துளசி கோபால்:துள்சி என்று என்னால் அன்போடு அழைக்கப்படுபவர். கையில் மயிலிறகையே குச்சியாக
வைத்துக்கொண்டு வலையுலகின் மாணவர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர். அன்பான அதேநேரம் கண்டிப்பான 'டீச்சர்'
இவர் வகுப்பில் ஒரு நாளாவது முதலாவது பெஞ்சில் அமர வேண்டும் என்று முயற்சிக்கிறேன்,
முடியலையே!! 'மீ த ஃப்ஸ்ட்'னு ரெடியா பின்னோட்டம் போட்டு வச்சிருப்பாங்க போல.
படிக்கிறாங்களோ இல்லையோ இதை மட்டும் போட்டு விட்டு க்ளாசை விட்டு வெளியேறி
விட்டு பிறகு சாவகாசமாக வந்து படிப்பார்கள்.
அனேகமாக முடிந்த வரை இவரது எல்லாப் பதிவுகளும் படிச்சிருக்கேன். நியூஸிலாந்தின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் நம்மையும் கையைப்பிடித்து கூட அழைத்துக்கொண்டு போவது போல் ப்ரம்மை ஏற்படும் படி எழுதிச்செல்வார். அழகழகான பொருட்கள், செடிகள், மலர்கள்,
காய்கனிகள் எல்லாம் அறிமுகப்படுத்துவார். 'பூண்டு' என்றால் என்னை நினைக்காமல் இருக்கமுடியாது துளசியால்!!!!
ஆரம்பத்தில் பின்னோட்டங்கள் ரொம்ப
பளபளப்பாக(பாலீஷ்டாக) யாரையும் சலனப்படுத்தும் படியில்லாமல் வெகு ஜாக்கிரதையாக
கமெண்டுகள் போட்டுக்கொண்டிருந்தேன். துளசியின் பின்னோட்டங்கள் படித்த பின்தான்
அனைவருமே ஜாலியாக கும்மியடிப்பவர்கள் என்று புரிந்து நானும் 'வடம்' விட ஆரம்பித்தேன்.
நான் மிகவும் ரசித்த பதிவு....'வீடு 'வாவாங்குது' கொத்தனார்கள் இலவசமாகக் கிடைக்காத
ஊரில் தாங்களே வீடு கட்டிய விதத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.படித்துப்பாருங்கள்.
சாஸ்தரத்துக்கு ஒன்று.
வீட்ட சுத்திப் பாருங்கவல்லிஸிம்ஹன்என் பதிவு ஒன்றில், 'எந்த ஊர் நானானி நீங்க?'என்று ஓடோடி வந்து அன்பாய் அணைச்சுக்கிட்டவர். அதே அன்பு இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரவேண்டும்.
துளசி பின்னோட்டங்களில் ஜாலியான கலாய்ப்பு இருக்குமென்றால் இவரது பின்னோட்டங்களில்
அன்பும் பாசமும் வழியும். 'என்னப்பா...நல்லாருக்குப்பா..என்று கான்வெண்ட் பாஷையை
நினைவூட்டியவர். வருடத்தில் ஆறு மாதங்கள் அமெரிக்கா, துபாய், சுவிஸர்லாந்து என்று
இவரும் நம்மைக் கூட்டிப்போவார்.
திருச்சி ஏர்போர்ட் ரோட்டில் கார் ஓட்டிய மகாத்மியத்தை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.
பிபீம்பிபீம்துவைக்கிற மிஷினில் துவைக்கப் போய் தரையை துடைத்த கதையை நொந்த நூலாக
சொல்லிய விதம் வயிறு வலிக்க சிரிக்கவைக்கும்.
நீங்களும் சிரிங்கதன் பெற்றோர் திருமணம் எப்படி பெண் பார்ப்பதில் ஆரம்பித்து திருமணம் வரை ரசித்து
எழுதியிருப்பார். மாமியார் ஸ்தானம் எவ்வளவு அவஸ்தையானது என்று புரியும்.
அப்பாஅம்மாகல்யாணம் கீதா சாம்பசிவம்வலையுலகின் தலைவி என்று அழைக்கப்படுபவர்.
இவரது எண்ணங்கள் எல்லாம் தெய்வங்களைச் சுற்றியே இருக்கும் என்பதற்கு இராமாயண
காவியத்தையும் ஸ்ரீஐயப்பன் கதையையும் முழுவதும் பதிவுகளிலேயே சொல்லியிருப்பது.
பின்னோட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் 'கடமையைச் செய், பின்னோட்டங்களை
எதிர்பார்க்காதே' என்ற கண்ணோட்டத்தோடு பதிவிட்டுக்கொண்டேயிருப்பார். நானும் மேலோட்டமாக பார்ப்பேன், பின்னோட்டங்கள் போட்டதில்லை என்பதை தயக்கத்தோடு
சொல்லிக் கொள்கிறேன். ஐயப்பன் பூஜைக்கு அழைத்தார். என்னால் போகமுடியவில்லை.
ரொம்ப வருத்தம்.
கீதாம்மா..!என்றதற்கு 'அம்மாவா..? என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டுவிட்டார். அதுமுதல்
கீதாதான்! ஆமாம்! அவரோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் காதிலிருந்து வரும் புகையும் ரொம்ப
பிடிக்கும்.
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு ஒரு பதிவு. ஏன் கார்த்திகைமாதம் வீடுகளில் தீபம் ஏற்றுகிறோம் என்று தெரியாமலேயே ஏற்றிக்கொண்டிருகும் நமக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பாருங்க//இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். // இப்ப காரணம் புரிகிறதா?
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? என்பது போல ஆறு மாத அமெரிக்க
வாசம் முடிந்து ஊர் திரும்பியவுடன் வீடு இருக்கும் 'கந்தரகோளத்தை'.....அந்த அவஸ்தையயும் அதை சரிசெய்த கதையயும்.....சிரமத்தை சிரிக்க சொல்லியது ரசிக்க
வைத்தது. காரணம் அதை ஓரளவு அனுபவித்தவளல்லவா!
குழாயை திறக்க அது கையோடு வந்து தண்ணீர் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு அடித்து கீதாவை
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்க வைத்தது நல்ல நகைச்சுவை.
சொர்க்கம் இங்கேதுளசி, வல்லி, கீதா மூவருமே வலையுலகின் முடிசூடா ராணிகள்!!!மூவரின் நட்பும் அன்பும்
பாசமும் கிடைக்க 'உடன்பிறவா சகோதரிகளாக' ஐய்யய்ய....அது வேண்டாம்.
சகோதரிகளாக வலம் வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.