ஆன்மீகமும் ஆசுப்பத்திரியும்.. கூடவே மயிலை மன்னாரும்
நானும் நிறைய புதிய பதிவுகளைக் கண்டுகொண்டேன் . பாசமலர் பூக்கடைக்கு வாருங்கள் ன்னு சொன்னாங்க அது தவறு .....பூக்கடையில் தொடுத்த சரம் இல்லை இது.....பாசமா அம்மா சைக்கிள் பூக்காரரிடம் படி அளந்து பூவாங்கி நெருக்கக்கட்டிய வீட்டுச்சரமாக்கும்.. எனக்கு தலைகொள்ளாமல் பூவச்சு கண்ணாடிப்பாக்கற பிரம்மை இப்ப.. ஒரு சம்படத்துல போட்டு பத்திரமா பிரிட்ஜ்ல வச்சு திருப்பி வச்சிக்கலாம் ..அதாங்க திரும்பவும் ரெண்டு தடவை இணைப்புகளை கிளிக் செய்து படிச்சுக்கலாம்.. :) நன்றி பாசமலர்.
\\பெயருக்கு ஏற்ப மலர்ச் சரங்களை அள்ளித் தொகுத்து, பலவித மலர்களையும் மணம் பரப்பச் செய்து, ஒரு அழகான நறுமணமிக்க மலர்த் தோட்டத்தையே உருவாக்கி, மனிதனின் அனைத்து உணர்வுகளையும் மதித்து, பல பதிவுகள் கொடுத்து மணமுடன், மலர்க் கொத்துடன் விடை பெறும் பாச மலருக்கு நன்றிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள்
இலக்கியம், தகவல்கள், வளைகுடா, புகைப்படம், வித்தியாசம், கதைகள், அனுபவங்கள், கவிதைகள், சோகம், நகைச்சுவை, உறவுகள் எனத் தலைப்பினைத் திட்டமிட்டு, அதற்குரிய பதிவுகளைத் தினந்தேடி, படித்துப் பொறுக்கி, அழகான பூக்களோடு ஒப்பிட்டு, மதிப்பான முன்னுரையுடன் அழகாகப் பதிந்தது பாராட்டத்தக்கது.கொடுத்த பொறிப்பினை இவ்வளவு கவனத்துடன், ஈடுபாட்டுடன், சிரமத்துடன், மன மகிழ்வுடன் செய்தது உண்மையிலேயே ஒரு அரிய செயல்.//இது சீனா சார் பின்னூட்டமா எழுதிய வரிகள் இதனை இங்கே திருப்பி கொடுத்திருக்கிறேன்..
---------------------------------------------------------------
வி. எஸ். கே ..ஆத்திகம் என்னும் பதிவு..""நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!"" தலைப்பிலேயே ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.. மயிலை மன்னாரின் குரலில் குறள்களுக்கு விளக்கமளிக்கிறார்.... திருப்புகழுக்கும் விளக்கமளித்துவருகிறார். அம்மன் பாட்டு முருகனருள் விக்கிப்பசங்க பதிவுகளிலும் இணைந்து எழுதுபவர்..அவரை தான் ரசித்த பதிவுகளை நமக்கு அறிமுகம் செய்து இவ்வார வலைச்சரத்தை தொடுத்தளிக்க வரவேற்போம்.
|
|
அழைப்புக்கு ரொம்ப நன்றி!
ReplyDeleteமத்தவங்க தொடுத்ததையெல்லாம் பார்த்தா, பிர்ரமிப்பா இருக்கு!என்னால என்ன பண்னமுடியும்னூ இதை என் கையில் கொடுத்திருக்காங்கன்னு புரியலை! எல்லாம் தலைவிதின்னு சும்மாவா சொன்னாங்க! அனுபவியுங்க!
:)))))
வணக்கம் வி.எஸ்.கே. சார்,
ReplyDeleteவாழ்த்துகள்..
//.....பாசமா அம்மா சைக்கிள் பூக்காரரிடம் படி அளந்து பூவாங்கி நெருக்கக்கட்டிய வீட்டுச்சரமாக்கும்.. எனக்கு தலைகொள்ளாமல் பூவச்சு கண்ணாடிப்பாக்கற பிரம்மை இப்ப.. ஒரு சம்படத்துல போட்டு பத்திரமா பிரிட்ஜ்ல வச்சு திருப்பி வச்சிக்கலாம் //
ReplyDeleteநல்லாயிருக்கு :))))
எனது ஆஸ்தான ஆசான் வீ.எஸ்.கே ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் வீ.எஸ்.கே சார் ;)))
ReplyDeleteஅருமை நண்பரே !! வீஎஸ்கே !! வலைச்சர ஆசிரியரானதற்கு நல் வாழ்த்துகள்.தொடர்க சரத்தினை. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ReplyDelete