நகைச்சுவைப் பதிவுகள்:பதிவெழுத ஆரம்பித்த புதிதில் வெட்டிப்பயலின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு, அவரது அனைத்துப் பதிவுகளையும் புரட்டி புரட்டிப் பார்த்தேன். அதில் எத்தனையோ நகைச்சுவைப் பதிவுகளி இருந்தாலும் சில மிகவும் ரசிக்க வைத்தது.
கவுண்டமணியின் பரம ரசிகரான வெட்டி, கவுண்டரையும், செந்திலையும் கணினி துறை ஊழியர்களாக அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கும் "
கம்ப்யூட்டர்க் காரன்" தொடர் மிகவும் ரசிக்க வைத்த ஒன்று.
அதைப் போல தன் நண்பர் ஒருவரின் நகைச்சுவை அனுபவங்களை "
கோழியின் அட்டகாசங்கள்" என்று தொடராக வெளியிட்டப் பதிவுகளும் அருமை.
தான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தபொழுது, கவுண்டரைக் கொண்டு சினிமா நடிகர்களைக் கலாய்த்து ஒரு புதிய கலாய்த்தல் அத்தியாத்தையைத் தொடங்கி வைத்தார் "
கவுண்டரின் டெவில் ஷோ" என்ற தொடரின் மூலம்.
பதிவர் தம்பியின் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, அவரது சின்ன வயசு அனுபவங்களை "
வாலிப வயசு" என்ற தொடரில் குறிப்பிட்டுருந்தார். அந்த தொடரும் நகைச்சுவைப் பதிவுகளின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.
நகைச்சுவை என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பதிவர் அபிஅப்பா. ஆரம்பத்தில் அவரது பின்னூட்டங்களை சில இடங்களில் பார்த்திருக்கிறேன். திடீரென நகைச்சுவைச் சரவெடிக் கொளுத்தி பதிவுலகில் தனக்கென ஒரு பெயரை மிகவும் வேகமாக எட்டிப் பிடித்தார்.
அவரதுப் பதிவுகளில் சில
அஞ்சு ஜார்ஜும் அபி பாப்பாவும்பத்மா சும்பரமணியம் போட்டிக்குத் தயாரா? நாந்தான் பத்த வச்சேன். இன்னும் பல...
தேவின் எழுத்துக்களில் மிகவும் பிரமித்துப் போனவன் நான். அவரது நகைச்சுவைப் பதிவுகளின் நடை மிகவும் அருமையாக இருக்கும். அவரது
ஆபிஸர் தொடரோ, சங்கத்தின் கைப்பிள்ளை கலாய்த்தல் பதிவுகளோ, சிரிக்க, சிரிக்க வைக்க மட்டுமே செய்யும்.
நகைச்சுவைக்கென்றே தனியாக பதிவுகள் வெளியிட்டு வரும்
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் பதிவுகளை ஒன்றிரண்டுப் பதிவுகளைக் குறிப்பிட்டு கூற முடியாது. கூட்டுப் பதிவு என்பதால் அதில் வரும் பெரும்பான்மையானப் பதிவுகள் நகைச்சுவை மிக்கவை. அதிலும் கைப்பிள்ளையை மையமாக வைத்து வரும் பதிவுகளெல்லாம் நகைச்சுவைப் பட்டியலின் தலையங்கமாய் இருக்கும்.
நகைச்சுவை உணர்வில் பெண்களும் சலைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வரும்
பயமறியா பாவையர்கள் சங்கத்தின் நகைச்சுவைப் பதிவுகளும் படிக்கும் சில நேரத்தில் நமது மனசை லேசாக்கி விடும்.
இன்னும் ஏராளமாக நகைச்சுவைப் பதிவுகள் இருக்கின்றன். இப்போதைக்கு ஞாபகத்தில் இருந்தது மட்டுமே இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
பெண் பதிவர்கள்:தமிழ் பதிவுலகில் பரதரப்பட்ட பெண் பதிவர்கள் இருகின்றனர். அதில் சிலப் பெண் பதிவர்களின் பதிவுகளை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவற்றுள் சில.
நகைச்சுவைப் பதிவெழுதவே அவதாரம் எடுத்ததுபோல் கிட்டத்தட்ட தன்னுடைய அனைத்துப் பதிவுகளிலும் நகைச்சுவை உணர்வுகளைக் கொட்டிக் கொடுத்தவர் பதிவர் கண்மணி.
சுப்ரமணி, பிச்சுமணி, கிச்சுமணி, அம்புஜம் மாமி என்ற புதிதாக பல வேடங்கள் உருவாக்கி அவர்களை மையமாக வைத்து எழுதிய அனைத்துப் பதிவுகளும் சிரிக்க வைக்கும்.
இம்சை அரசி என்ற பெயர் வித்தியாசமாக இருக்கவே அவருடையப் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன். அதில் "
என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே" பதிவின் கடைசி வரியில் வாய்விட்டு சிரித்தே விட்டேன். கவிதை, கதை என்ற பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஒரு நாவலாசிரியர் என்பதும் பதிவுலகம் அறிந்த ஒன்று.
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் பல பேர் தமிழை மறந்து திரியும் வேளையில், மலேசியாவில் பிறந்து வளர்ந்து, தமிழில் பதிவெழுதுகிறார் மை ஃபிரண்ட். வ.வா. சங்கத்தின் போட்டிக்காக எழுதிய
தொடர் மிகவும் நன்றாக இருந்தது.
பலக் கவிதைப் போட்டிகளில் வெற்றுப்பெற்றுள்ள
வேதா கவிதைக்கென்று தனியாக ஒரு பதிவையையே உருவாக்கி எழுதி வருகிறார்.
மின்னல் வேகத்தில் பதிவெழுதும் காயத்ரி கவிதையில் மட்டுமல்ல, நகைச்சுவைப் பதிவிலும் கலக்குவார். அவருடைய
பரட்டைப் படத்தின் விமர்சனத்தைப் பார்த்தாலே தெரியும்.
யாருக்காவது பிறந்தநாள்னா, வாழ்த்து சங்கத்துல மட்டுமில்ல,
ஜி3யுடைய பதிவுலையும் நீங்க வாழ்த்துப் பதிவு பாக்கலாம்.
இதயம் தொட்ட சிறுகதைகள்:பத்திரிக்கைகளில் வரும் சிறுகதைகளையும் முஞ்சும் பல சிறுகதைகளை தமிழ் பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றுள் இப்போது என் நினைவில் வந்த சில.
கப்பிப் பயலின் எழுத்தில் ஒரு பழுத்த எழுத்தாளனின் நடைத் தெரியும். அவரின் பல சிறுகதைகளை ரசித்துப் படித்துள்ளேன். அவற்றும்
இறப்பும் இறப்பு சார்ந்ததும் கதை கண்களங்க வைத்த ஒன்று.
இதயம் தொடும் பல சிறுகதைகளை பதிவர் தம்பி எழுதியுள்ளார். அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்ததே, சின்ன சின்ன விசயங்களையும் விவரிக்கும் அவரது திறன். அவரது
மாணிக்கம் பொண்டாட்டி,
அன்பின் நிராகரிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்.
அப்பாவின் காதலை மையமாக வைத்து எழுதிய இம்சையரசியின்
காலம் கரைந்தாலும் கதையும் இதயம் தொடும் ஓர் அருமையான கதை.
இறந்து போன ஓர் சொந்தத்தின் நினைவுகளை எடுத்தியம்பும் வகையில் ராம் எழுதிய
மாணிக்க மலர் சிறுகதை.
இவ்வளவுதாங்க இப்போதைக்கு ஞாபகத்துல இருக்குது. பதிவுலகோடு தற்போது அதிக தொடர்பில்லாத காரணத்தால் நிறைய பதிவுகள் நினைவில் இல்லை. அதனால சின்னப் பையன்னு மன்னிச்சு விட்டுடுங்க. :)