தன் பெயரில் பாட்டைக் கொண்டவரின் வலைப்பூ
இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் என்றதும்
என் நினைவுக்கு வருவது பி.எச்.அப்துல் ஹமீது
மற்றும் கே.எஸ்.ராஜா.
அந்த வரிசையில் நமது வலையுலகில்
எனக்கு இந்த அறிவிப்பாளர்தான் ஞாபகத்திற்கு வருகிறார்.
வலைப்பூக்களில் இசை என்று சொல்லும்போது
அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது
இந்தப் பெயர் தான்.
ரேடியோஸ்பதி, வீடியோஸ்பதி இவரது
வலைப்பூக்கள். இப்ப ஞாபகம் வந்திடுச்சா!!
ஆமாம். கானா பிரபா தான்.
ரேடியோஸ்பதி - பாட்டு கேக்கலாம்( நீங்க கேட்ட
பாட்டையும் தருவாரு)
வீடியோஸ்பதி - பிலிம் காட்ட ச்சே ஒளிபரப்பு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில்
பாடல்கள் இருக்கும்.
ஹாப்பி டேஸ் படப் பாடல் இங்கே.
கவுண்டரின் ஜோக் ஒன்றை பாருங்கள்
மொழி தாவிய மெட்டுக்கள் எது பார்க்க
ரேடியோஸ்பதியில் புதிர் போட்டிகள் அதிகம் இடம்பெறும்.
விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம்.
இதோ புதிர் தொடர் அறிமுகம் தொடர்பாக ஒரு சுட்டி.
பலாப்பழம் சுவைக்க அனைவருக்கும் பிடிக்கும்.
ஆனால் அதை அழகாக வெட்டி, சுளையெடுத்து
தேனில் வைத்துக்கொடுப்பது போல்
விளாவாரியாகக் கொடுப்பது பிரபாவின் பாணி.
அவருக்கு இசையுடன் இருக்கும் தொடர்பை
நமக்கு காட்டுகிறது.
|
|
புதுகை தென்றல் அக்கா
ReplyDelete//வீடியோஸ்பதி - பிலிம் காட்ட ச்சே ஒளிபரப்பு.//
அடித்து தூள் கிளப்ப என் வாழ்த்துக்கள் :-)
அக்கா தமிழ்மணம்ல எட்டுத்திக்கும் உங்க பாட்டுதான் ஒலிக்குது...
ReplyDeleteகலக்குறீங்க
வாழ்த்துகள் தென்றல். எனக்கும் கானா பிரபா பதிவு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteநேரம் தான் கிடைப்பதில்லை:(
எனக்கு வெக்கம் வெக்கமா வருதுங்க ;-)
ReplyDeleteபரிந்துரைக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி ;)
ReplyDeleteநேரம் கிடைக்கையில் நான் பாட்டுக் கேட்கச் செல்வது ரேடியோஸ்பதிக்குத்தான் :)
ReplyDeleteநன்றி உங்களுக்கும், கானா அண்ணனுக்கும்.
வாங்க த.தலைவன்,
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
வாங்க வல்லி சிம்ஹன் அம்மா,
ReplyDeleteஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஐயோ வெக்கமல்லாம் படப்டாது பிரபா.
ReplyDeleteஇப்படி ஐஸ் வெச்சாலாவது நேயர் விருபத்தில் இன்னோரு சான்ஸ் தரமாடீங்களான்னு தான்.
:))
(சும்மா ஜோக்)
வாங்க மதுரையம்பதி,
ReplyDeleteபாடல்கள் விரும்பும் அனைவருக்கும் பிரபாவின் வலைப்பூதான் புகலிடம்.
வருகைக்கு நன்றி.
சூப்பர் ப்ளாக் இது. றேடியோஸ்பதியின் நீங்கள் கேட்டவை, சிறப்பு நேயர் விருப்பம்ன்னு மக்கள் சாய்ஸ்க்கு ஏத்தவாறு பாடலை போடும் திறமை இவருக்குத்தான் இருக்கு..
ReplyDeleteஇப்போ நடத்தும் புதிர் இருக்கே.. அதுல டாப் க்ளாஸ்.. என்னமா அறிவு அண்ணனுக்கு. :-)))
இன்னும் பல புது தொடர்கள் அறிமுகப்படுத்தியிருக்காரு. அனைத்தும் வலைப்பதிவர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வாழ்த்துக்கள். :-)
//பலாப்பழம் சுவைக்க அனைவருக்கும் பிடிக்கும்.
ReplyDeleteஆனால் அதை அழகாக வெட்டி, சுளையெடுத்து
தேனில் வைத்துக்கொடுப்பது போல்
விளாவாரியாகக் கொடுப்பது பிரபாவின் பாணி.
அவருக்கு இசையுடன் இருக்கும் தொடர்பை
நமக்கு காட்டுகிறது.//
தேனில் ஊறிய பலாச் சுளையின் சுவை உலகறிந்த ஒன்றுதானே.
கானா பிரபா அவர்களின் பதிவை பாரட்ட சரியான வரிகள்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com