சுய தம்பட்டம் அடிக்க போறேனுங்க!!
➦➠ by:
* அறிமுகம்,
ஆமினா,
சுயதம்பட்டம்
நாந்தானுங்கோ ஆமினா.......
நா பாட்டுக்கு சும்மாதேங்க பேஸ்புக்குல சுத்திட்டிருந்தேன். ஒரு நாள் இர்ஷாத் அண்ணாச்சி தமிழ்ல ஸ்பீட்டா எழுதுறீங்களே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமேன்னு சொன்னாங்க. சரின்னு தலையாட்டுனேன்னே தவிர ப்லாக்னா என்னான்னு அவர்கிட்டையே திரும்ப கேட்டுக்கலைங்க (நமக்கு கௌரவம் முக்கியம் இல்லையா?)
அப்பறம் ஜெய்லானி அண்ணாச்சி தான் உங்க சேவை உலகுக்கு தேவைன்னு சொல்லி இப்பவே ஒரு ப்ளாக் ஆரம்பிங்கன்னு அடம்பிடிச்சாவ. அப்படி ஆரம்பிச்சது தான் என்ட்ர ப்ளாக்குங்க.
நா புலம்புறத ஊர் கேட்டா கெத்தா இருக்காதுன்னு ஒலகமே கேக்கணுங்குற உயர்ந்த நோக்கத்துல, சீரிய நோக்கத்துல, தொலை நோக்கு நோக்கத்த்துல(கண் தெரியாதுன்னு நெனச்சுப்பாங்களோ?? :-)) குட்டி சுவர்க்கத்தில் எப்பவாவது இல்ல.... எப்பலாம் தோணுதோ அப்பல்லாம் உளறிட்டிருப்பேன்......... பேசி பேசியே என் எனர்ஜிலாம் தீரும் நேரத்தில் கொஞ்சம் கூட பேசாம சமையல் எக்ஸ்ப்ரஸ்ல பயணப்படுவேங்க
என்னை பத்தி நானே அதிகமா சொல்ல கூடாது இருந்தாலும் நா எவ்வளவு டெரர் பீஸுன்னு நீங்க தெரிஞ்சுக்கணுங்களே! இத படிச்சதுக்கு பிறகு நீ இவ்ளவு தானான்னு என்னைய கேட்டுபுட்டா எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருமுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்
எப்பவாச்சும்னா எப்பலாம் அடுத்தவங்க மேல கோபம் வருதோ அப்பலாம் என் டைரியிலிருந்து கதை எழுதுவேங்க. அதனாலேயே நிறைய பேரு கொல வெறியோட அலையுறாங்கன்னா பாத்துக்கோங்களேன் :-))
எங்க வீட்ல நைட்ல கூட லைட் போட மாட்டொமுங்க. ஏன்னா நா வாங்குன பல்புகளே ரொம்ப பிரகாசமா எறியுதுங்க. அதுவும் கணக்கே இல்லாம, மாட்ட இடமே இல்லாத அளவுக்கு :-((
ஒரு லேடி பிசி ஸ்ரீராம் உருவாகுறது இயற்கைக்கே பிடிக்கல போலங்க. நா எப்ப கேமரா எடுத்தாலும் க்ளைமேட் ஒத்துவராதுங்க. அதுனால என்ட்ர வூட்டுக்காரவுகள கேமராவில் சிக்குனத எடுக்க சொல்லி நா பேரு வாங்கிக்கிடேங்க.
தேங்காய் சாதமும் அதோட சேர்த்து பெப்பர் சிக்கனும் ரொம்ப பிடிக்குமுங்க. நா கொடுத்த இறால் 65 ல 6 ½ தான் இருக்கு மிச்சம் 58 ½ எங்கேன்னு சண்டைக்குலாம் வந்திருக்காங்க. என்ன செய்ய???? ரொம்ப அப்பாவிங்க நா ;-)
சரி விடுங்க. விட்டா இன்னைக்கு முழுக்க பேசிட்டிருப்பேன். அதுனால இப்ப போயிட்டு பொறவு வாரேனுங்க.
ஆங்…….
சொல்ல மறந்துட்டேன் பாத்தீயளா? சின்ன பொண்ணு தெரியுமா உங்களுக்கு?
காய்கறி கொண்டு வர சின்னபொண்ணு (பேரில் மட்டும். ஊர்கதை பேசுவதில் இவளுக்கு நிகர் இவளே தான்) கூடைய கீழ வச்சுட்டு களைப்பில் சிறிது நேரம் ஓய்வெடுக்க எங்க வீட்டு வாசல்ல ஓய்வெடுப்பது அவுக வாடிக்கை. அப்படி ஓய்வெடுக்குற கேப்புல தான் நாட்டு நடப்ப விஷாரிக்கிறது எனக்கும் வாடிக்கை.பின்ன எப்ப தான் அறிவாளியாகுறது?
நாளைக்கு இவுக வீட்டுக்கு வார்ர நேரமா பாத்து நானும் வார்ரேன்
வரட்டுமா…………………
அடுத்த பதிவு- இப்படை தோற்கின் எப்படை வெல்லும் :-)
உங்கள் சகோதரி
ஆமினா


