சுரேஸ்குமார், குடி பழக்கத்தை விட்டுடலாம்னு நினைக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ்.

(வீடு வலைத்தளத்தள பதிவர் )

குடிய நிறுத்த சொல்லுகின்ற அனைத்து வைத்தியங்களும், பிளாட்பார மூலிகை அரைகுறை வைத்தியர்கள்தான், எந்த போதையையும் நிறுத்துவதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து கிடையாது...அத்தனையும் பக்கா பிராடு! அலோபதியில் மட்டும்தான் அதற்கான சிகிச்சையுள்ளது..அதுவும் அனைவருக்கும் ஏற்றது அல்ல...சாதாரண புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த எடுக்கப்படும் அலோபதி மருந்தே பக்கவிளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தும். மனபயிற்சி, தியானம், யோகா போன்றவை பலன் தரும்.

இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருக்கீங்க உரையாடல் எப்படி எங்கே?
இதுக்கு தான் மார்க் நமக்கு முகபுத்தகம் (Face Book) சமூக  தளத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்காரே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்கு உடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியுமே.

இங்கு வெளியிடப்பட்ட  கருத்துக்கள் அவரவர் சொந்த கருத்தே, உங்களுக்கும் இதில் மாறுபட்ட கருத்து அல்லது முரண்பாடு இருக்கலாம், இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எந்த ஒரு மருத்துவரையோ மருத்துவத்தையோ இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

* * * * *

நேற்று இரண்டு படங்கள் போட்டு இருந்தேன் அதில் முதலாவது ஒரே படத்தில் உள்ளீடாக (ஒன்றினுள் ஒன்றாக) விலங்குகளின் நிழல்கள் உள்ளன. யானை மேலே ஒரு மனிதனும் இருக்கிறான். அதில் கேட்கப் பட்ட கேள்வி எத்தனை விலங்குகள் உள்ளன.

மிருகம் vs மனிதன்

இதற்கு அறிவியல் பூர்வமான விவாதத்தின் படி, இயற்கையின் படைப்பில் மிருகமும், மனிதனும் இவ்வுலகத்தின் தோன்றிய உயிர்கள். விலங்குகள் ஒவ்வொன்றும் மில்லியன் ஆண்டுகளாக தோற்ற மாறுபாடும் வளர்ச்சியும் பெற்று வந்துள்ளன. விலங்குகளின் பிற்பாடு மனிதன் தோன்றி இருக்க வேண்டும் (டார்வின் கோட்பாடு)

மனிதன் மற்றும் மிருகம் இவற்றிற்கான வேறுபாட்டை ஈ.வே.ரா பெரியார்  கூறிய கருத்துக்கள் :

மனிதன் விலங்குகளிலிருந்து எந்த அளவு வேறுபட்டுக் காணப்படுகிறான் ? என்று சிந்திக்கோனும், மனிதன் என்பவன் மிருகங்களை, பறவைகளைவிட அறிவு அதிகம் பெற்றவன்; சுற்றுச் சார்புக்கு ஏற்றவாறு தனது அறிவின் காரணமாக மாற்றி யமைத்துக் கொண்டு வாழ்பவன் அவன் தான் மனிதன்,  ஆனால் இன்று நடப்பதென்ன? ஒருவனை யருவன் வஞ்சிக்கிறான் திருடுகிறான்; கொலையும் செய்கின்றான் என்றால் மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன மாறுபாடு இருக்கின்றது?



சரி அந்த கேள்விக்கான பதில் (8) அனைத்துமே.

அடுத்து ஒரு அணில் பிள்ளை குட்டியை கைகளில் வைத்து இருக்கிற படம். ஏதேனும் ஒரு காரணத்தினால் குட்டி அனாதையாக விடப்பட்டால் இன்னொரு அணில் பிள்ளை அதை தத்து எடுத்து பாதுகாத்து வளர்க்கும். ஆறறிவு உள்ள மனிதன் குழந்தையை குப்பை மேட்டில் வீசி செல்வதை பார்க்கிறோம். இந்த தகவல் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு துணை பதில்.

இதே பதிலை தோழி எழிலின் பதிவில் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் நீங்களும் படித்து பாருங்களேன்;

நிகழ்காலம் எழில் : சமூக சிந்தனை கட்டுரைகள். 

அணில் பிள்ளை......

பெரியாரின் சிந்தனைத்துளிகள் -9


வீடு சுரேஷ் சிறுகதைகள் : சமூக சுழலை, காட்சியை நம் கண் முன் கொண்டுவருகின்றன இந்த கதைகள்.

என்பிலதனை வெயில் காயும்

மல்லி என்கின்ற ராதா 



 மயிலிறகு மயிலன் குறுங்கதைகள்:

யார் பெண்ணே நீ?

 மணிமொழியும் மரணித்த பொழுதுகளும்...

 

பாசிடிவ் செய்திகள்  என்ற தலைப்பில் சமூக அக்கரை பதிவுகளையும், வார வாரம் ஞாயிறு வித்தியாசமான புகைப்பட பகிர்வுகளையும் 

எங்கள் ப்ளாக்கில் தருபவர்  K.G. கவுதமன்

ரசித்த பதிவில் இதுவும் : சோம்னாம் ரியலிசம்!



ரசித்தவை, நினைவில் நிற்பவை என்ற டைடில் கார்டில்  அனுபவ முத்திரைகளை பதித்து வருபவர் சுப்புதாத்தா
இதுவும் காபிதான்     சமீபத்திய பதிவு
சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?
அது என்ன இங்கிதம் ? (எனக்கும் தெரியல !)





இணையத்தில் படித்ததின் தழுவல்!  ஆக இருந்தாலும் சுவாரசிய தழுவல் காட்சியை இரண்டொரு வார்த்தைகளில் வவரிப்பது சுவரஸ்யம் படித்து பாருங்கள் .

நான் பேச நினைப்பதெல்லாம் பிரபல மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்களின்   தேடி வந்த ஆவி! 

 கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!.. கைவேலைப்பாட்டுடன்  கவிதைகளில் நம்பிக்கையும் விதைக்கிறார்   இளமதி.

அழகான வடிவமைப்போடு திரைபாடல் வரிகள், குறள் விளக்கத்துடன் ஒவ்வொரு பதிவையும் செதுக்கி நம்மை சிந்தனை வசப்பட செய்பவர் பதிவர்களால் "பின்னூட்ட புயல்" என்ற செல்லமாக அழைக்கப்படும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுபவப் பதிவுகளில் ஒன்று
சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்




திடங்கொண்டு போராடு - சீனு வின்
ரயிலோடும் பாதை  அனுபவப்பூர்வமான உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கிறது

அதி விரைவாகவும் பலவித சப்தங்களோடு பயனித்த ரயில் இறுதியில் மெளனமாக...நிசப்த இருளில்.... என்ற என்னுடைய பின்னூட்டத்தை பதித்தேன்.



அர்த்த ராத்திரி...!(சிறு கதை)  சமூக சிறுகதை  தவறு நெருப்பின் மேல் ஆசைப்பட்ட விட்டில் மீதா?  கவிதை தளத்தில் நண்பர் சீனி.





படக்கதை வழங்கியவர் :   ஜி.டி என செல்லமாக அழைக்கப்படும் காயத்ரி தேவி
குறிஞ்சி மலர்கள்... !!!


கழுகுக்கூட்டங்கள் எனும் கட்டுரையில் அவருக்கு ஏற்பட்ட மருத்துவ அனுபவம் பற்றி  சொல்கிறார் நண்பர் ஜோதிஜி தமது தேவியர் இல்லத்தில்...



முருகானந்தன் கிளினிக் என்ற வலைத்தளத்தில் மருத்துவம் சார்ந்த பதிவுகளை வழங்கி வருகிறார் டாக்டர் M.K. முருகானந்தன்

சிந்தனைக்கு இரண்டு படங்கள்



இது கிராபிக்ஸ் படம் அல்ல ஒரு பென்சில் ஓவியம் தத்ரூபமாக வரைந்தவர் ரஷ்ய ஓவியர் ஒளேகா மெலமோரி ( Olga Melamory)

"அவன் உன் அந்தரங்க பகுதியை தொட்டானா" -  "ஆ..மா"

இந்த கார்டூன் நகைச்சுவைக்காக மட்டுமல்ல... பெண்கள் மீதான வன்கொடுமையை பட்டவர்தனமாக  குறியீடாக சாடுகிறது. (மனிதன் மிருகத்தை விட மேலானவனா...!)

மீண்டும் உங்களை நாளைய பதிவில் சந்திக்கிறேன்,

அன்புடன்,

கலாகுமரன்.


மேலும் வாசிக்க...

Friday, January 4, 2013

ஜோதிஜி 5 வது நாள் - உருப்படியான நபர்கள்


சென்ற முறை நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்ற போது ஒரு நண்பர் மூலம் ஒரு பஞ்சாயத்து உருவானது.  

அவர் என் பதிவை குறைத்து மதிப்பீட்டு எழுதி விட்டாய். இவ்வாறு எழுதியது எனக்கு உடன்பாடில்லை. நீக்கி விடு என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் நான் எடுக்கும் முடிவில் என்றுமே பின்வாங்கும் பழக்கம் இல்லை. 

சென்ற பதிவில் புலவர் அய்யா சொன்னது போல துவைத்து காயப்போடுவது தான் என் வாடிக்கை.

சீனா அய்யா சொன்னது போல குறிப்பிட்ட பதிவுகள் என்று வலைதளத்தில் உள்ளவற்றை என்னால் அறிமுகம் செய்ய முடியவில்லை.  காரணம் ஒரு நல்ல மாமரத்தில் உள்ள எந்த கனி நல்லது என்று எப்படி சுட்டிக் காட்ட முடியும்.  மொத்த மரமும் இனிப்பாக இருக்கும் போது இந்த பழத்தை மட்டும் உண்டு பாருங்கள் என்று எப்படி சொல்ல மனம் வரும்?

சீனா அவர்களே அடுத்த பதிவில் நீங்க சொன்ன கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுகின்றேன்.

தமிழிலில் உருப்படிகள் என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா?  நல்ல உருப்படியான வேலை செய்து இருக்கிறாய்? என்று எங்கள் ஊர் பக்கம் பாராட்டிச் சொல்ல இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றார்கள்.

நான் பார்த்தவரைக்கும் இந்த தமிழ் இணையத்தை தாங்கள் எழுதும் வலைபதிவுகள் மூலம் முடிந்த வரைக்கும் சமூகத்திற்கு சேர வேண்டிய உண்மையான கருத்துக்களை சொல்பவர்கள், இதை ஒரு மாற்று ஊடகமாக கருதுபவர்கள், தங்கள் எழுத்துப் பணியை பொழுது போக்குக்கு அப்பாற்பட்டு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விசயங்களை அப்படியே தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் என்பவர்களை பட்டியலிட்டு உள்ளேன்.

சில குழும வலைதளத்தின் உள்ளே நுழையும் போது நீங்கள் இவர் இந்த பகுதியில் இருந்து கொண்டு தான் எழுதிக் கொண்டு இருக்கின்றாரா? என்பது போன்ற ஆச்சரியங்கள் தோன்றக்கூடும்.

அறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை.
அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.














(இந்த பட்டியல் தொடரும்)

குழும பதிவுகளின் உள்ளே நுழைந்து அதில் உள்ள ஒவ்வொரு பதிவுகளை யும் நீங்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள். பல ஆச்சரியங்கள் கிடைக்கக்கூடும். இந்த குழும பதிவுகளின் மூலம் ஏறக்குறைய 50 பதிவுகளுக்கு மேல் உள்ளதால் உங்கள் தேர்வுக்கு ரசனைக்கு இதனை விட வேறு எதுவும் தேவையிருக்காது. உணர்ந்தால் உத்தமம்.

கடந்த மூன்று நாட்களாக வலைச்சரத்தில் நான் அறிமுகப்படுத்தும் பதிவுகளை, விசயங்களை உள் வாங்கிக் கொண்டிருக்கும் நட்புகளுக்கு என் இனிய வணக்கம். பொதுவாக என் பதிவில் அல்லது என் பதிவு வெளியிடும் எந்த தளத்திற்கும் எவர் விமர்சனம் செய்தாலும் அவர்களுக்கு முடிந்தவரைக்கும் பதில் அளிப்பது எப்போதும் என் வாடிக்கையான வழக்கம்.  ஆனால் இந்த முறை முடியாமல் போய்விடுகின்றது. மொத்தமாக சனிக்கிழமை அன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளித்து விடுகின்றேன்.

காரணம் தொழில் வாழ்க்கை தினசரி நடவடிக்கையோடு மற்றொரு வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. 

வருகின்ற 27/01/2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூரில் பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் என்னுடைய முதல் புத்தகமான டாலர் நகரம் வெளியாகின்றது. சட்டமன்ற உறுப்பினர், பிரபல எழுத்தாளர்கள், மற்றும் ஏராளமான பதிவர்களின் நிகழ்ச்சியாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இதில் தமிழ்ச்செடி, சேர்தளம், தொழிற்களம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்துகின்றது. திருப்பூருக்குள் இருந்து வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை பதிவர்களின் அவர்களைப் பற்றி விபரங்களை உள்ளடக்கிய ஒரு விழா மலர் ஒன்றும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வெளியிட உத்தேசித்துள்ளோம். 

தமிழ்வழிக்கல்வி என்பதை தனது அயராது முயற்சியின் மூலம் திருப்பூரில் எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் மற்றும் திரு. தங்கராசு போன்றவர்கள் தங்களது தாய்த்தமிழ் பள்ளி என்பதன் மூலம் சாதித்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

அவர்களைப் பற்றிய அறிமுகமும், திரு. தங்கராசு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ் பள்ளிக்குழந்தைகளின் பன்முகத் திறமையை, அற்புத ஆற்றலை உலகத்திறகு எடுத்துச் செல்லும் வண்ணம் அவர்களின் பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இந்த குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை திரு. சகாயம் அவர்கள் கலந்து கொண்டு திருப்பூர் உறவோடு தளம்  ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் மூலம் கண்ட போது ஆச்சரியப்பட்டுப் போனோன் என்பதை விட திகைத்துப் போய்விட்டேன என்பது தான சரியான வார்த்தையாக இருக்கும். 

நாம் எத்தனை விசயங்களை இழந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இதன் மூலம் உணர்ந்து ஒரு குற்ற உணர்ச்சி என் உள்ளே உறுத்திக் கொண்டிருந்த காரணத்தால் இந்த நிகழ்வின் மூலம் இவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

இது குறித்து மேலும் அறிய மேலே உள்ள தளத்தில் உள்ள காணொளி காட்சிகளை கண்டு கொள்ள முடியும். இதனைப் பற்றி தனியாக என் பதிவில் வெளியிட நினைத்துள்ளேன். 

கோவை, ஈரோடு முதல் மற்ற இடங்களில் உள்ள வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சீனா அய்யா நம்பிக்கையுடன் கொடுத்த இந்த வாய்ப்பை முறைப்படி முடித்து வைப்பது தான் நியாயமாகும்.  

ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27) காலை 9  முதல் மதியம் 1 மணி வரையிலும் நடக்க இருக்கிறது என்பதால் நிச்சயம் பலராலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன். பல நல்ல சமூகம் சார்ந்த மண்ணுக்கும் மக்களுக்குமாய் போராடிக் கொண்டிருப்பவர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றப் போகின்றார்கள். 

உங்கள் ஆதரவை கோருகின்றேன். 

முழுவிபரங்களை அடுத்த வாரம் என் தேவியர் இல்லத்தில் வெளியிடுகின்றேன். அழைத்துச் சொன்னவுடன் நான் ரயில் முன்பதிவு செய்து விட்டேன் என்ற சீனா அய்யாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஈழப்போர் ஏன் நடந்தது? இலங்கை பெற்ற வெற்றிக்கு பின்னால் உள்ள சர்வதேச  சமூகம் என்னவெல்லாம் செய்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவர்கள் மட்டும் சொடுக்க
மேலும் வாசிக்க...

Thursday, January 3, 2013

ஜோதிஜி 4வது நாள் - முகம் காட்டும் கண்ணாடி


இன்று சமூக இணைய தளங்கள் நமது வாழ்க்கையோடு ஒன்றாக கலந்து கொண்டே நம்மை மாற்றிக் கொண்டும் வந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிவிர்கள் தானே?

வெறுமனே வலைபதிவுகள் என்பதோடு நிற்காமல் உங்கள் எண்ணம் பரந்து பட்டு செல்ல வேண்டும்.  

ஆனால் ஒவ்வொரு நிலையிலும் உங்களின் கவனம் சரியாக இருக்க வேண்டும். பெண்கள் என்றால் இன்னும் சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும்.  பயந்து கொண்டே இருந்தால் பறவைகள் மட்டும் தான் இந்த உலகில் பறந்து இருக்க முடியும். 

இன்று கண்டங்களை நாள் கணக்கில் கடக்க முடிய காரணமே யாரோ ஒருவர், ஏதோவொரு சமயத்தில் எடுத்த துணிச்சலான முடிவு.

ஆனால் நாம் வேடிக்கை பார்க்க மட்டும் விரும்புகின்றோம். விதாண்டாவாதம் செய்யவும் விரும்புகின்றோம். 

இன்று முகநூல் (ஃபேஸ்புக்), ட்விட்டர் ,கூகுள் ப்ளஸ் (கூகுள் கூட்டல்), ஆர்க்குட் (இது இப்போது வலு இழந்து விட்டது). இது தவிர தொழில் ரீதியான தொடர்புகளுக்கு லிங்டு இன் போன்ற சமூக தளங்கள்.

இப்படி ஒரு உலகம் இருக்கின்றது எனபது உங்களுக்குத் தெரியுமா?

இதனால் என்ன பலன் என்றாவது தெரியுமா?

வலைபதிவுகள் எனறால் குறைந்த பட்சம் 300 வார்த்தைகளாவது கோர்வையாக எழுதத் தெரிய வேண்டும். குறைந்த பட்சம் படிப்படியாக கற்றுக் கொள்ளவாவது வேண்டும்.  அப்போது தான் அதுவொரு முழுமையான பதிவாக இருக்கும்.  கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு, திரட்டி குறித்த விழிப்புணர்வு போன்றவைகளை அவசியம் கற்று இருக்க வேண்டும்.

ஆனால் முகநூலில் நான்கு வரிகளில் நீங்க சொல்லும் ஒரு விசயம் நான்கு கண்டங்களையும் தாண்டி அதற்கு அப்பாலும் சென்று சில சமயம் பிரளய்த்தை உருவாக்கும்.

பல சமயம் வெகுஜன இதழ்களில் இதன் மூலம் பிரபல்யமாகவும் மாற உதவும்.

ட்விட்டர் என்பதற்கு வரிகள் கூட தேவையில்லை. நான்கு வார்த்தைகளில் நச்சென்று ஒரு விசயத்தை உங்களால் செதுக்க முடிந்தால் போதும்.  வாய்ப்புகள் அநேகம். உங்கள் திறமைகளை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு எதைப் பார்த்தாலும் பயம் அலர்ஜி என்றால் போர்த்திக் கொண்டு படுத்து விட வேண்டியது தான்.  அப்போது கூட டெங்கு கொசு வந்து ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கத்தான் செய்யும்? என்ன செய்ய முடியும்?

என்னுடைய அறிமுக பதிவில் என்னுடைய முகநூல், கூகுள் கூட்டல் (GOOGLE PLUS)   ட்விட்டர் பற்றி கொடுத்துள்ளேன். 

முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் நிதானமாக காலடி எடுத்து வைங்க.  பலமுறை நான் பகிரும் படங்கள் பெரும்பாலும் முகநூலில் இருந்து எடுத்து போடுவது தான். 

நான் பார்த்தவரைக்கும் மிக மோசமான விசயங்களும் மிக மிக நல்ல விசயங்களும் இந்த முகநூலில் நமக்கு எளிதாக கிடைக்கின்றது. தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. 

பலர் இந்த முகநூல் மூலம் சப்தம் இல்லாமல் பல அரிய சாதனைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

கீழே உள்ள தகவல்களை படித்துப் பாருங்க.


ஃபேஸ்புக்ல என்ன சாதிச்சாலும் இதை லாகவுட் பண்ணினா ஒருத்தனுக்கும் தெரியாது - இந்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை வச்சி இரண்டு ரூவா ஒரு கிலோ அரிசி கூட வாங்க முடியாது - இந்த உட்கார்ந்து மேகஸின்ல படிச்சிட்டு அதை தமிழ்ல்ல போடுறதுக்கு எங்காவது கோயில்ல உட்கார்ந்து பிச்சை எடுத்தா அஞ்சு பத்து கிடைக்கும்இப்படின்னு பல நண்பர்கள் கூறக்கண்டேன். ஃபேஸ்புக் மூலம் அடுத்தவங்க என்ன சாதிசசங்கன்னு நான் சொல்றதை விட நான் என்ன சாதிச்சேன்னு பட்டியல் போடு சொல்கிறேன் இதை ஒவ்வொரு வருடமும் செய்வேன்.


2012 ஃபேஸ்புக் மூலம் என்னுடைய சொந்த உழைப்பில்சொந்த பணத்தில் ஒன்னு இல்லை இரண்டு இல்லை ஆயிரம் இல்லை லட்சம் இல்லை லட்சம் மக்களுக்கு மேல் பயனடைந்துள்ளார்கள் அதுவும் தினமும். இதை சொல்வது என் பிரதாபத்தை நானே புகழ்வதற்க்கு அல்ல - ஃபேஸ்புக் ஒரு அருமையான தளம் இதன் மூலம் நீங்கள் நிறைய பெறுவீர்கள் என உறுதியுடன் சொல்லி - ?புறம் பேசுவதும்தனி மனித விமர்சனமும் கூட ஒரு வண்புணர்வும் விபாச்சாரமும் போல" எண்ணி அதை சொல்லும் நண்பர்களையும் இரட்டை வேடம் போடும் நண்பர்களையும் உதாசீனம் செய்து நீங்கள் உங்களுக்கு என்ன நல்லது முடியுமோ அதை செய்யுங்கள்.



1. சமச்சீர் ஆன்லைன் கல்வி - www.samacheeronline.com 2011ஆம் ஆன்டு ஆரம்பிக்கப்பட்டு இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேவையான் அத்தனை பாடபுத்தகங்களும் பிடிஃப் செய்யபட்டு பல வித வசதிகளுடன் ஆரம்பித்த நான் இன்று லட்சத்தி 31 மெம்பர்கள் உள்ளனர். இதில் தினமும் 6000 - 18,000 வரை லாகின் செய்கின்றனர். பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த வருடம் பள்ளி திறக்கும் வரை புக் வராமல் சுமம இருக்கும் குழந்தைகள் இந்த புத்தகத்தை யூஸ் வெய்கின்றனர். 

தினமும் இதன் மெம்பர்ஷிப் ஏறி கொண்டே செல்கிறது. இதில் மொத்தம் 18 லட்சம் பக்கங்களை உள்ளடக்கிய போர்ட்டல் - இதில் விளம்பரமோ அல்லது ஒன்றுமே கிடையாது. இது லட்சமாக இருந்தபோது தேணம்மை லக்ஷ்மனன் மற்று மற்ற பத்திரிக்கையாளர்கள் இதை ஆர்ட்டிக்களாக போட்டு லட்சம் பிளஸ் வரை போனது.



2. ஆன் லைன் தமிழ் கல்வி மற்றூம் டெக்னிக்கள் கோர்ஸ் கல்வி போர்ட்டல் - http://www.samacheeronline.com/tamillearning/ இதை ஆரம்பித்து ஆரம்ப தமிழ் முதல் பட்டதாரி தமிழ் பாடம் வரை ஒலி ஒளி வசதியுடன் அமைக்கபட்ட இட்ந்ஹ போர்ட்டலுக்கு உலகம் முழுவது தமிழ் கற்க இது வரை 2லட்சத்தி 13 ஆயிரம் பேர் மெம்பராக இலவசமாக தமிழ் கற்கின்றனர்.



3. நாக் 60 டேஸ் சேலஞ் - www.nag60days.com இது இந்த வருடம் மட்டும் 280 மக்கள் சேர்ந்து சுமார் 3415 கிலோ வரை உடம்பை குறைத்து ஆரோக்யமால இருக்கின்றனர். இதில் 19 வயதில் இருந்து 70 வயது ஆட்கள் வரை மெம்பராக உடம்பை குறைத்தது மட்டுமல்ல ஒரு பத்து வயது இளமையாகி புது லைஃப் ஸ்டைலோடு நோய் நொடியின்றி இருக்கின்றனர். இது அனைத்தும் ஒரு புதுமையான 3டி ஃபார்முலாவை கொண்டு மருந்து மாத்திரை என்று ஒரு மன்னாங்கட்டியும் இல்லாமல் குறைக்கபட்ட சாதனை. சாதாரண ஃபேஸ்புக் மெம்பரில் இருந்து முண்ணனி நடிகைநடிகர்கள் வரை இதில் பயனடைந்து உள்ளனர்.



4. தமிழ் நாடு பிளட் டோனர்ஸ் - www.tnblooddonors.comலட்சக்ககனக்கில் டேட்டாபேஸை கொண்ட ஆன்லைன் ரதத வங்கி போர்ட்டல் - இப்போது வெறும் சென்னை மட்டும் தான் உள்ளது 2013ல் இது அனைத்து தமிழக நகரங்களின் டேட்டாபேஸ் மற்றூம் இதில் சில சிறப்பு வசதிகளை கொண்டுள்ள இலவச போர்ட்டல்.இதன் பயன் பாடு 1.7 லட்சத்திற்க்கும் மேல்.



5. செக் யுவர் ஹார்ட் - www.checkyourheart.us /


உங்களின் வயதுபிளட்பிரஷர்கொலஸ்ட்ரால் டீட்டெயில் மற்றும் இன்னும் சில டீட்டெயிலை போட்டால் ஒரு நிமடத்தில் உங்களின் இருதய நிலை உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் சதவிகிதம் எத்தனை வருடங்களில் வரும் என்பதை சொல்லும் அற்புத இலவச போர்ட்டல். இதன் பயன் பாடு லட்சத்திற்க்கும் மேல்.



6. ஈக்குவல் மேட்ரிமோனி - www.equalmatrimony.com

ஊனமுற்றோருக்காக அரம்பிக்க பட்ட இலவச கல்யாண போர்ட்டல். இதை நடத்த முடியாமல் போனதற்க்கு சில ஆட்கள் பலம் இல்லாதது தான். இதற்க்கு டிமிட்ரி - கார்த்தி கருணா உதவி செய்ய வந்த போது இதை 2013ல் வெற்றீ கரமாக நடத்தி முடிப்பேன். இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு இலவச சுயம்வரம் இந்த மக்களுக்காக நடத்தி அவர்களுக்கும் நாம் வாழ்வில் ஒரு ஒளி ஏற்றி வைப்போம்.



இந்த வருடம் நாக்லேப்ஸ் வியாபர விஷயம் என்பதால் பட்டியல் இடவில்லை. புது மற்றூம் உதவி இயக்குனர்களுக்காக ஒரு புது முயற்சியை 2013 ஜனவரி 14ல் தொடங்குவேன். 



இது போக சபரிவானரசன் போன்ற பல பேர் உதவி செய்யும் இந்த ஃபேஸ்புக் நெட்வொர்க் ஒரு அருமையான வரப்பிரசாதம். எனக்கு கிடைத்த 9000 பிளஸ் இந்த ஃபேஸ்புக் நட்பு தான் என்னை இதை செய்ய வைத்தது. 

இதற்க்கு கார்ணம் நீங்கள் நீங்கள் நீங்கள் தான். 


நன்றியுடன் - நாகராஜன் ரவி.

உங்களால் தினமும் ஒரு மணி நேரம் தான் ஒதுக்க முடிந்து இந்த இணையம் பக்கம் வர முடிகின்றது என்றால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஓராயிரம் விசயங்களை உள்வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட முடியும்.  காற்றில் தூசி, நாற்றம், மணம், வாசம் என்று எல்லாமே கலந்து தான் இருக்கும். 

நாமும் வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது.

குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க ஒரு தொடர்

படங்கள் 4 தமிழ் மீடியா.காம்

மேலும் வாசிக்க...

Saturday, August 11, 2012

சமூகம் ...


னிதர்கள் சந்தோசத்தில் இருக்கும் போது தங்கள் உண்மை நிலையினை அறிவதில்லை , அதுவே ஏதாவது ஒரு துக்கம் அவர்களை தாக்கும் போது மட்டுமே இந்த சமூகத்தின் மேல் அளவு கடந்த கோபம் வருகிறது ... கோபங்கள்  அதிகமாகும் போது நாமும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தானே என்பதையே மறந்துவிடுகின்றோம் ... ஆனால் அப்படியில்லாமல் இவர்களது எழுத்துக்களில் சமூக பொறுப்புணர்வு மேலோங்கி நிற்கும் ... 

" மரங்கள்  " தலைப்பில் 
 கவிதை வராமல் கசக்கி
எறிந்தேன்  காகிதத்தை ...

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ )

அறிமுகம் 1

இவர் கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்துகளை அழுத்தமாக பதியவைக்க தவறுவதேயில்லை ... சொல்ல வந்ததை சுருக்கமாகவும் , அதே சமயம் சுவையாகவும் சொல்வதில் வல்லவர் இந்த ரமணி ...  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கின்ற இவரது வலைத்தளத்தின் தலைப்பே ஒரு பொறுப்புணர்வோடு இருக்கிறது ... நான் ரசித்த ரமணியின் பதிவுகள் :
 

அறிமுகம் 2

எந்த ஒரு புது பதிவர் வந்தாலும் அவர்களுக்கு பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளிப்பதில் இவருக்கு இணை யாரும் இணை கிடையாது ... ப்ளாக்கில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை என்றாலும் உடனே அதை நிவர்த்தி செய்வதற்கு தனக்கு தெரிந்த வழியை தானாகவே கூறுபவர் ... திண்டுக்கல் தனபாலன் 
என்று ஊருடன்  சேர்ந்து வரும்  பெயரே அழகாக இருக்கிறது ... திண்டுக்கல் தனபாலனின் சில தித்திக்கும் பதிவுகள் ... 

http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html         உங்களின் மந்திரச் சொல் என்ன 
http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html        நீங்க மரமாக போறீங்க ...

அறிமுகம் 3

ஆசிரியரான இவரிடம் அதீத பொறுப்புணர்வு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை ... அது இவரது பதிவுகளிலும் பிரதிபலிக்கும் ... இவரும் ஊரையும் ,  பெயரையும்  ஒன்றாக இணைத்துக்கொண்டவர் ...இவருடைய பதிவுகளில் சில :


நாளை மீண்டும் சந்திப்போம் ... 

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 










மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது