07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 24, 2008

மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது....

வலையுலகில் இருக்கும் மதுரை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்த பதிவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் இந்தப் பதிவில் அளிக்கிறேன்.

முதலில் ஊர்க்காரருக்கு மரியாதை

முரளி கண்ணன்
வதிலை முரளி என்ற பெயரில் சமீப காலத்தில் (2007) பின்னூட்டங்கள் போட்டு வந்தவர். பின்னர் முரளி கண்ணன் என்ற பெயருடன் வலம் வருகின்றார். வாழு வாழ விடு என்ற அழகிய தலைப்பில் அழகாகப் பதிவு எழுதுகின்றார். அவரது திண்ணை நினைவுகள், திரைப்படம் சம்பந்தமான பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. இது தவிர புரட்டிப் போட்ட படைப்புகளிலும் எழுதி வருகின்றார்.

குமரன் (Kumaran)
மதுரை என்றதும் குமரன் ஐயாவின் நினைவு பதிவர்களுக்கு வருவது தவிர்க்க இயலாதது. தமிழில் சிறந்த புலமை பெற்ற குமரன் அவர்களின் பதிவுகள் ஏராளம். ஆன்மீகம் சம்பந்தமான பதிவுகள் நிறைய எழுதியுள்ளார். அது தவிர கூட்டுப் பதிவுகளிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றார். அவரது முக்கியப் பதிவான கூடலில் 300 க்கும் மேற்பட்ட இடுகைகளை இட்டுள்ளார். புறநானூறு துணை கொண்டு வள்ளல் பாரியின் கதை, கேட்டதில் பிடித்தது, சொல் ஒரு சொல் பகுதிகள் படிக்க வேண்டியவை.

கீதா சாம்பசிவம்
கீதாம்மாவின் எண்ணங்கள் அனைத்தும் சிறப்பான இடுகைகளைக் கொண்டவை. இராமாயணத்தை எளிய தமிழில் கதையாகச் சொல்லி வருகின்றார். இப்போது தலைவி இராமாயணத்தில் பிஸியாக இருப்பதால் சிஷ்ய கே(கோ)டிகள் தலைவியின் டிரேட் மார்க் பதிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

தருமி
தருமி ஐயா, பதிவு உலகின் மூத்த பதிவர்களில் ஒருவர். 2005 ல் இருந்து 250 க்கும் மேற்பட்ட சிறப்பான இடுகைகளைப் படைத்துள்ளார்.( Weblogs, Blogspot ) மதங்கள் தொடர்பான அவரது கருத்துக்கள் ஆழமானவை. இது தவிர திரைப்படங்கள், சமூகம் பற்றிய பார்வைகள் படிக்க வேண்டியவை.

சீனா (Cheena)
வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களின் அசைபோட்டு எழுதுவதில் நாமும் சேர்ந்து கொள்வது வழக்கம். அழகு தமிழில் அவரது படைப்புகளும், அனுபவங்களும் கற்றுக் கொள்ள வேண்டியவை.

இராம் (Raam)
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) :))) . வைகை என்ற பதிவில் மண்ணின் மனத்துடன் பதிகின்றார். சவடன் கதை, மற்றும் அவரது கவிதைகள், சிறுகதைகள் ரசிக்கத்தக்கவை. நாமக்கல் சிபியுடன் சேர்ந்து கலாய்க்கவும் செய்வார்.

TBCD
மலேசியாவில் இருந்து பதியும் அண்ணன் அரவிந்தன், குழம்பிப் போன திராவிடன் என்று பெயர் வைத்துக் கொண்டு அவ்வப்போது நம்மையும் குழப்பி வருகிறார். தமிழின் மீது ஆழ்ந்த பற்றும், திராவிட உணர்வும் ஒருங்கே கொண்டுள்ளது அவரது பதிவுகளில் நன்றாகத் தெரியும். அரசியல், சமூகம், சார்ந்த இவரது பதிவுகளின் உணர்வு நமக்கும் ஒரே மாதிரி இருக்கும்.

பாசமலர்
பெட்டகம் என்ற அழகு தமிழ்ப் பதிவை எழுதி வந்தவர். அழகான கவிதைகளை வடிப்பதில் வல்லவர். இரண்டு மாதமாக பதிவதில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் சேராமல் விரைவில் வருவார், தமிழமுது தருவார் என்று நம்புவோம்.


47 comments:

  1. அன்பின் தமிழ் பிரியன்

    மருதக்காரவுகளுக்குன்னு ஒரு பதிவா - சரி சரி - வத்தலக்குண்டு பக்கம் தானே !! = நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //

    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((

    ReplyDelete
  3. என்னை வேண்டுமென்றே புறக்கணித்து இருட்டடிப்பு செய்வதை 'வண்மை'யாகக் கண்டிக்கிறேன். :-)

    மருதைக்கார பதிவர்கள் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!

    ReplyDelete
  4. ///வற்றாயிருப்பு சுந்தர் said...

    என்னை வேண்டுமென்றே புறக்கணித்து இருட்டடிப்பு செய்வதை 'வண்மை'யாகக் கண்டிக்கிறேன். :-)///

    வத்ராப்பை தின்னவேலில தேங்க சேக்க முடியும்... ;)

    ReplyDelete
  5. அட தெரிஞ்ச இத்தனை பேரு நம்மூரா .. சூப்பரப்பு

    ReplyDelete
  6. அப்பு, நாங்க எல்லாம் யாரு ???

    மதுர எங்க இருக்குன்னு கேட்டா ஜெர்மனி பக்கம் பிரான்ஸ் பக்கம்னு சொல்லுற ஆளுயா...

    ReplyDelete
  7. பாருப்பா நிறைய பேரு விட்டுட்ட போல இருக்கு க்யூ கட்டி நிக்கிறாய்ங்க நீ தப்பிக்க முடியாது அவ்ளோதான்!

    :))

    ReplyDelete
  8. //வெட்டிப்பயல் said...

    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //

    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

    ReplyDelete
  9. //மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது...."//

    போறோம்!

    போறோம்!

    போறோம்!

    ReplyDelete
  10. பிரியன் என்ன பதில இன்னும் காணோம்? அதுதான் (ப்) பற்றி:)

    ReplyDelete
  11. ராஜ நடராஜன் said...

    பிரியன் என்ன பதில இன்னும் காணோம்? அதுதான் (ப்) பற்றி
    //

    மாட்டிக்கிட்டா அண்ணே எப்பவுமே எஸ் சாயிருவாரு :))

    ReplyDelete
  12. "மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது...."//

    அது ...! இருக்கட்டும் அந்தப் பயம் எல்லார்ட்டயும் .. ம்ம்...

    ReplyDelete
  13. ///வெட்டிப்பயல் said...
    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //

    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((///

    ரிப்பீட்டேய்...!

    ReplyDelete
  14. தமிழ் பிரியரே. பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க. தருமி ஐயாவுக்கு மகிழ்ச்சியா இருக்கும். நானெல்லாம் வர்றதுக்கு முன்னாடி யாருப்பா மதுரை யாருப்பா மதுரைன்னு தேடிக்கிட்டு இருந்தாராம். இப்ப இங்கிட்டு அங்கிட்டு எந்தப் பக்கம் பாத்தாலும் மதுரைகாரய்ங்க தான்.

    ஒரே ஒரு குறை எனக்கு. தருமி ஐயாவை ஐயான்னு சொன்னீங்க - சரி - அவருக்கு கேட்டு கேட்டு பழகிப் போச்சு; வயசும் ஆச்சு. என்னையும் ஏன் ஐயா போட்டு சொன்னீங்க? :-( சீனா ஐயாவுக்கு ஐயா போடலை. அது வேற கவலையா இருக்கு. அவரை விடவா என்னை வயசானவர்ன்னு நினைச்சீங்க. :-)

    ReplyDelete
  15. இராமசந்திரமூர்த்தி. என்னையா இது இந்த தமிழ்பிரியர் ஒரு குண்டைத் தூக்கிப் போடறாரு? யார்கிட்டயும் சொல்லிக்காம பெண்களூர்ல கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? குறைஞ்சது இந்த ததாவுக்காவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமில்ல?

    ReplyDelete
  16. மதுரை பதிவாளர் தொகுப்பு போல் பிற ஊர் பதிவாளர்களின் தகவல் தரவும்.நன்றி.

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  17. இத்தன பேரா நீங்க, இருக்கட்டும், இருக்கட்டும்.

    மதுரை மண்ணின் பெருமை வாய்ந்த ஜிகர்தண்டா போல , அம்மா மெஸ் அயிரமீன் குழம்ப போல, கோனார் மெஸ் கறி தோசை போல, முருகன் கடை இட்லி போல எல்லோரும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

    அடுத்து தஞ்சாவூர்காரங்கள எல்லாம் கூட்டிகிட்டு நான் வாரேன் இருங்க.

    ReplyDelete
  18. //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //


    யம்ம்மே.... தமிழ் பிரியன்'ண்ணே எனக்கு இன்னும் கல்யாணம் ஆவலை'ண்ணே..... அரமுக தலைவர் வேற ஒருத்தரு'ண்ணே... :)

    ReplyDelete
  19. வெட்டிக்காரு, ஆயில்ஸ்,நல்லவா, குமரன் ததா,

    எனக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா ஒங்கக்கிட்டே சொல்லாமேவா இருக்கப்போறேன்.. :)

    ReplyDelete
  20. // மருதைக்கார பதிவர்கள் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்! //

    நானும் மருதைக்காரன் தான்!

    ReplyDelete
  21. அடடா இம்புட்டு மதுரைக்காரங்க இருக்காங்களா...!

    ReplyDelete
  22. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள்.............
    ..................................................................................................................................................................................................................................................

    புளொக் வைத்து வளர்க்கிறார்கள்:)

    ReplyDelete
  23. வாழ்க உங்கள் தமிழ் பணி...!

    ReplyDelete
  24. மதுரை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ணே...:))

    ReplyDelete
  25. அப்ப நம்மளுக்கு மதுரையில நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாய்ங்க...:)

    ReplyDelete
  26. ///cheena (சீனா) said...

    அன்பின் தமிழ் பிரியன்

    மருதக்காரவுகளுக்குன்னு ஒரு பதிவா - சரி சரி - வத்தலக்குண்டு பக்கம் தானே !! = நல்வாழ்த்துகள்///
    மண்ணு ஒன்று தானே!

    ReplyDelete
  27. ///வெட்டிப்பயல் said...
    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //

    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((///
    வாங்க வெட்டிகாரு! சும்மா ஜாலிக்கு தான்.... :)))

    ReplyDelete
  28. ///யாத்ரீகன் said...

    அட தெரிஞ்ச இத்தனை பேரு நம்மூரா .. சூப்பரப்பு///
    வந்து சேந்தாச்சுல்ல.. அது போதும்

    ReplyDelete
  29. ///களப்பிரர் said...
    அப்பு, நாங்க எல்லாம் யாரு ???

    மதுர எங்க இருக்குன்னு கேட்டா ஜெர்மனி பக்கம் பிரான்ஸ் பக்கம்னு சொல்லுற ஆளுயா...///
    அப்பு! நீங்களுமா..... :)

    ReplyDelete
  30. ///மங்களூர் சிவா said...

    பாருப்பா நிறைய பேரு விட்டுட்ட போல இருக்கு க்யூ கட்டி நிக்கிறாய்ங்க நீ தப்பிக்க முடியாது அவ்ளோதான்!

    :))///
    அல்லாரையும் எழுதினா நான் நிக்க முடியாது... :)

    ReplyDelete
  31. ///ஆயில்யன் said...

    //வெட்டிப்பயல் said...

    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //

    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))) ///
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  32. ///ஆயில்யன் said...

    //மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது...."//

    போறோம்!

    போறோம்!

    போறோம்!///
    அது!

    ReplyDelete
  33. ///ராஜ நடராஜன் said...

    பிரியன் என்ன பதில இன்னும் காணோம்? அதுதான் (ப்) பற்றி:)///
    :(

    ReplyDelete
  34. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
    ராஜ நடராஜன் said...
    பிரியன் என்ன பதில இன்னும் காணோம்? அதுதான் (ப்) பற்றி
    //
    மாட்டிக்கிட்டா அண்ணே எப்பவுமே எஸ் சாயிருவாரு :))///
    டெய்லி சாட்ல பார்க்கிறோமே... ;)

    ReplyDelete
  35. ///தருமி said...
    "மருதைக்காரங்கப்பா... ஒதுங்கிப் போறது...."//
    அது ...! இருக்கட்டும் அந்தப் பயம் எல்லார்ட்டயும் .. ம்ம்...///
    அதே... :)

    ReplyDelete
  36. // நிஜமா நல்லவன் said...
    ///வெட்டிப்பயல் said...
    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //
    ராயல் அண்ணா,
    சொல்லவேயில்லை :-(((((((///
    ரிப்பீட்டேய்...!///
    :))))))

    ReplyDelete
  37. ///குமரன் (Kumaran) said...
    தமிழ் பிரியரே. பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க. தருமி ஐயாவுக்கு மகிழ்ச்சியா இருக்கும். நானெல்லாம் வர்றதுக்கு முன்னாடி யாருப்பா மதுரை யாருப்பா மதுரைன்னு தேடிக்கிட்டு இருந்தாராம். இப்ப இங்கிட்டு அங்கிட்டு எந்தப் பக்கம் பாத்தாலும் மதுரைகாரய்ங்க தான்.

    ஒரே ஒரு குறை எனக்கு. தருமி ஐயாவை ஐயான்னு சொன்னீங்க - சரி - அவருக்கு கேட்டு கேட்டு பழகிப் போச்சு; வயசும் ஆச்சு. என்னையும் ஏன் ஐயா போட்டு சொன்னீங்க? :-( சீனா ஐயாவுக்கு ஐயா போடலை. அது வேற கவலையா இருக்கு. அவரை விடவா என்னை வயசானவர்ன்னு நினைச்சீங்க. :-)///

    இனி சீனா ஐயாவை தாத்தா என்று சொல்கிறேன்... தலையெல்லாம் வேறு பஞ்சா போச்சே... ;)))

    ReplyDelete
  38. ///குமரன் (Kumaran) said...

    இராமசந்திரமூர்த்தி. என்னையா இது இந்த தமிழ்பிரியர் ஒரு குண்டைத் தூக்கிப் போடறாரு? யார்கிட்டயும் சொல்லிக்காம பெண்களூர்ல கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? குறைஞ்சது இந்த ததாவுக்காவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமில்ல?///

    வதந்தி வேகமா பரவுமாமே?... ;)

    ReplyDelete
  39. ///இராம்/Raam said...
    //இராம் (Raam)
    வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வருத்தப்படாத வாலிபர். அரமுக தலைவராக பதவி கிடைத்தும் அதை துச்சமாக உதறியவர் (தங்கமணி பயமாம்) //
    யம்ம்மே.... தமிழ் பிரியன்'ண்ணே எனக்கு இன்னும் கல்யாணம் ஆவலை'ண்ணே..... அரமுக தலைவர் வேற ஒருத்தரு'ண்ணே... :)///
    அண்ணே! இப்படி கூப்பிட்டாத்தான் வர்றீங்க பாருங்க.... :))

    ReplyDelete
  40. ///இராம்/Raam said...
    வெட்டிக்காரு, ஆயில்ஸ்,நல்லவா, குமரன் ததா,
    எனக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா ஒங்கக்கிட்டே சொல்லாமேவா இருக்கப்போறேன்.. :)///
    சீக்கிரம் பண்ணுங்கப்பு! நாங்க பட்ட இன்பம்(?) நீங்களும் பட வேண்டாமா?... ;)

    ReplyDelete
  41. ///வெயிலான் said...
    // மருதைக்கார பதிவர்கள் வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்! //
    நானும் மருதைக்காரன் தான்!///

    அப்படியாண்ணே! நன்றி!

    ReplyDelete
  42. ///தமிழன்... said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள்............. ..............
    புளொக் வைத்து வளர்க்கிறார்கள்:)///
    எப்படிண்ணே! உங்களால மட்டும் முடியுது.... :)))

    ReplyDelete
  43. ///தமிழன்... said...

    அப்ப நம்மளுக்கு மதுரையில நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாய்ங்க...:)///
    கண்டிப்பா! வந்தா வாங்க... :)

    ReplyDelete
  44. ஏம்பா, தமிழ் பிரியா,

    குமரன் அவர ஐயான்னூ சொன்னதுக்கு ஆட்சேபித்து, என்னை ஐயான்னு சொல்லலீயேன்னு வருத்தப்பட்டாரு. சரி. அதுக்காக என்னைத் தாத்தான்னு சொல்லணுமா ? அய்யோ - நான் இன்னும் பணியிலிருக்கேன். நிர்வாகம் காதுலே விழுந்தா - அப்புறம் இணையம் தான் துணை. தலை இன்னும் பஞ்சாகலே ! கிரே தான் ஆகி இருக்கு. குசும்பன் குசும்பன்னு ஓருத்தர் இருக்காரு. அவரெ வேணாக் கேட்டுக்கோ - சரியா

    ReplyDelete
  45. ///cheena (சீனா) said...
    ஏம்பா, தமிழ் பிரியா,

    குமரன் அவர ஐயான்னூ சொன்னதுக்கு ஆட்சேபித்து, என்னை ஐயான்னு சொல்லலீயேன்னு வருத்தப்பட்டாரு. சரி. அதுக்காக என்னைத் தாத்தான்னு சொல்லணுமா ? அய்யோ - நான் இன்னும் பணியிலிருக்கேன். நிர்வாகம் காதுலே விழுந்தா - அப்புறம் இணையம் தான் துணை. தலை இன்னும் பஞ்சாகலே ! கிரே தான் ஆகி இருக்கு. குசும்பன் குசும்பன்னு ஓருத்தர் இருக்காரு. அவரெ வேணாக் கேட்டுக்கோ - சரியா
    ///
    நீங்க குசும்பனுக்கு லஞ்சம் கொடுத்த விஷயம் இங்க லீக் ஆகிடுச்சு... அதனால அதை நாங்க நம்ப மாட்டோம். ஊருக்கு வரும் போது நேரில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்..... ;)

    ReplyDelete
  46. தமிழ் பிரியன்

    குசும்பனுக்கு லஞ்சம் கொடுத்த விசயமா - அது என்னாது - எவ்ளோ கொடுத்தே அவருக்கு - என்னா சொல்லச் சொல்லி கொடுத்தே !

    ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  47. எங்கூர்க்காரங்களுக்குன்னு தனியா லிஸ்ட் ஏது போட்டிருக்கீங்களா தமிழ்? அல்லது வேறு யாராவது.. (எலேய்.. அப்பிடி மட்டும் இல்லன்னா தேடி வந்து உதைப்போம், சொல்லிட்டேன்)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது