07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 24, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் தினமும் பல இன்பங்கள் துன்பங்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறது ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் வேகம் விவேகம் புத்திசாலித்தனம் தைரியம் தன்னம்பிக்கை ஆகியவற்றை கொண்டு எல்லாவற்றையும் இன்ப துன்பங்களை துணிச்சலாக எதிர் கொண்டு முன்னேறி வர வேண்டும் அனைத்து வேலைகளிலும் நமது அக்கறையையும் ஆர்வத்தையும் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

இதெல்லாம் இந்த கால இளைஞர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.
1. அவன் கிடக்கிறான் லுசுப்பய. அப்பாவ பாத்து அவனுடைய நண்பன் கிட்ட இப்படி சொல்கிறான் ஒரு இளைஞன்.

2. இதோ பாருடா தகர டப்பா தலையன். இது இரு கல்லுரி நண்பர்கள் அவர்களது வகுப்பு ஆசிரியரை பார்த்து இப்படி சொல்கிறார்கள்.

3. இவன் வந்தாலே இப்படிதான். இது வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்களை பார்த்து அவனது நண்பனிடம் சொல்லுகிறான் ஒரு இளைஞன்.

4. அவள பாக்கும் போதெல்லாம் வானத்துல பறக்கற மாதிரியே இருக்குடா . இது ஒரு இளைஞன் அவனது நண்பன் ஒருவனிடம் அவன் ஒன்று அல்ல இரண்டல்ல எந்த பெண்ணை பார்க்கும் போதும் இது மாதிரி சொல்லுகிறான்.

5. அவன் எப்பபாரு புருடா விடுவாண்டா. ஒரு நண்பனை பற்றி இன்னொரு நண்பனிடம் இது போன்று சொல்லுகிறான்.

இதை பற்றி உங்கள் கருது வரவேற்க்கப்படுகிறது

தினமும் அறிமுகம்:

நசரேயன் - என் கனவில் தென்பட்டது இவரது ஐ டி யின் அவலம் அழிச்சாட்டியம்
பாகம் 1 - பாகம் 1
பாகம் 2 - பாகம் 2


பாரதி - தமிழ் நிதி இந்த தளத்தில் எப்படி பணத்தை சம்பாதிப்பது அல்லது சேமிப்பது என்ற விசயங்கள் சொல்லப்பட்டு இருக்குதுங்கோ. பங்கு சந்தை நிலவரம், பொருளாதாரம், வியாபாரம் என பல பயனுள்ள தகவல்கள் மற்றும் விமரிசங்கங்களை பார்க்க முடிகிறது.


பெருந்தேவி இன்ன பிற இவர் கவிதை, கதை என எழுதி வருபவர்

தினம் ஒரு தித்திப்பு 2:
எளிதாக சாதிக்கக்கூடிய சிறிய காரியங்களைக் கொடுத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் உற்சாக மூட்டுங்கள் என்று கூறுகிறார்கள் மனநூலார் இப்படிப் பல சிறிய சாதனைகள் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன ஒரு வெற்றி மனநிலையை அவை அமைத்து விடுகின்றன இந்த அனுபவம் பின்னால் பெரிய லட்சியங்கள் சாதனையாவதற்கு வழி காட்டுகிறது குழந்தைகளை வளர்க்கும்போது நமக்கு வீட்டிலும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கூடத்திலும் எத்தனை பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள் ஏ மக்கு நீ உருப்படமாட்டாய் என்று கோபப்படும் ஆசிரியர் மாணவரின் எதிர்காலத்திற்கு எத்தனை கேடு புரிகிறார் என்பதைச் சற்று கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள்

சந்திப்போம் சிந்திப்போம்...

16 comments:

 1. me the firsta இரண்டாம் நாள் வாழ்த்து சொல்லிக்கறேன்.

  பதிவை படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 2. இதை பற்றி உங்கள் கருது வரவேற்க்கப்படுகிறது//

  வளர்ப்பு சரியில்லை. :(

  ReplyDelete
 3. எளிதாக சாதிக்கக்கூடிய சிறிய காரியங்களைக் கொடுத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் உற்சாக மூட்டுங்கள் என்று கூறுகிறார்கள் மனநூலார் இப்படிப் பல சிறிய சாதனைகள் மனதில் ஒரு பழக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றன ஒரு வெற்றி மனநிலையை அவை அமைத்து விடுகின்றன இந்த அனுபவம் பின்னால் பெரிய லட்சியங்கள் சாதனையாவதற்கு வழி காட்டுகிறது//

  ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அப்ப வாத்தியாரை தகர டப்பா தலையன்னு சொல்லக்கூடாதா!?

  ReplyDelete
 5. அன்பின் அண்ணன் வணங்காமுடி

  நல்ல சிந்தனை - தினம் ஒரு தகவல் - ம்ம்ம் - அறிமுகங்களும் நன்று - கருத்து கேட்கும் பகுதி தவிர்க்கலாமே !

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அப்பாவோ, ஆசிரியரோ, உறவினரோ, சக தோழியோ அல்லது நண்பனோ இணக்கமானவராக இருக்கும் போது விளையாட்டாக பேசுவது என்பது வேறு. புரிதல் இருந்து அப்படி பேசினால் அதை நாம் எடுத்துக் கொண்டு விவாதிக்க இயலாது. அப்படி இல்லாத பட்சத்தில் சங்கடம் தான்.

  /-- இதை பற்றி உங்கள் கருது வரவேற்க்கப்படுகிறது --/
  இது தமிழ் சினிமாவின் வழியாக பரவிய நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்தவர்களை காயப்படுத்தாமல் யாராலும் சிரிக்க வைக்க முடியவில்லை.

  சற்று ஆழ்ந்து பார்த்தால் சுஜாதாவின் பதில் தான் ஞாபகம் வருகிறது. எல்லோருமே சக மனிதர்கள் மீது எரிச்சல் படவே ஆசைப்படுகிறோம் (ஆய்வுக் கட்டுரையை உதாரணமாகக் கொடுத்திருப்பார்). பல நேரங்களில் அதனை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வேடிக்கையாக செய்துவிடுகிறோம்.

  ReplyDelete
 7. // அவள பாக்கும் போதெல்லாம் வானத்துல பறக்கற மாதிரியே இருக்குடா .//

  இதெல்லாம் இந்த கால இளைஞர்கள் சொல்ற வாக்கியங்கள்
  மாதிரி தெரியலையே நம்ம தாத்த காலத்துலேயே இப்படி எல்லாம் சொல்லியிருக்காங்களே.

  இப்ப எல்லாம்
  அவள பாத்தா

  என் உச்சி மண்டையில கிர்ருங்குது
  சுர்ருங்குது
  டர்ருங்குது
  இப்படி தானே சொல்றாங்க.

  ReplyDelete
 8. //
  இதெல்லாம் இந்த கால இளைஞர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.
  1. அவன் கிடக்கிறான் லுசுப்பய. அப்பாவ பாத்து அவனுடைய நண்பன் கிட்ட இப்படி சொல்கிறான் ஒரு இளைஞன்.
  //

  ம்ம்ம் கஷ்டமாத்தான் இருக்கு :(

  ReplyDelete
 9. //
  2. இதோ பாருடா தகர டப்பா தலையன். இது இரு கல்லுரி நண்பர்கள் அவர்களது வகுப்பு ஆசிரியரை பார்த்து இப்படி சொல்கிறார்கள்.
  //

  ஒன்னும் சொல்றதுக்கு இல்லே, நீங்க யாருக்கும் இப்படி பேரு வைக்கலையே!

  ReplyDelete
 10. //
  3. இவன் வந்தாலே இப்படிதான். இது வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்களை பார்த்து அவனது நண்பனிடம் சொல்லுகிறான் ஒரு இளைஞன்.
  //

  இந்தக் கால இளைங்கர்கள் இப்படி எல்லாமா பேசறாங்க!!

  ReplyDelete
 11. //
  4. அவள பாக்கும் போதெல்லாம் வானத்துல பறக்கற மாதிரியே இருக்குடா . இது ஒரு இளைஞன் அவனது நண்பன் ஒருவனிடம் அவன் ஒன்று அல்ல இரண்டல்ல எந்த பெண்ணை பார்க்கும் போதும் இது மாதிரி சொல்லுகிறான்.
  //

  பார்த்து பறக்க சொல்லுப்பா தொப்புன்னு கீழே விழுந்தா இடுப்பு ஒடிஞ்சி போய்டும்:)

  ReplyDelete
 12. //
  5. அவன் எப்பபாரு புருடா விடுவாண்டா. ஒரு நண்பனை பற்றி இன்னொரு நண்பனிடம் இது போன்று சொல்லுகிறான்.
  //

  சொல்லிட்டு போறாரு விட்டுடுங்க, அவரை பத்தி வேறு யாரவது அப்படி சொல்லுவாங்கதானே!

  ReplyDelete
 13. //
  இதை பற்றி உங்கள் கருது வரவேற்க்கப்படுகிறது
  //

  கருத்து திகட்ட திகட்ட சொல்லிட்டேன்:-)

  ReplyDelete
 14. //
  ஏ மக்கு நீ உருப்படமாட்டாய் என்று கோபப்படும் ஆசிரியர் மாணவரின் எதிர்காலத்திற்கு எத்தனை கேடு புரிகிறார் என்பதைச் சற்று கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள்
  //

  அருமையான கருத்து, அதெ நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. இன்று ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க. நாளைக்கு? பொறுத்திருப்போம்...

  ReplyDelete
 15. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
  you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது