திடங்கொண்டு போராடு என்னும் நான்
➦➠ by:
திடங்கொண்டு போராடு சீனு
வலைச்சரம் என் பார்வையில்
"உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்ற வார்த்தைகளின் மூலம் தான் வலைச்சரம் அறிமுகமானது எனக்கு. எங்கோ யாரோ ஒருவர் நமது பதிவைப் பற்றி பேசியிருக்கிறார், அவர்களில் ஒருவராவது நமது பதிவை நிச்சயம் கிளிக்கி படிப்பார் என்ற அந்த ஒரு நிமிட உணர்வு எவ்வளவு புத்துணர்ச்சி கொடுத்திருக்கும். நான் முதல் முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது என்னுள் எனக்கு ஏற்பட்ட நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. சொல்லப்போனால் வலைச்சரம் எனக்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தது.
ஒரு சமயம் உற்சாகம் இழந்து இனி எழுத வேண்டாம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நேரத்தில் மற்றுமொரு பதிவர் என்னைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஏதோ ஒரு பதிவரால் நாம் கவனிக்கப் பட்டுக் கொண்டு தான் உள்ளோம் என்ற உணர்வைக் கொடுத்த சமயம் அது.
நடைபழகும் குழந்தைக்கு நடைவண்டியாகவும், தடுமாறுபவனுக்கு தோள்கொடுக்கும் தோழனாகவும், வலைச்சரம் தனது பணியை செய்து வருகிறது. அதனால் "வலைச்சரம் ஆசிரியர்" என்னும் அற்புத வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனுக்கு எனது நன்றிகள். என்னை ஊக்குவிக்கப்போகும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
திடங்கொண்டு போராடு என்னும் நான்
எனக்கு ஆச்சரியம் தரக் கூடிய ஒரு விஷயத்தை நானே இன்று தான் கண்டுகொண்டேன், மேலும் உங்கள் யாருடனும் இதுவரை பகிர்ந்திராத ஒரு விசயத்தையும் சொல்கிறேன். நான் எனது இரண்டாவது பதிவை எழுதிய மாதமும் எனது இரண்டாவது வலைப்பூவை ஆரம்பித்த மாதமும் மார்ச் என்பதை இன்று தான் கண்டுகொண்டேன். சிறிய வித்தியாசம் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகச் சரியாக ஒரு வருடம்.
குழப்பிவிட்டேனா சற்றே தெளிவாகச் சொல்கிறேன்.
முதுநிலை முடித்துவிட்டு ஒரு சிறிய அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். நண்பன் செல்வமணி இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் உலவிக் கொண்டிருப்பான். எனக்கு இவற்றை அறிமுகப் படுத்தியதும் அவன் தான். அவன் படித்த பதிவுகள், அவனுக்குப் பிடித்த பதிவுகள் என்று என்னுடன் பகிர்ந்து கொண்டே இருப்பான். நான் செல்வமணி மற்றும் மணி அதிகமான பதிவுகள் படிப்போம், பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளாக படிப்போம், யாருக்கும் பின்னூட்டம் இட்டது கிடையாது. செல்வமணியிடம் ஏதேனும் தலைப்பு கூறி எனக்கு இந்த தலைப்புகளில் தகவல் வேண்டும் தேடி கொடு என்றும் சொல்வதுண்டு. சளைக்காமல் தேடி எங்கிருந்தாவது எடுத்துக் கொடுத்து விடுவான். பதிவுலகம் பற்றி நான் முழுமையாக புரிந்து கொண்ட நாட்கள் அது.
சினிமா என்பதையும் தாண்டி தமிழில் பரவலாகப் பலவிதமான பதிவுகள் பதியப்பட்டுள்ளன என்று தெரிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. நிச்சயமாக பதிவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரியாமலேயே தமிழுக்கான கலை சேவை செய்து வருகிறார்கள் என்பது உண்மை. செல்வா அடிகடி கேட்பான் "சீனு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன". அவன் அப்படிக் கேட்ட பொழுது, ஏழு வருடங்களுக்கு முன்பு அசோக் அண்ணன் என்னிடம் கேட்ட கேள்வி நியாபகம் வந்தது "பிளாக் படிக்கிற பழக்கம் உனக்கு உண்டா?". என்னிடம் அந்த கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி "அப்படினா?" என்றேன். "உனக்குப் பிடிச்சது எல்லாம் எழுதலாம், கிட்டத்தட்ட அது டைரி மாதிரி" என்று அவர் சொல்லியது நியாபகம் வந்தது.
டைரி எழுத எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் டைரி எழுத ஆரம்பிப்பேன், அந்தப் பழம் சீக்கிரம் புளித்துவிடும். ஆனால் பிளாக் கூட டைரி போன்றது என்று அசோக் அண்ணன் என்னிடம் சொல்லிய வார்த்தைகள் மனதில் இருந்து நீங்கவே இல்லை. சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின் பொழுது கூட அய்யா நடன சபாபதி என்று நினைக்கிறன் அவர் கூட அதே கருத்தை கூறி இருந்தார்.
செல்வமணி என்னிடம் கேட்டதும் "ஆரம்பிக்கலாம் ஆனால் என்ன எழுதவது " என்று கேட்டேன். அதற்கான பதிலை இன்றுவரை அவன் என்னிடம் சொல்லவில்லை. இருந்தும் நான் ஆரம்பித்துவிட்டேன்.
"இப்படிக்கு நண்பன்" என்னும் முகவரியில் "உயிர் எழுத்து" என்னும் தலைப்பில் மார்ச் 2011 அன்று வலைபூ ஆரபித்தேன். மணி தான் ஐடியா கொடுத்தான், "எம்.சி.ஏ பத்தி எழுத்து சீனு" என்றான். அந்த வலைப்பூவில் நான் எழுதிய முதல் கட்டுரை.
இரண்டாவது பதிவு.
இந்தப் பதிவுகளை படித்ததும் மற்ற நண்பர்களுக்கும் ஆர்வ பொங்க அவர்களும் எழுதினார்கள், இன்னும் பலர் எழுத முயன்றார்கள்.
என் எழுத்தில் ஏதோ ஒன்று குறைந்தது, எனக்கு எழுத்து நன்றாக வரவில்லை. அதில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். மற்ற நண்பர்களும் எழுதாததால் வலைப்பூ நாங்கள் நிறுத்திய இடத்தில இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூட நண்பர்கள் கேட்டார்கள் அதில் "எம்.சி.ஏ பத்தி எதாது எழுது" என்று. மீண்டும் அதில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்ளும் உள்ளது.
தற்போது நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்ந்த நாட்களில் எனது எழுதும் ஆர்வம் குறித்து உடன் பணிபுரிந்த விக்ரமிடம் கூறுவேன். சில காட்சிகளை விவரித்து அவைகளைக் கொண்டு ஒரு கதை எழுதித் தரும்படி என்னிடம் கேட்டான். முதல் முறை நம்மையும் மதித்து ஒருவன் கேட்கிறானே என்று எழுதி விட்டேன். நான் எழுதிய அந்த முதல் கதை என்னுள் மிக அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. எழுதி விட்டேன், "நல்லா இருக்கு, சுமாரா இருக்கு, இன்னும் பெட்டரா ட்ரை பண்ணலாம்" என்பது போன்ற கமெண்டுகளையும் நண்பர்கள் வாயிலிருந்து வற்புறுத்தி வாங்கிவிட்டேன்.
எத்தனை நாட்கள் தான் அந்தக் கதையை நான் மட்டும் படித்துக் கொண்டிருப்பது. அந்நேரம் மீண்டும் என் நியாபகத்தில் வந்தது வலைபூ. மேலும் இந்த நேரத்தில் சிறுகதை எழுதுவதில் தீராக் காதல் ஏற்பட்டு இருந்தது. "ஒரு பிளாக் ஆரம்பிக்கிறோம், சிறுகதையா எழுதித் தள்ளுறோம்" என்ற நிலையில் ஆரம்பிக்கபட்டது தான் எனது இரண்டாவது வலைபூ.
என்ன பெயர் வைப்பது என்றே பல நாள் குழம்பிக் திடங்கொண்டு தேடிக் கொண்டிருந்தேன். மேலும் பாரதியின் வரிகளில் ஒன்று தான் எனது வலைபூ பெயராக இருக்கப் போகிறது என்பதையும் முடிவு செய்துவிட்டேன். அப்படியாக வந்த பெயர் தான் "திடங்கொண்டு போராடு".
நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை
மற்ற சிறுகதைகள்
வலைபூ ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களில் வெறும் சிறுகதையாகத் தான் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தேன். வெறும் சிறுகதையை வைத்து மட்டும் வியாபாரம் செய்ய முடியாது என்பதை எனது இரண்டாவது பதிவே தெளிவாக்கிவிட்டது. முதல் பதிவை நண்பர்களைத் தவிர யாரும் படித்திருக்கவில்லை. சில திரட்டிகளில் இணைத்த பின் கொஞ்சம் ஹிட்ஸ் வந்தது. அந்த நேரத்தில் வெளிவந்திருந்த படம் கர்ணன். நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் அது. அதையே பதிவாக எழுதினால் என்னவெண்டு தோன்றியதால் எழுதியும் விட்டேன். எனக்கு கமெண்ட் வராவிட்டாலும் அதிகமான ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தது.
நான் முதன் முதலில் எழுதிய சினிமா விமர்சனம்
பதிவு ஆரம்பித்த புதிதில் 100 ஹிட்ஸ் என்பது 100 பேர் என் பதிவைப் படித்திருக்கிறார்கள் என்ற அளவில் தான் என் புரிதல் இருந்தது. அதன் பின் தெளிவு கிடைத்ததும் மீண்டும் சிறுகதைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். மூன்று மதங்களில் வலைபூ பற்றிய அறிவு சற்று அதிகமாகவே எனக்குக் கிடைத்த தளம் மூலம் என் களத்தை சற்றே விரிவு படுத்தத் தொடங்கினேன்.
சிரிபானந்தாவின் அறிமுகம் கிடைத்த நேரம் அவரைப் பற்றி எழுதிய பதிவு
சிரிபானந்தா பற்றி மற்றுமொரு பதிவு
பின்பு பலரும் தொடர்பதிவு மற்றும் தொடர் கதைகள் எழுதிவருவதைக் கண்டு என்னுளும் எதாவது தொடர் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நிகழ்காலத்தில் என்னோடு ஒன்றிப் சென்னையைப் பற்றி பதிவு செய்யலாம் என்று எழுதத் தொடங்கினேன். பேஸ்புக் தோழி லாய் "சென்னையைப் பற்றி எங்களுக்கு தெரியாது கொஞ்சம் விரிவாக எழுது" என்று கொடுத்த டிப்ஸ் மூலம் சென்னை ஒரு முடிவில்லாத தொடராக சென்று கொண்டுள்ளது.
சென்னையைப் பற்றி எனது முதல் பதிவு.
ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன் புத்தகம் முழுமையையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் பொன்னியின் செல்வனுக்கு விமர்சனங்கள் எழுதி இருப்பார்கள் என்று தெரியும், இருந்தும் நானும் எழுதினேன், ஆச்சரியம் பல புதிய தகவல்கள் பின்னூட்டங்களாகக் கிடைத்தன.
பயணங்கள் என் வாழ்க்கையில் என்னிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. எவ்வளவு தூர பயணம் என்றாலும் காலம் ஒத்துழைத்தால் நான் தயார். பயணக் கட்டுரைகள் எழுத நான் தேர்ந்தெடுத்தக் கொண்ட தலைப்பு நாடோடி எக்ஸ்பிரஸ்.
நம்மையும் நம் எழுத்துகளையும் அறிமுகம் வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு தான் அலுக்காது. விட்டால் நான் எழுத அத்தனை பதிவுகளையும் இங்கே லிஸ்ட் போட்டு விடுவேனோ என்று பயமாய் இருப்பாதால் அடுத்து வரும் ஒன்றுடன் முடித்துக் கொள்கிறேன்.
வலைபூ ஆரம்பித்த பின் ஒரு பதிவுக்காக நான் சற்றே சிரத்தை எடுத்து, தகவல்கள் தேடி ஓரளவு உருப்படியாய் எழுதிய பதிவு என்றால் அது தனுஷ்கோடியின் வரலாறு பற்றியது தான். நீங்கள் அந்தப் பதிவை படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒருமுறை சென்று வாருங்கள். பார்க்க வேண்டிய ஆழி சூழ் அமானுஷ்யம் நிறைந்த உலகு அது.
இன்னும் ஆறு நாட்கள் என்னுடன் பயணத்தில் தொடருங்கள், கடந்த ஒரு வருடத்தில் நான் கடந்து வந்த பதிவுலகப் பாதையில் நீங்களும் நானும் பயணித்த பயணத்தை திரும்பிப் பார்க்க வாருங்கள்.
நாளை சிந்திப்போம் ...
|
|
என்ன பாஸ் காலைல வரும்னு பார்த்தா இப்பவே பப்ளிஷ் பண்ணிட்டீங்க.
ReplyDeleteஅருமையான சுய அறிமுகத்தோடு ஆரம்பிச்சு இருக்கீங்க தொடர்ந்து கலக்குங்க :-)
சுய அறிமுகம் விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துகள்.
நீங்க என் கூட பேசுற மாதிரியே எழுதி இருக்கீங்க சீனு. வலைச்சரம் ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் அறிமுகப்பதிவை படித்து பின்னுட்டத்தை விட்டு கூகுல் ப்ளைஸை திறந்தால் உங்களைப்பற்றிய இந்த அறிமுக பதிவை படித்தேன்.
ReplyDeleteஉங்களின் பழைய பதிவில் (எந்த பதிவு என்று இப்போது ஞாபகம் இல்லை )நான் சொன்னது இதுதான் உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று அதையே மீண்டும் இங்கே சொல்லுகிறேன்.
nanpaa..!
ReplyDeletekalakkunga kalakkunga.....
பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமிக சரளமான நடையில் நேரில் உரையாடுவது போல அருமையா எழுதியிருக்க சீனு. முதல்ல ஒரு தளம் ஆரம்பிச்சு, அது தொடரப்படாமல் இருப்பது எனக்குப் புதிய தகவல். இன்னும் நிறைய எழுத, வெற்றிகளைக் குவிக்க உனக்கு என் மனம் நிறைய வாழ்த்துகள். சீனுவுடனான சுவாரஸ்யமான ஒரு வாரப் பயணத்தில் நாளைய தினத்திற்காய் ஆவலுடன் என் காத்திருப்பு.
ReplyDeleteஉங்கள் மற்றொரு தளம் எனக்கும் புதிய தகவல். அறிமுகம் அட்டகாசம். தொடருங்கள் சீனு. இந்த வாரம் சீனு வாரம்!
ReplyDeleteரைட்... ரைட்... போகலாம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
ReplyDeleteஅணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.
வாழ்த்துக்கள் நண்பா... கலக்குங்க...
ReplyDeleteநீங்கள் பதிவரான கதையை, கதைபோலவே சுவைபட விளக்கினீர்கள்.
ReplyDeleteஉங்கள் அடுத்த அறிமுகங்களை, அறிய ஆவல் கொண்டுள்ளேன்.
சீனு அருமையான துவக்கம்....
ReplyDeleteஉன் வலையை அதிகம் வாசித்தது கிடையாது. ஆனால் பல நண்பர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்.
வலைச்சரத்தில் சீனு இன்னும் ஏன் எழுதல, என என்னிடம் சிலர் கேட்கும் அளவுக்கு உமது எழுத்துகள் அவர்களிடம் சேர்ந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் & அருமை
ReplyDeleteநடைபழகும் குழந்தைக்கு நடைவண்டியாகவும், தடுமாறுபவனுக்கு தோள்கொடுக்கும் தோழனாகவும், வலைச்சரம் தனது பணியை செய்து வருகிறது. /
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்...
வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteஆங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. பட்டி/ டிங்கரிங் பார்க்கவும்
// மூன்று மதங்களில் வலைபூ பற்றிய அறிவு //
மூன்று மாதங்களில் வலைப்பூ பற்றிய அறிவு - சரி
//எம்.சி.ஏ பத்தி எழுத்து சீனு//
எம்.சி.ஏ பத்தி எழுது சீனு
... இன்னும் சிலவும் கூட உள்ளது !
உனது பதிவில் தனுஷ்கோடி பற்றிய பதிவுகள் எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன்
முதல் பின்னூட்டம் போட்ட நம்ம
ReplyDeleteபிரபு கிருஷ்ணா, சட்டை பட்டனை எல்லாம் கழட்டி விட்டுட்டு போஸ் கொடுக்குறார் :)
வாழ்த்துக்கள். ஒரு வாரம் இனிமையான பயணமாக இருக்கட்டும்!
ReplyDeleteவருக! வருக!! ‘திடங்கொண்டு போராடு’ சீனு அவர்களே! தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுவையான பகிர்வு!!! திடங்கொண்டு தினமும் பதிவிடுங்கள்! :)
ReplyDeleteவாழ்த்துகள் சீனு
ReplyDeleteஉங்கள் வலைத்தளம் இன்று வலைசரத்தில் அறிமுகம்' - இன்று காலை எனக்கு இப்படித்தான் உங்கள் வலைச்சர செய்தி கிடைத்தது!
ReplyDeleteஉங்களது தனுஷ்கோடி பற்றிய பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒருவாரம் தினமும் உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களின் எழுத்துக்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
வாழ்த்துகள்!
உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்கள் எழுத்து நடை தான். வழக்கம் போல "சீனு டச்" நிறைந்த அறிமுகம்! சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteமுதல் வலைப்பூ பற்றி இப்போ தான் தெரிந்துக் கொண்டேன்... :)
//திடங்கொண்டு போராடு என்னும் நான்//
ReplyDeleteஇது "திடங்கொண்டு போராடும் நான்" என்று இருந்தால் நல்லா இருக்கும்... :)
தங்கள் தளத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது இப் பதிவின் மூலம்
ReplyDeleteவலைச்சரத்தில் இந்த வாரம் வெற்றி பயணமாய் அமைய வாழ்த்துக்கள் சீனு
Prabu Krishna said...
ReplyDeleteபாஸ் காலைல சரியான நேரத்துக்கு எந்திக்க முடியாது.. என்ன பத்தி எனக்கு தெரியாதா. அப்புறம் ஆட்டோ பப்ளிஷ் பண்ணின தமிழ்மனம் ல இணைப்பு குடுக்க முடியாது. சோ பிரேக் தி ரூல்ஸ் :-)
உற்சாகம் தரும் பின்னோட்டதிற்கு நன்றி நண்பா
வை.கோபாலகிருஷ்ணன் said...
மிக்க நன்றி அய்யா...
ராஜ் said...
உற்சாகம் தரும் உங்களுக்கு நன்றி தல...
Avargal Unmaigal said...
ReplyDeleteமிக்க நன்றி சார்... நீங்கள் குறிப்பிட்ட உற்சாகமான வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது
Seeni said...
மிக்க நன்றி நண்பா
கவியாழி கண்ணதாசன் said...
மிக்க நன்றி சார்
ReplyDeleteபால கணேஷ் said...
மனம் நிறைய பாராட்டியதற்கும்... என்றும் என் உடன் வருவதற்கும் மிக்க நன்றி வாத்தியரே
ஸ்ரீராம். said...
மிக்க நன்றி ஸ்ரீராம் சார்... "எங்கிருந்தாலும் வாழ்க" ன்னு நீங்க வாழ்த்துவது எனக்கு கேட்கிறது
திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல ஜன்னலோர சீட்ட புடிச்சிகோங்க... இறங்கிற கூடாது... ரைட் ரைட்
ஸ்கூல் பையன் said...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா... கலக்கிருவோம்
NIZAMUDEEN said...
மிக்க நன்றி நண்பா... உற்சாகமான தங்கள் பின்னூட்டத்திற்கு
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
மிக்க நன்றி அண்ணே... என் மீது அந்த நண்பர்கள் காட்டிய ஆர்வம் எனக்கும் ஆனந்தமாய் உள்ளது... வலையுலகம் நல்ல பல உள்ளங்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது என்பது மீண்டும் உங்கள் வரிகளில் இருந்து தெரிகிறது
Lai said...
மிக்க நன்றி லாய்
இராஜராஜேஸ்வரி said...
மிக்க நன்றி அம்மா
ReplyDeleteமோகன் குமார் said...
மிக்க நன்றி மோகன் குமார் சார்... எழுத்துப் பிழைகள் நான் தவிர்க்க விரும்புவது.. திறக்க இயலாமல் என்னுடன் ஒட்டிக் கொண்டு விடுகிறது.. இனி நிச்சயமாய் கவனத்தில் கொள்கிறேன்
மோகன் குமார் said...
பிரபு அடுத்த பால்வளி அண்ட நாயகனாக தேர்வாகப் போகிறார்... பதிவு விரைவில் வெளிவரும்
உஷா அன்பரசு said...
நிச்சயம் சகோ .. மிக்க நன்றி
வே.நடனசபாபதி said...
ReplyDeleteபாராட்டில் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அய்யா
Karthik Somalinga said...
மிக்க நன்றி தல... திடங்கொண்டு நீங்களும் தினமும் படியுங்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கோகுல் said...
மிக்க நன்றி கோகுல்
Ranjani Narayanan said...
ReplyDeleteஉற்சாகமான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரஞ்சினி அம்மா
Abdul Basith said...
மிக்க நன்றி நண்பா... சீனு டச்சில் பிழையும் இருக்கும் என்பதை அறியாதவரா நீர் .. ஹா ஹா ஹா
Abdul Basith said...
//திடங்கொண்டு போராடும் நான்// இதுவும் நன்றாக தான் உள்ளது... கொஞ்சம் ஒவரா இருக்கோன்னு தான் கொஞ்சம் மாத்திகிட்டேன் ஹா ஹா ஹா
r.v.saravanan said...
மிக்க நன்றி சரவணன் சார்
அறிமுக உரை அருமை!
ReplyDeleteபொன்னியின் செல்வன் பற்றிய பதிவு மிகச்சிறப்பாக இருந்தது!
உங்களை போலவே உங்கள் எழுதும் திடமாக இருக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகம் அசத்தல்! உங்களின் மற்றுமொரு வலைப்பூ பற்றிய தகவல் ஆச்சர்யம் தந்தது. தொடருங்கள்! தொடர்ந்து வருகிறேன்! நன்றி!
ReplyDelete
ReplyDeleteவாழ்த்துக்கள்! அறிமுகமே அசத்தல்!
வாழ்த்துகள் சீனு..சிறப்பாக செயல்படுங்கள்..மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்போடும் வலிமையுடனும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசீனு(அண்ணா)
கடந்தவாரம் ரியாஸ்(அண்ணா) வலைச்சரப் பொறுப்பேற்று நடாத்தினார் அவருக்கு நன்றிகள் அத்தோடு இந்த வாரம் நீங்கள் பொறுப்பேற்றதை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது தொடருங்கள் பணியை வாழ்த்துக்கள் அண்ணா
இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் பாரட்டுக்கள் அதை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைப்பதிவுகள் ”எழுதுவது டைரியை எழுதுவதைப்போல்” மிகச்சரி. அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் எண்ணங்கள் வெளிப்படும். ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்கையில் இன்னும் வியப்பு மேலிடும். என்ன.. எதை எழுதினாலும் அது சரிதானா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு ஏதாவது ஒரு பயன் அளிக்கும் படியாகவும் இருக்க வேண்டியது அவசியம் இல்லையா சீனு..தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு
ReplyDeleteஅடுத்தவன் டைரியை படிக்கிறதுனா சும்மாவா? :) உற்சாகமான சீனுவையும்..ஊக்குவிக்கும் சக பதிவர்களையும் காணும்போது நிறைவாக உள்ளது.வாழ்த்துக்கள் தம்பி...
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDeleteதொடருங்கள்....
தொடர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.
தெளிவான சுய அறிமுகம்
ReplyDeleteசீனு, எனக்கு Versatile Blogger Award கொடுத்த உங்களின் அறிமுகங்களை ரசிக்க காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.
சிறப்பான தொடக்கம் சீனு. வாரம் முழுதும் அசத்தலான பதிவுகள் இட வாழ்த்துகள்.....
ReplyDelete