07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 25, 2008

காதல் என்ற தலைப்பின் கீழ் எழுதப்படும் எதையும் கவிதை என்று சொல்லலாம்

அணு ஆயுத ஒப்பந்தம், நந்திகிராம், ஈழத்தமிழர்கள், பேரரசுவின் பேட்டி, ஹவுஸ்லோன் பாக்கி, அடுத்த உலகக்கோப்பை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி, தசாவதாரம் ரிலீஸ் தள்ளிவைப்பு, சமஸ்கிருதம் தேவ பாஷையோன்னோ, சார் சாப்ட்டு நாலு நாள் ஆச்சு சார், ஜெயமோகன் மன்னிப்பு கேட்க வேண்டும், சுஜாதா செத்துட்டார், தமிழக பட்ஜெட்...........

ஒவ்வொரு நாள் விடியலிலும், உட்கார்ந்து அழவும், கோபப்படவும், காறி உமிழவும், அய்யோ பாவம் என்று பரிதாபப்படவும் ஏதேனும் சில நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவிலும் அடிக்கடி சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். துன்பத்தை நினைவுபடுத்தும், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நடுவில் சிலீரென்று மனதை வருடிச் செல்லவும், அடுத்த நாளுக்கான நமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவும், இனி வரும் நாட்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும்,

"இன்னிக்கு ஃபுல்லா எனக்கு நீ ஒரு மெசேஜ் கூட அனுப்பலை. போடா உன்கிட்ட பேச மாட்டேன் போ"

"சீக்கிரம் குட் நைட் சொல்லு, நான் தூங்க போகணும்"

"நைட் 10 ஆச்சு. இன்னுமா ஆஃபிஸ்ல இருக்க. சரி வீட்டுக்கு வந்துட்டு சொல்லு.
இல்லைமா நான் வர லேட் ஆகும். நீ தூங்கு.
...
...
...
ஹல்லோ சார் சொல்றதை மட்டும் செய்யுங்க. நாங்க முழிச்சுக்கிட்டு இருந்தா ஒண்ணும் குறைஞ்சு போய்ட மாட்டோம்."

"டேய் டேய் டேய் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு அந்த பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுடா... என் செல்லம் இல்லை"

"சரி நேரமாச்சு. இதே லேட் நீ தூங்கு. வெச்சுடட்டுமா.

ஹ்ம்ம்ம்.குட் நைட்.

ஏய் ராட்சஸி. இன்னும் ஒரு மாசத்துலதான் கல்யாணம் நடக்க போகுதே.
இப்பவாவது குட் நைட்டுக்கு பதிலா ஒரு முத்தம் கொடுத்து வெக்க்கறியா. கடன்காரி.

ஹ்க்கும் நான்தான் வெக்கப் படறேன்னு தெரியுது இல்லை. நீதான் கொடுத்துட்டு வெக்கறது.
போடா லூசு."

இது போன்ற சில உணர்வுகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காதல் என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால் நம்மில் பலர் பைத்தியமாகி இருக்கக் கூடும். அஃப்கோர்ஸ் காதலால் பைத்தியமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றோம். இருப்பினும் இந்த மூன்றெழுத்துச் சொல் நம் வாழ்விலும், உடலிலும் ஏற்படுத்தி இருக்கும் ரசாயன மாற்றங்களை பட்டியலிட்டு கூற முடியாது. அதைவிட மிக முக்கியமான ஒன்று தமிழ் சினிமா நாசமத்துப் போயிருக்கும். (இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்காதீர்கள்)

சங்க கால இலக்கியங்கள் பல வகையான காதல்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. களவொழுக்கத்தையும் கூட காதலில் வகைப்படுத்தி பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறுந்தொகை, வள்ளுவனின் காமத்துப்பால், ஆண்டாள் என்று எல்லாரும் காதலைக் கொண்டாடித்தான் இருக்கிறார்கள்.

"உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே"

இதைப் படித்ததற்கப்புறம் ஆண்டாளின் அனைத்து பாசுரங்களையும் வாசித்துத் தள்ள வேண்டும் என்று உன்மத்தம் கொண்டுத் திரிந்திருக்கிறேன்.

எந்த காலத்திலும் காதல் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சங்ககால கவிதைகளுக்கும் சற்றும் குறைவில்லாது இப்போதும் காதலைப் பற்றிக் கவிதைகள் அதே அழகுணர்ச்சியுடன், இன்னும் பல பரிணாமங்களுடன் வலையுலகில் ஒரு இளவரசியைப் போல ஏகபோகமாய் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் இவர் ஞாபகம் வராமல் இருக்காது என்று சொல்லுமளவுக்கு சராமரியாக காதலைப் பற்றி எழுதிச் சென்றிருக்கிறார் அருட்பெருங்கோ. இவரது கவிதைகளில் சிறந்த கவிதைகளை எடுத்துக் காட்ட விரும்பி தேடிக் களைத்துப் போய் விட்டேன். பார்த்தீபன் தனது கவிதைகளில் சொல்லி இருப்பார். "இந்த மூங்கில் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?" என்று. ஆனால் இவரது மூங்கில் காட்டில் எல்லா மூங்கில்களுமே புல்லாங்குழலாய்த்தான் இருக்கின்றன.

காதலைப் பற்றி எழுதி இருக்கும் கவிதைகள் எல்லாமே தானே அழகு பெறுவது போல, முத்தத்தைப் பற்றி எழுதும் எவையும் அழகாகவே இருக்கின்றன. இதற்குக் காரணம் நிறைவேறா பாலின ஏக்கமா? இல்லை இயல்பாய் நமக்குள் ஒளிந்திருக்கும் ரசனையுணர்ச்சியா என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள நேரிடுகிறது. கோபாலின் நித்தம் ஒரு முத்தம் முத்தத்தின் சுவையை நமக்கு அழகாய் சொல்லி இருக்கிறது.

"காதலைப் பற்றி எழுதுகிறவர்கள் எல்லோரும் கவிஞர்களாய் மட்டுமே இருக்கிறார்கள். வாசிப்பவர்கள்தான் காதலர்களாய் இருகிறார்கள்" என்ற வார்த்தை எங்க ப்ரியனுக்குப் பொருந்தாது. தலைவர் தனது வலைப்பூ முழுதும் காதலை தோரணங்களாய்த் தொங்க விட்டிருக்கிறார்.

"காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!"

"மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!"

"விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!"

இந்த மூன்றுக் கவிதைகளையும் பார்த்து விட்டும் நீங்கள் ப்ரியன் தளத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால் உங்களிடம் ஏதோ கோளாறு :) என்று நான் அர்த்தப் படுத்திக் கொள்வேன்.

நவீன் ப்ரகாஷின் கவிதை வரிகளை ரசிப்பதா அல்லது அவரது கவிதைப் படங்களில் உள்ள குறும்புத்தனங்களை, விடலைத் தனங்களை ரசிப்பதா என்ற குழப்பம் ஒவ்வொரு முறை அவரது பதிவிற்கு போகும் போதும் எனக்கு ஏற்படும். மனுஷன் சும்மா பின்னிப் பெடலெடுத்திருக்காரு. இவரது கவிதைகளை படித்தால் எவருக்கும் தனது வயதில் ஒரு 10 குறைந்துவிட்டாற் போன்று ஓர் உணர்வு தோன்றுவது சர்வ நிச்சயம்.

"பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !"

"ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?"

"இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?"

ப்ராக்டிக்கல்லி ஒரு அட்வைஸ். உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் சண்டையா? கவிதைகளுக்கு நடுவே பயங்கரமா டிப்ஸ் கொடுத்திருப்பாரு மனுஷன். உபயோகப் படுத்திக்கோங்க. நவீன் வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் தொண்டு.

சேவியரின் கவிதைகள் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே படித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அவருடைய எழுத்துக்கள் இன்று பல தளங்களில் இயங்க ஆரம்பித்து விட்டாலும் அவரது சில கவிதைகள் ரம்மியமாய் நம் முகம் வருடிச்செல்லும். அந்த வகையில் அவரது முத்தக் கவிதைகள் இதோ.

நித்யகுமாரன் காதலை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது அவரது சில இடுகைகளைப் பார்க்கையில் தெரிந்து விட்டது. அவரது இந்த காதோரக் கவிதைகள் சிறியதாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே சாம்பிள்தான். இதில் நான் காதல் கதைகள் எழுதுபவர்களை சேர்க்கவே இல்லை. சேர்த்திருந்தால் உண்மைத்தமிழனை தோற்கடித்த நந்தா என்ற தலைப்பில் லக்கி நாளைக்கு ஒரு பதிவு போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்பதால் இதனுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனாலும் இன்னும் ஒரு முழு திருப்தியை அடையவில்லை எனது மனம். எதையோ மறந்து விட்டாற்போன்று ஏதோ ஒன்று இந்தப் பதிவில் நெருடத்தான் செய்கிறது. அது சரி காதலைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா என்ன????

16 comments:

  1. கவிதாயினிகள் சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    :))))))

    ReplyDelete
  2. காதலுக்கும் கவிதாயினிகளுக்கும் என்ன எழவுலே தொடர்பு? எதுக்கு கண்டனம்?
    மோகனனுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன் :-))

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  3. நான் விரும்பி படிக்கிற பல பெண் பதிவர்கள் பலர் காதல் கதைகளில்தான் பட்டையைக் கிளப்புறாங்க.

    அது மட்டுமில்லாமல் நான் இங்கே சுட்டிக் காட்டி இருப்பவை எல்லாமே அழகியல் சம்பந்தப் பட்ட காதல் கவிதைகள் என்று சொல்லலாம். எதிர் அழகியல் சம்பந்தப்பட்ட காதல் கவிதைகள்னு போனால் அதுக்கும் ஒரு பெரிய்ய லிஸ்ட் இருக்கு. வேதாவின் சில கவிதைகள், காயத்ரியின் சில என்று உதாரணங்களைச் சொல்லலாம்.

    கதை என்று எடுத்துக் கொண்டால் இம்சை அரசி, திவ்யா இப்படி சிலர் ரவுண்டு கட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால உங்கள் கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கோங்க. இல்லைன்னா ஜெயமோகனை தள்ளிவெச்ச மாதிரி உங்களையும் நாங்க தள்ளி வெச்சுடுவோ. இப்போ எல்லாம் அதுதான் ஃபேஷனாமாம்.

    ReplyDelete
  4. நந்தா,

    //அதனால உங்கள் கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கோங்க.//

    இதெல்லாம் பதிவில் சொல்லியிருக்கணும், ஆணாதிக்கவாதி அண்ணாச்சி. :)

    ஆண்களுக்குப் பதிவு பெண்களுக்கு பின்னூட்டமா நல்லாயிருக்கு உங்க சமநிலை. :))))))))))))))))

    ReplyDelete
  5. கவிதையைபோலவே
    கவுஜைக்கு இடமுண்டா?
    அப்படியென்றால்
    மொழிபெயர்ப்பு கவிதைக்கெல்லாம் இடமுண்டா நந்தா அவர்களே.

    ReplyDelete
  6. மொத வரியிலேயே பேரரசுவின் பேட்டின்னு இருக்கறதை பாத்ததும் செம காண்டாயிட்டேன். நல்ல வேலையா காதல், முத்தம் அப்படின்னு போனதால கொஞ்சம் மனசு ஆறுச்சு.

    பயமுறுத்தாதீங்கப்பா! :)

    ReplyDelete
  7. எலேய் மக்கா எல்லாம் ஒரு க்ரூப்பாதான்யா அலையறீங்க. மோகனா எனக்கு அதே பேரா?? வேற நல்ல பேரா கொடுங்கப்பா.

    கதிர் அப்படியே கவுஜையை லிஸ்ட் பண்ணாலும் டம்பி, டும்பி வகை கவுஜைகளை எல்லாம் பட்டயலிட மாட்டாது. அவை எல்லாம் காலத்தால் அழியாதவை.

    ReplyDelete
  8. காதல் கவிதைகள் என்னும் மலர்களால் தொடுக்கப்பட்ட கவி மணம் வீசும் வலைச்சரம். நுகர நுகர மகிழ்வைத்தரும் இச்சரம் ஒரு பொற்சரம்

    ReplyDelete
  9. மோகனை வழிமொழிகிறேன்,மோகனின் கண்டனத்திற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாச்சிக்கு எனது கண்டனங்கள் (ஸ்ஸ்!! )

    எலே நந்தா எத்தன பசங்க காதல் கவுஜ எழுதுனாலும் ஒரு பெண் எழுதுறாமாதிரி வருமாலே??? பெண்ணீய வியாதின்னு சொல்லிட்டுத் திரியுற ஏன்யா இந்த பாராபட்சம் :D

    ReplyDelete
  10. ///எத்தன பசங்க காதல் கவுஜ எழுதுனாலும் ஒரு பெண் எழுதுறாமாதிரி வருமாலே??? //

    ஏன் 'ஜொள்ள' மாட்டீங்க?

    ReplyDelete
  11. அய்யனாரே கோர்த்துட்டு வேடிக்கை பார்க்கறதுனா மட்டும் எங்க இருந்துதான் வருவீங்களோ தெரியாது. கரெக்டா ஆஜராய்டுவீங்களே.

    பார்த்துக்கோ ராசா சென்னை பக்கம் வந்துட்டுதான் நீ திரும்பி வண்டி ஏறுவ. உன்னை எல்லாம் நாங்க தனியா ஆளு வெசசு அடிக்க தேவையில்லை. நீயே அதுகு ஏற்பாடு பண்ணிக்கிட்ட. பாத்துக்கோம்மா. ஏதோ ஹேமா, பனோரமா ராதிகான்னு புலம்பிட்டு திரியறான்னு ஒத்தை வார்த்தை சொல்லிப்புட்டா போதும். நீ காலி. வசதி எப்படி????

    ReplyDelete
  12. //ஆசிப் மீரான் said...
    ///எத்தன பசங்க காதல் கவுஜ எழுதுனாலும் ஒரு பெண் எழுதுறாமாதிரி வருமாலே??? //

    ஏன் 'ஜொள்ள' மாட்டீங்க?//

    :))))

    ஜொள்ளுக ஜொள்ளின் ஜொள்ளற்க
    ஜொள்ளை துடைத்தப்பின்

    ReplyDelete
  13. //நான் விரும்பி படிக்கிற பல பெண் பதிவர்கள் பலர் காதல் கதைகளில்தான் பட்டையைக் கிளப்புறாங்க.
    //

    http://suduvanam.blogspot.com/

    ReplyDelete
  14. நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை வலைப்பூக்களும் என் விருப்பப் பட்டியலிலும் உள்ளவை. அருட்பெருங்கோ,ப்ரியன்,சேவியர் இவர்களின் தளங்களுக்கு எனது வலைப்பூவில் சுட்டி இணைத்திருக்கிறேன்.நவீன் ப்ரகாஷின் கவிதைகளும் அதற்கு அவர் தெரிந்தெடுக்கிற படங்களும் அருமையாக இருக்கும்.நித்திய குமாரன் புதிய பதிவராக இருப்பினும் ஆரம்பத்திலேயே அசத்துகிறார்.
    காதல் கவிதைகளுக்கு சரியான வலைப்பூக்களைத்தான் அடையாளம் காட்டியுள்ளீர்கள்.
    உங்களின் வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகள் நந்தா..!

    ReplyDelete
  15. சரத்தை நன்றாக கட்ட ஆரம்பித்திருக்கீங்க நந்தா பாராட்டுக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது