07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label புதுகைத் தென்றல். Show all posts
Showing posts with label புதுகைத் தென்றல். Show all posts

Wednesday, September 10, 2008

பூவையரின் சில வலைப்பூக்கள் -2

பெ. அ: அடுத்து நாம சொல்லப்போறவங்க ஒரு அன்புத்தோழிங்க.

"இறைவா அனைவரையும் காப்பாத்துண்ணு"


வேண்டற பரந்த மனம் கொண்டவருங்க இவங்க அன்புத்தோழி வலைப்பூவுல " நான் ஒரு நல்ல அன்புத்தோழியாக என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். அதே போல் உங்கள் எண்ணங்களையும் முழு மனதுடன் வர வேற்கிறேன். "ன்னுட்டு பல உபயோகமான விஷயங்களை சொல்லறாங்க.

சி. அ : அதுல வர பட்டாம்பூச்சி சூப்பரா இருக்குதல்லப்பா.

பெ அ: அதுவுவல்லாம மழலை உலகம் ங்கற வலைப்பூவுல குழந்தை வளர்ப்பு பத்துன நல்ல செய்திகளை சேகரிச்சு கொடுக்கறாங்க.




சி. அ : மழலை உலகத்துல தலைப்புப்படம் சிறப்பு.




இதுல அவங்க அருமையான தாலாட்டுப் பாட்டுகளை கொடுத்திருக்காங்க. குறிப்பா கணணனை துயில் எழுப்பும் பாடல் அருமை.

அப்ப நல்ல சேவை செய்யறாங்கண்ணு சொல்லறீங்களா

பெ. அ: உண்மையிலேயே அருமையான சேவைதான்.






ஆனா ஒண்ணை ரெண்டு பேரும் மறந்தீட்டிங்களே.






சி. அ : அது என்னப்பா?






இவங்க ஒரு ஆன்மீகப்பதிவரும் கூட கற்பூர நாயகியே கனகவல்லியிலே அம்மன் பாடல்களை பதிவிடறாங்களே அதுதான்.

அன்புத்தோழியே உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.
---------------------------------------

பெ அ: வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு தென்றல்தான் புதுகைத்தென்றல் அம்மிணி.

சி அ: ஒரு வாரத்துல வலைச்சரத்துல 45க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதி ஒரு பெரிய சாதனையே செய்திருக்காங்க இந்த ஆன்ட்டி.

"வீசும் போது நான் தென்றல் காற்று", "காற்றுக்கென்ன வேலின்னு" வீசுற இவங்க பெண்களூக்கு மிகவும் வேண்டிய Husbandologyல கணவனை எப்படி கைக்குள் வைத்துக் கொள்றதுன்னு சொல்லித்தர அன்பு உள்ளம் கொண்டவங்க.

பெ அ : இவங்களோட வலைப்பூக்கள் ஏராளம் அதுல ஒன்னுதான் புதுகைத்தென்றல்/




பின்னூட்டம் இட்டவர்களை தென்றல் வீசியதில் மகிழ்ந்தவ்ர்களுக்கு இவங்க அன்பாக அடையாளம் காட்டுறாங்க. அதுவுவில்லாம

பேரன்ட்ஸ் கிளப்

நந்து f/o நிலா























இவங்களோட சேர்ந்து குழந்தை வளர்ப்பது எப்படின்னு இவங்களும் சொல்லித்தர்றாங்க.


( பெ . அ மனசுக்குள்ள் இதெல்லாம சொல்லித்தருவாங்க வேலை வெட்டி இல்லதவங்க போல இருக்கு)

இன்னும் நன்றாக தென்றல் வீசிட வாழ்த்துக்கள்




-----------------------------------------






சி. அ: அடுத்த நாம பார்க்கப்போற பதிவர் இனியவள் புனிதா ஆன்ட்டி.





பெ.அ : கவிதைகளை மழையாக பொழிகின்றார் இவர். அனைத்தும் உருக்கமான கவிதைகள்.





"நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்" என்று என்று இயம்பும் இவர், அந்த ஈரமான நினைவுகள், மயிலிறகாய் வருடிய, தென்றலாய் தழுவிய, மின்னலாய் தீண்டீன என்கிறார்.



ஜில்லென்று ஒரு மலேசியா இவருடைய மற்றொரு குழுப்பதிவு இவருடன் சேர்ந்து மலேசியாவை நமக்கு அறிமுகப்படுத்தும் மண்ணின் மைந்தர்கள்

VIKNESHWARAN"

::மை ஃபிரண்ட் ::

மற்றும் துர்கா அவர்கள் ( இவர் அறிமுகம் கிட்டவில்லை)



பெ அ: இதிலிருந்தே இவர் கவிதைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அனைவரும் உணரலாமே.





அப்பாவுக்காக என்று இவர் இயற்றிய கவிதை சூப்பர்.





சி. அ: கவிதை மட்டுமல்ல , அக்கவிதைகளுக்கு இவர் போடற படங்களும் சூப்பரோ சூப்பர்.





எங்கிருந்து இவ்வளவு அருமையான படங்களை இவர் தரவிறக்கம் செய்கின்றார் என்று கேட்கத் தோன்றுகிறது.





சி. அ : இவரின் கவிதை ஒன்றை தருகின்றோம் சாம்பிளாக





கொஞ்சும் தமிழே
உன்னிடன் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்ல வேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகி போயிருப்பான்.


----------------------------------------------



இப்பதிவில் வ்டக்கு மற்றும் கிழக்கு முகம் இனைந்த கோலத்தையும் பிரம்மா தன் மனதிலிருந்து உருவாக்கிய மானசரவோர் ஏரியின் சில தோற்றங்களையும் தரிசனம் செய்யுங்கள் அன்பர்களே.









திருககயிலாய தரிசனம் கண்டு மானசரோவரில் நீராட 21 தலைமுறையினர் முக்தி பெறுவர் என்பது ஐதீகம்.



Waves sparkling like diamond during noon


மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.




Gurla Mandata( grand father of Sri Rama)ranges in the background.

Manasarovar is nestled in between Kailash ranges on the north and Gurla ranges on the north.



மானசரோவர், கைலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா ( இராமரின் பாட்டனார்) மலைத்தொடருக்கு இடையில் கிழ மேற்கில் அமைந்துள்ளது. குர்லா மாந்தாத்தா மலைத்தொடரை இப்படத்தில் காணலாம்.



Swans enjoying their swim in Manasarovar

பிரம்மா இராஜ அன்னப்பறவையாக மானசரோவரில் வலம் வருவதாக ஐதீகம், இங்கே பறவைகள் மானசரோவரில் நீந்தும் அழகு.






The climate at this altitude is very much unpredictable.

Manasarovar at a clouded time.


மேகம் சூழ்ந்த நேரத்தில் மானசரோவரின் அழகு( நிமிடத்திற்கு நிமிடம் இங்கே சீதோஷண நிலை மாறுகின்றது)
மேலும் வாசிக்க...

Sunday, July 13, 2008

ஆட்டம் முடிஞ்சுபோச்சு.

20/20 மேட்ச் ஆடிக்கிட்டு இருந்த என்னை
டெஸ்ட் மேட்ச் ஆட சீனா சார் கூப்பிட்டார்.

களத்தில இறங்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு
விளையாட ஆரம்பிச்சேன். மேட்ச்(எனக்கு)
நல்லாவே இருந்துச்சு சீனா சார்.

வாய்ப்பு கொடுத்தமைக்கு கோடானு கோடி
நன்றிகள்.


*************************************************
இன்று எத்தனை போஸ்ட்? இது என் குடும்பத்தாரின்
அன்றாட கேள்வி. ஊக்குவித்த பிள்ளைகள், மற்றும் கணவர்
ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.

**********************************************
ஆன் லைனில் பார்க்கும்போதெல்லாம்
ஊக்குவித்த நிஜமா நல்லவன், கானா பிரபா
மிக்க நன்றிங்க.

டார்கெட் வெச்சுக்கோங்க. இன்னும் கொஞ்ச தூரம்தான்னு
சொல்லி சொல்லி இம்புட்டு தூரம் கொண்டுவந்த
ஆயில்யன்,

தேடிக்கொண்டிருந்த போது சரியாக உரல் கொடுத்த
அன்பு நெஞ்சங்கள்,

விடாது வந்து அன்பு மழை பொழிந்த நண்பர்கள்
அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************************

இதோ இந்த வலைப்பூக்களையும் பாருங்கள்

அப்துல்லா எங்க ஊர்க்காரர்.

கீழ் கண்ட இரு வலைப்பதிவர்களிடமும் வேண்டுகோள்
வைத்திருந்தேன். மட்டுறுத்தல் வராதலால் வலைப்பூ
ஐடியை மட்டும் கொடுத்திருக்கிறேன்.


நுனிப்புல், சாப்பாட்டு ராமன்.

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி
விடை பெறுவது உங்கள்

புதுகைத் தென்றல்

டாடா! பை
மேலும் வாசிக்க...

முயல்

ரத்னேஷ் அவர்களின் வலைப்பூ இது.

அவ்வப்போது படித்திருக்கிறேன்.

இதோ உங்களுக்காக இந்தத் தொகுப்பு.



உங்கள் டாக்டர் எப்படி? படிச்சிருக்கீங்களா?

படிக்கலைன்னா இப்ப படிக்க..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்கள்.
இதைப்பற்றிய இந்தப் பதிவையும்
படித்துப் பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வழக்கொழிந்து போய் விட்டதே இந்த நல்ல பழக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கல்லிலே கலைவண்ணம் கண்டாராம்.
அதை நீங்கள் காண இதோ....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மேலும் வாசிக்க...

இலையுதிர் காலம்

இது டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களின்
வலைப்பூ.

சீரியஸான டாக்டர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.

இவங்க பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கின்றன்.

(சிரிச்சு வயிற்றுவலி வந்தால் டாக்டரின் ஈ-மெயில்
ஐடி கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள்)


சிரிப்பு வெடிகள்

********************************************

டாக்டர் தான் ரசித்த ஜோக்குகளை நம்முடன்
பகிர்ந்து கொண்டுள்ளார்.

****************************************************

பிரிஸ்கிரிப்ஷனில் “சிரிங்க”ன்னுதான்
எழுதிக்கொடுப்பாங்க போலிருக்கு....

*****************************************************

குசும்பனுக்காக இந்தப் பதிவைப் போட்டிருக்காங்க.நாமளும் ரசிக்கலாமே!

*****************************************

பெண்களுக்காக அப்போல்லோ மருதுவமனையின்
ப்ர்த்யேக செக் அப் பற்றிய பதிவு இங்கே..

****************************************

வலைச்சரத்தின் 580 ஆவது பதிவு.
மேலும் வாசிக்க...

பேரண்ட்ஸ் கிளப்

இது அறிவுரை சொல்லும் கிளப் அல்ல.

நம்மை நாம் அறிந்துக்கொள்ள. ஆம்.
பெற்றோராக இருப்பது அவ்வளவு சாதாரணமான விடயம் அல்ல.

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம்.
அவர்களை அவர்களின் போக்குக்கே கொண்டு சென்று
வழிப்படுத்துதல் வேண்டும்.

இங்கு கூறப்பட்டிருக்கும் விடய்ங்கள் நீங்கள்
கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சொல்ல
அல்ல.

இப்படியும் செய்து பார்க்கலாம் என்ற
தனது அனுபவத்தைப் பகிர்ந்துக்கொள்ள.

பிள்ளைகளை, அவர்களது பிரச்சனைகளைப்
புரிந்துக்கொள்ள, நல்ல பிள்ளைகளாக வளர
உதவத்தான்.


புதுகைத் தென்றல்
சுரேகா..
கிருத்திகா
இம்சை
பேரன்ட்ஸ் கிளப்
நந்து f/o நிலா
விசயக்குமார்
பாச மலர் இவர்களின் கூட்டணிதான் இந்த வலைப்பூ.

அரவணைப்பு - செல்லம் இவற்றிற்கான வித்தியாசம்,
தெரிந்துக்கொள்ள...

**************************************************

இம்சையோட இந்தப் பதிவை படிச்சிருக்கீங்களா?

*****************************************************

பாசமலரின் இந்த அணுகுமுறை கண்டிப்பாக எல்லோருக்கும்
தேவைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க?

**************************************************
மேலும் வாசிக்க...

கரையோர கனவுகள்

நிஜமா நல்லவரின் வலைப்பூவில்
சில பின்னூட்டங்களில் பார்த்து இந்த
வலைப்பூ பக்கம் சென்றிருக்கிறேன்.

(பின்னூட்டம் இருக்காது)

கவிதைகள் எனக்கு பிடித்திருக்கிறது.

நீங்களும் பாருங்கள்.

விடுதி வாழ்க்கை- இதைப் படிக்கும்போது
1 மாத கால் என் விடுதி வாழ்க்கை ஞாபகத்திற்கு
வந்து சென்றது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிரிவு இது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது.

ஆனால் இந்தப் பிரிவோ......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்னில் ஏதோ மாற்றம்னு சொல்றாங்க.
என்ன மாற்றம். தெரிஞ்சிக்கனும்ல.
அப்ப வாங்க..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தொடர் பதிவான திண்ணைக்கும் ஒரு பதிவு
போட்டிருக்காங்க. படிச்சுப் பாருங்க.
மேலும் வாசிக்க...

செல்விஷங்கர்

மதுரை, தமிழ் நாடு, India
ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்!
ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை
போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க
வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது!
என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு
உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள்
ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்!
இது தான் நான்! இது - மெய்!
இதைத் தவிர வேறில்லை எனக்கு!

அறிமுகம் நல்லா இருக்கு. அவங்க வலைப்பூவை
தனனைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செஞ்சிருக்காங்க.

மயிலுக்குக் குளிருமா ? இக்கதை வல்லிம்மாவின் இரண்டு வயது பேத்திக்காக
இந்தக் கதையை எழுதிருக்காங்க. நாமளும் படிச்சு
நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம்.

*************************************************


என் மொழி - 1 !!! இதுவும் நல்லா இருக்கு.

********************************************************

எப்போது கற்போம். இது நான் ரசித்தது. உங்களுக்காக.

************************************************************
செய்தவம் ஈண்டு முயலப்படும் - குறள் பற்றிய ஒரு பதிவு


*****************************************************
மேலும் வாசிக்க...

சாப்பிட வாங்க.

அனைவருக்கும் காலை வணக்கம்,

சாப்பிட வாங்க எனும் வலைப்பூ
துளசி கோபால்
முத்துலெட்சுமி
யெஸ். பாலபாரதி
சிந்தாநதி இவர்களுடையது.

அடுக்களையில் என்ன இருக்குன்னு அப்பப்போ
எட்டி பார்ப்பேன்.

அங்க என்ன இருக்குன்னு உங்க கிட்டயும்
பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.

விதவிதமாய் வித்தியாசமாய் நகைகள் மாத்திரம் தானா!!!
தோசையும் இருக்குங்க. வந்து பாருங்க.



சாவியைத் தொலைத்துவிடாதீர்கள் - அனைவரும்
கண்டிப்பாய் படிக்க வேண்டியதொரு பதிவு.



காரக்குழம்பு ரெசிப்பி வேணுமா இங்க வாங்க.


நமம் துளசி டீச்சர் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும்செய்ய சொல்லித்தர்றாங்க.



உண்டிக் கொடுத்தோர் உயிர்க்கொடுதோரே!

உணவு நமக்கு மருந்தாக இருக்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை
மனதில் கொண்டு,
அளவாய் உண்போம்! ஆரோக்கியாம வாழ்வோம்!
மேலும் வாசிக்க...

Saturday, July 12, 2008

இசைக்குயில்

வேற யாரு நம்ம ஜானகி அம்மாதான்.

இந்தப் பதிவு வலைச்சரத்தில் 575ஆவது பதிவு.

அதான் போனப் பதிவும் இந்த பதிவும் இசை விருந்தாக
மலர்ந்திருக்கிறது.

கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன்
பெயரைச் சொல்லி...
எத்தனை முறைக்கேட்டாலும் தெவிட்டாத
தேன் மெட்டு.

இப்பவும் கேளுங்களேன்.

*************************************************

சலங்கைஒலியில் ஜானகி அம்மா பாடிய இந்தப் பாடல்
அருமையாக இருக்கும்.

பால கனகமய.....

**************************************************

THIS IS THE SONG FROM 80'S SUNG BY S.JANAKI, from the film
Saptapadhi. This is actually a thyagaraja keerthana,and this
song has been no music background very simple to hear and melodious in
her voice. All of you hear this song and enjoy the melodious of this song.

இப்படி முன்னுரை கொடுத்திருக்கும் அந்தப் பாடல்
எது? கேட்க இங்கே...

**********************************************************

கருத்த மச்சான்..
கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்.

இந்தப் பாட்டை ஜானகி அம்மாவால் தான்
இம்புட்டு அழகாப் பாட முடியும்.

(சுகன்யாவின் அறிமுகப் படமாச்சே..)

*******************************************

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே...

கேக்க வேணாமா இந்தப் பாட்டை.
அப்ப இங்க வாங்க.

சரி பாட்டையெல்லாம் கேட்டு ஆனந்தமா தூங்கிட்டு
நாளைக்கும் வாங்க.
மேலும் வாசிக்க...

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்

சூப்பர் பாட்டுல்ல...

ஆமாம் இந்தப் பதிவு சூப்பர் பாடகரின் வலைப்பூவைப்பற்றியது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களின்
கலெக்‌ஷன் இந்த வலைப்பூவில்.

பாடும் நிலா பாலு. இதுதான் அந்த வலைப்பூ.

இதில் பாடல்களை தொக்குத்து வழங்குவது,

வற்றாயிருப்பு, சுந்தர், கீதா, தாணு ,சிவா, நிலா
மற்றும் கோவை ரவி.

சில பாடல்கள் உங்களுக்காக.


மயக்கும் குரலில் நான் உன்னை நினைசேன்

******************************************

தேவி வந்த நேரம் கேக்கலியா இன்னும்?!!!

****************************************

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.

ஐயோ! மறக்க முடியுமா இந்த மதுர கீதத்தை.

***************************************************


சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆஆ..

*************************************************************

எவர் கிரீன் பாட்டு இதாச்சே!

என்ன ஒரே விருந்தா இருக்கேன்னு பாக்கறீங்களா?

அடுத்ததும் இசை விருந்துதான். காரணம் அடுத்த பதிவில்
தெரியும்.

கேட்டுட்டு சொல்லுங்க.
மேலும் வாசிக்க...

நிஜமா நல்லவன்

எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை.
நல்ல எண்ணங்களை விதைப்போம்.
நற்சொற்கள் பிறக்கட்டும். நற்செயல்கள் மலரட்டும்.

எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காரு நம்ம
நிஜமா நல்லவன்.


வேலை வேலைன்னு ஓடுவோம்.
ஆனா இந்த உடம்பை கவனிக்க மாட்டோம்.

நிஜமா நல்லவன் சொல்லியிருக்கறத பாருங்க.
உங்க உடம்பையும் கவனிங்க.

************************************************
உறவுகள் மேம்பட... இந்தப் பதிவை படிச்சா
நம்மை நாம் பரிசீலித்துக்கொள்ள முடியும்.

சுய பரிசீலனை ரொம்ப முக்கியம்.

*****************************************************
மரபணுமாற்றம் தேவையா?

இந்தப் பதிவைப் படிங்க தெரியும். நல்ல கருத்துக்கள்.

*********************************************


தேன் கிண்ணத்திற்கு பிராஞ்ச் நம்ம நிஜமா நல்லவன்
வலைப்பூதான். :)

யேசுதாஸின் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேட்டுப்பாருங்கள்.


நிஜமா நல்லவன் சொல்லியிருப்பது போல
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை.

நல்ல எண்ணம் நம்மை உயர்விக்கும்.
மேலும் வாசிக்க...

அசை போடுவது.

இது யாருன்னு கேக்கறீங்களா? நம்ம சீனா சார் தான்
தன்னோட வலைப்பூக்கு இப்படி பெயர் வெச்சிருக்காரு.

நான் பள்ளத்தூரில் படிக்கும்போது ஒரு விழாவுக்கு
ராண்டார் கை (பிரபல எழுத்தாளர்) வந்திருந்தாரு.

மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சா எங்க கழுத்தெல்லாம்
தொங்கிப் போச்சு.

சீனா சாரோட இந்தப் பதிவைப் படிங்க. அப்புறம்
நீங்க பேசினா யாரோட தலையும் தொங்காது.

********************************************************
அழகர் ஆற்றில் அழகை அழகாகச் சொல்லும்
பாடல் இதோ...

********************************************************

தன் மகள் அனுப்பிய தந்தையர் தின வாழ்த்தை
தந்திருக்கிறார் பாருங்கள்.

அசைப்போட்டு பார்ப்பதினால் நமக்கு பல நல்ல
விடயங்கள் மீளக் கிடைக்கும்.
மேலும் வாசிக்க...

அம்பி

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்

இத தன் வலைப்பூவின் மெசெஜா வெச்சிருக்காரு.

பல பதிவுகள் படிக்கும்போது வயிறு வலிக்க சிரிக்க
வைக்குது.

உங்கள் பார்கைக்கு சில:


ரங்கமணி Vs கிச்சன் இதைப் படிச்சிருக்கீங்களா?

இல்லையா! சரி சரி மொதல்ல படிங்க. :)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அவுட்லுக்கின் பயன்கள் என்ன? அதை எப்படி பாவிக்கலாம்?
இந்த கேள்விக்கு பதில் தெரியாட்டி தப்பாச்சே?
அம்பியோட பதிவுல படிங்க. அப்புறம் நீங்களும்
அவுட்லுக்தான் யூஸ் பண்ணுவீங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க
ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ்
அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன
போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என
சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம்
எனக்கு இருந்ததில்லை.....

அப்படின்னு பரிட்சைக்கு தைகிரியமா!!! போனதை
சொன்ன பதிவு இது..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நன்மையோ தீமையோ அது நமம் கையில தான்
இருக்கு என்பதைச் சொல்லும் பதிவு இது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தகப்பஞ்சாமி மிக நல்ல பதிவு.

Be happy and make others happy. thatz my policy..

இது நாம் எல்லோரும் கூட வெச்சுக்க வேண்டிய பாலிசி.
மேலும் வாசிக்க...

Just Surveys!

என்ன யாருன்னு தெரிஞ்சிருச்சா!!!

எமது தொழில் சர்வே எடுத்துக் கிடப்பதே!
அப்படிங்கற அறிமுகம் போதுமே.

யெஸ்ஸூ...சர்வேசன் அவர்கள் வலைப்பூதான்.

1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?

இந்தப் பதிவு நல்ல இன்பர்மேடிக்கா இருக்கு.

************************************************

சக வலைப்பதிவர் அனுராதா அவர்கள் எழுதிய
பதிவை இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறார்.
சர்வேசன். இது கண்டிப்பா தெர்ந்து கொண்டே
ஆகவேண்டிய விடயம்.

*************************************************


மனுஷன் எவ்வளவோ முன்னேறிட்டான். உலகத்துல இருக்கர ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதுக்கு, எப்படின்னு ஆராஞ்சு ஆராஞ்சு எல்லா விவரத்தையும் கரச்சு குடிச்சுட்டான்.

சூரியனுக்குள்ள என்ன இருக்கு, சூரியன் இன்னும் எவ்வளவு நாளுக்கு எரியும், நட்சத்திரம் எவ்வளவு தூரத்துல இருக்கு, சனிக் கிரகத்துல உயிர் இருக்கா, இப்படி எல்லா விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேஞ்சிட்டான்.

எல்லா விஷயத்துலயும் இவ்ளோ தெளிவாயிருந்தாலும், இன்னும் முக்கால் வாசி ஆளுங்க, பழைய பஞ்சாங்கத்தையும், பழக்க வழக்கத்தையும், மத சம்பந்தப்பட்ட பல அபத்தமான நம்பிக்கைகளையும் விடாம கெட்டியா பிடிச்சிட்டுதான் இருக்கோம்.

அப்படின்னு சொல்லி ஜாதகம் பார்த்ததைப் பத்தி ஒரு பதிவு.


ஜாதகப் பலன் - நான் உயிர் பிழைத்த கதை

**********************************************************

ஹைதராபாத் ஏர்போர்டு ரொம்ப சூப்பரா இருக்கு.
அதைப் பத்தின பதிவு சர்வேசன் சார் வலைப்பூவில்.


இப்படியா பட்ட ஏர்போர்டை மக்கள் திரள் திரளா வந்து
பார்த்ததைப் பத்திய என் சுய தம்பட்டமும் இங்கே.


Surveys about anything and everything in Tamil for the Tamil)
இந்த வலைப்பூவில் ஸ்பெஷல் இது. என்னன்ன சர்வே
எடுத்திருக்காங்கன்னு வலைப்பூ போகும்போது பாருங்க.
மேலும் வாசிக்க...

பிரேக் த ரூல். ஓ ஏ.... பிரேக் த ரூல்

நான் போராட்டமெல்லாம் செய்யலீங்கோ!!!

நம்ம சஞ்சயோட பிளாக் பேரு இது.

சஞ்சய்னா யாருன்னு தெரியாதா???? அது சரி.

அந்த நாள் பொடியன், இப்ப சஞ்சய். :)


வாழ்க்கை வாழ்வதற்கே.. கடலை..கும்மி.
.மொக்கை தவிர வேறொன்றும் யாமறியேன்...
[::Break The Rule::]..*..[::பொடியன் விடியோஸ்::]
..*..[::Dr.Explorer::]

இது தான் வலைப்பு சொல்லும் செய்தி.


சரி இனி பதிவைப் பாக்கலாம்.

போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்அப்படின்னு சஞ்சய் பதிவு போட்டிருக்காரே! எதுக்குன்னு
பாக்க வேணாம். கொஞ்சம் போய் பாத்துட்டு வந்திடுங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.
நல்ல பதிவுங்க போய் பார்த்தா விவரம் புரியும். சந்தை நிலவரத்தைச்
சொல்லியிருக்கிறாரு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கோயம்புத்தூரில் இனணய நண்பர்கள் சந்திக்கிறாங்களாம்.
விவரம் இங்கே. போனவங்க போயிட்டு வந்து பதிவு போடுங்க.
மேலும் வாசிக்க...

Friday, July 11, 2008

THE ONLY COLOURFUL BLOG!!!

வீக் எண்ட் வந்திடுச்சே! நம்ம வீக் எண்டரைப் பத்தின
பதிவு போடாட்டி எப்படி? (வீக் எண்டுக்காகத்தானே
வெயிடீஸ் :) )

இப்ப கொலைவெறி கவுஜைகள் மாத்திரமே
எழுதிக்கிட்டு இருக்காரு. ஆனா ஒரு காலத்தில
வீக் எண்ட் ஜொள்ளு பதிவுகள் தான் களைகட்டும்
இந்த ஒன்லி கலர்ஃபுல் பிளாக்கில். :)

ஆனால் நமக்குத் தெரியாத ஒரு முகம்.
சிவா மிக அருமையாக THING BIG மற்றும்
BROKERAGE REPORT வலைப்பூக்கள் வைத்துள்ளார்.

ஸ்டாக் மார்க்கெட்டில் புலி.

பணத்தை இழப்பது ஏன்?இதைப் படிங்க. இந்த வலைப்பூவில் பல நல்ல
விடயங்கள் கொட்டி கிடக்குது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத
யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம்.
படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம
போயிட்டே இருக்கனும்! ஆமா!

இந்த முன்னுரையுடன் கூடிய பதிவு இங்கே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வீக் எண்டர்னு சொல்லிட்டு வீக் எண்ட் ஸ்பெஷல்லிங்க தராட்டின்னு கேட்பது காதுல விழுந்திருச்சு. :)

ஆனந்தமாய் இருங்கள்
அனைவருக்கும் ஹாப்பி வீக் எண்ட்.
மேலும் வாசிக்க...

இம்சை- Friends of children

இம்சைக்கு அறிமுகம் தேவையா. ஐயோ நான் ”இம்சையைச்”
சொல்லவில்லை.
நமது சக பதிவர் இம்சை அவர்களைச் சொன்னேன்.

உலக நீர் நாள் என்று கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?(இம்சையோட இந்தப் பதிவை படிக்கும் வரை எனக்கும்
தெரியாது:) )

****************************************************

நம் உடம்பிலிருந்து தேவையற்றவை வெளிக்கிடா விட்டால்
ரொம்ப கஷ்டம். மனச்சிக்கல் இருந்தாலாவது ஒத்துக்குவாங்க.
ஆனா மலச்சிக்கலை கண்டுக்கவே மாட்டாங்க.
அது பெரும் தவறு. இந்தப் பதிவை பாருங்க.

***************************************************

ஒரு பிரபலமானவரை இம்சை சந்தித்தது இந்தப் பதிவு.
அது என்னதுன்னு போயி ஒரு எட்டு பாத்தா தெரிஞ்சிடப்போவுது.

****************************************

நம்ம நண்பருக்கு ஒரு உதவி வேணுமாம்!!
என்னன்னு பாத்து கொஞ்சம் உதவிட்டு போங்களேன்.
மேலும் வாசிக்க...

நாச்சியார்

அப்பப்போ இந்த வலைப்பூ பக்கம் எட்டி
பார்ப்பேன். பெரிதாக பின்னூட்டம் போட்டதில்லை.

நாச்சியார், வில்லிப்புத்தூ ஸ்ரீ, வல்லி இதெல்லாம்
வல்லி சிம்ஹன் அவர்களின் வலைப்பூக்கள்.

நான் படித்ததில் பிடித்தது.

கண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ
*******************************************************


ஒரே வழிசல். என்ன வழிகிறது நீங்களே
பாருங்கள் தெரியும்.
**********************************************************

சதுரங்கம் . இந்தப் பதிவும் மிக நன்றாக இருக்கிறது.

************************************************************

சொற்களே மிச்சம் என்ற இவ்வரிகள்
மிக மிக அருமை.
மேலும் வாசிக்க...

வெட்டிப்பயலின் வலைப்பூ

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது

இப்படி சொல்லிகிட்டு சும்மா கலக்கலா பதிவு
எழுதறாரு. நான் அறிமுகப் படுத்தத் தேவையே
இல்லை. உங்களுக்கு நல்லா தெரிஞ்சவர் தான்

சாஃப்டுவேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்கன்னு
சொல்லி சூப்பர் பதிவுங்க இது.

நீங்களும் படிச்சு பாருங்க.

*************************************************


ஒரு உறவினர் ஒருவருக்கு திருமணம்.

ரொம்ப கலாய்ச்சோம் அவரை. மணமகன்
தாலிகட்ட ரெடியாகி கிட்டு இருந்தபோது சடனாக அந்த பக்கம்
கிராஸ் ஆன பையனோட மாமா,”டேய்! இப்ப ஒண்ணும்
கெட்டுப் போகலை! கல்யாணம் வேணுமான்னு நல்லா
யோசிச்சு முடிவைச் சொல்லுன்னாரு”!!!!!!!!!!!!!!

ஏன்னு யோசிச்சுகிட்டே போய் தாலிகட்டிட்டு வந்த
பிறகு,” நான் சொன்னேன். நீ தான் கேக்கலை.
உன் தலையெழுத்து. நீயும் அனுபவி”ன்னுட்டு
போயிட்டாரு. :))

இங்க இது எதுக்குன்னு கேக்கறீங்களா?

நம்ம வெட்டி கி.மு, கி.பி பதிவுப் போட்டிருக்காருல்ல.
அதான் டைமிங்கா இருகட்டுமேன்னு. :)

**************************************
T-Mobile Wing, Magellan 3200, Nextar C3 அனுபவங்கள்!

இதுவும் நல்ல இன்ப்ஃர்மேட்டிவா இருக்கு.

**************************************************

டைரக்டர் விசுவுக்கு நான் வேண்டுகோள் வைச்சு
பதிவு போட்டேன். அவர் பிஸியா இருக்காருன்னு
அவருக்காக வெட்டி கதை வசனம் ரெடி செஞ்சிருக்காரு.

அதைப் படிக்க்க வேண்டாமா நீங்க?!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வலைப்பூக்களில் அவரவர் எழுதுவது அவரவர் விருப்பம்.
அந்தக் கருத்தில் நமக்கு உடந்தை இல்லாவிட்டால்,
அதை நயமான வார்த்தைகளில் சொல்வது நாகரீகம்.

அதை விடுத்து. கடுமையான, அநாகரீகமான வார்த்தைப்
ப்ரயோகம், முகம் தெரியாத மனிதர்களுக்கு நம்மைப்
பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா
ஏற்படுத்துகிறது.


வாயில் இருந்து வார்த்தைகள் வரும் வரைத்தான்
நாம் அதற்கு எஜமானன்.

வந்த பிறகு வார்த்தைகள் நமக்கு எஜமானன் ஆகிவிடுகிறது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருக்க காய்கவர்ந்தற்று.
மேலும் வாசிக்க...

உலாத்தல்

அறிவிப்பாளராக நாம் அறிந்த கானாபிரபா,
பாடல்களைத் தொகுத்து வழங்கும் பாணியை
இந்தப் பதிவில் பார்த்தோம்.
மடத்து வாசல் பட்டி பிள்ளையார், மற்றும்
உலாத்தல் ஆகிய வலைப்பூக்களும் இவருடையதுதான்.
அழகாக எழுதுகிறார்.

கிடுகுவேலியும், ஒரே கடலும்...!

இந்தப் பதிவை படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பட்டம் விட்டு ஓடிய அந்தக் கால நினைவுகளை
மிக அழகாக பதிந்துள்ளார்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எனக்கு மிக பொறாமையாக இருக்கிறது. கானா பிரபா
கானக்கந்தர்வனை நேரில் பார்த்திருக்கிறார். அவர்து
இசையில் மயங்கி, கலந்து போனதை

Dr K.J.ஜேசுதாஸின் சாஸ்திரிய இசையருவியில் கலந்தேன்..!
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிண்ணனிப் பாடகர்களில் பாலுவும், ஜேசுவும் இமயங்கள்.

இன்னொரு இமயத்தின் நிகழ்ச்சிக்கும் போய் வந்து
பதிவாகப்போட்டு இருக்கிறார்.

ஓபரா ஹவுசில் பாடிய பாலு.

இந்தப் பதிவுகள் அந்த நிகழ்ச்சியில் நாமே கலந்து கொண்ட
அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கைமர் பேரரசு பற்றிய இந்தப் பதிவையும்
பாருங்கள்.


பகிர்தலினால் நாம் அனைவருக்கும் பல விடயங்களை
அறியத் தருகிறோம்.

பதிவிடுவோம். பகிர்ந்திடுவோம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது