07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 17, 2009

கால‌த்தை வென்ற‌ க‌தை சொல்லிக‌ள்..!



ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் போல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ஆரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வ‌லியோடு பிர‌ச‌விக்கிறான்.

ஒவ்வொரு ப‌டைப்பிற்குமுண்டான‌ அடிப்ப‌டை வேத‌னையை அனுப‌வித்து,பார்த்து பார்த்து த‌ன் க‌தைக‌ளை செதுக்கும் ப‌டைப்பாளிக‌ளுக்கான‌ அறிமுக‌ம் இன்று.


************

இரா.வ‌ச‌ந்த‌குமார்


"when i was young
we did it again

when i was younger
you did it first

you come near
i come near
we come out of fear

you smooch my lips
you catch my hips,
then
you smooch my lips
you smooch my lips"


வசந்தகுமாரின் க‌தைக‌ளினூடே ஒளிந்திருக்கும் இதுபோன்ற‌ நுணுக்க‌ வேலைப்பாடுக‌ள்,தீராத‌ அழ‌கிய‌லோடு க‌விதைக‌ளாக‌ ப‌ரிண‌மிக்கின்ற‌ன‌.

"பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள்.கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது.நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம்"

எளிமையான‌ வ‌ரிக‌ளில் ம‌ன‌தை வ‌ருடும் எழுத்துக்க‌ள் எல்லோருக்கும் சாத்திய‌மான‌த‌ல்ல‌.பால்ய கால காதல் உணர்வுகளைச் சொன்ன வசந்தகுமாரின் "கிளிமுற்றம்" சிறுகதையில் வரும் வரிகள் அவை.த‌ன் வ‌லைப்ப‌க்க‌த்தை நிர‌ம்ப‌ த‌ர‌மான‌ சிறுக‌தைக‌ளால் நிர‌ப்பியிருக்கிறார்.முற்றிலும் புதிய‌ வாசிப்பானுப‌வ‌த்திற்கு இரா.வ‌ச‌ந்த‌ குமாரின் ப‌க்க‌ங்க‌ள் அதிக‌ம் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகின்றன.

1.கிளி முற்றம்

2.இராஜ விஷம் போலொரு முத்தம்

******

ஆடுமாடு

"இது மேய்ச்சல் காடு. கயிறு அவிழ்க்கப்பட்டதும் மேய்ச்சலுக்குத் தயாராகிற மாடு, ஆடுகளின் வாழ்க்கைதான் நமக்கும்.குறுணி நிலத்தில் முதுகு குனிந்து முத்தெடுக்கிற அந்த மேய்ச்சல் காரர்களின் வாழ்க்கையை எழுத பேனாக்கள் போதாது.இது கிராமத்து சகதி.நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்"

ஆடுமாடுக‌ளோடு இணைந்திருக்கும் இடைய‌ர்க‌ளின் வாழ்விய‌லை, ம‌ண் ம‌ண‌ம் க‌ம‌ழும் வ‌ட்டார‌ மொழியோடு வெகு இய‌ல்பாக‌ த‌ம் க‌தைக‌ளில் சொல்கிறார்.த‌ற்போது காடு என்ற‌ ஒரு தொட‌ர்க‌தையையும் எழுதி வ‌ருகிறார்.அவ‌ர‌து குறிப்பிட‌த்த‌க்க‌ க‌தைக‌ள்.

ஆட்டும‌ந்தையிலிருந்து ஒரு காத‌ல்

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-4

மூனு பொட்டு செவ‌ளை

******

அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா

விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ளின் அலைக்க‌ழிக்கும் வாழ்விலிருந்து கிள்ளியெடுக்க‌ப்ப‌டுகிற‌து அமித்த‌ம்மாவின் க‌தைக‌ள். இவ‌ர‌து க‌தைக‌ளில் வாழும் வெங்கிட்டும், சின்னைய‌னும், த‌ன‌ல‌ட்சுமியும் என‌க்கு மிக‌வும் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள்.வார்த்தை ஜால‌ம்,அடுக்குத்தொட‌ர்,ம‌ய‌க்குமொழி இப்ப‌டி எந்த‌வித‌ ஜிகினா க‌ல‌வைக‌ளோ, போலிப் பூச்சுக‌ளோ இல்லாத‌ எளிமையான‌ க‌தைக‌ளை லாவ‌க‌மாக‌ கையாள்கிறார்.வேலைக்கு செல்லும் ச‌ராச‌ரி பெண்க‌ளின் ம‌ன‌ உண‌ர்வுக‌ளை பிர‌திப‌லிக்கும் இவ‌ர‌து க‌தைக‌ளின் ய‌தார்த்த‌ மொழி ந‌டை,வ‌டிவ‌ம், அநாவ‌சிய‌ செருக‌ல்க‌ள் இல்லாத‌ த‌ரமான‌ ப‌டைப்புக‌ள் வாச‌க‌ர்க‌ளை சுண்டி இழுக்கின்ற‌ன‌.க‌ன‌மான‌ ப‌ரிந்துரைக‌ள் சில‌.

உப்பு ( வ‌லையுல‌கில் அதிக‌ம் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்பு )

காக்காணி

உள‌வு

******

விசா

கேப்சியூள் க‌தைக‌ள் மூல‌ம் பிர‌பல‌மான‌ எழுத்தாள‌ர் விசா,வ‌ர்த்த‌க‌ ரீதியான‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.ம‌னோத‌த்துவ‌ம்,சைக்கோ,திரில்லர்,கொலை என்று வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளுக்கு ஏற்ற‌ க‌தைக‌ளை த‌ன் வ‌லைப்ப‌க்க‌த்தில் எழுதி வ‌ருகிறார்.நாற்காலி நுனிக்கு கொண்டு செல்லும் எழுத்தோட்ட‌மும்,க‌தைக‌ள் முழுதும் வியாபித்திருக்கும் சுவார‌ஸிய‌ அலையும் எண்ண‌ற்ற‌ வாச‌க‌ர்க‌ளை இவருக்கு பெற்றுத்த‌ரும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.


திண்ணையில் வெளிவ‌ந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் வாசக‌ர்க‌ளிடையே ஆழ்ந்த‌ சல‌ன‌த்தை ஏற்ப‌டுத்திய‌ "சாவுகிராக்கி"
சிறுக‌தை குறிப்பிட‌த்த‌க்க‌ ஒன்று.மேலும் சில‌ க‌தைக‌ளை கொலைக‌ளை ப‌டிக்க‌,

முத‌லிர‌வில் முத‌ல் கொலை

அடுத்த‌ இர‌வில் அடுத்த‌ கொலை

ஷுட்டிங் ஸ்பாட்டில் கொலை

******

மேலும் மூன்று முத்துக்க‌ள்

1.விதூஷின் "ஆர்த்தர், லான்செட் மற்றும் சூனியக்காரி"

2.ஆதிமூலகிருஷ்ணனின் "அழுக்கின் அழகு" ( விகடனில் வெளிவந்த கதை )

3.க‌ண்ணாடி ஜீவ‌னின் "மிளகாய்ச்செடி" ( அனுபவ‌மாக‌ இருந்தாலும் அழ‌கான‌ க‌விதை அல்ல‌து க‌தை )


******

70 comments:

  1. ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.///


    அற்புதமான வரிகள் !!

    ReplyDelete
  2. இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.///

    முத்து முத்தாய் வார்த்தைகளைக் கோர்த்துள்ளீர்கள்!!

    ReplyDelete
  3. அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.///

    உங்கள் நடையே கவிதைபோல் இருக்கு செய்யது!!

    ReplyDelete
  4. முற்றிலும் புதிய‌ வாசிப்பானுப‌வ‌த்திற்கு இரா.வ‌ச‌ந்த‌ குமாரின் ப‌க்க‌ங்க‌ள் அதிக‌ம் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகின்றன.///

    நான் இவரைப் படிக்கிறேன்!!

    ReplyDelete
  5. எந்த‌வித‌ ஜிகினா க‌ல‌வைக‌ளோ, போலிப் பூச்சுக‌ளோ இல்லாத‌ எளிமையான‌ க‌தைக‌ளை லாவ‌க‌மாக‌ கையாள்கிறார்.//

    அமித்தம்மாவுக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  6. அத்தனையும் நான் முன்பே படித்திருந்தாலும் உங்கள் மூலம் மீண்டும் அறிவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா - சாரதாவை அடிக்கடி படிப்பேன், மற்றவர்கள் அனைவரையும் நேரம் கிடைக்கும் போது படிக்கிறதுதான். நல்ல பதிவர்கள். பரிந்துரைக்கு நன்றி...

    ReplyDelete
  8. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    தொகுப்புகளை மேலோட்டமாக பார்த்தாயிற்று

    படிக்காத சிலதை பிறகு படிக்கிறேன்.

    ReplyDelete
  9. இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் உங்களிடம்

    ;)

    ReplyDelete
  10. முத்து முத்தாய் வார்த்தைகளைக் கோர்த்துள்ளீர்கள்!!//

    ஆமாங்க, எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அடிச்சு ஆடி 50 பதிவு போட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வ‌லியோடு பிர‌ச‌விக்கிறான்.


    அழகாய் செதுக்கியிருக்கிறீர்கள் செய்யது.

    மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கச்செய்கிறது அந்த முதல் பத்தி.

    நன்றி.

    ReplyDelete
  12. வாவ்!

    அருமையான கலைக்‌ஷன்ஸ்!

    ReplyDelete
  13. //சிறுக‌தை குறிப்பிட‌த்த‌க்க‌ ஒன்று.மேலும் சில‌ க‌தைக‌ளை கொலைக‌ளை ப‌டிக்க‌,

    முத‌லிர‌வில் முத‌ல் கொலை

    அடுத்த‌ இர‌வில் அடுத்த‌ கொலை

    ஷுட்டிங் ஸ்பாட்டில் கொலை//

    கொல்றாம்பா.....:)

    ReplyDelete
  14. அனைத்தையும் ஒருங்கிணைத்த அழகு நன்று..ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துக்குகளும் நன்று...

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. //ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது //

    தொடக்கமே அசத்தலான வரிகளுடன் ஆரம்பிச்ச்ருக்கீங்க.

    ஒரு படைப்புக்கான நெருப்பைக் கொணரும் காரணிகளாக நீங்கள் எழுதி இருக்கும் அழகே அழகு. மனதில் பதியும்படியா வரிகள்

    ReplyDelete
  16. வலையுலகில் சில சிறந்த சிறுகதைகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி. ஒவ்வொன்றாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  17. உப்பு சிறுகதை டாப்பு.

    ReplyDelete
  18. இரா.வசந்தகுமார் அவர்களையும், ஆடுமாடு தளமும் இதுவரை வாசித்ததில்லை. இதுபோன்ற சிறந்த தளங்களின் அறிமுகமே தேவை. ரொம்ப நன்றி செய்யது.

    அமித்தம்மா, விசா, விதுஷ், ஆதி மற்றும் தல ஜீவன் கதைகளை தொடர்ந்து வாசிப்பதுண்டு.

    வலைச்சரம் உங்களின் வரவால் பிரகாசம் அடைந்திருக்கிறது செய்யது. இன்ந்த வாரம் முழுவது இதுபோன்று நல்ல தளங்களைப் பற்றி மட்டும் தாருங்கள்.

    ReplyDelete
  19. அநேகமாக எல்லாரும் எனக்கு அறிமுகமில்லாதவர்கள்... ty bro.. good work.. keep it up..!

    ReplyDelete
  20. "வலையுலக பிரம்மா" பிரபல எழுத்தாளர் செல்லதுரை" அவர்களின் மனம் தொடும் கதைகளை படிக்க இங்கே செல்லுங்கள்...

    www.idhayame.blogspot.com

    ReplyDelete
  21. //"வலையுலக பிரம்மா" //

    அது எங்கள் சாரு மட்டும் தான்!

    அவருக்கு தான் மண்டையெல்லாம் உடம்பு, உடம்பெல்லாம் மண்டை!

    ReplyDelete
  22. //பிரபல எழுத்தாளர் செல்லதுரை" //



    சாரு கேரளா பிரபலம்!
    இவரு எந்த ஊரு பிரபலம்!

    இவரை வச்சு யாரோ ஒரு அனானி காமெடி பண்றாருன்னு நினைக்கிறேன்!

    கடைசியா இருக்குற மொக்கைக்கு மட்டும் 6 பின்னூட்டங்கள் இருக்கு!
    இவரு எந்த ஊரு பிரபலம்னு தெரியலையே!

    ReplyDelete
  23. சில புதிய அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  24. முற்றிலும் புதிய‌ வாசிப்பானுப‌வ‌த்திற்கு இரா.வ‌ச‌ந்த‌ குமாரின் ப‌க்க‌ங்க‌ள் அதிக‌ம் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டுகின்றன.///

    padichita pochi

    ReplyDelete
  25. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. வாழ்த்துகள்.நல்ல பதிவர்கள். பரிந்துரைக்கு நன்றி...

    //ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.///
    interesting.

    ReplyDelete
  27. வால் பையன் சொன்னது :

    ///சாரு கேரளா பிரபலம்!
    இவரு எந்த ஊரு பிரபலம்!

    இவரை வச்சு யாரோ ஒரு அனானி காமெடி பண்றாருன்னு நினைக்கிறேன்!

    கடைசியா இருக்குற மொக்கைக்கு மட்டும் 6 பின்னூட்டங்கள் இருக்கு!
    இவரு எந்த ஊரு பிரபலம்னு தெரியலையே!////

    நான் சொல்லுவது:

    காதல் மிகவும் புனிதமானது.

    அதன் மென்மையும் மேன்மையும் நேர்த்தியும் புரியாமல், காமத்தை கரகாட்டம் ஆடும் சாருவோ அவருக்கு தூக்கி பிடித்து கொண்டு வரும் வால்களோ மனித மனத்தின் இனிமையை உணர மாட்டார்கள்.

    அந்த இதயமே பிளாக் போய் வாசித்தேன். ரொம்ப நல்ல கதை.

    இது தான் சூப்பர், இப்படித்தான் கதைன்னா இருக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாய் மொக்கை எல்லாம் இல்லை.

    இவங்க எழுதுறதுதான் எழுத்து கருவாட்டுக் குழம்பு, கழுகின் ரத்தம் என்பதும். மற்றதை மொக்கை என்பதும், வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    வால் பையன் இது போல் பேசுவதை தவிர்க்க வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  28. //இவங்க எழுதுறதுதான் எழுத்து கருவாட்டுக் குழம்பு, கழுகின் ரத்தம் என்பதும். மற்றதை மொக்கை என்பதும், வன்மையாக கண்டிக்கத் தக்கது. //

    நான் சாருவை கிண்டலடித்தது கூட தெரியாமல் காமெடி செய்யும் நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல காமெடி பீஸ் தான்!
    உங்களுக்கு சப்சூட்டே கிடையாது!

    ReplyDelete
  29. "பதிவுலக பீஷ்மர்", பிரபல எழுத்தாளர் செல்லதுரை அவர்களை "வால்பையன்" சாடியிருப்பது கண்டிக்கத்தக்கது... அவரின் படைப்புகள் அனைத்தும் நல்முத்து...

    இவர் மதுரைக்காரர் என்றும் தன் சுய அறிமுகத்தை பின்வருமாறும் தன் வலையில் சொல்லியிருக்கிறார்...

    chelladurai c
    Madurai, Tamilnadu, India
    பிறந்தாச்சு .. வாழ்வோம்.. முடிந்தால் நல்லவனாக நன்றாக !!! இல்லை எப்படியாவது...

    இதை படித்து "வால்பையன்" என்ன சொல்ல போகிறார்.... நாடே அறிந்த ஒரு பிரபல பதிவரை போற்றுங்கள்... பாராட்டுங்கள்....

    (இவண் : அகில உலக பிரபல வலைஞர் செல்லதுரை ரசிகர் மன்றம்)

    ReplyDelete
  30. //நாடே அறிந்த ஒரு பிரபல பதிவரை போற்றுங்கள்... //

    அது எந்த நாடுன்னு சொன்னிங்கன்னா, அந்த மொழியை கத்துகிட்டு வந்து பாராட்டலாம், போற்றலாம்!


    //அகில உலக பிரபல வலைஞர் செல்லதுரை ரசிகர் மன்றம்//

    அவ்ளோ தானா, சொம்பு எதாவது இருக்கா!?


    பதிவுலக பீஷ்மர்னா என்ன?
    வயசானவர்னு அர்த்தமா!?

    நீங்க அவரை வச்சு காமெடி பண்றிங்கன்னு நினைக்கிறேன்!
    பாவம் அவரு விட்றுங்க!

    ReplyDelete
  31. நன்றி...செய்யது!!

    இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. அறிமுகத்திற்கு நன்றி.........

    நிறைய பதிவர்களை காண முடிந்தது...........

    ReplyDelete
  33. //பிறந்தாச்சு .. வாழ்வோம்.. முடிந்தால் நல்லவனாக நன்றாக !!! இல்லை எப்படியாவது... //
    அனானி !

    நீங்க சமத்துவ மகள்கள் கட்சில சேந்தா பிரைட் FUTURE இருக்கு

    ReplyDelete
  34. //நீங்க சமத்துவ மகள்கள் கட்சில சேந்தா பிரைட் FUTURE இருக்கு //

    கட்சியில மூணாவது ஆளு இவரு தாங்கிறதால நல்ல பதவி கிடைக்கலாம்!

    ReplyDelete
  35. இப்படி எழுதி தான் ஈர்த்து வைத்திருக்கிறாயா எங்களை? இது உனக்கே உனக்கு மட்டும் சாத்தியபட்ட ஒன்று...இங்கு கருத்திட்ட அனைவரையும் கவர்ந்திருக்கிறது உன் எழுத்து நடை...

    ReplyDelete
  36. //அவருக்கு தான் மண்டையெல்லாம் உடம்பு, உடம்பெல்லாம் மண்டை!//


    உங்களுக்கு எதுகை மோனையே வராதா ! இத கொஞ்சம் டிங்கரிங் பண்ணினா நல்லா இருக்கும் !

    ReplyDelete
  37. பதிவர்களை அறிமுகப்படுத்திய விதம் அழகோ அழகு வாழ்த்துக்கள் செய்யது...

    ReplyDelete
  38. //மனம் தொடும் கதைகளை படிக்க இங்கே செல்லுங்கள்...//

    எங்க தொடும் !

    ReplyDelete
  39. ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் போல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ஆரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வ‌லியோடு பிர‌ச‌விக்கிறான்.
    //

    பிரமாதம் தம்பி.! உங்கள் நட்புக்கு நான் பெருமைகொள்கிறேன்.

    ஆனால் டேய்.. தம்பி, இத்தனை வல்லவர்களை சுட்டிக்காட்டிவிட்டு எனக்கான சாம்பிள் தர இந்தக்கதைதான் கிடைத்ததா? ஏதாவது எனக்கு மொத்து வாங்கித்தரலாம் என்ற எண்ணமா? உன்ன.. (நறநற..)

    ReplyDelete
  40. //
    எங்க தொடும் ! //


    அதான் சொல்லிட்டாருல்ல!

    பொம்பளை புள்ளைங்களை அந்த பக்கம் அனுப்பாதிங்கப்பா!

    ReplyDelete
  41. //அவ்ளோ தானா, சொம்பு எதாவது இருக்கா!?//


    ஹா ஹா ஹா !

    செட்டப் செல்லத்துரை !
    ரைமிங்கா இல்ல !

    ReplyDelete
  42. //செட்டப் செல்லத்துரை !
    ரைமிங்கா இல்ல ! //

    யாரு
    செட்டப் செல்ல்லப்பாவோட தம்பியா!?

    ReplyDelete
  43. //www.idhayame.blogspot.com //

    மாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டானுன்களே !

    ReplyDelete
  44. செட்டப் செல்லப்பா தெரியாது !

    அந்த ஐஸ் விக்கற பார்ட்டி !

    பஸ் ஸ்டாண்டு கிராக்கி !

    யோவ் ! அதான் அந்த ஓசி...............................................!

    ReplyDelete
  45. //மாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டானுன்களே ! //

    இப்படியெல்லாம் கூட ஐட்டம் இருக்கா தல!

    ReplyDelete
  46. //செட்டப் செல்லப்பா தெரியாது !//

    இப்ப தெரியுது தல!

    ReplyDelete
  47. அதே தான் !

    அவனும் எத்தன நாளைக்கி தான் ஒட்டு மீசைய ஓட்டிகிட்டு
    உள்ளத்துல சோகத்த வெச்சுகிட்டு ...

    நடை பிணமா வாழறது !

    ReplyDelete
  48. //எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.//

    இது ரைட்டு!

    ReplyDelete
  49. //எல்லாருக்கும் எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.//

    இது ரைட்டு! //


    மாறி வந்துருச்சுங்கோவ்!

    ReplyDelete
  50. //அவனும் எத்தன நாளைக்கி தான் ஒட்டு மீசைய ஓட்டிகிட்டு
    உள்ளத்துல சோகத்த வெச்சுகிட்டு ...//


    ஹா ஹா ஹா ஹா!

    ReplyDelete
  51. //"வலையுலக பிரம்மா" பிரபல எழுத்தாளர் செல்லதுரை" //

    அப்பிடியே ஒரு வாடக சைக்கிள் எடுத்து கிட்டு ஊருக்குள்ள இத சொல்லிகிட்டே ஒரு நாலு ரவுண்டு வரலாம் !

    ReplyDelete
  52. //அப்பிடியே ஒரு வாடக சைக்கிள் எடுத்து கிட்டு ஊருக்குள்ள இத சொல்லிகிட்டே ஒரு நாலு ரவுண்டு வரலாம் ! //

    வீடு வீடா பிட் நோட்டீஸ் கூட போடலாம்!

    ReplyDelete
  53. நாந்தான் லேட்டா

    படைப்பாளிகளை விமர்சித்த விதம் அருமை

    ReplyDelete
  54. //காதல் மிகவும் புனிதமானது.

    அதன் மென்மையும் மேன்மையும் நேர்த்தியும் புரியாமல், காமத்தை கரகாட்டம் ஆடும் சாருவோ அவருக்கு தூக்கி பிடித்து கொண்டு வரும் வால்களோ மனித மனத்தின் இனிமையை உணர மாட்டார்கள்.//

    அட ராமா ! என்ன ஏன் இந்த களிசட கன்றாவியெல்லாம் படிக்க வெக்கற !

    ReplyDelete
  55. // அந்த இதயமே பிளாக் போய் வாசித்தேன். ரொம்ப நல்ல கதை. //


    இது எப்பிடி தெரியுமா இருக்கு !

    மச்சி ! நீ கேளேன் !

    ReplyDelete
  56. ஹேய்..இங்க பாருய்யா...நம்ம ப்ளாக்கையும் சைலண்ட்டா படிச்சுட்டு வந்திருக்காரு பயபுள்ள... நீங்க அறிமுகப்படுத்தின வரிகளைப் படிச்சா ரொம்ப கூச்சமா இருக்குங்ணோவ்.... வாழ்த்துக்கள்ங்ணா,வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு..கலக்குங்க...

    ReplyDelete
  57. வலைச்சரம் ஆசிரியருக்கு இரெண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  58. //
    ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.
    //

    உண்மைதான் எழுதுவதிற்கு எதில், எப்போது, எண்ணங்கள் உருவாகும் என்று அறுதியிட்டு சொல்லவே முடியாது.

    ReplyDelete
  59. //
    காய்ந்த இலைச்சருகுகளில் தீப்பொறி பட்டு பற்றி எரிதலைப் ல,கற்பனைக் கோடுகளில் ஒரு புள்ளி முழுமையான படைப்புக்கான நெருப்பைக் கொணர்கிறது.அது ஒரு மழை நாளில் ரம்பிக்கலாம்.அல்லது அடர்ந்த இருளின் மறைவில் உறங்கி கொண்டிருக்கலாம்.
    //

    நல்ல தீர்க்கமான அலசல்!!

    ReplyDelete
  60. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே..

    ReplyDelete
  61. //
    எதோ ஒரு புத்தகத்தின் ஒரு மூலையில் சிதைந்திருக்கும் ஒரு வார்த்தையால் தட்டி எழுப்பப்படலாம்.அல்லது பேருந்தில் முன் இருக்கையில் தன் தாயின் தோளில் கண்ணயர்ந்திருக்கும் சிறுகுழந்தையின் கண்களிலிருந்து துவங்கலாம்.இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.கற்பனைச் சிறகுகள் பறக்க முயலும் தருணம் வரை அதை வண்ணந்தீட்டி கொண்டே இருக்கிறான்.அவ்வப்பொழுது மனதிற்குள் அதற்கு உருப்போடுகிறான்.அழகு குறையாமல் சூசகமாக செதுக்குகிறான்.மொழி பிசகாமல் மெளனமாக கதையோடு உரையாடுகிறான்.உறவாடுகிறான்.இறுதியில் தாயின் வ‌லியோடு பிர‌ச‌விக்கிறான்.
    //

    அருமையான விளக்கம். உணமைதான். எண்ணங்களின் வண்ணங்கள் தோன்றும் அருமையான தருணம் இல்லையா?

    ReplyDelete
  62. //
    ஒவ்வொரு ப‌டைப்பிற்குமுண்டான‌ அடிப்ப‌டை வேத‌னையை அனுப‌வித்து,பார்த்து பார்த்து த‌ன் க‌தைக‌ளை செதுக்கும் ப‌டைப்பாளிக‌ளுக்கான‌ அறிமுக‌ம் இன்று.
    //

    ஒரு படைப்பாளியின் விவேகத்தை விவரித்த விதம் நன்றாக இருந்தது செய்யது. மிகவும் ரசித்தேன் :)

    ReplyDelete
  63. நீங்கக் கூறி இருப்பவர்கள் அனைவருமே அருமையா எழுதக் கூடியவங்க.

    மேலும் புதியதாய் வந்திருப்பவர்களுக்கு வலைச்சரம் வாயிலாக கிடைத்த முத்துக்கள்!

    வலைச்சரத்தில் இன்று மிளிர்ந்து கொண்டிருக்கும் அனைத்து வலைபூக்களின் செல்வங்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  64. //
    ஒரு படைப்பு எப்படி உருவாகிறது.அது தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது என்று எங்கோ படித்ததாக நினைவு.
    //
    ஏதோ முரன்பட்டாமாதிரி இருக்கு.. என்னான்னு சொல்லத்தெரியலை..

    ReplyDelete
  65. //
    இப்படித்தான் கதைகள் பிரசவிக்கின்றன என்று எந்த ஒரு படைப்பாளியும் அறுதியிட்டு சொல்வதில்லை.
    //
    ம்ம்.. பல காலகட்டங்களில் பல நாட்களின் சில நிமிடங்களில் ஏதாவது நொடித்துளிகளில் எங்கேயாவது உதிக்கும் கதைக்கருவினை அறுதியிட்டு இங்குதான் உதயமாகும் என்று சொல்லமுடியாதுதான்..
    சூப்பர்..

    ReplyDelete
  66. எனக்காக இவ்வளவு தூரம் வந்து கருத்து சொன்ன அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!

    ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

    ( வாலு !!!! இந்த இன்பிட்வீன் கேப்புல ஒரு கும்மி வேறயா ?? நல்லா இருங்க !! )

    ReplyDelete
  67. ஒரு படைப்பின் பொறி எங்கிருந்தும் கிடைக்கலாம் எனபதைச் சொல்லியிருக்கும் விதம் அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
  68. naan solrathukku onnum inga illa maps allathaaiyum periya manusanga solitaanga

    ReplyDelete
  69. நான்தான் ரொம்ம்ம்ப லேட்டு. அ.மு.செய்யது மன்னிக்க. வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி.

    உங்கள் அறிமுக உரை பிரமாதம். :)

    வித்யா

    ReplyDelete
  70. அழகாகத் தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது