07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 23, 2013

உடைத்தெறியப்படும் மௌனங்கள்!


புதிய கட்டடங்கள், அழகு பாதைகள்
புதிய சட்டங்கள்..
எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன
உனது வீடு மட்டும்
அப்படியே இருக்கிறது 
ஓலைக் கூரையோடு -
நிறைவேறாத உனது கனவு போல


-அஷ்ரப் சிஹாப்தீன்

இனி இன்றைய எனது அறிமுக பதிவுகளை பார்ப்போம்!

சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு என்ற பக்கத்தில் நண்பர் சமுத்ரா எழுதி வருகிறார். நிறைய பதிவர்களைப்போல் சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று எழுதாமல் நிறைய அறிவியல் கட்டுரைகள் அணு அண்டம் அறிவியல்! எழுதுகிறார் இது போக வாராவாரம் பல விடயங்களை தொகுத்து  கலைடாஸ்கோப்  எனும் பல்சுவை தொகுப்பையும் எழுதுகிறார். அவ்வப்போது கவிதையும் எழுதுகிறார்

சே.குமார் மனசு என்ற தளத்தில் அனுபவம்,ரசித்தது,பிடித்தது,கவிதைகள் என நிறைய விட்யங்களை பகிர்ந்து வருகிறார். மற்றவர்களின் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஆதரவும் தெரிவிக்கிறார்.அன்மையில் வட்டியும் முதலும் ராஜு முருகனின் கட்டுரையொன்றை பகிர்ந்திருந்தார் படிப்பதற்கு இதமாக இருந்தது. இவ்வளவு பேரும் எங்க போறாங்க?

பாலா அவர்கள் பாலாவின் பக்கங்கள் என்ற தளத்தில் அருமையான பல பதிவுகளை எழுதியிருக்கிறார் சினிமா,அரசியல்,அனுபவம் என அதிலும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் நிறைய விளையாட்டு பதிவுகளும் எழுதியிருக்கிறார் அவை யாவும் என்னை மிக கவர்ந்தவை. எப்படியிருந்தவங்க இப்புடி ஆயிட்டாங்களே என தற்போதைய சில தமிழ்சினிமா இயக்குனர்கள் பற்றியும் சுவையாக எழுதியிருக்கிறார்.கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. 

நிசப்தம் என்ற தளத்தில் அரசியல்,அனுபவம் மற்றும் வாழ்க்கையில் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களை பற்றியும் மிகச்சிறப்பாக பதிந்து வருகிறார் நண்பர் வா.மணிகண்டன் இவர் எழுதியதில் மிகப்பிடித்த இரண்டு பதிவுகள்   முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க  முஸ்லீம்ஸ் ஏமாத்தமாட்டாங்க.

பட்டிக்காட்டான் பட்டணத்தில்   இது நண்பர் ஜெய்யின் தளத்தின் பெயர். அனுபவம், நகைச்சுவை காமெடி கும்மி என நகைச்சுவை மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.. தனது சின்ன வயது பாடசாலை அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய பதிவு விழுந்து விழுந்து சிரிக்க வைக்ககூடியது எனக்கு மிகப்பிடித்த பதிவுகளில் ஒன்று நான் நாலாப்பு பெயிலு.

கசியும் மௌனம் ஈரோடு கதிர் நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இவரின் அழகிய தமிழுக்கும் கவிதைக்கும் நச் என்றிருக்கும் கீச்சுகளுக்கும் நான் ரசிகன். ஒரு விமான விபத்தில் சிக்கி யாருமற்ற தீவொன்றில் தனியாளாய் நான்கு வருடங்கள் தனிமையில் வாழ்க்கையை நகர்த்தியவனின் உண்மையை கதை சொல்லும் cast away என்ற திரைப்படத்தை எவ்வளவு அழகாக விபரிக்கிறார் இங்கே. தனிமையின் மொழி-CAST AWAY!


14 comments:

  1. புகைப்படம் மனதின் ஒருபகுதியை உடைத்துவிட்டது.

    ReplyDelete
  2. உயிரைப் பணயம் வைத்து இந்தப் பெரியவர் செய்யக்கூடாது.

    ReplyDelete
  3. சுவையாய் நறுக்கென்று இன்றைய அறிமுகங்கள்.

    ReplyDelete
  4. நறுக்கென்று நச் அறிமுகங்கள்...

    எனக்கும் மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகமாகும் பாக்கியம்...

    என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல நண்பரே....

    மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. அருமையான கவிதையுடன் ஆரம்பித்து இருக்கின்றீங்க.சிஹாப்தீன் நம்மவர் தேசத்து அறிவிப்பாளர் என்று நினைக்கின்றேன் சரியா ரியாஸ்???

    ReplyDelete
  6. பாலாவைத்தவிர பலர் புதியவர்கள் நன்றி அறிமுகத்திற்கு ரியாஸ் தொடர்வோம் இவ்வாரம்!

    ReplyDelete
  7. கவிதையும் படமும் மிக அருமை பட்டிகாட்டனை தவிர பலர் எனக்கு புதியவர்கள் அறிமுகத்திற்கு நன்றி ரியாஸ்

    ReplyDelete
  8. வணக்கம்
    மொஹமது ரியாஸ் (அண்ணா)

    இன்று அறிமுகமான தளங்கள் அனைத்தும் எனக்கு புதியவை அறிமுகம் கண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்குளுக்கும் எனது நன்றிகள்,தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. சில புதிய தளங்களை அறிந்துகொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  10. கவிதையும் படமும் அழகு! நன்றி!

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகங்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. @தனிமரம்

    நேசன் அண்ணா அக்கவிதை அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் உடையதுதான்.

    ReplyDelete
  13. வருகைபுரிந்த வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  14. வெட்டி கீழே தள்ளப்பட்ட கிளை - மனதினை ஏதோ செய்து விட்டது....

    நல்ல அறிமுகங்கள் நண்பரே...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது