07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 17, 2009

பின்னூட்ட பிதாமகன்களும் ஓவியர்களும்

பின்னூட்டங்களாலே புகழ்பெற்ற வாசக்ர்கள் பலர் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகம் எழுதாத இவர்கள் வருங்கலாத்தில் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசையுடன் எனக்குத் தெரிந்த சிலரை அறிமுகப்படுத்துகிறேன்.இவர்களை பலருக்குத் தெரிந்திருந்தாலும் இவர்களது பதிவை படித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பதிவர்களின் ஆக்ஸிஜனாக‌ இருக்கும் இவர்களுக்கு பல நன்றிகள். 1) இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இவர் எழுதிய 3 பதிவுகளை படிக்காமல் தவறவிட்டவர்கள் ஏராளம். இனிமேல் அடிக்கடி எழுதுவார் என நம்பலாம். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்டவர். 2) கும்மிக்கு பெயர் போனவர். ஜெர்மனியில் ஆணி புடுங்குகிறார். சென்னைக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.தனிமைப் பற்றி இவர் எழுதியதை படித்தால் என்னவோ போல இருக்கும். நல்ல மனிதர்

3) இவர் மாதம் 8 பதிவுகள் எழுதினாலும் பின்னூட்டங்கள் மூலமே புகழ் பெற்றவர்.இவரின் மிகப் பெரிய பதிவாக இதுதான் கண்ணில் பட்டது. எல்லாப் பதிவுக்கும் தவறாமல் வந்து உற்சாகமூட்டுபவர்.

4) ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார். இவரின் வேகத்தைப் பார்த்து இள்வயதுக்காரர் என்று நம்பினால் நடேசன் பூங்கா சந்திப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக நபர் வது நான் தான் அது என்கிறார். இன்னமும் என்னால் நம்ப முடியவில்ல, அவர்தான் இவர் என்று.


பதிவுலகில் பட எடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். படம் வரைபவர்கள் வெகு சிலரே. எனக்கு தெரிந்து இருவர். 
1) ஒருவர் கண்னாடியிலே ஓவியம் வரைபவர். என் அம்மாவுக்கு இது போன்ற விடயத்தில் ஆரவம் அதிகம் என்பதால் இவரின் படங்களை காட்டுவதுண்டு. கிளாஸ் பெய்ன்டிங் எப்படி வரைவது என்று பாடம் எடுக்காவிட்டாலும் இந்தப் பதிவில் அது உருவாகும் நிலைகளை படமெடுத்து போட்டிருக்கிறார் பாருங்கள்.

2) இவர் எம்.ஐ.டி. பட்டதாரி. தனிப்பட்ட முறையில் என் பதிவை விமர்சித்து மடலிடுபவர். உண்மையை உரிமையோடு சொல்பவர். இவரின் ஓவியங்களில் ஒரு புரொஃபஷனிலசம் இருக்கும். இந்தப் படத்தை பார்த்து சொல்லுங்கள்.

9 comments:

  1. மிக நல்ல அறிமுகங்கள் சகா.. வாழ்க‌

    ReplyDelete
  2. இதுவும் சூப்பர் முயற்சி,

    நண்பர் கும்கி இனிமேலாவது எழுதி தள்ளவேண்டும் என்பது என் ஆசை.

    ReplyDelete
  3. // narsim said...
    மிக நல்ல அறிமுகங்கள் சகா.. வாழ்//

    நன்றி தல..

    *****************

    //வால்பையன் said...
    இதுவும் சூப்பர் முயற்சி,

    நண்பர் கும்கி இனிமேலாவது எழுதி தள்ளவேண்டும் என்பது என் ஆ//

    நன்றி வால்.. என் ஆசையும் அதுதான்..

    ReplyDelete
  4. பின்னூட்டம் எல்லாருக்கும் உற்சாகம் தரும் விஷயம். எனக்கு பிடித்த பதிவு என்றால் பின்னூட்டாமல் விடுவதில்லை. நல்ல அறிமுகம் கார்க்கி

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள். கும்க்கி எழுத ஆரம்பித்துவிட்டார் என்பது புதுசு.
    :)

    ReplyDelete
  6. கடிசி ரண்டு பேரும் நம்பள்கு புத்சுபா.. நன்னி..:)

    ReplyDelete
  7. ஆஹா, நம்மளையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டீங்களா?

    சந்தோசம்..மகிழ்ச்சி.. :-))))

    நன்றி சகா.

    ReplyDelete
  8. நன்றி அம்மிணி

    நன்றி கார்த்திக்

    நன்றி சஞ்செய்

    நன்றி ஓவியரே

    எனக்கும் மகிழ்ச்சி கண்ணி தேசமே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது