07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 19, 2008

படித்ததில் பிடித்தவை 1

வலைச்சரத்தில் ஒரு இடுகை இடுவதை விட நமது பதிவில் நாம் எடுத்துக்கொண்ட விதயத்தை விவரிப்பது எளிதாக தோன்றுகிறது. நினைவிலிருக்கும் ஆக்கத்திற்கான இணையத்தொடர்பை கண்டுபிடித்து கோர்த்து எழுதுவதற்குள் வேறொரு இணைய கோர்ப்பில் வேறெங்கோ சென்றுவிடுகிறோம். முந்தைய ஆசிரியர்களின் பொறுமையையும் முனைவையும் இன்றுதான் புரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் எனது நினைவுகளில் சிக்கிக்கொண்ட சில பதிவுகளை இன்று பதிகிறேன்.

காசி ஆறுமுகம் அவர்களை தமிழ்மணத்தினை ஆக்கியவர் என்றளவிலே அனைவரும் அறிந்திருப்பார்கள். அவரது எழுத்தாற்றலின் முழு திறன் அவரது வலைப்பதிவில் இன்றைய பொறுப்புகளால் வெளிப்படுவதில்லை.அவரது முன்பதிவுகளில் நுட்பங்களைப் பற்றி அழகான தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் விக்கியில் இடம் பெறத் தகுந்தவை.அவரது தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள் , என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு ஆகியன தமிழ்மணத்தில் பதிவுகள் கீற்றில் உள்ளன. படக்கோப்புகள் குறித்த அவரது கணினியில் கையாளப்படும்படங்கள் கட்டுரை மிகவும் எளியமுறையில் நல்ல விளக்கம் வழங்குகிறது. அவர் வலையில்லா பின்னல் என்ற தொடர் WiFi பற்றி விளக்கியது. தவிர அவரது சமையல் குறிப்புகளும் நன்றாக இருக்கும். பான்கேக் செய்வது பற்றி அவர் இட்டிருந்த ஒரு இடுகையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்பிள்ளை சமையல் பற்றிய இந்த இடுகையைப் படியுங்கள்.

உருப்படாதது நாராயண்:இவரது நட்சத்திரப் பதிவுகளின்போது அறிமுகமானவரின் எழுத்து என்னை மிகவும் ஈர்த்தது.பன்முகத்தன்மையோடு சமூகம், நுட்பம், அரசியல்,சினிமா என எல்லா துறைகளிலும் சிறப்பாக எழுதக்கூடியவர். இவரது சில பதிவுகளை இங்கு சுட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவின் மென்பொறியாளர்களின் அபரிமித வளர்ச்சியை யொட்டி எழுந்த விவாதங்களின் பின்னணியில் சமச்சீரின்மை குறித்த இவரது பதிவு தொடர் பிரச்சினையின் பலபக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது.....சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்

இவரது பதிவுகளில் சில:
சிலுக்கு சுமிதா புராணம்
கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1

பெனாத்தல் சுரேஷின பிளாஷ் படங்களும் அங்கதப் பதிவுகளும் அனைவராலும் விரும்பப்பட்டாலும் எனக்கு அவரது இந்த Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05 பதிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

டிபிஆர் ஜோசஃப் சாரின் ஆற்றொழுக்கான நடையில் அவரது திரும்பிப் பார்க்கிறேன் தொடர் ஒரு வங்கியில் அவரையடுத்து நாம் பணிசெய்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.அடுத்து என்னவரப்போகிறது என வார இதழ்களில் வரும் நாவல்களைப் போன்று விறுவிறுப்பாக எழுதிவந்தார். அவரது சூரியன் கதைத்தொடரும் மனித இயல்புகளை மிக அழகாக வெளிக்கொணர்ந்தது.

இனி அடுத்த தொகுப்பை நாளை காணலாம்...

3 comments:

  1. //நினைவிலிருக்கும் ஆக்கத்திற்கான இணையத்தொடர்பை கண்டுபிடித்து கோர்த்து எழுதுவதற்குள் வேறொரு இணைய கோர்ப்பில் வேறெங்கோ சென்றுவிடுகிறோம்.//

    இதுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கு. உங்க கூகுள் ரீடரில் குறிச்சொல் இட்டு வைச்சிருக்கீங்க தான. அதுல ஒவ்வொரு குறிச்சொல் கீழும் நட்சத்திரக் குறி இட்டு வைச்சிருக்க இடுகைகளைத் தொகுத்து தந்தாலே பத்து வாரத்துக்கு நீங்க வலைச்சரம் தொடுக்கலாம் :)

    ReplyDelete
  2. யாராவது ஒரு வலைச்சர ஆசிரியர் இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டியின் "அறிக்கை"யைப் போல் சுவாரசியமான குறிப்புகள் / மிரட்டல்கள் / அறிவிப்புகளைத் தொகுத்துத் தரலாம் :)

    ReplyDelete
  3. வருகைக்கும் குறிப்புகளுக்கும் நன்றி ரவிசங்கர்.

    மறுமொழிப்பெட்டியின் "அறிக்கை" பல வாரங்களாக இருக்கின்றபோதிலும் இப்போதுதான் குவியம் பெற்றுள்ளது. பாஸ்டன் பாலாவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொறுப்பாசிரியரோ தொகுப்பாசிரியரோ தான் விளக்கமளிக்க வேண்டும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது