07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 25, 2008

ஈழத் தமிழர்களே.... உங்களது வேள்விகள்... வெல்லட்டும்!

புலம் பெயர்ந்து சென்றாலும் வலைபதியும் இலங்கையைச் சேர்ந்த பதிவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் வலைச்சரம் எழுத ஆரம்பித்த உடன் இருந்தது. இன்று ஈழத்தில் இருந்தும், அல்லது புலம் பெயர்ந்தும் பதியும் வலைபதிபவர்கள்...

சந்திரவதனா
சந்திரவதனா அவர்கள் தனது பதிவின் ஓரத்தில் நண்பர்களின் பெயர்களுடன், தனது பதிவுகளின் பெயர்களையும் அடுக்கி வைத்திருப்பார்கள். அனைத்தும் சிறப்பான பதிவுகள். தன்னுடைய ஆழ்ந்த அனுபவங்கள், ஈழம் தொடர்பானவைகளை தனது மனஓசையில் எழுதி வருகின்றார். மனஓசை என்ற புத்தகமாகவும் வடித்துள்ளார். கவிதைகளும் எழுதுவார். பெண்கள், மருத்துவம் சார்ந்தவை படிக்க வேண்டிய பிற பதிவுகள்.

மதிகந்தசாமி
2003 முதல் வலையில் பதிந்து வருபவர். சிறந்த வாசிப்பு அனுபவங்களைக் கொண்ட மதியின் இடுகைகள் பிரமிக்க வைக்கின்றன. படித்தவைகளையும் அழகாக பகிர்ந்து கொள்கிறார். ஈழம் தொடர்பான இவரது இடுகைகள் மூலம் நிறைய புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம். பழைய பதிவு, புதிய பதிவு
(பகி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்... ;) )

ரிஷான் ஷெரிப்
கத்தாரில் இருந்து பதியும் நண்பர் ரிஷான் அழகான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். சிறுகதையும் எழுதுவார். மனிதம் நசுங்கிய தெரு உணர்வோடு இருந்தது. நல்ல விடயங்களை எழுதுவதற்கு என்றே எண்ணச் சிதறல்களை வைத்துள்ளார். உலகில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி தனியாக பதிவு செய்கிறார். எல்லாமே நல்ல பிள்ளை போல் காட்சி அளித்தாலும் வ.வா.சங்கத்தில் அடித்த லூட்டிகள் மறக்க இயலாதவை.

கானாபிரபா
ரேடியோஸ்பதி, என்ற பதிவில் நம்மையெல்லாம் பாட்டு கேட்க வைப்பார். புதிர் என்ற பெயரில் அவ்வப்போது கூகுளிலும், இல்லாத மூளையையும் காய வைப்பார். நேயர் விருப்பங்கள் மிக சிறப்பாக இருந்தவை. வீடியோஸ்பதியில் படம் காட்டுகிறார். கானாபிரபாவின் அடுத்த பரிணாமத்தை மடத்துவாசலில் காணலாம். சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் அவலங்கள் கொடுமையானவை. ஜூலை கலவரங்கள் பற்றிய பதிவு நிறைய புரிதல்களைத் தரும். இது தவிர தன்னுள் இருக்கும் ஒரு பயணியின் தாக்கங்களை தருகின்றார் உலாத்தலில்.

தமிழன்
நமக்கு அருகில் இருந்து பதியும் நண்பர் தமிழன். பின்னூட்டங்களை வாரி வழங்கி பலருடைய வாழ்வை செழிக்க செய்பவர் ;) . காதல் கறுப்பி என்று வைத்துக் கொண்டு இவர் எழுதும் காதல்கள் அழகு.... தலைப்பே புரியாமல் பதிவு முழுவதும் வாசிக்க வைத்தது இவரது ஒரு இடுகை. தேவதையின் தருணங்கள் அனைவருக்கும் இருப்பவை.

அகிலன்
கனவுகளின் தொலைவைத் தேடும் அகிலனின் பதிவுகள் கவனிக்க வேண்டியவை. ஒலியிலும் பா.க.ச. பதிவு போட்டவர். நட்சத்திரமாக எழுதிய பதிவுகள் கவனிக்க வேண்டிவை. நமீதா பெயரைச் சொல்லி நம்மை அங்கு இழுத்தவர். வாழ்க நமீதா!


இறக்குவானை நிர்ஷன்
புதிய மலையகத்தின் இலங்கை தொடர்பான சமூக அவலங்களை உருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்து வைக்கின்றார்.

நளாயினி
நளாயினியின் கவிதைகள் உயிர் கொண்டு திளைக்க வைப்பவை.

தூயா
தூயாவின் நினைவலைகள், சமையல் கட்டின் வாசம் நுகரத்தக்கவை.

நிவேதா
வித்தியாசமான வாசிப்பனுபவங்கள் வேண்டுவோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். காலங்களை கடந்து செல்ல வைக்கும் இலக்கியம்.

சிநேகிதி
தத்தக்க பித்தக்க என்று எழுதும் எழுத்துக்கள் அழகானவை.
********************************

தொ(ல்)லை பேசியில் குறிப்புகள் தந்துதவிய நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.

29 comments:

  1. நல்ல தொகுப்பு. சிலரின் தளங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நன்றி தமிழ் பிரியன்.

    ReplyDelete
  2. பதிவின் தலைப்பை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. உங்கள் தலைப்பு விரைவில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ந‌ம் சொந்த‌ங்க‌ள் விரைவில் சொந்த‌ நாடு அடைய‌ வாழ்த்துவோம்.

    ReplyDelete
  4. மேடைக்கு வந்திட்டன்...

    ReplyDelete
  5. wow
    Excellent collection of links & discription abt that

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு. பொதுவா எல்லாத்தையுமே தேடித்தேடி புடிக்கிறீங்க

    ReplyDelete
  7. நன்றி ;-)

    குறிப்புக் கொடுத்த தமிழனின் புது வேலைக்கும் வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  8. அன்பின் தமிழ் ப்ரியன்,

    எனது வலைத்தளத்தையும் வலைச்சர வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே :)

    தமிழன், குறிப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி நண்பரே :)

    (//எல்லாமே நல்ல பிள்ளை போல் காட்சி அளித்தாலும் வ.வா.சங்கத்தில் அடித்த லூட்டிகள் மறக்க இயலாதவை.//
    இதற்குப் பெயர்தான் இறுதி ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )

    ReplyDelete
  9. நல்ல இணைப்புக்கள்......வளர்க உம் பணி!

    ReplyDelete
  10. ///நமக்கு அருகில் இருந்து பதியும் நண்பர் தமிழன்.///

    அது சரி இவருக்கென்ன தெரியுமெண்டு பதிய வந்தவர்...:)

    ReplyDelete
  11. ///பின்னூட்டங்களை வாரி வழங்கி பலருடைய வாழ்வை செழிக்க செய்பவர்///

    பதிய வந்ததே இதுக்காகத்தானே...;)

    ReplyDelete
  12. மங்களூர் சிவா said...

    \\\
    wow
    Excellent collection of links & discription abt that
    \\\

    ஆமா தல...என்னோட பதிவை தவிர்த்துதானே சொல்றிங்க... ;)

    ReplyDelete
  13. எனக்கு நன்றி சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி...

    அந்த பெருமையெல்லாம் தமிழ்பிரியனுக்கும் அழகாக எழுதுகிற உங்களுக்குமே சேரும்...!

    ReplyDelete
  14. ///தொ(ல்)லை பேசியில் குறிப்புகள் தந்துதவிய நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.///

    இந்த நேரத்தில எல்லா ஈழத்து பதிவர்களுக்கும்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லிக்கொள்கிறேன் தொடர்ந்து எழுதுங்கோ அது நான் உங்களுக்கு வைக்கிற அன்புவேண்டுகோள்...

    ReplyDelete
  15. ///தொ(ல்)லை பேசியில் குறிப்புகள் தந்துதவிய நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.///

    அண்ணே உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...!
    இப்படியொரு தொகுப்பை தந்ததுக்கும்,இவ்வளவு பெரிய பதிவர்களோட என்னையும் சோத்து அடையாளம் காட்டியமைக்கும்.

    ReplyDelete
  16. நன்றி...நன்றி... நன்றி...!

    ReplyDelete
  17. ரிஷான், தமிழன், தூயாவை மட்டுமே அறிந்திருந்த எனக்கு பிற ஈழ தமிழரின் அறிமுகங்களைத் தந்திருக்கிறீர்கள். நன்றி! அவர்களுக்கான வாழ்த்தாகவே இப்பதிவின் தலைப்பை அமைத்திருப்பது டச்சிங்!

    ReplyDelete
  18. ///நிஜமா நல்லவன் said...

    நல்ல தொகுப்பு. சிலரின் தளங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நன்றி தமிழ் பிரியன்.///
    நன்றி அண்ணே!

    ReplyDelete
  19. ///நிஜமா நல்லவன் said...

    பதிவின் தலைப்பை வழிமொழிகிறேன்.///
    மீண்டும் வழி மொழிகிறேன்

    ReplyDelete
  20. ///ஜோசப் பால்ராஜ் said...

    உங்கள் தலைப்பு விரைவில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ந‌ம் சொந்த‌ங்க‌ள் விரைவில் சொந்த‌ நாடு அடைய‌ வாழ்த்துவோம்.///
    நிச்சயமாக... :)

    ReplyDelete
  21. ///பகீ said...

    மேடைக்கு வந்திட்டன்...//
    அது ....... :)

    ReplyDelete
  22. ///மங்களூர் சிவா said...

    wow
    Excellent collection of links & discription abt that///
    டாங்கீசூ

    ReplyDelete
  23. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    நல்ல தொகுப்பு. பொதுவா எல்லாத்தையுமே தேடித்தேடி புடிக்கிறீங்க////
    எல்லாம் நீங்க கற்றுக் கொடுத்தது தான்.. :)

    ReplyDelete
  24. ///கானா பிரபா said...

    நன்றி ;-)

    குறிப்புக் கொடுத்த தமிழனின் புது வேலைக்கும் வாழ்த்துக்கள் ;-)//
    நன்றி!

    ReplyDelete
  25. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    அன்பின் தமிழ் ப்ரியன்,
    எனது வலைத்தளத்தையும் வலைச்சர வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே :)
    தமிழன், குறிப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி நண்பரே :)
    (//எல்லாமே நல்ல பிள்ளை போல் காட்சி அளித்தாலும் வ.வா.சங்கத்தில் அடித்த லூட்டிகள் மறக்க இயலாதவை.//
    இதற்குப் பெயர்தான் இறுதி ஆப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )///
    இதில் ஆப்பு எங்க இருக்கு... பெருமை தானே மக்கா! :))

    ReplyDelete
  26. ///மதிபாலா said...

    நல்ல இணைப்புக்கள்......வளர்க உம் பணி!///
    நன்றி மதிபாலா!

    ReplyDelete
  27. தமிழன்... said...

    ///தொ(ல்)லை பேசியில் குறிப்புகள் தந்துதவிய நண்பர் தமிழனுக்கு நன்றிகள்.///

    இந்த நேரத்தில எல்லா ஈழத்து பதிவர்களுக்கும்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லிக்கொள்கிறேன் தொடர்ந்து எழுதுங்கோ அது நான் உங்களுக்கு வைக்கிற அன்புவேண்டுகோள்...///
    நானும் சொல்லிக்கிறேன்... :)

    ReplyDelete
  28. ///ராமலக்ஷ்மி said...

    ரிஷான், தமிழன், தூயாவை மட்டுமே அறிந்திருந்த எனக்கு பிற ஈழ தமிழரின் அறிமுகங்களைத் தந்திருக்கிறீர்கள். நன்றி! அவர்களுக்கான வாழ்த்தாகவே இப்பதிவின் தலைப்பை அமைத்திருப்பது டச்சிங்!///
    நன்றி ராமலக்ஷ்மிக்கா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது