07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 30, 2013

பதிவுலகால் சாத்தியமாயிற்று ....!


இந்தப் பதிவில் நான் பதியப் போகும் நபர்கள் நண்பர்கள் பதிவர்கள் என்னைப் பொருத்தவரை சற்றே முக்கியமானவர்கள். நான் பொறாமைப்படும் லிஸ்டில் இவர்களது தனித்துவங்களும் உண்டு.  

மதுமதி என்னை முதன் முதலில் சந்தித்த பொழுது சொன்னார் "டெரர் கும்மி மாதிரி அடுத்த குரூப் பார்ம் ஆயிட்டு வருது போல". எனக்கு டெரர் கும்மி பற்றியெல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை. "நாம அப்படியெல்லாம் ஒன்னும் டெரர் வேல பாக்கலியே" என்று மனம் வேறு சிந்தித்து. அப்போது மெட்ராஸ் பவன் சிவகுமாரும் டெரர் கும்மியின் ஆயுட்கால உறுப்பினர் பட்டிகாட்டான் ஜெய்யும் டெரர் கும்மி பற்றி விளக்கம் கொடுத்தார்கள்.

 அவ்வளவு தான் உற்சாகம் பற்றிக் கொண்டது, சங்கம் வைத்து பெருமை சேர்ப்பதற்காக நாங்களும் சங்கம் ஒன்றை  தொடங்கி விட்டோம். அதன் பெயர் காமெடி கும்மி. சங்க உறுபினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


தலபோல்  வருமா

சின்ன மலை தலபோல்  வருமா  என்னும் வலைப்பூவில் எழுதி வந்தார்(!) இனி எப்பொழுது எழுதுவார் என்று தெரியவில்லை. மின்தடை என்ற தடுமாற்றம் வந்த போதிலும், பதவி உயர்வு என்று வாழ்க்கை தடம் மாறிவிட்டதால் தற்காலிகமாக எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளார். சங்கத்தின் சுட்டிக் குழந்தை. 

சினிமா விமர்சனங்களை தனது காந்தக் குரலிலும் பதிவு செய்து வருகிறார். அதற்கான தொடர்புடைய சுட்டி.

சினிமா சினிமா ராஜ் 

ஹாலிவுட்டையும் கோலிவுட்டையும் கலந்து கட்டி பதிவாக்கி வருபவர். வெகு சமீபத்தல் அமெரிக்காவில் குடியேறி இருப்பவர். நீதி நேர்மை நியாயம் இவற்றுக்கு எதிராக குரல் கொடுபவருக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு என்றுமே இவரது ஆதரவு உண்டு. உலக சினிமா பதிவுகள் தவிர்த்து பதிவுலக அரசியல் குறித்தும் அவ்வபோது பதிவு செய்து வருபவர்.   


"தம்பி" சதீஷ் செல்லதுரை 

ந்திய எல்லைக் காவல் படையில் பாதுகாவலராகவும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நேரம் போக மீதி நேரத்தை பதிவுலகில் செலவழிக்கிறார் தற்போது பேஸ்புக்கிலும். சிறுபான்மையினர் மற்றும் தலித் மறுமலர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். எழுத்துக்கள் சற்றே காட்டமாகத் தான் இருக்கும். 

எழுத்துக்களைத் தாண்டி பழகுவதற்கு இனிமையானவர். மிலிட்ரி நெல்லைத் தமிழ் அண்ணனுக்கு. எல்லைச் சண்டை தவிர்த்து பதிவுலகச் சண்டையிலும் ஈடுபடுவதால் இவருக்கு சங்கம் சூட்டிய பெயர் தீவிரவாதி. இவருக்கு இவரே சூட்டிக் கொண்ட பெயர் கைப்புள்ள.

எல்லைப் பாதுகாப்பு படையின் வீர தீரங்களை எழுதுங்கள் என்று சொன்னாலும் அதில் மறைத்திருக்கும் அரசியலை மட்டுமே எழுதி வருகிறார். உங்கள் சக தோழனின் வீரத்தைப் பற்றியும் எழுதுங்கள் என்று மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுகிறேன். 


ஹாரி பாட்டர் 

காமெடி கும்மியின் தலைவர். வெற்றிகரமாக மூன்று வலைப்பூவில் எழுதி வருகிறார் 

ஐடியா பொழுது போக்கு அம்சங்களை மட்டும் எழுத 

ஹாரி 2 ஜி பொழுது போக்கு அம்சம் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் எழுத  

கேளுங்க - பதிவுலகில் ஒரு புதிய முயற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட தளம். போதிய வரவேற்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்த் திரைப்பட பாடல்களின் திரட்டியாக மாற்றி வருகிறார். 

யுத்தம் ஆரம்பம் என்னும் ஒரு தொடர்கதை வலைப்பதிவர்கள் அனைவரும் சேர்ந்து எழுதும் தொடர்முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த யுத்தம் இப்போது எங்கு நடக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. சற்று அதைத் தூசு தட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் சில புதிய முயற்சிகளை மனம் தளராமல் செய்ய வாழ்த்துக்கள்.



பிளாக்கர் நண்பன் 

இங்கு உங்கள் வலைபூ பழுது நீக்கித் தரப்படும் என்று பலகை அடித்து ஒட்டாத குறை தான். உங்கள் வலைப்பூவில் ஏற்படும் அனைத்து விதமான தொழில் நுட்பப் சந்தேகங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இவரது வலைப்பூவில் தீர்வு உண்டு.  கூகிள் ஆண்டவருக்கு மிகவும் பிடித்த பதிவர் என்ற போதும் இவரது மற்றுமொரு வலைபூ நண்பன் பக்கம் தொழில்நுட்பம் தவிர்த்து மற்ற பதிவுகளை இங்கு படிக்கலாம்.

இத்  தொடரின் அனைத்து பகுதிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


விருந்தினர் பக்கம் - தொழில் நுட்பம் சார்ந்த உங்களது பதிவை இந்தப் பகுதியில் பகிர சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கிறார். 
  
வரலாற்றுச் சுவடுகள் 

தென்தமிழகத்தின் கடைகோடி பகுதியைச் சேர்ந்தவர். அறிவியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை எளிய தமிழில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் புரிய வைக்கக் கூடிய வகையில் எழுதி வருகிறார். சில சமயம் இவர் பதிவுகளைப் படிக்கும் பொழுது ஏதோ அறிவியல், சமுக அறிவியல்  படிப்பது போல் இருக்கும். இவர் பதிவுகளை "ஜஸ்ட் லைக் தட்" போல் படித்துவிட்டு கடந்து விட முடியாது. தெரிந்து கொள்ளும் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.        

இவரது ரெண்டாவது உயிர்க்கோளமும்தக்சசீலம் பதிவுகளும் விரும்பிப் படித்தது. உம் பதிவுகள் காலம் அழிக்கக் கூடா பொக்கிஷங்கள். மேற்படிப்பில் வெற்றிபெற்று மீண்டும் வலையுலகுக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

கரை சேரா அலை அரசன் 

"கரை சேரா அலை" இந்தப் பெயரில் ஒரு சூட்சுமம் ஒளிந்து உள்ளது. நான்கு வரிகளை மடக்கி கவிதையாக்குவதும், போட்டோ பதிவுகள் போடுவதும் இவருக்கு விருப்பமான ஒன்று. கவிதைகளிலும், புகைப்படங்களிலும் மண் வாசனையும், காதலும் சற்றே தூக்கலாக இருக்கும்.      

செம்மண் தேவதைகள்ஊர்பேச்சு இவர் எழுதிவரும் மண்வாசனை பதிவுகள்.  

கட்டுமஸ்த்தான கட்டுகோப்பான தேகம் வேண்டி ஜிம் சென்று வரும் ஜிம் பாய். சங்கத்து அடியாள் என்று பதிவுலகில் சொல்லித் திரிகிறார். காமெடி கும்மி என்னும் தளத்தை அவ்வப்போது எங்களுக்கு நியாபகப் படுத்தும் ஒரே நபர் இவர் ஒருவர் தான். 

பிரபு கிருஷ்ணா 

வெகு சமீபத்தில் தான் இவரை எனக்குத் தெரியும். காமெடி கும்மி தான் இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. முன்பே இவரைப் பற்றி சில இடங்களில் படித்துள்ளேன். எதன் மூலம் எப்படி இவரை அடையாளப் படுத்துவது என்று தெரியவில்லை. பசுமை விடியல் கற்போம் போன்ற தளங்களில் உற்சாகமாக இயங்கி வருகிறார். 

பசுமை விடியல் என்னும் இயக்கம் மூலம் இவர் செய்து வரும் பணிகள் மனம் திறந்து பாராட்டக் கூடியவை. தினம் ஒரு மரம், இயற்கைக் காக்கும் உறுதிமொழிகள் என்று இயங்குகிறது பசுமை விடியல். 

கற்போம் தளம் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை விளக்கங்களை எளிய தமிழில் விளக்குகிறார்கள். ஒவ்வொரு மாத பதிவுகளையும் தொகுத்து மின் இதழாகவும் வெளியிடுகிறார்கள். கற்போம் இதழுக்கு உங்கள் தொழில் நுட்ப பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. 


தற்போது குறும்படம் இயக்கும் ஆர்வத்தில்  இருக்கிறார். எண்ணம் உயர நீங்கள் உயர்வீர்கள் வாழ்த்துக்கள் பிரபு.

ஹாலிவுட் ரசிகன் 

காமெடி கும்மியில் சேரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது தலைமறைவானவர் தான் இன்று வரை வெளியில் வரவில்லை. இணையத்தில் தலைமறைவாகவே சுற்றிக் கொண்டுள்ளார்.தான் பார்த்த ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களை அழகாக எழுதக் கூடியவர்.

நாம டாப் டென் தமிழ்ப் படங்கள் குறித்து எழுதினால் இவர் டாப் டென் ஹாலிவுட் படங்கள் பற்றி எழுதுகிறார். இவர் மற்றும் ராஜ் எத்தனை ஹாலிவுட் படங்கள் பார்கிறார்கள். சற்றே பொறாமையாகத் தான் இருக்கிறது.      

கோழி 65, கம்பியில் கட்டி வைத்து வறுத்த கோழி எல்லாம் சாபிடுபவரா நீங்கள், இவரின் இந்தப் பதிவையும் ஒரு முறை படித்து விடுங்கள்.

கார்த்திக் பிளேட்பீடியா  

பெங்களூருவில் வசித்து வருகிறார். தற்போது தான் இவரை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அவ்வப்போது 18+ மேல் வெர்சன்களையும் பதிவில் ஆங்காங்கு தெளிப்பார். பதிவு முழுவதும் மெல்லிய நகைச்சுவையையுடன் நகரும். போட்டோ மற்றும் வீடியோகிராபி இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

சிறுவயதில் தொடங்கிய காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இன்றளவும் இவரிடம் தொடர்கிறது. இவருடைய காமிக்ஸ் பதிவுகளுக்கு என்றே இவருக்கென்று தனிப்பட்ட வாசகர் வட்டம் உள்ளது. மேலும் காமிக்ஸ்களுக்கு கள்ள சந்தை கூட உள்ளது என்று புது புது விசயங்களைக் கொடுத்து ஆச்சரியப் படுத்துகிறார்.  

மரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய பத்து ருபாய் ஸ்பெஷல்!
லயன் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் மற்றும் சந்தா விபரங்கள்!

சங்கத்தில் சதீஷ் ராஜ் மற்றும் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள் என்று நம்பப்படுகிறது.


33 comments:

  1. இதில் வரும் பிரபு கிருஷ்ணா என்ற பதிவரை மற்ற அனைவரையும் தெரியும் :-))))

    ReplyDelete
  2. //சங்கத்தின் சுட்டிக் குழந்தை. //

    //காந்தக் குரலிலும் பதிவு செய்து/

    இதானா தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுறது..

    //வெற்றிகரமாக மூன்று வலைப்பூவில் எழுதி வருகிறார் //

    தம்பி அப்போ நம்ம பாசித்தும், பிரபுவும் எங்க காத்து வாங்க போயிட்டாங்களா??.. உனக்கு தெரிஞ்சு 2..

    பட்..

    //சங்கத்தில் சதீஷ் ராஜ் மற்றும் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள் என்று நம்பப்படுகிறது.//

    அப்போ பாசித்??

    வானா சூனாவுக்கு நமி ஓகே..

    சீனுவுக்கு க__தா இருக்கா.. அப்போ நானும் பிரபுவும் தான் பேச்சிலர்..

    ReplyDelete
  3. இதில் வரும் கைபுள்ளையை தவிர எனக்கும் எல்லாரையும் தெரியும் ..அவங்களுக்குதான் என்னைய தெரியுமான்னு தெரியனும்.....

    ReplyDelete
  4. முன்பே இவரைப் பற்றி சில இடங்களில் படித்துள்ளேன் //

    அப்படியே கண்ணுக்குள்ள தண்ணி நிக்குது. :-))))))

    ReplyDelete
  5. அரசன் இன்ரோ செம..

    ஹாலிவுட் - நடுவுல கொஞ்ச நாள் ஆள காணோம்

    கார்த்திக் - காமிக்ஸில் இப்போ ரெம்ப மிக்ஸ் ஆயிட்டாரு

    சூப்பர் சீனு.. அருமை

    ReplyDelete
  6. /அப்படியே கண்ணுக்குள்ள தண்ணி நிக்குது. :-))))))//

    எங்க ஊருல எல்லாம் தண்ணிய வாய்ல தானே குடிப்பாய்ங்க.. பசுமை என்கிறதுக்காக அண்ணன் கண்ணுக்கும் சூஸ் பண்ணுறாரோ..

    ReplyDelete
  7. பிரபு அந்த தண்ணியை தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லும்வரை அப்படியே வைத்திருப்பார்.

    ReplyDelete
  8. கும்மி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தின விதம் சூப்பர். ரொம்ப ரசிச்சேன் சீனு. அறிவை வளர்க்க (அப்படி ஒண்ணு இருக்கான்னு எனக்கே டவுட்தான்) வரலாற்றுச் சுவடுகளும், தளத்தை அழகாக்க, பிரச்னையில்லாம வெச்சுக்க பாஷித்தும் நிறைய உதவியிருக்காங்க எனக்கு.

    ReplyDelete
  9. அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    கேளுங்க - இன்று தான் கேட்டேன்...

    ReplyDelete
  10. கலக்கலான அறிமுகங்கள்... அப்படியே தொடருங்கள்....

    ReplyDelete
  11. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. இங்கே குறிப்பிட்டுள்ள பலரில் சிலரிடமே எனக்கு அறிமுகம் உண்டு....

    இவர்களில் சிலர் எங்கிருந்து இயங்குகிறார்கள் என சில சமயம் யோசித்தது உண்டு. அதற்கான விடை இன்று கிடைத்தது.

    சதீஸ் செல்லத்துரை பேஸ்புக்கிலும் காட்டமாவே இருக்கார்!!!

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  14. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. அறிமுகத்திற்கு மிக்க நன்றி!!! நண்பர்களை அறிமுகப் படுத்திய விதம் அருமை!!! :)

    //போட்டோ மற்றும் வீடியோகிராபி இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று//
    என்னைப் பற்றி எனக்கே தெரியாத விஷயங்களை சொன்னதிற்கு நன்றி நண்பா!!! :D அதோடு கிட்டத்தட்ட நான் ஒரு காமிக்ஸ் பதிவன் (மட்டுமே) என்ற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டீர்கள்! :)

    //சங்கத்தில் சதீஷ் ராஜ் மற்றும் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள் என்று நம்பப்படுகிறது.//
    நாங்களும் பேச்சு இலர்கள்தான்! :)

    ReplyDelete
  16. இன்று நீங்கள் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அடடா ஒரு வாரம் இணையம் பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை சகோவின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தம்பி பிரபுவின் பொது சேவை பணி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

    அனைவரையும் நன்றாகவே அறிமுகம் செய்துள்ளீர்கள் சீனு.வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  19. அருமையான அறிமுகம் சீனு வாழ்த்துக்கள்..தொடரட்டும்

    ReplyDelete
  20. உங்கள் அறிமுகங்கள் அருமை. அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வணக்கம் ஆசிரியரே ...

    ReplyDelete
  22. சங்கத்தலைவரின் மேலும் பல தளங்களை இருட்டடிப்பு செய்த ஆசிரியரை நான் மென்மையாக கண்டித்து தலைவரான ஹாரிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்

    ReplyDelete
  23. மேற்படிப்பில் வெற்றிபெற்று மீண்டும் வலையுலகுக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.//

    அவர் பதிவு போலவே பெரிதாகி கொண்டு போகிறது மேற்படிப்பு காலமும் ... என்னைக்கு முடிச்சி என்னைக்கு கல்யாணமோ ?

    ReplyDelete
  24. சங்கத்தை பற்றி அருமையாய் விளக்கிய உமக்கு என் நன்றிகள் சீனு

    ReplyDelete
  25. வரலாற்றுசுவடுகள் தவிர இன்றைய அறிமுகங்கள் எல்லோருமே புதியவர்கள்.

    இணைப்புகளைப் படித்துப் பார்க்கிறேன்.

    அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. ஆகச்சிறந்த பதிவர்களையும், உலகப்புகழ் பெறப்போகும் க்ரூப்பையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா!

    :D :D :D

    ReplyDelete
  27. சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சீனு

    ReplyDelete
  28. 1. அப்துல் பாசித்,
    2. கார்த்திக்,
    3. வரலாற்றுச் சுவடுகள் - இவர்கள் முன்பே அறிமுகம்.
    மற்றவர்களையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  29. அனைவரும் அருமையான பதிவர்கள்! தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  30. வணக்கம்
    சீனு(அண்ணா)

    இன்று வலைச்சரத்தில் பல புதிய முகங்களை காணக் கிடைத்தது இன்று அறிமுகம் கண்ட பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  31. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. தங்களின் அறிமுகம் அருமை.அத்துணை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. இங்கே வலைப்பூ பழுதி நீக்கீ தரப்படும்.

    ரசித்த வரிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது