வைரங்கள்!!!
➦➠ by:
திருமதி.மனோ சாமிநாதன்
நல்ல பாடல் என்பது கேட்கும்போதே மனதின் ஆழத்தில் அப்படியே பதிந்து போய் விடும். பாடல் முடிந்தும் கூட தொடர்ந்து உள்ளுக்குள் இசைத்துக்கொண்டே இருக்கும். எந்த வேலை செய்தாலும் நம்மை விட்டு பிரிக்க முடியாதபடி அதன் இனிமை பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும். சில பாடல்கள் அப்படி அமைந்து விடும். சமீபத்தில் அப்படி ஒரு பாடலை நான் கேட்க நேர்ந்தது. எத்தனை முறை நான் அந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. கேட்க முடியாத நேரத்தில் நானே அதை இசைத்துக்கொண்டிருப்பேன். அப்படி என்னை ஆட்ககொண்ட பாடல் தான் இது. சில சமயம் மிகவும் ரசித்து நாம் கேட்கும் பாடல் திரையில் வரும்போது அப்படியே சொதப்பி வரும். இந்தப்படத்திலோ அந்தப்பாடல் வரும் காட்சி பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.
கதாநாயகின் காதலைப் பொருட்படுத்தாத பெற்றோர்கள் அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் பேச நினைக்கிறரகள். கதாநாயகி தன் மனதை அப்படியே கிருஷ்ணனிடம் கொட்டும் பாடல் இது! கேட்டுப்பாருங்கள்.
வைரம்
வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது.
வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும.
வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!!
நகைச்சுவையாய் எழுதுவதில் முத்திரை பதிப்பவர் இவர். ஆனால் சமையலைப்பற்றிய இவரது பதிவுகள் மற்ற இவரது பதிவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். ஏதோ இரண்டு வரிகள் சிறப்பாக எழுதினால் போதும் என்றில்லாமல் வரிக்கு வரி ரசித்து மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதிலும் பதிவர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே! சமீபத்திய பதிவான அடையின் ருசி இன்னும் நாக்கிலிருந்தும் மனதிலிருந்தும் போகவில்லை! பிற அழுத்தங்கள் காரணமாக சமீப காலமாக இவர் பதிவுகள் போடுவதில்லை. அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கிராமத்தின் மலரும் நினைவுகளை மிக அழகாய், நம் மனதிலும் பாதிப்பு ஏற்ப்டும் வண்னம் எழுதுவதில் குமார் திறமையானவர். ஆழ்மனதில் தன் சொந்த மண்ணைப்பற்றிய ஏக்கமும் மிகப் பிரியமான நினைவுகள் இருந்தால் மட்டுமே இத்தனை அழகாக எழுதமுடியும். அதற்கு அத்தாட்சி தான் இந்த பனைமரம் பற்றிய பதிவு!
மனிதனின் மிகப்பெரிய எதிரி யாரென்பதை மிக அருமையாக இங்கே திண்டுக்கல் தனபாலன் விளக்கியிருக்கிறார். யார் யார் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவரவர் வலைப்பூவிற்குச் சென்று தானாகவே அந்த விபரம் தெரிவிக்கும் நல்ல பண்பு கொண்டவர். கொஞ்ச நாட்களாக அவரைக் காணாதது சிறிது கவலையளிக்கிறது.
ஆசியா பழகுவதற்கு இனிமையானவர். பலவித சமையல்கள் செய்து அசத்துவதில் வல்லவர். இவரது வலைப்பூவின் தலைப்பே சமைத்து அசத்தலாம் என்பது தான்! நுங்கும் பதநீரும் கலந்து திருநெல்வேலியில் விற்கும் நுங்கு பதனி மிகவும் சுவையானது என்று இங்கே தெரிவித்திருக்கிறார். நானும் இந்த முறை ஊருக்குப் போகும்போது இந்த நுங்கு பதனியை சுவைப்பதற்காகவே திருநெல்வேலி சென்று வந்து விட வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
தாழம்பூ போல மணம் வீசும் சிறுகதையை எழுதியிருக்கும் ராதாராணி சமையல் குறிப்புக்கள் கொடுப்பதிலும் திறமையானவர்!
மதுரை மரிக்கொழுந்து பற்றி இங்கு சுரேஷ் குமார் விரிவாகக்கூறி அசத்துகிறார்!
குழந்தைகளை அருமை பெருமையாய் வளர்த்தாலும் எல்லோருக்குமே பிரிவு என்ற ஒரு வலியை அனுபவிக்கிற காலம் வரத்தான் செய்யும். அந்தப் பிரிவு பெற்ற அன்னையையும் தூக்கி வளர்த்த தந்தையையும் நிலைகுலையத்தான் செய்யும். அது படிப்பதற்ககப் பிரிந்து சென்றலும் சரி, திருமணமாகிச் சென்றாலும் சரி, அடிவயிறு வரை சோகம் அனலாகப் பரவும். அந்த மாதிரி பிரிந்து சென்ற குழந்தையைப் பற்றி ஏக்கத்துடன் ஒரு தாய் புலம்பும் பதிவு இது!
மறுசுழற்சி மூலம் செய்திதாள்களை வைத்து PAPER FURNITURE எப்படிச் செய்வது என்பதை திருமதி.கோமதி விளக்கிச் சொல்வதைப் படித்துப்பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக உள்ளது. எல்லோருக்கும் மிகவும் பயன்படும் தகவல்! வாழ்த்துக்கள் கோமதி!
திருமதி.ரஞ்சனி நாராயணன் என்ற பிதுக்கு அவரை பற்றிய விளக்கங்கள் தெளிவாக இங்கு கொடுத்து, அதனை உபயோகித்து சமையல் குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்!
திருமதி. கோமதி அரசு மூத்தோர் சொல் அமிர்தம் என்ற தலைப்பில் இங்கே வாழ்க்கையில் எல்லோருக்கும் தேவையான நல்ல விஷயங்களை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
இளமதி வலையுலகிற்குப்புதியவர். கைவேலைத்திறனும் கவிதைகளை ரசித்து பதிவு செய்யும் பாங்கும் அருமையாக உள்ளன. இவரின் நட்பு என்ற பதிவினை படித்துப்பாருங்கள்!
'பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.' என்று அமைதிச்சாரலின் சாந்தி இங்கே தன் எண்ணத்துளிகள் யாவற்றையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்!
கதாநாயகின் காதலைப் பொருட்படுத்தாத பெற்றோர்கள் அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் பேச நினைக்கிறரகள். கதாநாயகி தன் மனதை அப்படியே கிருஷ்ணனிடம் கொட்டும் பாடல் இது! கேட்டுப்பாருங்கள்.
வைரம்
வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது.
வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும.
வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!!
நகைச்சுவையாய் எழுதுவதில் முத்திரை பதிப்பவர் இவர். ஆனால் சமையலைப்பற்றிய இவரது பதிவுகள் மற்ற இவரது பதிவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். ஏதோ இரண்டு வரிகள் சிறப்பாக எழுதினால் போதும் என்றில்லாமல் வரிக்கு வரி ரசித்து மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதிலும் பதிவர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே! சமீபத்திய பதிவான அடையின் ருசி இன்னும் நாக்கிலிருந்தும் மனதிலிருந்தும் போகவில்லை! பிற அழுத்தங்கள் காரணமாக சமீப காலமாக இவர் பதிவுகள் போடுவதில்லை. அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கிராமத்தின் மலரும் நினைவுகளை மிக அழகாய், நம் மனதிலும் பாதிப்பு ஏற்ப்டும் வண்னம் எழுதுவதில் குமார் திறமையானவர். ஆழ்மனதில் தன் சொந்த மண்ணைப்பற்றிய ஏக்கமும் மிகப் பிரியமான நினைவுகள் இருந்தால் மட்டுமே இத்தனை அழகாக எழுதமுடியும். அதற்கு அத்தாட்சி தான் இந்த பனைமரம் பற்றிய பதிவு!
மனிதனின் மிகப்பெரிய எதிரி யாரென்பதை மிக அருமையாக இங்கே திண்டுக்கல் தனபாலன் விளக்கியிருக்கிறார். யார் யார் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவரவர் வலைப்பூவிற்குச் சென்று தானாகவே அந்த விபரம் தெரிவிக்கும் நல்ல பண்பு கொண்டவர். கொஞ்ச நாட்களாக அவரைக் காணாதது சிறிது கவலையளிக்கிறது.
ஆசியா பழகுவதற்கு இனிமையானவர். பலவித சமையல்கள் செய்து அசத்துவதில் வல்லவர். இவரது வலைப்பூவின் தலைப்பே சமைத்து அசத்தலாம் என்பது தான்! நுங்கும் பதநீரும் கலந்து திருநெல்வேலியில் விற்கும் நுங்கு பதனி மிகவும் சுவையானது என்று இங்கே தெரிவித்திருக்கிறார். நானும் இந்த முறை ஊருக்குப் போகும்போது இந்த நுங்கு பதனியை சுவைப்பதற்காகவே திருநெல்வேலி சென்று வந்து விட வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
தாழம்பூ போல மணம் வீசும் சிறுகதையை எழுதியிருக்கும் ராதாராணி சமையல் குறிப்புக்கள் கொடுப்பதிலும் திறமையானவர்!
மதுரை மரிக்கொழுந்து பற்றி இங்கு சுரேஷ் குமார் விரிவாகக்கூறி அசத்துகிறார்!
குழந்தைகளை அருமை பெருமையாய் வளர்த்தாலும் எல்லோருக்குமே பிரிவு என்ற ஒரு வலியை அனுபவிக்கிற காலம் வரத்தான் செய்யும். அந்தப் பிரிவு பெற்ற அன்னையையும் தூக்கி வளர்த்த தந்தையையும் நிலைகுலையத்தான் செய்யும். அது படிப்பதற்ககப் பிரிந்து சென்றலும் சரி, திருமணமாகிச் சென்றாலும் சரி, அடிவயிறு வரை சோகம் அனலாகப் பரவும். அந்த மாதிரி பிரிந்து சென்ற குழந்தையைப் பற்றி ஏக்கத்துடன் ஒரு தாய் புலம்பும் பதிவு இது!
மறுசுழற்சி மூலம் செய்திதாள்களை வைத்து PAPER FURNITURE எப்படிச் செய்வது என்பதை திருமதி.கோமதி விளக்கிச் சொல்வதைப் படித்துப்பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக உள்ளது. எல்லோருக்கும் மிகவும் பயன்படும் தகவல்! வாழ்த்துக்கள் கோமதி!
திருமதி.ரஞ்சனி நாராயணன் என்ற பிதுக்கு அவரை பற்றிய விளக்கங்கள் தெளிவாக இங்கு கொடுத்து, அதனை உபயோகித்து சமையல் குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்!
திருமதி. கோமதி அரசு மூத்தோர் சொல் அமிர்தம் என்ற தலைப்பில் இங்கே வாழ்க்கையில் எல்லோருக்கும் தேவையான நல்ல விஷயங்களை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
இளமதி வலையுலகிற்குப்புதியவர். கைவேலைத்திறனும் கவிதைகளை ரசித்து பதிவு செய்யும் பாங்கும் அருமையாக உள்ளன. இவரின் நட்பு என்ற பதிவினை படித்துப்பாருங்கள்!
'பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.' என்று அமைதிச்சாரலின் சாந்தி இங்கே தன் எண்ணத்துளிகள் யாவற்றையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்!
|
|
நல்ல பாடல் என்பது கேட்கும்போதே மனதின் ஆழத்தில் அப்படியே பதிந்து போய் விடும். பாடல் முடிந்தும் கூட தொடர்ந்து உள்ளுக்குள் இசைத்துக்கொண்டே இருக்கும். எந்த வேலை செய்தாலும் நம்மை விட்டு பிரிக்க முடியாதபடி அதன் இனிமை பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும். சில பாடல்கள் அப்படி அமைந்து விடும். //
ReplyDeleteநல்ல பாடலை பற்றிச் சொன்ன விளக்கம் அருமை.
எனக்கும் இந்தமாதிரி பாடல்கள் பிடிக்கும்.
வைரம் பற்றிய செய்தி அருமை.
மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.//
நானும் உங்களுடன் சேர்ந்து திரு. வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர் எந்த துறையைப்பற்றி எழுதினாலும் தன் நகைச்சுவையை கலந்து அந்த பதிவு எல்லோர் மனதிலும் பதியும்படி எழுதுவதில் வல்லவர்.
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பணி மாற்றம் ஏதோ மேல் படிப்பு படிக்கிறார் அது முடிந்தவுடன் வந்து நல்ல பதிவுகளை தருவேன் என்று சொல்லி இருக்கிறார். காத்து இருப்போம்.
ரஞ்சனி நாராயணன் அவர்கள் பதிவுகளை இப்போது தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அருமையாக எழுதுகிறார்.
ஆஹா! என் பதிவு ’மூத்தோர் சொல் அமிர்தம்’ பகிர்வுக்கு நன்றி. என் கணவ்ரிடம் நான் வைரம் என்று பெருமை அடித்துக் கொண்டேன் உங்களால்.
ஆசியா, எப்போதும் நம் ஊர் நினைவுகளை நமக்கு தந்து கொண்டு இருப்பவர். சமையலில் அவர் பெற்ற விருதுகள் ஏராளம்.
இன்று குறிப்பிட்ட இதுவரை படிக்காதவர்களின் பதிவுகளை படித்து விடுகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.
காணொளி கவர்கிறது .
ReplyDeleteவைரங்கள் டால் அடிக்கின்றன.
வாழ்த்துக்கள் !
காலையில் எழுந்த உடன் இந்த செய்தி என்னை வரவேற்றது.இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இடுகையில் இடம்பிடித்த மற்ற வைரங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமதி.மனோ சாமிநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அம்மா...
ReplyDeleteஉங்கள் வைர வரிகளில் மின்னும் சரத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
நன்றி அம்மா.
வலைச்சரத்தில் மீண்டும் ஒருமுறை அறிமுகம்... அதற்கு மீண்டும் நன்றி.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான அறிமுகம்!
ReplyDeleteமனோ அக்கா இன்றைய பாடல் பகிர்வு அருமை.இனிமையான குரல் இதமாகயிருந்தது.
ReplyDeleteவைரம் பற்றிய செய்தி குறிப்பிற்கு நன்றி.
என்னுடைய இந்த பகிர்வை அறிமுகப் படுத்தியமைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி அக்கா.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அமைதிச்சாரல் நன்கு தெரிந்தவர் அருமையாக எழுதுவார்.
ReplyDeleteஅவர் பன்முக வித்தகி.
வாழ்த்துக்கள் சாந்தி.
இன்று நீங்கள் பகிர்ந்து கொண்ட வலை பதிவர்களின் பதிவுகளையும் படித்து கருத்து தெரிவித்து விட்டேன்.
ReplyDeleteஉங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்.
மீண்டும் ஒருமுறை என் பதிவையும் படித்தேன்.
நன்றி.
வைரம் என்பதற்கு பொருததமான சிறந்த பதிவர்கள் மின்னுகிறார்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துகள், நல்லறிமுகங்கள் தொடரட்டும்...
ReplyDeleteஅன்பு மனோ!
ReplyDeleteஇன்றைய வைரபதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்து பெருமைப் படுத்தியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
உங்கள் பதிவுகள் மட்டுமல்ல உங்கள் ரசனையும் (என்ன ஒரு மனதை தொடும், வருடும் பாடல்!)மிகச்சிறந்ததாக இருக்கிறது.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போன்று சில பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும். பாடல் காட்சி சொதப்பி விடும்.
எழுதும்போது எனக்கு பாட்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அதற்கென்றே சில பாடல்களை வைத்திருக்கிறேன். அந்த லிஸ்டில் இன்றிலிருந்து இந்தப் பாடலும் இடம் பெறுகிறது.
இனி இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனதில் வந்து உட்காருவீர்கள்!
கோபு ஸாருக்கு நானும் உங்களுடன் சேர்ந்து எழுதுவதை தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
திருமதி கோமதி அரசுவும் நானும் ஒரே அலைவரிசை.
அவரும் நானும் ஒன்றாக அறிமுகம் ஆகியிருப்பது ரொம்பவும் சந்தோஷம்.
திண்டுக்கல் அண்ணாச்சியைத் தெரியாதவர்கள் யார்? சிறிது காலம் கழித்து கட்டாயம் வருவார் என்று நினைக்கிறேன்.
அன்று பூந்தளிர், இன்று இளமதி. புதியவர்களையும் பாராட்டும் உங்களை என்ன சொல்லி பாராட்ட, வாழ்த்த?
தினமும் உங்கள் அறிமுகங்களின் தளத்திற்கு முடிந்தவரை போய் பார்த்து பாராட்டிவிட்டு வருகிறேன்.
இன்றைக்கும் போய் வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறேன்.
நன்றி, நன்றி, நன்றி!
மனதை வருடும் பாடல்.பாடுபவரின் குரலும் மென்மையாக இனிமையாக உள்ளது..வலைசரத்தில் மீண்டும் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம்..!வைர வரிசையில் என் வலையை சேர்த்து பெருமை படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி..!
ReplyDeleteசில வைரங்கள் முன்பே அறிமுகமானவர்கள்..மற்ற வைர வலைகளுக்கு சென்று படிக்க வேண்டும்.அறிமுகமான வைரங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இன்றைய வைரங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாடல் மனதை அப்படியே கட்டிப் போட்டது. தரவிறக்கம் செய்து விட்டேன்.... மீண்டும் மீண்டும் கேட்க....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை....
த.ம. 1
வைரமாய் மின்னும் பதிவர்களின் அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteபொங்கல் முதல் நீங்கள் ஆசிரியையாக இருந்து பொறுப்பேற்ற வலைச்சரத்தின் எல்லா பதிவுகளையும் இன்றுதான் படித்து முடித்தேன். நீங்கள் அறிமுகப்படுத்திய ( எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று) பதிவர்கள் பற்றிய பக்கங்கள் அருமை..
ReplyDeleteபாடல் மனதை கொள்ளை கொண்டது. வைரங்கள் பற்றிய தகவல்கள் அருமை. வைரம் போன்று ஒளி வீசும் பதிவர்களின் அறிமுகங்களும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் திறந்த பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு! அனைவரது வலைப்பூக்களுக்கும் சென்று கருத்து தெரிவித்து உற்சாகப்படுத்திய உங்களை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை! திரு.தனபாலன் அவர்களைப்பற்றி தகவல் சொன்னதற்கு மறுபடியும் நன்றி!!
ReplyDeleteபாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரவாணி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் இனிய நன்றி கோமதி!
ReplyDeleteஇனிய வருகைக்கு உளமார்ந்த நன்றி குமார்!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ஜோஸஃபின்!
ReplyDeleteபாட்டைக் கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி ஆசியா! இன்தப்பாடலை இணைக்க உதவிய உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் பாலகணேஷ்!
ReplyDeleteபாட்டை ரசித்தது மிகவும் மகிழ்வாக இருக்கிரது சகோதரி ரஞ்சனி! பாடியவரைப்பற்றி குறிப்பிட மறந்து விட்டேன். பாடலைப் பாடியது ஸ்வேதா மேனன். பாடகி சுஜாதாவின் மகள். படம் ' அருகே' [ மிக அருகில்] என்ற மலையாளத் திரைப்படம். விரிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இதயம் நிறைந்த நன்றி!
ReplyDeleteஇங்கு அறிமுகத்தில் இடம் பெற்ற வலைப்பதிவாளர்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி விட்டு வரும் உங்களுக்கு மீண்டும் என் இனிய நன்றி சகோதரி ர்ஞ்சனி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராதா!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி பூந்தளிர்!
ReplyDeleteபாடலை நீங்களும் மிகவும் ரசித்துக் கேட்டது மிக்க மகிழ்வாக இருந்தது வெங்கட்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!
ReplyDeleteஇங்கு வருகை எனது அனைத்துப்பதிவுகளையும்
ReplyDeleteபடித்து பாராட்டியதற்கு இதயம் நிறைந்த நன்றி சகோதரர் இளங்கோ!
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இந்தப்பாட்டு பிடித்துப்போனது மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஆதி! வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி !!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமனோ,சாமிநாதன்
இன்று அறிமுகமான தளங்களில் சிலது எனக்கு புதியவை சிலது பழையவை இன்றும் அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வைரங்களாக மின்னும் ஆக்கதாரர்களிங்கும் வைரத்தை பட்டை தீட்டிய தங்களிற்கும் வாழ்த்து...வாழ்த்து...
ReplyDeleteநேரமின்றியுள்ளது மேலே எழுத....
சநதிப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
வைரங்களின் வரிசையில் என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு நன்றிம்மா.
ReplyDeleteவைரங்களாய் ஜொலிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
//கதாநாயகின் காதலைப் பொருட்படுத்தாத பெற்றோர்கள் அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் பேச நினைக்கிறரகள். கதாநாயகி தன் மனதை அப்படியே கிருஷ்ணனிடம் கொட்டும் பாடல் இது! கேட்டுப்பாருங்கள்.//
ReplyDeleteஅந்தப்பாடல் காட்சியினை நான் வெகுவாக ரஸித்தேன்.
பாடலும், பாடல் வரிகளும், நடிப்பில் ஒவ்வொருவரும் கொடுத்துள்ள முகபாவமும் மேற்படி சிட்சுவேஷனுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
அந்தக்கதாநாயகியின் பேரழகு, அவளின் ஆடை, கழுத்தில் அணிந்துள்ள நெக்லஸ், காதில் அணிந்துள்ள அந்த [எனக்கு மிகவும் பிடித்தமான] ஜிமிக்கி , கைவிரலில் அணிந்துள்ள ஜொலிக்கும் மோதிரம், தலையில் வைத்துள்ள பூச்சரம், மிக அழகான பல்வரிசை, முகபாவம் என எதைப்பாராட்டிச்சொல்வது, எதை நான் பராட்டாமல் விடுவது?
அவளின் தாய் தந்தையரின் உணர்வுகளும் முகபாவங்களும் மேலும் சிறப்பாகவே காட்டப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் விட இதை இன்று தாங்கள் வெளியிட்டு நாங்களும் கண்டு மகிழச்செய்துள்ளது தான் இதில் மிகச்சிறப்பாக உள்ளது.
என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>>>>
//வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது.//
ReplyDeleteவைரத்தைப்பற்றி, வைரம் போன்று ஜொலித்திடும் தகவல்களாகத் தந்துள்ளது, தங்களின் தனிச்சிறப்பாக உள்ளது.
//வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும்.
புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும்.
இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும.//
தங்களின் எழுத்துகள் யாவுமே
'புளு ஜாகா’ வைரம் போன்று விலை மதிப்பற்றவை.
எதைப்பற்றி தாங்கள் எழுதினாலும் அதில் வைரம் போன்றே ஓர் நல்ல தெளிவினை நான் காண்பதுண்டு.
அஷ்டாவதானியாகிய தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
>>>>>>
மின்னிடும் வைரங்களாக இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள, அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தையே வைரக்கற்களால் கோர்த்து சிறப்பு வைர மாலையாக்கியுள்ள தங்களுக்கு எல்லோருடைய சார்பிலும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
>>>>>>>>
//நகைச்சுவையாய் எழுதுவதில் முத்திரை பதிப்பவர் இவர். ஆனால் சமையலைப்பற்றிய இவரது பதிவுகள் மற்ற இவரது பதிவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். //
ReplyDeleteஇதுவரை சமையலைப்பற்றி நான் இரண்டே இரண்டு முறைகள் மட்டுமே என் பதிவினில் பேசியுள்ளேன்.
இரண்டிலுமே நான் நகைச்சுவையை மட்டுமே கலந்திருந்தேன்.
அதுவும் முதல் முறை என்னைப்பேச வைத்தது தாங்கள் மட்டுமே.
என்னைத் தொடர் பதிவு ஒன்றுக்கு மிகவும் வற்புருத்தி அழைத்திருந்தீர்கள்.
“உணவே வா ... உயிரே போ”
என்ற தலைப்புக் கொடுத்து உங்களுக்காகவே நான் எழுதியிருந்தேன்.
தாங்கள் சென்ற முறை வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அதை வெகுவாகப்பாராட்டி, முதல் நாள் முதல் அறிமுகத்திலேயே கொண்டு வந்து என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
அதன் இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.com/2011/08/blog-post_30.html
இன்று முதலில் வருவது சமையல் முத்துக்கள்:
அதில் தாங்கள் கூறியிருந்த அறிமுக வாசகம் இதோ:
1. வை.கோபாலகிருஷ்ணன்
முதலிடத்தில் வருபவர் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன்.
அருமையான சிறுகதை எழுத்தாளரை இங்கு இழுத்து வருவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை.
ஆனால் இந்தப்பதிவினைப்படித்த பின் அவருக்குத்தான் பெண்களைக் காட்டிலும் முதல் இடம் கொடுப்பது நியாயம் என்று தோன்றி விட்டது.
எந்நேரமும் சமையலறையிலேயே புழங்கும் பெண்களே அதிசயப்படும் அளவிற்கு சமையல் பொருள்கள், அவற்றை உபயோகிக்கும் விதம், ருசிகரமான சமையல் வகைகள், அதற்குத் தகுந்த ஜோடியாக கூட்டுப்பொருள்கள் என்று அசத்தியிருக்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!
உணவே வா ..... உயிரே போ .....
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html
>>>>>>>>
//ஏதோ இரண்டு வரிகள் சிறப்பாக எழுதினால் போதும் என்றில்லாமல் வரிக்கு வரி ரசித்து மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதிலும் பதிவர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே!//
ReplyDeleteநான் சென்று படிக்கும் பதிவுகளே மிகவும் குறைவு.
அவ்வாறு நான் செல்லும் பதிவுகளை முழுமையாக ரஸித்து மனதில் வாங்கிக்கொள்ளாமல் ஏனோ தானோ என, என் கருத்துகளை நான் அளிப்பவன் அல்ல.
மற்றவர்களுக்கு உற்சாகம் தருவதில் தான் எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது.
அதுவும் ஏற்கனவே புகழ்பெற்ற பிரபலமான எழுத்தாளர்களைவிட, புதிதாகத் தோன்றிவரும், அதே சமயம் ஓரளவு நன்றாகவும் எழுதிவரும், எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் நான் இப்போது ஒருசிலரின் பதிவுகளுக்கு மட்டும் சென்று கருத்தளித்து வருகிறேன்.
புதிய எழுத்தாளர்கள் செய்யும் ஒருசில தவறுகளைச் சுட்டிக்காட்டியும் வருகிறேன்.
மேலும் அழகாக அவர்கள் பதிவுகளை வெளியிட பல்வேறு ஆலோசனைகளும் சொல்லி வருகிறேன்.
எல்லோருடைய பதிவுகளுக்கும் போய், எல்லாவற்றையும் முழுவதுமாகப் படித்துப்பார்த்து, நிறைய கருத்துக்கள் அளிக்க வேண்டும் என்று மனதில் நான் நினைத்தாலும், அதுபோலெல்லாம் செய்வது PRACTICALLY IMPOSSIBLE என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
>>>>>>>>
//சமீபத்திய பதிவான அடையின் ருசி இன்னும் நாக்கிலிருந்தும் மனதிலிருந்தும் போகவில்லை!//
ReplyDeleteஇதுவே நான் வெளியிட்டுள்ள, மிகவும் நகைச்சுவையான
முதல் சமையல் குறிப்பாகும்.
போட்டி ஒன்றில் இரண்டாவது பரிசும் கிடைத்துள்ளது.
"KITCHEN KING" என்ற பட்டமும் கொடுத்துள்ளார்கள்.
சான்றிதழும் கொடுத்துள்ளார்கள்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த என் பதிவுக்கு இதுவரை நூற்றுக்கணக்கானோர் வருகை
தந்து பலவேறு கருத்துக்கள் கூறி வெகுவாகப் பாராட்டியும் உள்ளார்கள்.
தாங்களே அந்தப்பதிவுக்கு பலமுறை வருகை தந்து பல்வேறு கருத்துக்கள் சொல்லி சிறப்பித்துள்ளீர்கள்.
இதைவிட எனக்கு என்ன வேண்டும்?
என் தலையினில் எல்லோருமாகச் சேர்ந்து ஓர் வைரக்கிரீடமே வைத்துள்ள மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டு விட்டது. ;)))))
>>>>>>>>
வணக்கம் மனோ அக்கா....
ReplyDeleteமுதலில் உங்களுக்கு வலைச்சர ஆசிரியராக இங்கு பொறுப்பேற்று இருப்பதற்கு என் அன்பான இனிய நல் வாழ்த்துக்கள்!
காலையில் எழுந்து உங்களின் பின்னூட்டம் வந்ததிருப்பாதாக மெயில் வந்ததும் அங்கு பார்த்த எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி....
இன்றைய வலைச்சரத்தில் இத்தனை ஜாம்பவான்களுக்குள் என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்களே...அச்சச்சோ எனக்கு என்ன எழுதுறதின்னே எதுவும் தெரியல....நேத்துப்பெய்த மழையில இன்னிக்கு முளைச்ச காளான் அக்கா நான்...:)
எனக்கும் இங்கு ஒரு அறிமுகமா... இன்னும் வியப்பு தீரவில்லை...
இன்று நீங்க கோர்த்த வைரமாலையில் இடையில் என்னையும் கொண்டுவந்து செருகி விட்டிருக்கீங்களே... இவங்களவுக்கு என்னிடம் ஏதும் இல்லை...ஆனா ஏதோ உங்களையும் இளையநிலாவில் கவர்ந்திருக்குன்னு இப்ப புரிகிறது. அவ்வகையில் மனதுக்கு மிக்க மகிழ்வாக இருக்கிறது.
இப்பொழுதுதான் வலையுலகத்தில் நான் தவழ்ந்து, பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயலுகிறேன்...நடை பயில, ஓட ரொம்ம்பக் காலம் ஆகும்...:)
நட்பை என் உயிருக்கு இணையாக மதிக்கின்றேன். அந்த நட்பு பதிவிலிருந்து புதிய பல நட்புக்கள் என்னிடம் வருகை தந்துள்ளனர்... எல்லாவற்றிற்கும் என்னையும் இங்கு அறிமுகப்படுத்தி புதிய நட்புகளையும் என் வலையில் இணைய, ஆதரவுதர வழி அமைத்துத் தந்தமைக்கு உங்களுக்கு என் இதயபூர்வமான அன்பு நன்றிகள்...!
இங்கு இன்று நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு சிலரது வலைப்பூக்களுக்குச் சென்றிருக்கிறேன். புதியவர்கள் அதாவது எனக்கு புதிதாக இருக்கும் ஏனைய பதிவாளர்களின் வலைகளுக்கும் விரைவில் போவேன். அனைவருக்கும் என் அன்பான தோழமையுடன் கூடிய இனிய நல்வாழ்த்துக்கள்!!!
மனோ அக்கா !அருமையாக வலைச்சரத்தில் விலைமதிக்க முடியாத ரத்தினங்களால் தினம் ஒரு ரத்தினமாலை கோர்த்து அழகு படுத்துகிறீர்கள். அத்தனையும் அழகு, அருமை, சிறப்பு!!!
மேலும் உங்கள் பணி சிறப்பாகத் தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!!!
//பிற அழுத்தங்கள் காரணமாக சமீப காலமாக இவர் பதிவுகள் போடுவதில்லை.//
ReplyDeleteஆமாம். மேடம்.
சாதாரண அழுத்தம் இல்லை.
HIGH PRESURE என்று தான் சொல்ல வேண்டும்.
சூழ்நிலைகள் சாதகமாக இல்லை.
உங்களுக்கே பல விஷயங்கள் என்னைப்பற்றி ஏற்கனவே நன்கு தெரியும்.
மற்றவர்களுக்கு நான் அவற்றை இங்கு தெரிவிக்கவும் விரும்பவில்லை.
>>>>>>>>
//அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.//
ReplyDeleteஎன் அன்புச்சகோதரியான தங்களின் அன்பான இந்த வேண்டுகோளை நான் எப்போதும் என் மனதில் நிறுத்திக் கொள்வேன்.
இங்குள்ள சூழ்நிலைகள் சற்றே
எனக்குச் சாதகமாக அமையும் போது நிச்சயமாக மாதம் இருமுறை இல்லாவிட்டாலும் ஒருமுறையாவது பதிவிட நிச்சயமாக முயற்சிக்கிறேன்.
என்னையும் என் எழுத்துக்களையும் இன்று வைரமாக வலைச்சரத்தில் ஜொலிக்கச்செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நாளை சந்திப்போம்.
பிரியமுள்ள சகோதரன்,
வை. கோபாலகிருஷ்ணன்
மனோ அக்கா. நீங்கள் இணைத்த இந்த வீடியோ பாடல் நான் இருக்கும் நாட்டில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கு என்று வருகிறது.
ReplyDeleteபார்க்க முடியவில்லை. அதனால் அதைப்பற்றி ஏதும் கூறமுடியவில்லை மனம் வருந்துகிறேன்...
வேறு எவ்வகையில் பார்ப்பது என்றும் தெரியவில்லை.
**மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.**
ReplyDelete//நானும் உங்களுடன் சேர்ந்து திரு. வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர் எந்த துறையைப்பற்றி எழுதினாலும் தன் நகைச்சுவையை கலந்து அந்த பதிவு எல்லோர் மனதிலும் பதியும்படி எழுதுவதில் வல்லவர்.//
- கோமதி அரசு.
-=-=-=-=-=-=-=-
என் அன்புக்குரிய திருமதி கோமதி அரசு மேடம்,
வாருங்கள், வணக்கம்.
நகைச்சுவையான அதே சமயம் எந்தத்துறையைப் பற்றியதாக இருந்தாலும் எல்லோருடைய மனதிலும் பதியும்படி எழுதுவதில் நான் வல்லவனா?
கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
என் எழுத்துக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு,
என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
//கோபு ஸாருக்கு நானும் உங்களுடன் சேர்ந்து எழுதுவதை தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
ReplyDelete- Ranjani Narayanan //
-=-=-=-=-=-=-=-=-
வாங்கோ ரஞ்ஜும்மா! செளக்யமாக சந்தோஷமாக இருக்கீங்களா?
தங்களின் இந்த வேண்டுகோளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய இந்த வலைச்சரத்தில் எனக்கு மிகவும் மகிழ்வளிப்பது என்ன்வென்றால், பதிவுலகையும் தாண்டி என்னுடனும் என் எழுத்துக்களுடனும் தனிப்பட்ட அன்பும் பாசமும் தனிப்பிரியமும், தொடர் நட்புகளும் வைத்துக்கொண்டுள்ள என் மரியாதைக்குரிய
1] திருமதி ஆசியா ஓமர் அவர்கள்
2] திருமதி ராதா ராணி அவர்கள்
3] திருமதி ரஞ்ஜனி நாராயணனாகிய தாங்கள்
4] திருமதி கோமதி அரசு அவர்கள்
5] திருமதி இளமதி அவர்கள்
6] திருமதி சாந்தி [அமைதிச்சாரல்] அவர்கள்
ஆகிய மிகச்சிறந்த வைரங்களை என்னுடன் சேர்த்து வைர மாலையாக்கித் தந்துள்ளார்களே
நம் அன்புச்சகோதரி திருமதி
மனோ சுவாமிநாதன் அவர்கள்!
அது தான் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
உங்கள் ஆறு பேர்களுக்கும் என் சிறப்பான மனமார்ந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பிரியமுள்ள
கோபு
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
ReplyDeleteஇன்றைய பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் இனிய் நன்றி வேதா!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சாந்தி!
ReplyDeleteவழக்கம்போல மிக விரிவான பின்னூட்டம், அருமையான பாராட்டுக்கள், மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அனைத்திற்கும் இதயம் நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! அந்தப் பாடலை மட்டுமல்லமல் அந்த காட்சியினையும் மிகவும் நீங்கள் ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிந்ததது!!
ReplyDeleteஇளமதி! உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு உளமார்ந்த நன்றி! //இப்பொழுதுதான் வலையுலகத்தில் நான் தவழ்ந்து, பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயலுகிறேன்...நடை பயில, ஓட ரொம்ம்பக் காலம் ஆகும்...:)// என்று எழுதியிருந்தீர்கள்! உங்களின் எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை! ஏற்கனவே நாலுகால் பாய்ச்சலில் ஓடத்தொடங்கி விட்ட மாதிரித்தான் தெரிகிறது! அருமையான எழுத்தை ஓரிரு வரிகளிலேயே இனம் கண்டு கொள்ள முடியும்! மிகுந்த தன்னடக்கத்துடன் எழுதியிருப்பதற்கு அன்பான பாராட்டுக்கள்!
ReplyDeleteகீழ்க்கண்ட இணைப்பிற்குச் சென்று நீங்கள் இந்தப்பாடலை பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்ய முடியாவிட்டால் எனக்கு எழுதுங்கள். வேறு வழி சொல்கிறேன். மலையாலத்தில் 'அரிகே' என்ற படத்தில் இந்தப் பாடல் வருகிறது. Shyam hare என்று இந்தப்பாடல் ஆரம்பிக்கும். ஸ்வேதா மோகன் பாடியது.
வருகைக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!
ReplyDeleteநல்வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி நிஜாமுதீன்!
ReplyDeleteHere is the link Ilamathi!
ReplyDeletehttp://ashsongss.blogspot.com/2012/05/download-arike-film-mp3-songs.html
மனோ ஸ்வாமினாதன் அவர்களுக்கு எனது பாராட்டுதல்கள்.
ReplyDeleteவைரம் எனத் தாங்கள் குறிப்பிட்ட பாடலை இன்று தான் கவனித்து கேட்க முடிந்தது.
பாகேஸ்வரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தப் பாடல்.
ப்ரேமை, விரகம், துயரம், இவற்றையெல்லாம் பிரதிபலிக்கும் ராகம் இது.
இன்று தான் நீங்கள் வலைச்சரத்தில் எழுதுவதையும் கவனித்தேன்.
ஒவ்வொன்றாக இனி படித்து இன்புறவேண்டும்.
சுப்பு தாத்தா.