07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 12, 2013

2520.மீண்டு( ம் ) மீண்டும் வா




இன்றைய வீடியோ பார்த்தீங்களா .. மாடிப்படி ஏற மறந்தவர்களை கூட அதில் மீண்டும் ஏற வைக்க ஒரு சுவாரசியம் தேவைபடுது இல்லையா. அதே போல மிகவும் சிறந்த பதிவுகள் மூலம் நம்மை மகிழ்வித்த பலர் இன்று பிற சமுக வலைதளங்களின்(Facebook,Twitter,Google+ etc) ஆக்கிரமிப்பில் காணமல் போயி விட்டார்கள் . அவர்கள் அழைக்க இன்றைய பதிவை பயன்படுத்த சித்தம் !


டீக்கடை 
என் அருமை சகோதரர் சிராஜுதீன் அவர்களின் தளம். பல அரசியல் தலைப்புகளில் எழுதி வந்தார்.பதிவுகள் நச்சுன்னு இருக்கும் ஆனா இப்ப வீசிக்கொண்டு இருக்கிற நீலம் புயல் காரணமாக(FACEBOOK லோகோ நீலம் தானே ஹி ஹி ) இப்ப அதிகமா எழுதுவதில்லை. ஆனால் இப்போ குட்டி சொர்க்கத்தில் இருந்து டீக்கடையில் சகோதரி ஆமினா டீ மாஸ்டராக கை கோர்க்க நம்ம சிராஜ் அண்ணன் வடை பஜ்ஜி பகிர மீண்டும் சூடு பிடித்துவிட்டது இந்த டீக்கடை .............

மாணவர்களா பலி ஆடுகளா? 

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால் 


ஆ யு த எ ழு த் து 
நண்பர் ராஜகோபாலன் அவர்களின் தளம் இது . இங்கே அவரது அனுபவங்கள் ,ஆதங்கங்கள் ,கவிதைகள் என்று பல பதிவுகளின் மூலம் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இப்போது அதிகம் முகநூளில் மட்டும் எழுதி வருகிறார் . அவர் மீண்டும் பதிவுலகில் வரவேண்டும் என்பது என் ஆசை ..

குழந்தைகள்........ வாழ்வியலின் வண்ணங்கள்


அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???


எண்ணங்களுக்குள் நான் 

இது நண்பர் பாருக் அவர்களின் தளம். இவர் நல்ல வாசிக்கும் பழக்கம் உள்ளவர்.நல்ல தரமான பதிவுகளின் மூலம் மிக குறுகிய காலத்திலேயே விகடன் அறிமுகம் கிடைக்க பெற்றவர். ஆனால் இவரும் இன்று முகநூளில் தான் அதிக நேரம் செலவு செய்கிறார். இவரும் பதிவேன்னும் படிக்கட்டுகளில் ஏற வேண்டும் என்பது என் ஆசை ...




இன்னொரு கதை சொல்லி 
 திருவல்லிக்கேணி கோபால்சாமி விஜயகோபால் அவர்கள் மீண்டும் பதிவு எழுத வந்து இருக்கார் . இவரின் சிறுகதைகளை படிக்க இனி இங்கே போயி  படிக்கலாம் ....

இவர்களை போல் பலர் இன்று நல்ல நல்ல பதிவுகள் மூலம் ஆசைகாட்டி, இன்று பல காரணங்களால் நம்மை மீண்டும் சந்திக்க மறுத்துவருகிறார்கள் ! அவர்கள் அனைவரும் மீண்டும் நம்மோடு இணைய அவர்களுக்கு அன்பு அழைப்புக்கொடுப்போம்  ஈமெயில்,எஸ்.எம்.எஸ் என்று தொடர்புகொண்டு அழைத்து வாருங்களேன் ....ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் என் நண்பர் ஒருவர் மட்டும் அழைக்க முடியாத தூரத்திற்கு போய்விட்டார் அவர் நம்ம மாய உலகம் ராஜேஷ் ..... அவருக்கு என்ன ஆனது எப்படி மரணத்தை தொட்டார் என்று ஏதும் அறியேன் ..அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம்  பிராத்தனை செய்வோம் ........

                   மாய உலகம் ராஜேஷ் கண்ணீர் அஞ்சலி


ஆம் !நண்பர் ரமேஷின் இந்த தளம் வழியே எனக்கு இந்த செய்தி தெரியும்.அன்பு நண்பர் ரமேஷும் பதிவுலகிற்கு மீண்டும் வரவேண்டும் என்பது என் ஆவல் ....

இனி அறிமுகங்கள் .........

கடற்கரை 
இது நண்பர் விஜயனின் வலைத்தளம் இங்கே பல ஆச்சரியமான செய்திகளை தொடராக தந்து வருகிறார் .சென்று பாருங்கள் .ஆச்சரியங்கள் காத்து இருக்கிறது ..

கற்பனைகள் 
இது நண்பர் இளந்தமிழன் அவர்கள் இங்கே கவிதை தோரணமே கட்டி வருகிறார்.சென்று பாருங்கள் கவிதையின் மனமும் மணமும் கம கம என்று இருக்கு .....

நம்பிக்கையுடன் போகிறேன்


பிடித்திருக்கிறது என்கிறார் உங்களுக்கு பிடித்திரிக்கிறதா சென்று பாருங்கள் 



ஒரு பக்க கதைகள் ஓர் ஆயிரம் !!
இது பத்திரிக்கை உலகில் பிரபலமாக பல கதைகள் எழுதி வரும் நண்பர் பசி பரமசிவம் அவர்களின் தளம் .ஒரு பக்க கதைகள் படிக்க இங்கே போகலாம். இவரை பற்றி இங்கே சொல்லியதை நான் பெருமையாக நினைக்கிறேன் ...

சந்தனார் 
இங்கே இலக்கியம்,சினிமா,குறும்படம் உலகம் என பல தலைப்புகளில் பல அரிய தகவல்கள் கிடைகிறது சென்று பார்த்து சொல்லுங்கள் ...

பெண் என்னும் பதுமை 
இது சகோதரி சரளா அவர்களின் வலைபக்கம் . இங்கு நீதி கதைகள் ,கவிதைகள் கட்டுரைகள் என பல பதிவுகள் உங்களுக்கு காத்திருக்கு ....

ரகசிய முத்தம் 

பிரசவம் ( நானும் என் எழுத்தும் )

ஓடியன் 

இது நண்பர் லக்ஸ்மணன் அவர்களின் வலைபூ ..புதியவர் கும்கி என்ற பெயரில் முதல் பதிவே அசத்தல்..மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறோம் நண்பரே ..........

இன்று என் வலைப்பூவில் உள்ள மீள் பதிவை பார்க்கும் முன் அது ஏன் எழுதினேன் என்று சொல்ல விரும்புகிறேன் ..சென்ற வருடம் ஒரு கல்யாணதிற்கு சென்ற போது எனக்கும் என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் நடந்த உரையாடல் இது ...

நான்: நல்ல இருக்கீங்களா அண்ணே ! புது நாடு புது வேலை எல்லாம் எப்படி இருக்கு அண்ணே ?
அவர்:நல்லா  இருக்கேன் !நான் இப்ப என் கம்பனியின் ஜி எம் ஆயிட்டேன் தம்பி !
நான் : ரொம்ப சந்தோசம் அண்ணே பெருமையா இருக்கு !
அவர்:தம்பி எனக்கு இப்ப ஒரு பெரியா ஆலமரம் சிக்கி இருக்கு அதை அப்படியே வேரோட புடுங்கி நம்ம ஊருக்கு கொண்டுபோயி செட்டில் ஆகுற வரைக்கும் ஓயமாட்டேன்ன்னு சொல்லி சிரித்தார் ....

இதை பல பேர் முன்பு சபையில் தான் சொன்னார் ..எனக்கு தூக்கி வாரி போட்டது .. ஒரு மனிதன் முதலாளிக்கு செய்யும் துரோகத்தை கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் சொல்ல முடிகிறதே என்ற என் ஆதங்கம்,கேள்வி அனைத்தும் மனதில் பதிந்தது பின்பு ஒரு நாள் இப்படி கவிதையாக வெளிவந்தது .......அது

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும் 


அன்பு நண்பர்களே ,அருமை சகோதரர்களே இன்றைய அறிமுகங்கள் பலரை சென்று அடைய வாக்களியுங்கள் ,மேலும் அவர்களின் எழுத்தாற்றல் புத்துணர்வு பெற அவர்களின் தளத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இன்றைய அறிமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனது யாரை என்றும் கருத்தில் இங்கு சொல்லுங்கள் .இதுவே வலைச்சரத்திற்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும் ...............

இன்று இவ்வளவுதான் மீண்டும் நான் நாளை வருவேன் ....

26 comments:

  1. வணக்கம்
    ரியாஸ்(அண்ணா)

    6வது நாள் இன்று ,இன்று வலைச்சரத்தில் அறிமுகமான வலைத்தள உரிமையாளர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை அறிமுகமான தளங்களில் சிலது எனக்கு பழையவை சிலது புதியவை வாழ்த்துக்கள் அண்ணா தொடருகிறேன் பதிவுகளை வீடியோ மிக அருமையாக உள்ளது,பின்னூட்டம் இட்டபின்புதான் எல்லா வலைப்பூக்களுக்கும் போகவேண்டியுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ரியாஸ்(அண்ணா)

    தமிழ் மணத்தில் வாக்களித்துள்ளேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் டீக்கடையை அறிமுகம் செய்ததற்க்கு நன்றி ரியாஸ்.

    உண்மையில் நீங்கள் சொல்வது போல் என் நேரம் முழுதும் பேஸ்புக் டீக்கடை குழுமத்திலே போய்விடுகிறது. பிளாக் பற்றி மறந்தே விட்டேன். ஆமினா தான் டீக்கடையை தூசி தட்டி பரபரப்பாக்கினார்.

    அதற்க்காக ஆமினா முஹம்மத் க்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்... றோம்....:-) :-)) :-)))

    ReplyDelete
  4. மிக்க நன்றி ரியாஸ்.என்னை இங்கே அறிமுகம் செய்ததற்க்கு.இனிமேல் அதிகமாக எழுதுவேன்

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பா
    உங்களின் தனிக்கவனத்தில் நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

    ReplyDelete
  6. வழக்கம் போல அருமையான அறிமுகங்கள் வாழத்துக்கள்.

    ReplyDelete
  7. பதிவர்களை அறிமிகப்படுத்தி, வலைப்பூவிற்கு அவர்களை மீண்டும் வர அழைப்பு விடுத்த விதம் (ம)(நெ)கிழ வைத்தது.

    ReplyDelete
  8. டீக்கடை வைத்திருக்கும் சிராஜ், எண்ணங்களுக்குள் அமிழ்ந்திருக்கும் ஃபாரூக் இருவரும் அறிமுகமானவர்களே! மற்றவர்களைச் சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete


  11. @ரியாஸ்

    அவுக ப்ளாக் பத்தி வெளம்பரமாம்.... ஓட்டு போடு போடுன்னு ஒரே மிரட்டல்... போட்டுட்டேன் :-)

    @சிராஜ்

    //
    அதற்க்காக ஆமினா முஹம்மத் க்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.//

    இருக்கட்டும் இருக்கட்டும் :-) நல்லா இருங்க!

    //இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்... றோம்....:-) :-)) :-))) //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என் குட்டிசுவர்க்கத்துக்கு நெரந்தரமா பூட்டு போடணூம் போலையே :-) :-) :-))

    ReplyDelete
  12. நல்ல கான்சப்ட் ரியாஸ்.... எனக்கு தெரிஞ்சு பெரும்பாலும் பதிவர்கள் பேஸ்புக் பக்கம் போய்ட்டாங்க...

    நான் கூட இந்த ஒரு வாரம் தான் தலகாட்டிட்டிருக்கேன்...

    மீண்டும் புத்துணர்வு பெறும் என நம்புவோமாக :-)

    ReplyDelete
  13. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் நன்றிகள்.

    மீண்டும் முடிந்தால் வருவேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  15. இசை படிக்கட்டுகள் அருமை. அறிமுகங்களை சென்று பார்க்க முயல்கிறேன். நன்றி

    ReplyDelete
  16. //இன்றைய வீடியோ பார்த்தீங்களா ..//

    பார்த்தேன். பல இடங்களில் குறிப்பாக அடுக்குமாடி வீடுகளில், தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாததால், இதே நிலை தான் இன்று நீடிக்கிறது.

    மிகவும் பொருத்தமான ஒப்பீடு தான்.

    //மாடிப்படி ஏற மறந்தவர்களை கூட அதில் மீண்டும் ஏற வைக்க ஒரு சுவாரசியம் தேவைபடுது இல்லையா. அதே போல மிகவும் சிறந்த பதிவுகள் மூலம் நம்மை மகிழ்வித்த பலர் இன்று பிற சமுக வலைதளங்களின் (Facebook,Twitter,Google+ etc) ஆக்கிரமிப்பில் காணமல் போய் விட்டார்கள். அவர்களை அழைக்க இன்றைய பதிவை பயன்படுத்த சித்தம் !//

    சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேன்டீஈஈஈஈ. ;)))))

    [ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படத்தில் ...

    “பருத்தி எடுக்கையிலே என்னைப்பலநாளும் பார்த்த மச்சான் !

    ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ...

    என்ற பெண்குரல் பாடலுக்கு அடுத்து வரும் ஆண்குரல் நான் மேலே கூறியுள்ளது]

    >>>>>

    ReplyDelete
  17. //மாய உலகம் ராஜேஷ் கண்ணீர் அஞ்சலி//

    ஆம். அவருக்கு என் அஞ்சலிகளும்.

    இவருடன் எனக்கு அதிகமாக பரிச்சயம் இல்லாது இருந்தும், என்னுடைய பல பழைய பதிவுகளில் இவரின் பின்னூட்டங்கள் இன்றும் உள்ளன.

    அவர் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டு, செயல் பட்ட போது, என்னையும் என் வலைத்தளத்தையும், அறிமுகப்படுத்தி சிறப்பித்திருந்தார்.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

    அவர் என்னைப்பற்றி வலைச்சரத்தில் எழுதியிருந்தது இதோ இங்கே:

    -=-=-=-=-=-=-=-=-
    திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

    மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில்

    ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

    -=-=-=-=-=-=-=-=-

    இன்று நம்மிடையே இல்லாமல் போய்விட்ட அவரையும் ஞாபகமாக இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்திய தங்களின் செயல் பாராட்டுக்குரியது.

    நன்றி, நன்றி.

    ReplyDelete
  18. இன்றைய வீடியோ அருமை.
    இசையோடு எல்லோரையும் படியேற இசைய வைத்த காட்சி அருமை.

    நீங்கள் சொல்வது சரி, நன்கு எழுதுபவர்கள் எல்லாம் பிற வலைதளங்களுக்கு போய் விட்டார்கள்.உங்கள் அழைப்பால் மீண்டும் பதிவுலகத்திற்கு வந்தால் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
    அன்பு உலகம் ரமேஷ் அவர்கள் மீண்டும் பதிவுலகத்திற்கு வர வேண்டும் என்பது என் ஆசையும் தான்.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    சிறப்பான வாரம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. என் அன்புள்ள வலைச்சர ஆசிரியரே!

    மீண்டும் வணக்கம்.

    "வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்"

    என்ற தங்களின் அருமையான ஆக்கத்தினை மிகவும் ரஸித்துப்படித்தேன், நண்பா.

    இதுபோன்ற அற்புதமான ஆக்கங்களால் மட்டுமே சமுதாயம் [ஒருவேளை] திருந்தக்கூடும் என்பதே, நான் இன்று சொல்லவிரும்பும் தகவல்.

    வரிக்குவரி நிறைய பின்னூட்டங்கள் கொடுத்துள்ளேன்.

    இங்கு வருகை தந்துள்ள அனைவருமே அவசியமாகச் சென்று படிக்க வேண்டிய நல்லதொரு படைப்பு என நான் அனைவருக்குமே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  20. ஏப்ரல் 2011 இலிருந்து பதிவுகள் எழுதிவருகிறேன்.

    நீங்கள்தான் முதன்முதலாக, வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உண்ர்கிறேன்.

    மனம் கொள்ளாத நன்றி நண்பரே.

    மிக மிக மிக்க நன்றி.

    ReplyDelete
  21. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  22. அன்பு நண்பர்களே அருமை சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. MR வை.கோபாலகிருஷ்ணன் said...


    இங்கு வருகை தந்துள்ள அனைவருமே அவசியமாகச் சென்று படிக்க வேண்டிய நல்லதொரு படைப்பு என நான் அனைவருக்குமே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அன்புடன் தங்கள்,
    VGK

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
    இது போதும் எனக்கு
    இது போதுமே வேறென்ன வேண்டும் இது போதுமே

    நாங்களும் பாடுவோமே ஹி ஹி
    கடல் என்ற திரைப்பட பாடல் இது
    மூங்கில் தோட்டம் என்று தொடங்கும் பாடல்
    அருமையான பாடல் உங்கள் மனம் போலவே
    நன்றி நன்றி

    ReplyDelete
  24. நன்றி டாக்டர். வீட்டுக்குப் போய் விரிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  25. அன்பின் ரியாஸ் அவர்களுக்கு,

    முன்பு எழுதிய காலத்திலும் இப்போது மீண்டும் எழுத வந்திருக்கும் காலத்திலும் வலைச்சரம் கொடுக்கிற வரவேற்பு அளப்பரியது. இந்த அன்புக்கு மிக்க நன்றி. இத்தனை விரிவான வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பது உங்களது வலைச்சரப் பதிவைப் பார்க்கிற போது தான் தெரிந்தது. தொடர்ந்து நிறைய பேரை அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது