07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 27, 2008

இது நம்ம விருப்பங்கள்..... சுற்றமும், நட்பும்

இன்னாபா! எப்ப பாத்தாலும் ரொம்ப தான் சுகூரா பதிவு போடுற! கும்மி அடிக்க கூட முடியல! போப்பா நீ எல்லாம் ஒரு கும்மி பதிவரா? என்று என்னைப் பாத்து ஒரு பதிவர் கேட்டு விட்டார். கும்மியையே குலத் தொழிலாக கொண்ட எனக்கு அவமானமாக இருந்தாலும் இதுக்கெல்லாம் கலங்க மாட்டேன்னு சுண்டக்கஞ்சி மேல சத்தியம் பண்ணி சொல்லிட்டேன்...... ;)

இன்னிக்கு நம்ம சுற்றத்தில் உள்ள நண்பர்கள் பற்றிய அறிமுகம். ஏற்கனவே அறிமுகப்படுத்திய, அறிமுகப்படுத்தப் போகும் நண்பர்களைத் தவிர்த்து.....

மங்களூர் சிவா
மங்களூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் மன்னர் இவர். இவரது அரண்மனையில் ஜொள்ளு ஆறாக ஓடியது ஒரு கனாக் காலம்...ம்ம்ம்ம்ம்ம். அப்புறம் சபையில் கவிதை வாசித்தார். அதில் திரிஷா, நயந்தாரா படங்களுக்கு இடையில் ஏதோ எழுதினார். அப்புறம் அமைதியானார். திடீரென்று நட்சத்திரமாக மின்ன ஆரம்பித்தார். சரி ஜொள்ளு திரும்பவும்ன்னு பார்த்தால் சூப்பரா பதிவுகள் போட்டு தாக்கிட்டார். எல்லாம் சிறப்பான பதிவுகள். இது தவிர ஷேர் மார்க்கெட் சம்பந்தமான பதிவும் வைத்திருக்கிறார்.

நிஜமா நல்லவன்
நிஜமாவே ஒரு அதிரடிக் கவிஞர் தான். சாட்டிங்கில் ஏதாவது தலைப்பைக் கொடுத்து கவிதை அல்லது கவுஜ கேட்டா உடனே போட்டு தாக்கிடுவார். அவருடைய நினைவுகள் ரசித்தவை. கலாய்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கவுந்துடுறாரு...

சஞ்சய்
பொடியன் என்ற பெயரில் உலவும் சஞ்சய் அங்கிள் விதிகளுக்கு கட்டுப்பட மாட்டாராம். என்ன கொடும சரவணா!. சைதை தமிழரசியை சைட் அடித்து ஏமாந்தது தனிக்கதை. நல்ல விழிப்புணர்வு பதிவுகள் இட்டுள்ளார். பதிவர் சந்திப்புக்கு மிக ஆர்வத்துடன் செயலாற்றியவர். குட்டீஸ் கார்னரில் இவர் இருப்பது அவ்வ்வ்வ்வ்வ்வ்...........

விக்னேஷ்வரன்
மலேசியாவில் இருக்கும் விக்கி சிறந்த எழுத்தாளர். கொஞ்சம் இலக்கியத்தில் நம்மோடு சேம் ஃபீலிங் உள்ளதால் நட்பு பத்திக்கிச்சு. நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்வார். நல்ல நல்ல கட்டுரைகளையும் எழுதுகின்றார். இவரது திருடியது யார்? , பாரோ மன்னரின் மர்மக் கல்லறை ஆகியவை பிரசுரமாகி உள்ளன.

மதுமதி
எங்க கண்மணி டீச்சரின் அறிமுகம். சூப்பரா கவிதை எழுதுவாங்க. அப்பாவுக்கு அழகா கடிதம் கூட எழுதினாங்க..... இப்ப பதிவே எழுதுவதில்லை. மொக்கையா எழுதும் நாங்களே எழுதும் போது அழகா எழுதுற இவங்க எழுதலாம்தானே...

பொன்வண்டு
பெங்களூரூ பொன்வண்டு வானவில்லின் சொந்தக் காரர். சில நேரங்களில் மட்டும் பதிவு எழுதினாலும் தெளிவா பதிவு எழுதுவார். கருகும் பெங்களூரைப் பற்றியும், மதுரை தளங்கள் பற்றியும், ஏடிஎம் வேலை செய்யும் முறை பற்றியும் எழுதியுள்ளார். இவரைப் பார்த்து கொஞ்சம் பொறாமைப்படுவேன். சமைக்கத் தெரியுமாம். அதோடு சமையல் தளங்களிலும் எழுதுகிறார். அண்ணி கொடுத்து வச்சவங்க.

ரசிகன்
இணைய குழுமங்களில் இருக்கும் ரசிகன் ஸ்ரீதர் லொள்ளு மேடைக்கு சொந்தக்காரர். தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் பதிவுகள் எழுதினாலும் அவ்வப்போது கவுஜயும் எழுதுவார்.

16 comments:

  1. நிஜமா நல்லவனைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீங்க. ரொம்ப சந்தோஷம்ணே. காரணம் எங்க புதுகைத் தென்றல் அக்காவால் பதிவுக்கு வந்த நானும்,நி.நல்லவனும் உங்க லிஸ்டில் வந்துட்டோம். அந்த வகையில் எங்க தென்றல் அக்கா 100% பாஸ்

    ReplyDelete
  2. சுகுரா???? யாராவது ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் எனக்கு உதவிக்கு வாருங்களேன்.

    ReplyDelete
  3. ராஜ நடராஜன்.

    இது ஜப்பானிய மொழி அல்ல - சீனமொழி - ஹாங்காங்கில் பயன்படுத்துவார்கள் இச்சொல்லை. சுகுரு எனில் -மிகச் சரியாக, அளவிற்கு அதிகம் இல்லாத, தேவையான என்றெல்லாம் பொருள். பொதுவாக இச்சொல் அளவீடுகளைக் குறிக்கும் ஒரு சொல்.

    ReplyDelete
  4. ஏன்யா... கண்ண மூடிகிட்டு எழுதுன ரெண்டு பத்திரிக்கையில வந்துட்டா எழுதாளரா... கடைசி பதிவுள காமெடி அடிக்கிறிங்களே? :)))

    ReplyDelete
  5. மங்களூர் சிவா அவர்களை குறிப்பிட்டு விட்டு அவரின் "மி த பஷ்டு"வை சொல்லாத தமிழ்ப்பிரியனை அந்த ஆத்தா மங்களூர் மாரியம்மா தண்டிப்பாராக..

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா அவர்களை குறிப்பிட்டு விட்டு அவரின் "மி த பஷ்டு"வை சொல்லாத தமிழ்ப்பிரியனை அந்த ஆத்தா மங்களூர் மாரியம்மா தண்டிப்பாராக..//
    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
    நிஜமா நல்லவனைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீங்க. ரொம்ப சந்தோஷம்ணே. காரணம் எங்க புதுகைத் தென்றல் அக்காவால் பதிவுக்கு வந்த நானும்,நி.நல்லவனும் உங்க லிஸ்டில் வந்துட்டோம். அந்த வகையில் எங்க தென்றல் அக்கா 100% பாஸ்///
    என்ன கொடும அண்ணே! அக்காவுக்கு நாம பாஸ் மார்க் போடுறதா...... ஓவரா இல்லையா?

    ReplyDelete
  8. ///மங்களூர் சிவா said...

    மக்கா நன்றி///
    நன்றி அண்ணே!

    ReplyDelete
  9. ///ராஜ நடராஜன் said...

    சுகுரா???? யாராவது ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் எனக்கு உதவிக்கு வாருங்களேன்.////
    முதல்ல உங்க பக்கத்துல யாராவது சென்னை ஆள் இருந்தா கேளுங்கப்பு... :)

    ReplyDelete
  10. ///cheena (சீனா) said...

    ராஜ நடராஜன்.

    இது ஜப்பானிய மொழி அல்ல - சீனமொழி - ஹாங்காங்கில் பயன்படுத்துவார்கள் இச்சொல்லை. சுகுரு எனில் -மிகச் சரியாக, அளவிற்கு அதிகம் இல்லாத, தேவையான என்றெல்லாம் பொருள். பொதுவாக இச்சொல் அளவீடுகளைக் குறிக்கும் ஒரு சொல்.///
    நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  11. ///VIKNESHWARAN said...

    ஏன்யா... கண்ண மூடிகிட்டு எழுதுன ரெண்டு பத்திரிக்கையில வந்துட்டா எழுதாளரா... கடைசி பதிவுள காமெடி அடிக்கிறிங்களே? :)))///
    யோவ்! எழுத்தாளா? கண்ணை மூடிக்கிட்டு எழுதினாலே இவ்வளவு அழகா வருதுன்னா இனி கண்ணை திறந்து எழுதுமய்யா!

    ReplyDelete
  12. ///வெண்பூ said...

    மங்களூர் சிவா அவர்களை குறிப்பிட்டு விட்டு அவரின் "மி த பஷ்டு"வை சொல்லாத தமிழ்ப்பிரியனை அந்த ஆத்தா மங்களூர் மாரியம்மா தண்டிப்பாராக..*////
    ஏனிந்த கொல வெறி உங்களுக்கு அண்ணன் மேல... :)

    ReplyDelete
  13. ///rapp said...

    //மங்களூர் சிவா அவர்களை குறிப்பிட்டு விட்டு அவரின் "மி த பஷ்டு"வை சொல்லாத தமிழ்ப்பிரியனை அந்த ஆத்தா மங்களூர் மாரியம்மா தண்டிப்பாராக..//
    வழிமொழிகிறேன்///
    அய்யா ராப் உங்களுக்கும்மா கொல வெறி....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. @வெண்பூ &
    @ ராப்

    "மீ தி பஷ்டு"க்கு "கோபி ரைட்" மலேசியாவில ஒரு மாரியாத்தா வெச்சிருக்காங்க. நாமல்லாம் அங்கங்க அந்த "கோபி ரைட்" வயலேஷன் செய்யறதோட சரி

    :)))

    நன்றி

    ReplyDelete
  15. ///மங்களூர் சிவா said...
    @வெண்பூ &
    @ ராப்
    "மீ தி பஷ்டு"க்கு "கோபி ரைட்" மலேசியாவில ஒரு மாரியாத்தா வெச்சிருக்காங்க. நாமல்லாம் அங்கங்க அந்த "கோபி ரைட்" வயலேஷன் செய்யறதோட சரி
    )
    நன்றி///
    அண்ணே! 'நச்'

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது