07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சைவகொத்துப்பரோட்டா. Show all posts
Showing posts with label சைவகொத்துப்பரோட்டா. Show all posts

Sunday, May 9, 2010

மிக்சரும், ரூ.3.2 லட்சம் பரிசும்!! பின்னே விடைபெறுதலும் - வலைச்சரம் 7

நேத்து "தேண் மிளகாய்" இனிப்பா இருந்துச்சா!!
இன்று மீண்டும் எல்லா தளங்களிலும் பயணிப்போமே.

நம்ம சாத்தூர் மாக்கான் ஒரு கதை சொல்றாங்க, வாங்க
கேட்டு பார்ப்போம்.

நம்ம அமைதிச்சாரல் கேக்குறாங்க எது சுதந்திரம்???.. அப்படின்னு.

துணிக்கடையில், உடுப்புகள் தெரிவு செஞ்ச பிறகு, நமக்கு அந்த
அளவு சரியா இருக்குமான்னு சந்தேகம் வரும் பட்சத்தில் அங்கேயே
இருக்குற ஒரு அறையில போட்டு பாக்கலாம்னு நினைப்போம்.
அப்போ பெண்கள் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்ன்னு நம்ம
LK சொல்றாங்க, அது ஏன்னு தெரிஞ்சுக்க படியுங்களேன்
இதை.

உலகின் கடைசி மனிதனோட நிலைமையை நம்ம
பிரசன்னா, கொத்து பரோட்டா போட்டிருக்கார். (புது மலர் 1)

ஒரு சிலர், பஸ்ல டிக்கெட் எடுக்காம எப்படியெல்லாம்
லொள்ளு பண்றாங்கன்னு நம்ம நிஜாம் சொல்றாங்க.
அதை கொஞ்சம் கேளுங்களேன்.

நம்ம அஹமது இர்ஷாத், தான் ஒரு மறத்தமிழர்ன்னு நிரூபிச்ச
கதையை கொஞ்சம் கேளுங்க. (புதுமலர் 2 )
************************************************************

இந்த ஏழு நாட்களும் பொறுமையாக படித்த உங்களுக்கு
ரூ.3.2 லட்சம் பரிசு காத்திருக்கு!!
ஹி......ஹி......உண்மையான காரணம்:நீங்க கவிதை எழுதுவதில் திறமைசாலியா உங்களுக்கே இந்த பரிசு!!
மேலதிக விவரங்களுக்கு
இங்கே செல்லுங்கள். கண்ணில் பட்ட இந்த தகவலை அளிப்பது மட்டுமே பரோட்டாவின் நோக்கம்.
***************************************************************

அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
***************************************

இந்த நல்ல வாய்ப்பினை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

இந்த வாரம் முழுவதும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து பொறுப்பேற்க வரும் ஆசிரியர், மிக சிறப்பாக
பணியாற்ற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இங்கே நான் தொடுத்து கொடுத்த இடுகைகள் உங்களுக்கு
பயன்படும் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன், அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி!!
மேலும் வாசிக்க...

Saturday, May 8, 2010

தேண் மிளகாய்!! - வலைச்சரம் 6

எழுந்திருங்கப்பு, இப்போ நாம இருக்கிறது விண்வெளில ரொம்ப
நேரம் தூங்கப்புடாது.

ஊசி மிளகா, குடை மிளகா தெரியும். இது என்ன தேண் மிளகாய்ன்னு கேட்குறீங்களா.

இப்படிதான் தொடர்பில்லாத விசயங்களை, தொடர்புபடுத்தி ரசிக்கும்படி
கவிதைகள் சொல்றாங்க.

முன்னெல்லாம் குடும்பங்கள், நண்பர்களுக்கிடையே இருந்த நெருக்கம் மெகா சீரியலுக்கும், விளம்பரங்களுக்கும் இருந்த மாதிரி கோர்வையா இருந்துச்சி. இப்போ தண்டவாளங்கள் கெணக்கா பிரிஞ்சி போய் கிடக்கு. அந்த கால நெருக்கத்தை நம் கண் முன்னே கொண்டு
வருது இந்த சுத்த‌ம் சுகாதார‌ம் .

கிராமத்தில் தைரியமாக இருக்கும் இந்த அம்மா, நகரம் வந்த பின்னால தவிக்கிறாள், ஏன்னு
நீங்களே கேளுங்கள் இந்த தைரியசாலி அம்மாவிடம்
தளம்:இது என் ரப் நோட்டு
*****************************************

நாமெல்லாம் பூட்டின் சாவி தொலஞ்சு போச்சுன்னா எவ்வளவு
டென்சன் ஆயிறோம், இங்க பாருங்க ஒருத்தர் சாவிய தெரிஞ்சே தொலைக்க சொல்றார். .

நீங்கள் பல தேசங்கள் போய் வந்தவராக இருக்கலாம்,
ஒரு வாட்டி இந்த ரொமான்ஸ் தேசம் போய் வாருங்களேன்.
தளம் :கவிதை காதலன்
*********************************************

கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளை படம்
பிடித்து காட்டியுள்ளார் இந்த விடியலைத்தேடியில்.
தளம்:நிலா அது வானத்து மேலே!
***********************************************

நமக்கு பிரியமானவங்களின் பெயரை தூக்கத்தில் எழுப்பி
கேட்டாக்கூட சரியா சொல்லுவோம். அது மாதிரி இவங்க ஒரு
பெயரை மனசில எழுதி வைப்பாங்களாம், ஆனா எதுக்கு
தெரியுமா, நீங்களே பாருங்களேன்!!
தளம்:அன்புடன் ஆனந்தி (புது மலர் 1)
***********************************************

மழைத்துளிகள் கூட சண்டை போடுதாம், ஏன்னு தெரியனுமா
மழை பெய்யும் நேரம்.. பாத்து தெரிஞ்சுகிடுங்க.
தளம்:இரவில் கிறுக்கியது (புது மலர் 2)
************************************************

துணைவியை இழந்த ஒருவரின் மன வலியினை அழகாய்
படம் பிடித்து உள்ளார் இந்த கவிதையில்.
தளம்:கிறுக்கல்கள் (புது மலர் 3)
*************************************************

இங்க ஒருத்தர் அவர் காதலிக்காக, தன்னையே மாய்த்து
கொள்வாராம், அவரை கொஞ்சம் பாருங்க.
தளம்:குடந்தையூர் (புது மலர் 4)
*************************************************

மீண்டும் நாளை சந்திப்போம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Friday, May 7, 2010

கதம்பம் - வலைச்சரம் 5

நேத்து தொழில்நுட்பத்தை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டீங்களா.

இன்னைக்கு ஒரு கட்டுக்குள் அடங்காமல், கதம்பமாய் பல
தளங்களில் பயணிப்போம். வாருங்கள்.

அடடா!! ரொம்ப களைப்பா இருக்கீங்களே, முதல்ல நம்ம ஜலீலா அக்கா போளி செஞ்சு
வச்சிருக்காங்க, அத சாப்பிடுங்க.

சாப்பிட்டுகிட்டே அப்படியே, முதுகு வலி வராம தடுக்கறத பத்தி நம்ம பலா பட்டறை
ஷங்கர் சொல்றத படிங்க.

வாங்க ஜெய்லானி, ஏன் தாமதம்? என்னது கார்ல மாட்டிகிட்ட
குழந்தையை காப்பாத்திட்டு வரீங்களா!! உங்க நல்ல
செயலுக்கு வாழ்த்துக்கள்!! அந்த நிகழ்வை கொஞ்சம்
சொல்லுங்களேன். . (புது மலர் 1)

என்னடா இது, நேத்து ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு
சொன்னான் இன்னும் கிளம்பலையேன்னு யோசிக்கிறீங்களா,
நாம போகப்போறது "பன்னாட்டு விண்வெளி நிலையம்" (ISS) ஆச்சே!!
அதான், நம்ம கைடுக்காக காத்திருந்தேன். இதோ வந்திட்டாங்க, நம்ம கைடு உயிர்க்காதலன் ப்ரின்ஸ். எல்லோரும் அவர்கிட்ட உங்களுக்கான
பயணச்சீட்டை வாங்கிக்கோங்க! .

எப்பூடி!! இந்த இடம் ஜம்முன்னு இருக்கா! இங்கே இருந்து நம்ம
பூமிபந்தை பாத்தீங்களா!! அழகா இருக்குல!! இதை நாம இப்ப
அழிச்சிகிட்டு இருக்கோம், இதைபத்தி நம்ம சாமக்கோடாங்கி
என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. (புதுமலர் 2)

என்னாது இப்பவே,
பிற மொழிப்படங்கள்...தமிழில் ... பாக்கணுமா?
ரைட்டு, வாங்க ஜெய் ஸ்டார்ட்..... மியூசிக்.... (புது மலர் 3)

படம் பாத்தாச்சா, இப்போ பொழுது போகலையா, அப்படினா
கொஞ்சம் வெட்டி பேச்சு பேசுவோமா!! வாங்க சித்ரா நம்ம
அறிவு கொழுந்தை பத்தி சொல்லுங்களேன்.

பசி எடுக்குதா, அப்போ வாங்க சாப்பிடலாம், கலைச்சாரல்ல இருந்து மலிக்கா கோதுமை ரவை பரோட்டா சுட்டு வச்சிருக்காங்க!!

சாப்பிட்டாச்சா, ரைட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு வேறு சிலரைப்பற்றி பார்ப்போம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Thursday, May 6, 2010

தொழில்நுட்ப வல்லுனர்கள் - வலைச்சரம் 4

பிரெஷா வந்திருக்கீங்களே!!! குட் இப்படிதான் இருக்கணும்.
நேத்து கதையெல்லாம் படிச்சு பாத்தீங்களா. படிச்சிருப்பீங்க, வாங்க
இன்னைக்கு சில தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போமே.

இப்போ எல்லோரும் அகில உலக சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்!!! ஆமா,
நம்ம படத்த இனையதளத்துல போட்ட மறு வினாடியே உலகத்தின்
எந்த மூலையில இருக்கிறவங்களும் பாக்க முடியுமே. ஆனா இது
மாதிரி இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன்
நாம சில முக்கியமான விசயங்களையும் தெரிஞ்சுக்கணும்.

இப்போ, செல் போன், காமிரா எல்லாத்துலயும் மெமரி கார்ட்
இருக்கு. அதுல வச்சிருந்த ரொம்ப பெர்சனல் ஆன பைல்ல
இப்போ எனக்கு தேவையில்லை, அதனால அத
இருந்த தடயமே தெரியாம அழிச்சிட்டேனே!! அப்படின்னு
நீங்க நினைச்சீங்கன்னா, சாரி நீங்க ஒரு அப்பாவி. ரொம்ப கவனமா இருங்க, விஷமிகள் கையில் அது கிடைத்தால், விபரீத விளைவுகள் நேரலாம். விடை தெரிய இந்த மெமரி டிஸ்க் அபாயங்கள் பத்தி அவசியம் படிங்க.
தளம்:சுடுதண்ணி
********************************************

இப்பெல்லாம், அனேகமாக வீட்டுக்கு வீடு, கணிணி மற்றும் இணைய இணைப்பு இருக்கு நாம பயன்படுத்துற வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்றது அவசியம். ஒவ்வொரு தடவையும் நாம் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்றது கஷ்டமா இருக்கும். அப்போ என்னதான் செய்றதுன்னு கேட்குறீங்களா, இதோ இங்கே போய் பாருங்க.

வங்கிக்கு போகாம, இணைய தளத்துலேயே பண பரிமாற்றங்கள்
செய்றீங்களா. ரொம்ப கவனமா இருங்க, உங்களோட
கடவுச்சொல்லை திருடும் வாய்ப்பு நிறய இருக்கு. திருடு போகாம
இருக்கனுனம்னா என்ன செய்யனும்ன்னு தெரிஞ்சுக்க
இதை படிச்சு பாருங்க.
தளம்:கணினி மென்பொருட்களின் கூடம்
*********************************************
ஆணி புடுங்குவதை சற்று நிறுத்தி விட்டு, நல்ல சுவராசியமான
இடுகை ஒன்றை தயார் செய்து வைத்திருப்போம். அந்த நேரத்தில்
பாஸ் அழைத்ததாலோ, அல்லது வேறு காரணத்தாலோ save செய்வதற்கு பதில் delete செய்து விட்டீர்களா!!
விடுங்கள் கவலையை, மென் பொருட்களின் துணை இன்றி அதனை
மீட்டெடுக்கும் வழி இங்கே இருக்கிறது!!!
தளம்:வந்தே மாதரம்
****************************************************

இதே போல் தொழிநுட்ப தகவல் தந்திருக்கும் புதிய தளங்களை
பார்ப்போம்.

புது மலர் 1:தளம்: காளை(லை) வணிகம். இது April - 2009 -இல்
தொடங்கபட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் நிறய
எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (என நினைக்கிறேன்)

நல்ல சம்பளம் வரும் வேலையில் சேர்ந்தாச்சு, வீடு, கார் எல்லாம்
வாங்கியாச்சு, அடுத்து பணத்தை எங்கே முதலீடு பண்ணலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கிக்கீங்களா. அப்படின்னா இங்கே போய் பாருங்களேன்!! பங்குவணிகத்தில் ஈடு பட
செய்ய வேண்டிய விவரங்கள் எல்லாம் இருக்கு.
*****************************************

புது மலர் 2: ஜனவரி - 2010 -இல் தொடங்க பட்டிருக்கிறது.
தளம்:நாடோடியின் பார்வையில்


நீங்க Microsoft Excel பயன்படுத்துறீங்களா, அதுல ஒரே Folder - ல
ஏகப்பட்ட பைல் வச்சு இருப்பீங்க. அந்த பைல்களின் பெயர்களை copy பண்ணாமலே கொண்டு வர வித்தையை இங்கே சொல்லி இருக்காங்க, படித்து பாருங்களேன்.
***********************************************

இவை நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இது விடுமுறை காலம்,
அதனால நாளைக்கு உங்களை எல்லாம் ஒரு "ஜாலியான சுற்றுலா"
கூட்டிட்டு போகப்போறேன். இந்த இடத்துக்கு நிச்சயம்
நீங்க போயிருக்க மாட்டீங்க (23 - நபர்களைத்தவிர!). ஒரு வித்தியாசமான அனுபவம்
காத்திருக்கு!!
அதனால நாளைக்கு மறக்காமா வாங்க, உங்களுக்காக அறுசுவை உணவு கூட தயார் செஞ்சிகிட்டு இருக்கோம்!!

நன்றி.
மேலும் வாசிக்க...

Wednesday, May 5, 2010

கத விடுறாங்க!! - வலைச்சரம் 3

நேத்து மருத்துவ தகவல்கள் எல்லாம் படிச்சீங்களா!
பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க இன்னைக்கி கொஞ்சம் கதைகள் படிக்கலாம்.

சின்ன வயசுல தாத்தா (அல்லது) ஆச்சிகிட்ட கதை கேட்டு
இருக்கீங்களா. அவங்க கதையில வர்ற கேரக்டர்களுக்கு ஏத்த
மாதிரி, குரலை ஏத்தி, இறக்கி கதை சொல்லும் பாணியே
அழகு!! இதெல்லாம் மிஸ் பண்ணிட்டோமேன்னு
நினைக்கிறீங்களா. கவலையை விடுங்க அதுக்கும் நம்ம கிட்ட
ஆள் இருக்கு!! நம்ம வலையுலக தாத்தா (ஹி....ஹி....கோபபடாதீங்க Dr.P.கந்தசுவாமி அய்யா) சொல்ற
விக்ரமாதித்தன் கதையை கேளுங்க.
தளம்:சாமியின் மன அலைகள்.
*******************************************

ஒரு பில்லா இருந்தாலே தாங்க முடியாது, இங்கே பாருங்க
நாலு பில்லா இருக்காங்க.கொஞ்சம் பயமில்லாம இவங்கள
பாலோ பண்ணி பாருங்களேன் .

அந்தப்பெண் பஸ்ல போனா பின் தொடருகிறான், சினிமா போனா
அங்கேயும், பீச்க்கு போனா அங்கேயும் ஆஜர். எங்க போனாலும்,
மீண்டும் மீண்டும் அவன்!!! . நீங்க கொஞ்சம் இவனை பாலோ
பண்ணுங்க.
தளம்:விசா பக்கங்கள்
*************************************

ரொம்ப ரசிச்சு உங்களுக்கு பிடிச்ச ஐஸ் கிரீம், சாக்லேட் அல்லது
திருநெல்வேலி அல்வா சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. அப்போ எதிர்பாராமல் யாராவது அதை தட்டி விட்டால் எப்படி இருக்கும். அந்த உணர்வு ஏற்படும், இந்த lஜீவசமாதி கதை படித்தால்.

சூரிய "கிரகணம்" பார்த்ததால் இவருக்கு கண் பார்வை போய்
விடுகிறது, அதன்பின் இவர் படும் பாட்டை பாருங்கள்.
தளம்:DREAMER
********************************************

மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை நம் கண்
முன்னே நிறுத்தி, இறுதியில் நம் மனதை கணக்க வைத்து விடுகிறார்
இந்த சம்பவாமி யுகே..யுகே..! தளம்:ராஜு
**********************************************

திருடப்போன இடத்துல இந்த திருடருக்கு என்ன நடந்துச்சுன்னு
தெரியனுமா, நம்ம சிநேகிதன் அக்பர் கிட்ட கேளுங்க.
**********************************************

இப்போ, கத விடுற புது வரவுகளை பார்ப்போம்.

புது மலர் 1, தளம்:பிச்சைக்காரன், இந்த தளம் March - 2010 -இல்
தொடங்க பட்டிருக்கிறது.

நம்ம ஹீரோ, சும்மா டைம் பாசுக்காக ஒரு பெண்ணை காதலிக்கிற மாதிரி
நடிக்கிறார், அப்புறம் நிஜமாவே அவளை காதலிக்க
ஆரம்பிக்கிறார். அப்போ வருது ஒரு ட்விஸ்ட், அது என்னன்னு
தெரிஞ்சுக்க பாருங்களேன் இந்த மலர மறந்த மொட்டுக்களை

புது மலர் 2, தளம்:MANO, இந்த தளம் பிப்ரவரி - 2010 - இல்
தொடங்க பட்டுள்ளது.

பஸ்சில் இவர் பயணம் செய்யம்போது, தேவதை மாதிரி ஒரு
பெண்ணை பார்க்கிறார். அப்புறமென்ன நம்ம தமிழ் சினிமா
கதாநாயகன் மாதிரி கற்பனையில டூயட் பாட ஆரம்பிக்கிறார்.
அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியனுமா, படிங்களேன்
இந்த உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...யை.


நாளை, வேறு களத்தில் சந்திப்போம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Tuesday, May 4, 2010

உடம்பு எப்படி இருக்கு? - வலைச்சரம் 2

வாங்க!!! வாங்க!!! நேத்து என்னோட கதை, கவிதைகளை படிச்சி
"ஒரு மாதிரி" ஆகியிருப்பீங்க, அதனாலென்ன சரி பண்ணிரலாம் :))

சரி........கோபபடாதீங்க பிரசர் ஏறிடும், அப்புறம் சாப்பாட்டுல உப்பை கம்மி பண்ணுங்கன்னு மருத்துவர் சொல்வாங்க,
அது ஏன்னு தெரிஞ்சுக்க பாருங்க இதை.

அப்புறம், நீங்களே சொந்தமா மாத்திரை, மருந்துகளை தேடி
ஓடாதீங்க. மருத்துவருக்கே, உடம்பு சுகமில்லை என்றாலும் அவர்
இன்னோர் மருத்துவரைத்தான் நாடனுமாம், சுய வைத்தியம் பாத்துக்கிட்ட ஒருத்தரின் நிலைமைய இங்கே போய்
படிங்க. இதை சொன்னவங்க Dr.எம்.கே.முருகானந்தம்.
****************************************

என்னாது!!! என் கவிதையை படிச்சதால, ஒருத்தர் மயக்கமாயிட்டாரா!!!
பாவமா இருக்கு, அவருக்கு முதலுதவி செய்வோமா, எப்படி
செய்றதுன்னு தெரியலையா, செல்லுங்கள் இங்கே, விடை கிடைக்கும்.

அளவுக்கு மீறனால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்வாங்க,
அப்படி இருக்கயில பல்லி மிட்டாய் சாப்பிடற மாதிரி panadol
சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா, தெரியாதுன்னா இவர்
சொல்றத கேளுங்க . இந்த தளம்: மருத்துவம் பேசுகிறது!
*************************************

இந்த காலத்து சுட்டிங்க, ரொம்பவே துறுதுறுன்னு இருக்காங்க
ரொம்ப ஸ்டைலா டான்ஸ் வேற ஆடுவாங்க. எதிர்பாராம
அவங்களுக்கு முழங்கையில அடிபட்டா என்ன செய்யனும்ன்னு
இவங்க சொல்லி இருக்காங்க .

அநேகம் பேர் ரொம்ப ஸ்வீட்டானவங்க, அட பேச்சில இல்லங்க,
உடம்பில "சர்க்கரை" வச்சி இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.
அவங்களுக்கு சுலபமா தொற்று நோய்கள் தாக்கும், இதை எப்படி
தடுக்கலாம்னு இதில் சொல்லி இருக்காங்க. சொன்னவங்க
தேவன்மாயம். தளம்:தமிழ்த்துளி.
*******************************

சுற்றுபுறத்தை எப்பவும் சுத்தமா வச்சிக்கோங்க, உங்க வீட்டு
பூந்தொட்டில தண்ணீர் தேங்கி இருந்தா அதுல கூட கொசு வளரும்
அபாயம் இருக்கு. கொசுவால பரவக்கூடிய நோய்கள்ள ஒண்ணுதான்
"டெங்கு". இது வந்தா நம் உடம்பில ஏற்படக்கூடிய அறிகுறிகளையும்,
இதில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகளையும் தெரிஞ்சுக்க
இங்கே செல்லுங்களேன்.
தளம்: Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்.
**********************************

இப்போ, இதே மாதிரி மருத்துவ இடுகைகள் வரக்கூடிய சில
புதிய தளங்களை பார்ப்போமே.

புது மலர்1, தளம்:வரசித்தன் பக்கங்கள்
இவங்க ஒரு மருத்துவர், May 2010 - இல் இருந்து எழுத
தொடங்கி இருக்காங்க.

பழைய தமிழ் படங்களில், ஹீரோ (அல்லது) ஹீரோயின்
சட்டுன்னு, எதிரி ரேஞ்சுக்கு பேசிட்டு அப்புறம் தனியா உக்காந்து
அழுவாங்க. கொசுவத்தி சுத்துன அப்புறமா தெரியும் அவங்களுக்கு
"கேன்சர்" இருக்குறதால அப்படி நடந்துகிட்டாங்கன்னு!! (தன் மேல
தன் துணைக்கு வெறுப்பு வரணுமாம்) அந்த கேன்சர் எப்படி
மனித உடம்புல வளருது, அதோட ஆரம்ப அறிகுறிகள்
என்னன்னு ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க , வரசித்தன்
பக்கங்களில்.
***********************************

புது மலர் 2, தளம்:FEEL & HEAL Physio Accu Centre
இவங்களும் மருத்துவர்தான், பிப்ரவரி 2010 - இல் இந்த தளத்தை
தொடங்கி இருக்கிறார்கள்.

"அக்குபஞ்சர்" பற்றி அனைவரும் கேள்வி பட்டிருப்போம். இதைப்பற்றிய
விரிவான தகவல்களோடு இவங்க ஒரு தொடர் எழுதுறாங்க,
அதோட சில டிப்ஸ் கொடுக்குறாங்க, ரொம்பவே சுவராசியமாய்
இருக்கு, இங்கே சென்று படித்து பாருங்களேன்.
************************************************

மேலே குறிப்பிட்ட இடுகைகள் உங்களுக்கு பயனளிக்கும்
என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.
மீண்டும் நாளை, இதிலிருந்து வேறுபட்ட பிரிவிலான (மருத்துவம் அல்லாத) இடுகைகளை பார்ப்போம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

Monday, May 3, 2010

நம்ம கடை - வலைச்சரம் 1

முதலில், எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினர்கள்:கயல்விழி, முத்துலட்சுமி,
பொன்ஸ் பூர்ணா ஆகியோருக்கும் மற்றும் இந்த ஒரு வாரத்திற்கு "பொறுமையுடன்" ஆதரவு அளிக்க போகும் "உங்களுக்கும்" என் பணிவான நன்றிகள்.

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றி விடை பெற்ற
க.நா.சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,
நன்றிகளும் உரித்தாகுக.

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு"ன்னு சொல்ற மாதிரி
நான் எழுதினது எல்லாமே எனக்கு பிடிக்கும். அதில எனக்கு
ரொம்ப பிடிச்ச சில இடுகைகள் பத்தி இன்னைக்கி சொல்றேனே.
(பயப்படாதீங்க இன்னைக்கி மட்டும்தான் என்னோட இடுகைகள் :)) )

படிக்கிற காலத்துல ரொம்ப ஆர்வமா படிப்பேன், என்னது
படிப்புல அவ்வளவு ஆர்வமானு கேட்கறீங்களா...
நான் படிப்பேன்னு சொன்னது கதை புத்தகங்களை. நாமளும்
ஏதாவது கதை எழுதணும்கிற தவிப்புல எழுதிய ஒண்ணுதான்
இந்த மறு ஜென்மம் இந்த கதை என் பேரு சொல்லுமான்னு
நீங்கதான் படிச்சு சொல்லணும்.

அப்புறம் அப்படியே உங்களோட வலைத்தளங்கள் எல்லாம்
படிக்க ஆரம்பிச்சேன், என்னாம்மா பீல் பண்ணி கவிதை
எழுதறீங்க. அத படிச்சி எனக்கும் பீலாகி நாமளும் கவிதை
எழுதியே ஆகணும்ன்னு வானவில் உணர்வுகள்ளோட யோசிச்சேன்,
அதற்கப்புறம் நாம எவ்வளவுதான் யோசிச்சாலும் கவிதை
வர மாட்டேங்குதேன்ற கவலையில காதல் போதையை கொஞ்சம்
ஏத்திக்கிட்டேன். அப்புறம் பாருங்க கவிதை அருவியா கொட்டிச்சி,
ஆதலினால் காதல் செய்வீர் !!!

இவ்ளோ தூரம் வந்து என்னோட இடுகைகளை படிக்கிற
உங்க உடல்நலம் "நல்லா" இருக்குனமுன்னு உடல்நல
குறிப்பெல்லாம் எழுதி இருக்கேன்,
இதெல்லாம் படிச்ச அப்புறம் என்னை தூக்கி எறிய வேண்டாம்
சொல்லிபோட்டேன் :))

நாளை முதல் நம்மில், சிலரின் இடுகைகளை பார்ப்போம்.

நன்றி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது