07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 17, 2013

மரகதங்கள்!!!

மனசின் உணர்வுகளுக்கு வடிகால் எழுத்து மட்டுமில்லை, ஓவியம், இசை என்ற அருமையான கலைகள் கூட மனிதனின் ஆழ்நிலை அழுத்தங்களுக்கு அருமையான வடிகால்கள்! எனக்கு ஓவியம் வரையும் போது மனதை மென்மையாகத் தாலாட்டுகிற மாதிரி  பின்னணியில் இசை மழை பொழிந்து கொண்டேயிருக்க வேண்டும்! கோடுகளும் வண்ணங்களின் தீற்றல்களும் ஏற ஏற, அவ்வளவு சீக்கிரம் அதை முடிக்க மனம் வராது மேலும் மேலும் அதை அழகு படுத்துவதிலேயே மனம் ஒன்றிப்போகும்! எந்தக் கலையிலும் இந்த தாகம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியெல்லாம் கஷ்டப்படாமல் சில நிமிடங்களில் வரையப்பட்ட கண்ணாடி ஓவியமொன்று உங்கள் பார்வைக்காக!



மரகதம் [ Emerald]

இது பெரிலியம் என்ற வகையைச் சார்ந்த ஒரு கனிமம். மிக இலேசானதும் கூட. எளிதில் நொறுங்கி விடும் தன்மையுடையது. ஒரு தம்ளர் பாலில் ஒரு மரகதக் கல்லைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகக் காட்சியளிக்குமாம்!



மரகத லிங்கங்கள் தமிழகத்தில் சப்த விடங்க தலங்கள் எனப்படும் திருவாரூர், திருநள்ளாறு, வேதாரண்யம், நாகைப்பட்டிணம், திருக்கரவாசல், திருவாயுமூர், திருக்குவளை முதலிய இடங்களிலுள்ள சிவாயங்களில் உள்ளன!

பாகிஸ்தானின் வடமேற்குப்பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதக் கற்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.. தலிபன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் உள்ள மரகதக் கற்கள் தோண்டியெடுக்கப்பட்டு தய்லாந்திற்கு அனுப்பபடுகின்றன. அங்கு அவை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அந்தக் காலத்தில் ரோமானிய மன்னர் நீரோ தன் வீரர்கள் சண்டையிடுவதை இந்த மரகதக் கற்கள் மூலம் பார்த்து மகிழ்ந்தாராம்! பொதுவாக இது மிகவும் விலை உயர்ந்த கல் என்பதாலும் விசேட மருத்துவத்தன்மை கொண்டிருப்பதாலும் அந்தக் கால மன்னர்களின் அரண்மணைகளில் பல வடிவங்களில் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டதாம்!!

இனி மரகதங்கள் போன்ற பதிவர்கள்!!

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழந்தமிழ் மொழியினை, அது அஃறிணையாக மயக்கம் தந்தாலும் உயர்திணையான மக்களுக்கே சொல்லப்பட்டது என்று உதாரணங்களுடன் அழகாய் இங்கே சகோதரி வேதா விளக்கம் தருகிறார்!

தேங்காய் சுடுவது பற்றி நானும் அறிந்திருக்கிறேன். சாப்பிட்டதில்லை. இங்கே கதிர் தேங்காயை உள்ளே வெல்லம் எல்லாம் வைத்து சுடுவது எப்படி என்று அழகாய் எழுதியிருக்கிறார்!

குழந்தை வளர்ப்பைப்பற்றி இங்கே பூந்தளிர் அருமையாகச் சொலியிருக்கிறார்கள்! கடைசியில் இந்த காலக் குழந்தைகளின் அறிவுத்தெளிவு பற்றி எழுதியிருக்கும் ஜோக் உங்களையும் சிரிக்க வைக்கும்!!

நல்ல தூக்கம் வராததற்கான காரணங்களையும் வருவதற்கான வழிமுறைகள், மருத்துவங்களையும் அழகாக விளக்கிச் சொல்லியிருக்கிறார் திரு.பரமேஸ் தனது தூக்கம் போச்சு என்ற பதிவில்! எல்லோருக்குமே தேவைப்படும் பதிவு!

ஆன்மிகப்பதிவராய் விளங்கும் திருமதி. ராஜராஜேஸ்வரி, இங்கே லவங்கப்பட்டையைப் பற்றி ஒரு அருமையான பதிவு கொடுத்திருக்கிறார்! எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான பதிவு இது. எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. படத்தில் இருப்பது சுருள்பட்டை. அதைத்தான் நானும் உபயோகிக்கிறேன். அதிக மணமும் இதில் இருக்கிறது. இதைத்தவிர, நம் ஊரில் ஒரு பட்டை கிடைக்கும். வாசனை அதிகமாய் இருக்காது. சாதாரண மரப்பட்டை போல இருக்கும். அது நிஜமான லவங்கப்பட்டை இல்லையா?
 
ஒற்றை மரத்தைப்பற்றி ஜீவா ஒரு மெலிதான சோகத்துடன் மிக அருமையாக இங்கே எழுதியிருக்கிறார்!

நிலவைத்தலையணையாக்கி சுகமாய் அனுபவித்த கனவுத்தூக்கத்துக்கு ஏங்குகிறார் ஸ்வரவாணி இங்கே தன் கனவுத்தூக்கம் என்ற கவிதையில்!!

மசாலாவையும் மணத்தையும் சொற்களில் அடைத்து கோழி வறுவலுக்கென்றே தனிக்கவிதை படைத்து அனைவருக்கும் பசியைக்கிளப்பியிருக்கிறார் அருணா செல்வம்!

வெந்தயம் உடலுக்கு வனப்பு தருவதுடன் எந்தெந்த விதத்தில் உடல் பிணிகளுக்கு பயன்படுகிறது என்பதையும் இங்கே தனது கவிதைச்சிதறல் என்ற வலைப்பூவில் சொல்லுகிறார் ஷைலு ஜாகப்!

கறிவேப்பிலை சாதம் செய்யும் முறையை படங்களுடன் விளக்கி இருக்கிறார் ஆமினா தன் ‘ சமையல் எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பூவில்!

புதுகைத்தென்றலின் பதிவான பெத்த கடன் என்னை மிகவும் பாதித்தது. எப்போதும் பெற்றோர்கள் நன்றாக இல்லையென்றால் அவர்களின் குழந்தைகளிடம் தான் தவறுகள் இருக்கின்றன என்று பொதுவாக நினைப்பதுண்டு. பெற்றவர்களிடமும் எத்தனை தவறு இருக்கின்றன என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்டும் பதிவு இது!

செந்தூர்பாண்டி என்ற உண்மைக் கதாபாத்திரத்தைப் பற்றி இங்கே பாலா நெகிழ்ச்சியுடன் எழுதியிருப்பது நம்மையும் நெகிழ வைக்கிறது. மனித நேயமும் கருணையுமாய் அவரது பதிவு மனதைத் தொடுகிறது!

சின்ன வயதிலிருந்து ஓவியம் வரைய ஆசைப்பட்ட மன உனர்வுகளை, தேடித்தேடிச்  செய்த முயற்சிகளை, கலர்க்கனவுகளை,  மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிரார் சுஜாதா தேசிகன். சின்ன வயதிலேயே ஓவியம் வரைந்த மலரும் நினைவுகளை திரும்பவும் மனத்திரையில்கொண்டு வந்து ஓவியங்களாக் வரைந்து விட்டார் இவர்!
 

56 comments:

  1. ஷைலு ஜாகப், பரமேஸ், ஜீவா புதியவரகள் எனக்கு. இந்த மரகதங்களின் மின்னலை ரசிக்கிறேன். சுஜாதா தேசிகன் ஸாரின் கட்டுரைகள் எப்பவுமே ரசனைக்கு சுவை. அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அருமையாக மரகதக்கல்லைப்பற்றி சொன்னீர்கள்.
    கண்ணாடி ஒவியம் அழகு.

    இன்று கொடுத்த வலைப்பதிவர்களுக்கு எல்லாம் வாழ்த்துக்கள்.
    புதுகைதென்றல், இராஜராஜேஸ்வரி மட்டும் தெரியும் மற்றவ்ர்களை படிக்க ஆசை படிக்கிறேன்.

    ReplyDelete
  3. மரகதக்கல்லின் சிறப்பு தெரிந்து கொண்டேன். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இன்றைய மரகதங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நிறைய பதிவுகள் புதிதாய்த் தெரிந்துகொண்டேன். நன்றிக்கா.

    ReplyDelete
  6. மரகதங்களுடன் என்னையும் ஜொலிக்க வச்சுட்டீங்களே. சந்தோஷமாக இருஇருக்கிறது. நன்றி மனோ மேடம்.

    ReplyDelete
  7. கண்ணாடி ஓவியம் ரொம்ப நல்லா இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது தங்கள் நவரத்ன அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள். கண்ணாடி ஓவியத்தை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை உண்மையில்.
    மரகதங்களில் என்னையும் மின்னச் செய்தது மிக்க மகிழ்ச்சி.
    என் மனப்பூர்வ நன்றிகள்.

    ReplyDelete
  9. மரகதம் பத்தி இன்னைக்குதான் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.... கூடவே மரகத பதிவர்களையும் :-)

    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  10. படம் மிகவும் அருமை அம்மா...
    மரகதம் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள்...

    அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இன்றைய முதல் மரகதமாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமதி வேதா உண்மையில் மரகதம் தான். தமிழில் அவருக்கு இருக்கும் புலமை அவரது கவிதைகளைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    பயணக் கட்டுரையிலும் நம்மை அணைத்து உடன் அழைத்துச் செல்லுவார்.

    என்னைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே!

    //தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்!!// என்று தனது வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கும் அழகே அழகு.

    இன்றைய அறிமுக மரகதப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. மரகத தகவல், அற்புதம் சகோ.

    ReplyDelete
  13. கண்ணாடி ஓவியத்தை நீண்ட நேரம் ரசித்தேன்..

    ReplyDelete
  14. கண்ணாடி ஓவியத்தை நீண்ட நேரம் ரசித்தேன்..

    ReplyDelete
  15. அற்புதமாய் பளீரிடும் அருமையான மரகதம் பற்றியும்

    மணம் கமழும் மருத்துவ குணமுள்ள மசாலாக்கள் பற்றியும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    எமது பதிவையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  16. மிக மிக அழகான கண்ணாடி ஓவியம். மற்ற ஓவியங்கள் வரைவதைக்காட்டிலும் இதற்கு பொருமை அதிகம் தேவை. உங்கள் தளத்தில் மற்ற (பலவித) ஓவியங்களையும் கண்டு ரசித்தேன். தற்போதும் ஓவியங்களை வரைகிறீர்களா? நேர்த்தியான உடல் மொழி,நளினம்... தாங்கள் எவ்வளவு ரசித்து வரைந்துள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. ”இனிய ஓவியா” எனும் ப்ளாக்கில் ஓவியம் குறித்து சில பதிவுகளை எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் பாருங்க..

    ReplyDelete
  17. மரகதம் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி.இன்றைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வுகள்.

    ReplyDelete
  18. ஓவியமும் உங்கள் ரசனையும் அழகு.இந்த ஓவியத்தை உற்று பார்க்க பார்க்க எளிதாக வரையக்கூடிய மாதிரி தெரியவில்லை அக்கா.உங்களுக்கு வேண்டுமானால் இலகுவாக இருக்கலாம்.பகிர்வுக்கு மகிழ்ச்சி அக்கா.இன்னும் உங்கள் ஓவியங்களைப் பகிருங்கள்.

    ReplyDelete
  19. இதில் பெரும்பாலும் எனக்கு புதியவர்கள்.. மரகதமான பதிவுகளை படிக்க அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி அம்மா!!

    மரகத கல் பற்றிய விபரம் அருமை!

    ReplyDelete
  20. மரகத லிங்கங்கள் தமிழகத்தில் சப்த விடங்க தலங்கள் எனப்படும் திருவாரூர், திருநள்ளாறு, வேதாரண்யம், நாகைப்பட்டிணம், திருக்கரவாசல், திருவாயுமூர், திருக்குவளை முதலிய இடங்களிலுள்ள சிவாயங்களில் உள்ளன!/

    உத்தரகோசமங்கை தலத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை மரகத்தால் ஆனது ..

    ஒலியால் பாதிக்கப்படாமல் இருக்க நடராஜர் சிலை எப்போதும் சந்தன்க்காப்பில் இருக்கும் ..

    ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை தினத்தில் மட்டும் சந்தன்க்காப்பு களையப்பட்டு மரகதமேனி தரிசன்ம் அற்புதமாகக் கிடைக்கும்..

    மருத்துவ குணமுள்ள அந்த சந்தனக்காப்பு கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் ...

    ReplyDelete
  21. ரசித்துவரைந்த ஓவியம் அற்புதம் வெகுவாக ரசிக்கவைத்து மனம் கவர்ந்த்து . ...

    ReplyDelete
  22. சகோதரி இன்றைய மரகதப் பதிவர்களிற்கும், தங்களிற்கும் மனமார்ந்த நல்வாழ்த்து. இதில் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கும் எனது நன்றியைக் கூறுகிறேன்.

    முகநூலில் இதை எனது சுவரிலும் போட்டுள்ளேன்.
    அடுத்து மலேசியாவில் '' எமறெல்ட்'' - புத்த கோவிலே உள்ளது புத்தருக்கு மரகத ஆடைகள் 3 ம் உள்ளது. விசேட நாட்களில் இது அணிவிக்கப்படுகிறது.

    உங்கள் கண்ணாடி ஓவியம் சுப்பர். நான் சுட்டுவிட்டேன். பாவிக்கும் போது அறியத்தருவேன். மிக்க நன்றி நன்றி.

    வேதா.இலங்காதிலகம்

    ReplyDelete
  23. மின்னும் மரகதங்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    ஒரு வாரத்துக்கு ஏன் 9 நாட்கள் இல்லைன்னு இருக்கு மனோ!

    ReplyDelete
  24. இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    மொத்தத்தில் இன்று இந்தப்பதிவினில் பட்டையை கிளப்பிவிட்டீர்கள்.

    ஏற்கனவே நான் இருமுறை படித்தது மகிழ்ந்தது தான்.

    இன்று மீண்டும் போய்ப்படித்தேன்.

    மகிழ்ந்தேன்.

    அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களிலும் ஒருவர் ஆத்மார்த்தமாக பலமுறை வருகை தந்து, பேரெழுச்சியுடன் பட்டடைக்கிளப்பி எழுதியுள்ளார்.

    அதனையும் படித்து மகிழ்ந்தேன்.

    மீண்டும் வருவேன் ..... ஆனால் சற்று தாமதமாக வருவேன்.

    [இன்று எங்கள் குடியிருப்புப் பகுதியில், பராமரிப்புக்காக முழுநேர மின்தடை 9 AM to 5.30 PM]

    >>>>>>>

    ReplyDelete
  25. அக்கா !!! கண்ணாடி ஓவியத்தில் நான் மயங்கிப்போனேன் ..ஆணும் பெண்ணும் ,கைவிரல்கள் அந்த அன்னம் தடாகம் ..நீண்ட நேரம்!!!!ரசித்துகொண்டேயிருந்தேன் அழகோ அழகு .!!!!.
    இன்று அறிமுகமான மரகதங்களுக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  26. என்னுடைய கதையை பகிர்ந்துகொண்டு சுட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி.. 2013ஆம் ஆண்டின் நிறம் மரகதப்பச்சை தான். :))

    மிக்க நன்றி

    ReplyDelete
  27. என்னுடைய கதையை பகிர்ந்துகொண்டு சுட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி.. 2013ஆம் ஆண்டின் நிறம் மரகதப்பச்சை தான். :))

    மிக்க நன்றி

    ReplyDelete
  28. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் பாலகணேஷ்!

    ReplyDelete
  29. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  30. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றி பூந்தளிர்!

    ReplyDelete
  31. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் இனிய நன்றி சாந்தி!

    ReplyDelete
  32. வருகைக்கு உளமார்ந்த நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  33. பாராட்டிற்கு அன்பு நன்றி மலர்!

    ReplyDelete
  34. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரவாணி!

    ReplyDelete
  35. வருகைக்கு அன்பு நன்றி ஆமினா!

    ReplyDelete
  36. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி குமார்!

    ReplyDelete
  37. நீங்கள் சகோதரி வேதாவைப்பற்றி சொன்னதெல்லாம் உண்மை! கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கெல்லாம் அன்பு நன்றி சகோதரி ரஞ்சனி!

    ReplyDelete
  38. ஓவியத்தை ரசித்ததற்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி விஜி விஜயலக்ஷ்மி!!

    ReplyDelete
  39. ஓவிய்தற்கான பாராட்டிற்கும் விரிவான கருத்துரைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வரி! உத்திரகோசமங்கை நடராஜரைப்பற்றி நானும் அறிந்திருக்கிறேன். பதிவின் நீளம் கருதி அதை எழுதவில்லை.

    ReplyDelete
  40. ஓவியத்தை ரொம்பவும் ரசித்து பாராட்டியுள்ளீர்கள் கலாகுமரன்! என் நெஞ்சார்ந்த நன்றி! மற்ற‌ வேலைப்பளுவினால் தற்போதெல்லாம் அதிகம் ஓவியம் வரைவதில்லை. தாகம் மட்டிலும் நெஞ்சில் அப்படியே இருக்கிறது! விரைவில் உங்கள் வலைப்பூ வந்து பார்க்கிரேன். உங்கள் வலைப்பூவைப்பற்றி குறிப்பிட்டமைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  41. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஆசியா! உண்மையில் இந்த ஓவியம் வரைவது மிகவும் சுலபம் ! ஆயில் பெயிண்டிங் மாதிரியோ சன்னமான கோடுக்ளில் வரைவது மாதிரியோ இது அத்தனை நேரம் இழுக்காது.

    ReplyDelete
  42. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சமீரா!

    ReplyDelete
  43. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் இதயம் நிறைந்த நன்றி வேதா!

    ReplyDelete
  44. உங்களின் உற்சாகமான வருகை என்னையும் உற்சாகப்படுத்துகிறது துளசி!

    ReplyDelete
  45. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்னன்!

    ReplyDelete
  46. ஓவியத்தை மிகவும் ரசித்துப் பாராட்டியதற்கு உளமார்ந்த நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  47. வருகைக்கு அன்பு நன்றி புதுகைத்தென்றல்! ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு நிற‌ம் இருக்கிறதா? இது தெரிந்திராத விஷயம் எனக்கு!

    ReplyDelete
  48. வணக்கம்
    மனோ,சாமிநாதன்

    இன்றும் வலைச்சரம் மிகவும் நல்ல பதிவுகளுடன் பலவகைப்பட்ட பதிவுகள் இன்று இடம் படித்துள்ளது முதலில் பதியப்பட்ட கண்ணாடி ஓவியம் மிக அழகாக இருக்கிறது இன்று அறிமுகம் கண்ட வலைப்பதிவாளார்கள் மற்றும் அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்
    தொடருகிறேன் பதிவுகளை,
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  49. //எனக்கு ஓவியம் வரையும் போது மனதை மென்மையாகத் தாலாட்டுகிற மாதிரி பின்னணியில் இசை மழை பொழிந்து கொண்டேயிருக்க வேண்டும்! கோடுகளும் வண்ணங்களின் தீற்றல்களும் ஏற ஏற, அவ்வளவு சீக்கிரம் அதை முடிக்க மனம் வராது மேலும் மேலும் அதை அழகு படுத்துவதிலேயே மனம் ஒன்றிப்போகும்! எந்தக் கலையிலும் இந்த தாகம் இருந்து கொண்டேயிருக்கும். //

    மிகச்சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.
    நம் மனம் அப்போது ஓர் புள்ளியில் ஒருங்கிணைந்து விடும் தானே.

    இதைவிட ஓர் ஆழ்நிலை தியானம் [DEEP CONCENTRATION OF OUR MIND] வேறு எதிலும் இல்லை என எனக்குத் தோன்றும்.

    சுலபமாக வரையப்பட்டுள்ளதாகச் சொல்லும் கண்ணாடி ஓவியம், பளபளப்பாகத் துடைக்கப்பட்ட புத்தம் புது கண்ணாடி [MIRROR] போல தெளிவாக பளிச்சென்று உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
  50. ஜொலிக்கும் பச்சை மரகதக்கற்களைக் காட்டியுள்ள படமும், அதனைப்பற்றிய விளக்கங்களும் வெகு அருமையாக உள்ளன.

    //மரகத லிங்கங்கள் தமிழகத்தில் சப்த விடங்க தலங்கள் எனப்படும் திருவாரூர், திருநள்ளாறு, வேதாரண்யம், நாகைப்பட்டிணம், திருக்கரவாசல், திருவாயுமூர், திருக்குவளை முதலிய இடங்களிலுள்ள சிவாயங்களில் உள்ளன!//

    இவைகளைப் பற்றியெல்லாமும் கூட அவ்வப்போது சூப்பராக எழுதி, படங்களையும் காட்டி, பட்டையைக் கிளப்பியிருந்தார்கள் அந்த நம் பதிவர்.

    //பொதுவாக இது மிகவும் விலை உயர்ந்த கல் என்பதாலும் விசேட மருத்துவத்தன்மை கொண்டிருப்பதாலும் அந்தக் கால மன்னர்களின் அரண்மணைகளில் பல வடிவங்களில் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டதாம்!!//

    அந்தக் குறிப்பிட்ட பதிவரின் பதிவுகளும் அதுபோல பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டிய்வைகளாகவே இன்றும் மிகச்சிறப்பான முறையில் தான் உள்ளன.

    அவர்களை இன்று தாங்கள் அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    நாளைய வலைச்சரத்தில் சந்திப்போம்.

    பிரியமுள்ள தங்கள் சகோதரன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ooooooooo

    ReplyDelete
  51. வணக்கம் மனோ மேடம்...

    நான் உங்களை முதன்முதலில் வலையில் சந்திக்கிறேன்.
    உங்களின் மரகதக்கல்லைப் பற்றிய விளக்கம் அருமை.
    என் ”கோழிக்கறி” வறுவலுடன் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    மற்ற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  52. http://pudugaithendral.blogspot.in/2012/12/2013.html

    இந்தப்பதிவில் இருக்கிறது பாருங்கள்

    ReplyDelete
  53. பல பதிவர்கள், எனக்கு புதிய அறிமுகங்களே.
    சென்று பார்க்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  54. நீங்கள் கொடுத்துள்ள இணைப்பிற்குச் சென்று பார்த்தேன். ரசித்தேன். தகவல் தந்தமைக்கு அன்பு நன்றி புதுகைத்தென்றல்!

    ReplyDelete
  55. வருகைக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்!

    ReplyDelete
  56. ஓவியம் நன்றாக இருக்கின்றது. மரகதம் பற்றிய தகவல்கள் என சிறக்கின்றது.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது