செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்
அன்பின் சக பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் சிவசு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ ஐம்பதர்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, தன் கடமையைச் சரிவரச் செய்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் புதிய - அறிமுகம் இல்லாத பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் அனைத்துமே சிறந்த இடுகைகள் தான்.
அன்பு நண்பர் சிவசுவினை வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து ஒன்பதாம் நாள் துவங்கும் வாரத்திற்கு சகோதரி சுபா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் பொதுவாக மொக்கைக்குழுமத்தில் கலக்கிக் கொண்டிருந்தாலும் , என் உலகம் மற்றும் நளபாகம் என்னும் குழுமப் பதிவிலும் இடுகைகள் இட்டு வருகிறார்.
சகோதரி சுபா மலேஷியாவில் ஒரு உள்நாட்டு வங்கியில் பணியாற்றி, பிறகு ஆசிரியத் தொழிலை ஏற்றவர். அங்கிருந்து இந்தியாவிற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் வந்து இங்கு ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ் கற்றவர் - தமிழ் அறிந்தவர்.
சகோதரி சுபாவினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்க என வலைச்சரத்தின் சார்பினில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteதமிழ் கற்றவர் - தமிழ் அறிந்தவர்.
ReplyDeleteசகோதரி சுபாவினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்க வாழ்த்தி வரவேற்கிறேன்
நிகழ்காலத்தில் சிவா
//அங்கிருந்து இந்தியாவிற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் வந்து இங்கு ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.//
ReplyDeleteஇதென்ன கலாட்டா? அம்மணி மலேசியாவில் தான் பணி புரிகிறார்.