செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்
சென்று வருக ரியாஸ் அஹமது - பொறுப்பேற்க வருக சகோதரி மனோ சாமிநாதன்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ரியாஸ் அஹமது தான் ஏற்ற பொறுப்பினை மனை நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து மகிழ்வுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 7
அறிமுகப்படுத்திய பதிவுகள் : 66
அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 78
நண்பர் ரியாஸ் அஹமதினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
நாளை துவங்கும வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்க இசைந்துள்ளார் சகோதரி மனோ சாமிநாதன்.
இவர் ஐக்கிய அரபுக்குடியரசில் இருக்கும் ஷார்ஜாவில் கடந்த 37 வருடங்களாக வாசம். பாலைவன வாழ்க்கையில் தாகம் அதிகமாகி விட்டால் அவ்வப்போது சொந்த ஊரான தஞ்சை சென்று தண்ணீர் குடித்து பாட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இரண்டு வருடங்கள் முன் ஆரம்பித்த முத்துச்சிதறல் இன்று வரைக்கும் 161 பதிவுகளுடனும் 209 பின் தொடர்வோருடனும் பதிவுலக வானில் சுகமாய் பயணிக்கிறது. சிறு வயது முதல் மிகவும் நேசிக்கும் கலைகளான ஓவியம், சங்கீதம், சமையல், வாசிப்பு இவற்றின் அருகாமையைக்கூட பின்னுக்குத்தள்ளி விட்டது இவரதுபதிவெழுதும் சுவாரஸ்யம்!
இவரது குடும்பத்தைப்பற்றி:
முதலில் பிரச்சினைகளை சமாளிக்க, பின் குடும்ப உறவுகள், நட்புகளுக்கு உதவ, பின் தன்னிலைப்படுத்திக்கொள்ள, தற்போது மகனின் அன்பிற்காக என்று இவரது பாலைவன வாழ்க்கை தொடர்கிறது!
கணவர் தென்னிந்திய உணவகத்தின் உரிமையாளர். ஒரே மகன் ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா நாடுகளில் மேல்நிலைக்கல்வி முடித்து, தற்போது துபாயில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முதல்நிலை விற்பனை மேலாளராக உள்ளார்.
சகோதரி மனோ சாமிநாதனை வருக ! வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ரியாஸ் அஹமது
நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன்
நட்புடன் சீனா
வாசகர்களுக்கு தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சர ஆசிரியராகப் மிகச்சிறப்பாக பணியாற்றி இன்று நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுச்செல்லும் அருமை நண்பர் திரு. ரியாஸ் அஹமது அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், அன்பான வாழ்த்துகளும்.
ReplyDelete>>>>>>
நாளை முதல் வலைச்சர ஆசிரியராக புதிய பொறுப்பேற்க வரும் அஷ்டாவதானியான என் அன்புச் சகோதரி திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.
ReplyDelete“தை பிறந்தால் வழி பிறக்கும் த்ங்கமே தங்கம்” என்பது போல துபாய்த்தங்கம் நாளை தை மாதம் முதல் தேதியில், வருகை தர இருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துகள் சகோதரியே!
சர்க்கரைப் பொங்கலாக இனிப்பாக இருக்கட்டும், தங்கள் வருகை.
அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
//பாலைவன வாழ்க்கையில் தாகம் அதிகமாகி விட்டால் அவ்வப்போது சொந்த ஊரான தஞ்சை சென்று தண்ணீர் குடித்து பாட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.//
ReplyDeleteஎன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. சீனா ஐயா.
தங்களின் மேற்படி கூற்றினை நான் ஏற்க மறுக்கிறேன்.
அதாவது ”தண்ணீர் குடித்து பாட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ள மட்டுமே தஞ்சை வந்து போவதாக” என்பதை.
தமிழ் நாட்டில் தஞ்சையில் எங்கே ஐயா, தண்ணீர் இருக்கிறது?
திருச்சியிலேயே காவிரி வரண்டு போய், காவிரித்தாயின் கண்ணீர் மட்டுமே, ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தேங்கியுள்ளது, ஐயா. திருச்சியைத்தாண்டி எப்படி தஞ்சைக்கு காவிரி போகும்?
மேலும் அவர்கள் இருக்கும் ஷார்ஜா, துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது சொர்க்க பூமி ஐயா.
அங்கு தண்ணீர் மட்டுமல்ல எதற்குமே பஞ்சம் இல்லை ஐயா.
அடுத்த முறை நான் செல்லும் போது என்னுடன் வாருங்கள் ஐயா.
சுவர்க்கம் என்றால் என்னவென்று நான் காட்டுகிறேன்.
அவர்களின் தஞ்சை விஜயம் தண்ணீருக்காக அல்ல.
வேறு ஏதேதோ காரணங்களுக்காக விதியே என நினைத்து வந்து போகிறார்கள்.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன்
VGK
அன்புள்ள சகோதரர் சீனா அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி!!
அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி!!
நிஜமாகவே ஒவ்வொரு முறையும் ஊருக்குப்போகும்போது உற்சாகத்தை ரீசார்ஜ் செய்து கொண்டு தான் இங்கு வருகிறேன்.
இங்கு கடல் நீரை சுத்தகரித்தும் பாலைவன ஊற்றுக்களில் ஊறும் நீரை சுத்தகரித்தும் தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறது. என்ன தான் சுத்தகரித்த நீர் என்றாலும் நம் ஊர் தண்ணீருக்கு, அதன் சுவைக்கு ஈடாகுமா?
நல்வரவு மனோ.
ReplyDeleteவலைச்சரப் பொறுப்பாளர் சீனா அவர்களுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளுக்கான இனியவாழ்த்து(க்)க்ள்.
இன்பம் பொங்கும் தைப் பொங்கல் ,புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய வலைத்தள உறவுகளுக்கு .மேலும் ஆசிரியர் பொறுப்பை
ஏற்க்கவிருக்கும் திருமதி .மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் பணி
சிறப்பாகத் தொடரவும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
அனைவருக்கும் !........
வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றிய ரியாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இந்தவார ஆசிரியர் மனோ அம்மா அவர்களுக்கு நல் வரவு.
ReplyDeleteநல்வரவு கூறி வரவேற்கிறேன் மனோ அம்மா!
ReplyDeleteஓ!..இனிய நல்வாழ்த்து ஆசிரிய வாரத்திற்கு.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
//மனோ சாமிநாதன் said...
ReplyDeleteஅன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி!!//
நன்றிக்கு நன்றி மேடம்.
//நிஜமாகவே ஒவ்வொரு முறையும் ஊருக்குப்போகும்போது உற்சாகத்தை ரீசார்ஜ் செய்து கொண்டு தான் இங்கு வருகிறேன்.//
சொந்தத்தாய், தாய்நாடு, சொந்த ஊர் என்றால் இந்தப்பாசம் எல்லோருக்குமே ஏற்படுவது இயற்கை தான். நான் அதை மறுக்கவே இல்லை, மேடம்.
//இங்கு கடல் நீரை சுத்தகரித்தும் பாலைவன ஊற்றுக்களில் ஊறும் நீரை சுத்தகரித்தும் தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறது.//
நானும் அதை 45 நாட்கள் தங்கி சுவைத்துள்ளேன். நன்றாகவே தான் இருந்தது.
//என்ன தான் சுத்தகரித்த நீர் என்றாலும் நம் ஊர் தண்ணீருக்கு, அதன் சுவைக்கு ஈடாகுமா?//
கங்கை காவிரி போன்ற இந்திய நதிகள் எல்லாமே புண்ணிய நதிகள் அல்லவா. அவற்றின் சுவை அலாதி தான் என நம்மைச் சொல்ல வைக்கிறது.
தங்களின் தன்னடக்கத்துடன் கூடிய விளக்கம் அருமை.
நன்றியோ நன்றிகள்.
அன்புச் சகோதரன்
வை. கோபாலகிருஷ்ணன்
என்்்்ன்பான வாாழ்த்துகள்.
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் ரியாஸ் அஹமது அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் மனோ மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.