அம்மாவும் அப்பாவும் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. கேட்டவுடன் கிடைக்கும் எதையுமே நாம் சரியாக மதிப்பதில்லை. அதன் மதிப்பு அப்போது நமக்கு சரியாக தெரிவதும் இல்லை. அல்லது தெரிய முயற்சிப்பதும் இல்லை. அது நட்பாக இருந்தாலும் சரி. தாய் தந்தையர் பாசமாக இருந்தாலும் சரி. அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் தான் அவர்களை முழுமையாக உணர்கிறோம். சிலர் இருக்கும் போதே தங்கள் உணர்வை பகிர்ந்து கொள்கிறார்கள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
கோவி கண்ணன் அவர்களின்
அப்பா இன்னும் சாகவில்லை....! என்ற பதிவில் தன் தந்தையின் நினைவை மிக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக தன் தந்தையின் முகத்தை கூட பார்க்காமல் போன வலியை அதில் நம்முடன் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். தான் தந்தையான பின்பும் இன்னும் தன் கனவில் வரும் அப்பாவை நினைத்து கண்ணீர் வருகிறது என தன் அப்பா பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இறந்த பின்பு நினைத்து பார்ப்பதைவிட முடிந்தால் இப்போதே உங்கள் அப்பாவை கட்டியணைத்து உங்கள் பாசத்தை காட்டிவிடுங்கள் என் சொல்கிறார்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ.. என்ற முன்னுரையுடன் நண்பர் ரசிகவ் தன் தந்தைக்கு எழுதிய கவிதை
அப்பாவுக்காய் ஒரு கடிதம்.
"நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...
உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!
உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது..."
இது ரசிகவின் தந்தைக்கு மட்டுமல்ல. இந்த வரிகளை இரவல் வாங்கி
நாமும் மரியாதை செலுத்தலாம். நம்மில் பெரும்பாலானோருக்கும் பொருந்தும் வரிகள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
தான் பல்வேறு காரணங்களால் அம்மாவை விட்டு சில ஆண்டுகளாக பிரிந்திருந்தாலும் தன் முதல் தோழியான தன் அம்மாவை பற்றி மிக நெகிழ்வாக பதிவிட்டு்ருக்கிறார் நண்பர்
தமிழன்.
"நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர..."
சும்மா நச்சினு சொல்லி இருக்கார்ல.. போய் படிச்சி பாருங்க..
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
திவ்யா மாஸ்டர்... கதை, கவிதை என கலக்குவதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது பல வகையான அட்வைஸ்களையும் அள்ளி வழங்குவார். இந்த கலகல அட்வைஸ்களுக்கு மத்தியில் தந்தையை இழந்தவர்கள் தன் தாயிடம் எப்படி ந்டந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள பதிவு
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!.
தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி??? என்று மிக தெளிவாக அழகாக சொல்லி இருக்கிறார்.^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் யாத்ரீகன் தன்
அன்புள்ள அப்பாவுக்கு ரொம்பவும் வித்தியாசமான ஒரு கடிதம் எழுதி இருக்கார். கண்டிப்பான தன் அப்பாவின் தொடர்ச்சியான கடிதங்களுக்கு பதில் எழுதாது மட்டுமின்றி தொலை பேசியிலோ நேரிலோ பேசும் போது அதைபற்றி குறிபிட்டது கூட இல்லை என்று வருத்தப் படுவதோடு, தன் தந்தை தன் இறுக்கத்தை குறைத்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் வலிக்காமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார். இது தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் என்பதைவிட இப்போது தந்தையாய் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர இதை படிக்கலாம்.
"
உங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சி பண்றேன்னு நினச்சிறாதீங்க, இதெல்லாம் நான் உங்க கிட்ட இருந்து, படிச்ச புத்தகங்கள் கிட்ட இருந்து, பார்த்த மனிதர்கள் கிட்ட இருந்து, கிடைத்த அனுபவாங்கல்ல இருந்து தோணியதை தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதை உங்களுக்கு நியாபகப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன். "
இதை விட அழகாக எபப்டி சொல்ல முடியும்?
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் சீமாச்சுவின் இந்த பதிவையும் பாருங்க. அம்மாவை பற்றிய நினைவை எழுதிவிட்டு , அம்மாவின் நினைவாக கோவிலுக்கு பசுமடம் கட்டித் தந்ததை குறிபிட்டு"
அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே....." என்று முடிக்கும் போது நிஜமாகவே ஒரு குழந்தையின் மனது தெரிகிறது.
... ஹே.. யார் மேன் அது தொங்களூர் தவா? .. தேதி எல்லாம் போட்டு இன்னைக்கு ஒரு பதிவு கூட இல்லைனு சொன்னது?.. இன்னைக்கு 2 பதிவு போட போறேன்.. :)).. ஏன்யா இப்படி சொந்த செலவுல சூனியம் வச்சிகிறீங்க? :)))
இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))