07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 19, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்

வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2).  நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.

image

அது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது விஜய்கோபால்சாமி வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

என்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண்பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.

அதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.

அதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.

9 comments:

  1. ஆஹா - இம்மாம் பெரியா ஆளா நீங்க ...

    ReplyDelete
  2. ரீமிக்ஸ் நல்லாயிருந்தது

    ReplyDelete
  3. நானும் தஞ்சை தாங்கோ ...

    ReplyDelete
  4. அட நம்ம ஊருக்கு பக்கத்து ஊர் காரவுக,இப்ப நானும் ஹைதையில் தாங்க இருக்கேன்.

    வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அட அடிச்சி பிச்சு எடுக்குறிங்க... முதல் பதிவே அசத்தல்...

    ReplyDelete
  6. சாலமன் பாப்பையா மேட்டர் கலக்கல்..வாழ்த்துகள் வாத்தியாரே(ஆசிரியர்ன்னா வாத்தியார்தானே)..

    //எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார்//

    இதுல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே?????????????

    ReplyDelete
  7. //அட அடிச்சி பிச்சு எடுக்குறிங்க... முதல் பதிவே அசத்தல்...//

    ரிப்பீட்ட்ட்ட்டேஏஏய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  8. வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது