07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 23, 2009

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் பதிவர்கள்

இன்று நான் அறிமுகப்படுத்துபவர்களை 'என் குலம்' என்று அழைக்கப்போகிறேன். ஏனென்றால், இவர்கள் வலையுலகிற்கு அறிமுகமானது அல்லது வலையுலகம் இவர்களுக்கு அறிமுகமானது எல்லாம் கிட்டத்தட்ட எனக்கு நிகழ்ந்த அதே காலகட்டத்தில் (அப்படித்தான் நான் நம்பிகிட்டு இருக்கேன்). எனது கூகிள் ரீடர் பக்கத்தில் இவர்களது வலைப்பூக்களை 'என் குலம்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளேன்.
     முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இவர் எழுதியுள்ள இடுகை 'முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை'. இப்போகூட அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும் இன்னொரு விசயத்தைப் பற்றி ஒரு இடுகை இட்டிருக்கிறார்.


ஹாலிவுட் பாலா - அக்கரைச்சீமை:
     நான் செல்லமாக இவரை ஹாலிபாலா என்றே அழைக்கிறேன். ஹாலிவுட் படங்களையும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார். 'பிக்சார்' நிறுவனம் தொடர்பாக இவர் 18-க்கு அதிகமான இடுகைகளை இட்டுள்ளார். அதில் முதலாவது 'The Pixar Story (2007)'. இப்போது சினிமாவின் அடுத்த அவதாரமான 'அவதார்' பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.


சுபானு - ஊஞ்சல்:
     இதயத் திருடி அவள் என்ற ஓர் இடுகையின் மூலம் எனக்கு அறிமுகமானது என நினைக்கிறேன். TFT இப்படியான புதிர் மூலம் பிறந்ததேதி கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறியவர். இப்போது 'மின்மினி தேசம்' என்று ஒரு தொடர் எழுதுகிறார்.  


கணேஷ் - கணேஷின் பக்கங்கள்:
     கணேஷ் ஏற்கெனவே வலைச்சரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரது 'அடாவடி பொண்ணும் அப்பாவி பையனும்' என்கிற தொடர்கதைக்காக மீண்டும் ஒருமுறை இங்கே. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது கணிணிமுன் அமர்ந்ததும் அனிச்சையாய் விரல்கள் தட்டும் முகவரி, இவரது வலைப்பூவினது. கதையோடு எனக்கு அந்த அளவிற்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது.


அன்புடன், 

10 comments:

 1. இவர்கள் வலையுலகிற்கு அறிமுகமானது அல்லது வலையுலகம் இவர்களுக்கு அறிமுகமானது எல்லாம் கிட்டத்தட்ட எனக்கு நிகழ்ந்த அதே காலகட்டத்தில் (அப்படித்தான் நான் நம்பிகிட்டு இருக்கேன்)]]

  இப்படி கூட வகைப்படுத்தலாமோ ...

  வாழ்த்துகளுங்கோ

  ReplyDelete
 2. வாழ்த்துகள்.

  தம்பி ஹாலிவுட் பாலாவிற்கு Cheers.

  ReplyDelete
 3. நீவிரும் உங்கள் குலமும் வாழ்க.

  ReplyDelete
 4. சுபானு மட்டும் புதியவங்க.. மத்தவங்க எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நம்ம குலம்தான்.. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அன்பின் ஊர்சுற்றி - அருமையான அறிமுகம்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்களுங்கோ.....

  ReplyDelete
 7. அறிமுகங்கள் அருமை. தொடர்ந்து கலக்குங்க ஊர்சுற்றி!!

  ReplyDelete
 8. நல்வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது