நான் கவிதை எழுத காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதி ... 7 வது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பாரதியார் கவிதைகள் கொடுத்தார்கள் ... இன்று வரை அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் பிறகு என்னை மேலும் உற்சாகப்படுத்தி எழுத வைத்தவர் என் அண்ணன் ...கவிதை எழுதுவதற்கு காதல் முக்கிய காரணமாய் அமைந்து விடுகிறது என்றே நம்புகிறேன் ... இன்று நாம் பார்க்கப்போகும் மூவரும் காதல் கவிதையால் நம்மை உருக்குபவர்கள் , சில சமயம் சோகத்தால் இதயத்தை
நனைப்பவர்கள் ...
தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த உன்
திருமண அழைப்பிதழில் ...
( ஜூன் 2010 இல் எழுதியது )
அறிமுகம் 1
என்னை தொடர்ந்து தமிழ் வலைப்பத்திரிக்கையான மூன்றாம் கோணத்தில் எழுத வைப்பவர் ... இவர் எழுதும் " வாசிக்கலாம் வாங்க"மூன்றாம் கோணத்தில் பிரபலம் ... சாதாரண கவிதைகளிலிருந்து இவருடைய எழுத்துக்கள் சற்றே மாறுபட்டிருக்கின்றன என்றே சொல்லலாம் ... இவருடைய சில கவிதைகள் சில தடவைக்கு மேல் படித்த பிறகு தான் எனக்கு புரிந்தன ...ஷஹி யின் கவிதைகளை வாசிக்கலாம் வாங்க ... இவருடைய ப்ளாக் முகவரி
http://asainila.blogspot.in
நான் ரசித்த ஷஹியின் சில கவிதைகள் ...
அறிமுகம் 2
என் கவிதைக்கு பின்னூட்டம் இட்டதன் மூலம் ஹேமாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது ... இலங்கைத் தமிழரான இவரின் எழுத்துக்களில் தமிழ் விளையாடும் ...வானம் வெளித்த பின்னும். என்கிற இவருடைய வலைத்தளத்தின் தலைப்பே கவிதை போல இருக்கும் போது கவிதைகளை பற்றி சொல்லவா வேண்டும் ? கீழே பார்க்கவும் ...
அறிமுகம் 3
- இவரும் பின்னூட்டம் மூலம் அறிமுகமானவரே ... இவருடைய கரடி பொம்மை என்கிற ப்ளாக் தலைப்பே வித்தியாசமாக இருக்கவே உள் நுழைந்தேன் ... தலைப்பு மட்டுமல்ல அவருடைய கவிதைகளும் சுவாரசியாமாகவும் , வித்தியாசமாகவும் இருக்கும் ... லாலியின் கவிதைகள் இதோ ...
-
நாளை மற்ற மூவருடன் மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
மேலும் வாசிக்க...
சினிமா எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாதகவே இருக்கிறது ... சினிமாவை பழிப்பவர்கள் கூட யாராவது ஒரு நடிக , நடிகையரை மானசீகமாக ரசிக்கிறார்கள் .. டி.வி, இணையம் , செல்போன் என்று தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இவை மூன்றையும் ஆக்ரமிக்கும் ஊடகமாக சினிமாவே இருக்கிறது ... சினிமா விமர்சனங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் மூலம் என்னை கவர்ந்த சிலரை இன்று அறிமுகம் செய்கிறேன் ...
தியேட்டர் சண்டையில்
வாயில் ரத்தம் வருத்தப்பட்டேன்
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ...
( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ )
அறிமுகம் 1
சினிமா விமர்சனங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கும் ... ஆனால் சில விமர்சனங்களில் உள்ள சில கருத்துக்களில் எங்கள் இருவரின் நடையும் ஒத்துப்போனத்தில் ஆச்சர்யமே ... இரண்டு முறை சினிமா பார்க்க என்னை அழைத்தும் இவருடன் போக முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே ...
அடுத்த முறை நிச்சயம் செல்வோம் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்கிற இவரது தளத்தை அறிமுகம் செய்கிறேன்.
அவருடைய தத்துபித்துவங்களில் எனக்கு பிடித்த சில ...
அறிமுகம் 2
பிரபலமான பதிவராக இருப்பதோடு தன் எழுத்தில் சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார் ... படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அதோடு தொடர்புடைய விஷயங்களையும் வகைப்படுத்துவதில் வல்லவர்
யுவகிருஷ்ணா ...
அவருடைய விமர்சனங்களில் எனக்கு பிடித்த சில ...
அறிமுகம் 3
தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்களையும் விமர்சனம் செய்பவர் இவர் ... விமர்சனங்களை விட கமல் பற்றி இவர் நடுநிலை தவறாமல் எழுதிய பதிவு எனக்கு பிடித்தது ...
ராஜ் அவர்களுடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில ...
நாளை மற்ற மூவருடன் மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
மேலும் வாசிக்க...
3 என்ற தலைப்பை பார்த்ததும் பட விமர்சனமோ என்று பயந்து விடாதீர்கள் ... மூன்று என்ற இலக்கம் எல்லோர் வாழ்விலும் நன்றாக பிணைந்து விட்டது ... சின்ன வயதிலிருந்தே எது செய்தாலும் முக்கா முக்கா மூணாவது ஆட்டம் என்று நிறைய பேர் கேட்டுப் பழகியிருப்போம் ... உலகின் முக்கியமான மதங்கள் மூன்று , இந்து மதத்தில் சிவன் , பிரம்மா , விஷ்ணு என்று முக்கிய கடவுள்கள் மூன்று , அதில் சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உட்பட கண்கள் மூன்று , ஆண் , பெண் , திருநங்கை என மனித இனத்தின் வகைகள் மூன்று , நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை இந்தியா வாங்கியுள்ள பதக்கங்கள் மூன்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ... அத்தோடு நான் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையும் மூன்று என்பதால் தினமும் மூவரை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்தேன் ... இதனை அறிமுகம் என்று சொல்வதை விட பகிர்ந்து கொள்ளுதல் என்றே சொல்லலாம் , ஏனெனில் இதில் பெரும்பாலானோர் உங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்கலாம் ...
தீண்டாமை பெருங்குற்றம்
தவறாக புரிந்து கொண்டார்கள்
விளைவு எயிட்ஸ் ...
( கல்லூரி காலத்தில் தினமலர் இதழில் வெளியான எனது ஹைக்கூ )
அறிமுகம் 1
உங்களில் எத்தனை பேர்
எஸ்.ரா எழுதிய " கதாவிலாசம் " படித்திருப்பீர்கள் என்று தெரியாது , ஆனால் நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் அதுவும் ஒன்று ... பாரதியார் உட்பட தமிழுலகின் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களையும் , அவர்களுடைய எழுத்துக்கள் பற்றியும் தனது அனுபவ நடையில் அருமையாக தந்திருப்பார் எஸ்.ரா ... அதே போன்றதொரு சிறப்பான பணியை இணையத்திலும் செய்து வரும் சிறப்பான வலைத்தளமே
அழியாச்சுடர்கள் ... இதை நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என்றே சொல்லலாம் .
எனக்கு அதில் இடம்பெற்றிருந்ததில் மிகவும் பிடித்த சில கதைகள்
அறிமுகம் 2
எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலைத்தளத்தில் எழுதி வருகிறோம் , ஆனால் அதில் ஏதாவதொரு தொழில்நுட்ப கோளாறு வந்தால் நாம் அனைவரும் பதறி விடுவோம் ... அந்த வகையில் எனக்கு சில பிரச்சனைகள் வந்த போது அதனை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது
ப்ளாக்கர் நண்பன்
அதிலிருந்து சில முக்கியமான பதிவுகள் இதோ :
அறிமுகம் 3
பளாக் மட்டுமின்றி கணினி , கைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை பற்றிய பதிவுகளோடு மருத்துவம் , சுற்றுலா பற்றிய தகவல்களையும் தரக்கூடியவர்
தங்கம்பழனி அவர் தளத்தில் இடம்பெற்ற உபயோகமான சில பதிவுகள்
கணினியில்டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...
நாளை மற்ற
மூவருடன் மீண்டும் சிந்திப்போம் ...
இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
Search Results
மேலும் வாசிக்க...
நான் கல்லூரி காலங்களில் படித்ததை விட கலை நிகழ்ச்சிகளுக்காக ஊர் , ஊராக சுற்றியதே அதிகம் ... திருச்சி , கோவை , பாண்டி என போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கே
மதுரை கல்லூரி சார்பில் எங்கள் அணி களத்தில் இறங்கி பரிசுகளை தட்டிச் செல்லும் ... கல்லூரி படிப்பு முடிந்தவுடன் எல்லோருக்கும் வாழ்வில் ஒரு வெற்றிடம் வரும் , எனக்கும் அதே போல வந்தது ...
சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்ற இலட்சியத்தில் சென்னைக்கு வந்திருந்தாலும் , இந்த பன்னிரண்டு வருடங்களில் அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் சொந்த வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டேன் ... ஒரு நாள் சினிமா பார்த்துவிட்டு அதை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது தான் என் நண்பன் நீ ஏன் இதை விமர்சனமாக வலைப்பதிவில் ஏற்றக்கூடாது என்று ஒரு தீயை கொளுத்திவிட்டான் ... கடந்த இரண்டு வருடங்களாக அது சினிமா விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கதை , கவிதை , அரசியல் கட்டுரை என்று
வாங்கப்ளாகலாம் என்ற வடிவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது
இந்த வருடம் நான் இயக்கிய
நல்லதோர் வீணை ... குறும்படமும் யூ டியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ... முதலில் என்னை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அதன் மூலம் எனக்கு வலைச்சரத்தை அறிமுகப்படுத்தி
யவர் ஆனந்தி ... அதன் பிறகு நண்பர் மயிலன் அவர்களும் என் பதிவுகளை அறிமுகம் செய்தார் ... எனக்கு ஆசிரியராகும் வாய்ப்பை வழங்கிய Cheena (சீனா) அவர்களுடன் சேர்த்து இந்த இருவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு என் பதிவுகளின் அறிமுகங்களோடு ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்... என் பதிவுகளை சினிமா , அரசியல் , இலக்கியம் ,விளையாட்டு என்று வகைப்படுத்தலாம் ... இந்த வரிசையிலேயே வகைகளின் முக்கியத்துவமும் அமைந்திருக்கும் ... எனக்கு பிடித்த மற்றும் நிறைய பேருக்கு பிடித்த எனது சில பதிவுகளை இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ...
தினமும் மூன்று பதிவர்கள் வீதம் மற்ற அறிமுகங்களை நாளை முதல் காணலாம் ...
இப்படிக்கு
அன்புடன் அனந்து ...
மேலும் வாசிக்க...