07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 27, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...

தினம் ஒரு தித்திப்பு:

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு தேர்
தமிழுக்கும் நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கும் மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கும் மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைக்கு செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

இப்படி ஒரு காலத்தில் இருந்த தமிழ் மொழி இப்போது நமது மக்களிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே!. தமில், தமிள் இந்த மாதிரித்தான் பலர் உச்சரிக்கின்றனர், பலர் எழுதுகின்றனர். இதற்க்கு காரணம் அவர்களது நாக்கில் வார்த்தை நுழைய வில்லையா அல்லது ஒரு கெளரவத்திற்காக அப்படி பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. சிலர் டமில் என்று உச்சரிக்கின்றனர் கேட்டால் ஆங்கிலத்தில் (Tamil) அப்படிதான் எழுதி இருக்கு என்கிறார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது போய், சங்கு வைத்து தமிழ் புகட்ட வேண்டி உள்ளது. என்ன கொடுமை அய்யா(சார்) இது.


தினமும் அறிமுகம்: (கவிதை ஊற்றுகள்...) - நன்று கவிதை எழுதுபவர்கள்...

தியாவின் பேனா - தியாவின் பேனா பேசுகிறது - (தியாவின் பேனாமுனையிளிருந்து உதிரும் உதிர்வுகள்)


மலிக்கா -
நீரோடை (நம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும்)
கலைச்சாரல் (எண்ணங்களில் உதித்த கை வண்ணங்கள்)

தமிழரசி - எழுத்தோசை (என் எழுத்துக்களின் ஓசை!)

வசந்த் குமார் - பிரியமுடன்......வசந்த் (ONLY FOR ENTERTAINMENT... DON'T SEARCH LOGIC...)


சந்திப்போம் சிந்திப்போம்...

4 comments:

 1. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது போய், சங்கு வைத்து தமிழ் புகட்ட வேண்டி உள்ளது. என்ன கொடுமை அய்யா(சார்) இது.//

  உண்மைதான். :((

  அறிமுகங்களும் சிந்தனைக்கு விருந்தும் அருமை.

  ReplyDelete
 2. அன்பின் வணங்காமுடி

  தமிழ் வளர்க்க வேண்டும் - வளர்ப்போம்

  அறிமுகங்கள் அருமை

  அறிமுகப்படுத்தும் பொழுது கவிஞர்களைப் பற்றி - அவர்கள் கவிதைகள் பற்றி சிறு குறிப்பு கொடுத்தால் நலமாய் இருக்கும். பதிவினிற்கே சுட்டி கொடுக்காமல் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று இடுகைகளுக்குச் சுட்டி கொடுத்து அவற்றின் சிறப்பினையும் எடுத்துரைத்தால் நலமாய் இருக்கும்.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நன்றிகள் நண்பரே அறிமுகத்திற்க்கு...

  ReplyDelete
 4. என்னுடைய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி தோழமையே..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது