வலைச்சரத்தில் மதுரை மல்லி மணம்
போனவாரத்தில் மிகவேகமாக ஆரம்பித்து இணையத்தொடர்பு பிரச்சனையில் தடாலென முடித்துவிட்டு போனார் அபி அப்பா.. பிறந்தவீட்டுப்பெருமை ரொம்பவே அருமை. மகளிர் பிரச்சனை நல்லதொரு தொகுப்பு.. இசைப்பதிவும் , நச்சென்று பத்து சுட்டிகளும் என்று குறை ஒன்றும் இல்லை அபி அப்பா.. ... நீங்கள் நீளநீளமான பதிவுகளாக வித்தியாசமான பதிவுகளாக எங்களுக்கு இணைப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.. நீங்கள் நூலகத்தில் சேர்த்து மட்டும் வைக்காமல் நன்றாகப்படியுங்கள்.. தொடர்ந்து சேர்த்து வையுங்கள். மிகவும் நன்றி.. .
--------------------------------------------------------------
அடுத்து இந்த வாரம் நம்முடன் தன் விருப்பப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள வருபவர்... மதுரை என்றால் மல்லி மலர் இவர் மதுரையிலிருந்து வந்த பாசமலர்.. இவரின் பெட்டகத்தில் நிறைப்பது சுரைக்காய் , ஏட்டுசுரைக்காய்.. அப்பறம் சுரைக்காய் கூட்டாம்.. அப்படி சொல்லிக்கொண்டாலும் நல்லதை தேடி கண்டு கொண்டு தான் நிறைக்கிறார் .. தன் பெட்டகத்தில்.. மதுரைப்பதிவர்கள் இணைந்து நடத்தும் பதிவிலும் உறுப்பினர்..பேரண்ட்ஸ் கிளப் என்னும் குழுவில் இணைந்து குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல கருத்துக்களை எழுதி வருபவர். நிறைய பதிவுகளை வாசித்து தன் கருத்துக்களையும் நல்ல முறையில் பதிவு செய்பவர்.. எனவே அவர் ரசித்த பதிவுகளின் தொகுப்பை இவ்வாரம் வலைச்சரமாக்குவார்.
|
|
நல்வரவு (பாச) மலரே.
ReplyDeleteநன்றி துளசி மேடம்..
ReplyDeleteஆஹா...
ReplyDeleteஇந்த வாரம் எல்லாம் எங்க ஆளுங்களா...
தமிழ்மண நட்சத்திரம் என்னோட ஜீனியர்...
வலைசர ஆசிரியர் எங்க ஊரு அம்மணி...
அசத்துங்கப்பா.....
வாழ்த்துக்கள் பாச மலர்.
ReplyDeleteசொக்கருக்கும் புதுகைத் தென்றலுக்கும் நன்றி..
ReplyDeleteமதுரை மல்லி மணம் வீசட்டும்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...பாச மலரே.. :)
நல்வரவு 'பாச'மலர் அக்கா.
ReplyDeleteமதுரை மல்லி என்று தலைப்பைப் படித்தவுடன் ஒரு திடுக்கிடல். எந்த மல்லியைச் சொல்கிறார்கள்? என்னிடம் யாருமே வலைச்சரத்தைப் பற்றி சொல்லவில்லையே? என்று. உள்ளே வந்து பார்த்தபின்னர் தான் பாசமலர் தான் அந்த மலர்களின் அரசி மல்லிகை என்று புரிந்தது. :-)
ReplyDeleteவாங்க பாசமலர் அக்கா, நல்லா இருக்கியலா, வந்து மலர் தொடுங்க! என்னை போல நெட்டு சொதப்பாமல் இருக்க மதுரை மீனாட்சி தான் காப்பாத்தனும்:-))
ReplyDeleteநன்றி டிபிசிடி,சிவா,குமரன்..அபி அப்பா..
ReplyDeleteவாழ்த்துக்கள் பாச மலர்.
ReplyDeleteநன்றி பிரபா..
ReplyDeleteநன்றி டாக்டர்..உங்களுக்கு இருக்கும் குறைவான நேரத்தில் பதிவிடுவதே பெரிய வேலைதான்..உங்கள் அனுபவப் பகிர்வுகள்தான் எத்தனை செய்திகள் கூறுகின்றன! அதைவிடா இந்தச் சரம்?!
ReplyDeleteமலர், நல்வரவு - பணிச்சுமையிலிருந்து சற்றே விலகி சரத்த்னைச் சுவைக்க வந்துள்ளேன்.
ReplyDelete