07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 29, 2009

அட..மற்றும் அடடே..

வணக்கம்ணே. என்னாடா நேத்து இடுகையில தமிழ் கட்டுரை மாதிரி எழுதிட்டானே வானம்பாடின்னு பாக்கறீங்களா. கோவிலுக்கு போனா மேல் வேட்டிய போர்த்தி ஒரு பயபக்தி வேணுமா இல்லையா? சாமி கும்பிட்டாச்சி. நம்ம பேருக்கு அர்ச்சனைய பண்ணியாச்சி. இனிமே வேல வெட்டிய பார்க்கலாம் வாங்க.

மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது.

தோ! இந்த சிங்கம் களமிறங்கிருச்சேய்னு உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். வலைச்சரங்கரது ஒரு லைப்ரரி மாதிரி. வலையுலகத்துக்கு புதுசா வந்தவங்கள அறிமுகப் படுத்தறது மட்டுமே நம்ம வேலையில்ல. நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?

நமக்கு பாருங்கண்ணே கட்டம் சரியா இருந்திருக்கு. பின்ன என்னண்ணே தமிழே தேடி வந்து தட்டி குடுத்துச்சு. பழமை பேசலாம் வாடான்னு வழிகாட்டிச்சி. மண்ண மறக்காம நல்ல தமிழ் எழுத, தமிழ்ச் சுரங்கத்துல தங்கம் தேடி எடுக்கன்னு தம்பி 500 பேழைக்கு மேல சேர்த்து வச்சிருக்கு. ஏண்ணே! மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே! அந்த நனவச் சொன்ன அழகு இருக்கே. நினைச்சாலே தேனுண்ணே. படிக்காதவங்க படிங்க. பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க.

நம்ம வீட்ல இருக்குற விசுக்கான கூப்டு, ஏ தம்பி இங்கவாடா, திருக்குறள் படிப்போம்னு சொல்லி பாருங்க. வகுத்த வலிக்குதுன்னு சீனு போடும். செல்ல கூப்டு கைல குடுத்து, ஏப்பு, இதில ஒரு திருக்குறள் அனுப்பணும்டான்னு சொல்லி பாருங்க, வெடுக்குன்னு பறிச்சிகிட்டு பர பரன்னு பட்டன தட்டுவான்ல. இந்த டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க?

"எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை."  இப்புடியுமா டரியலா ஒரு முதல் இடுகை போடுவாங்க?  சின்ன வயசு விக்கிரமாதித்தன் கதையில காதல் சொல்ல முடியும்னு இங்கதான் படிச்சேன். எழுத்துல ஒரு ஆசிரியரோட கண்ணியம் தெரியணுமா, மாற்றுக் கருத்தை பக்குவமா சொல்லத் தெரியணுமா இவரைப் படிக்கணும். அது சரின்னு பேர்ல எழுதுனாலும் எது சரியோ அதுதான் சரின்னு சொல்லுற பக்குவம் படிக்க இவரைப் படிச்சே ஆகணும்ணே.

எந்த பந்த போட்டாலும் விளாசுவேன்னு விளாசிட்டு வீசுனேன், மட்டையில பட்டு சிக்சராயிடிச்சின்னு சொன்னா எப்படி இருக்கும். பிதற்றல்கள்னு சொன்னா மட்டும் அப்படி இருக்குமா என்ன. முகிலனின் பிதற்றல்கள் அப்படித்தான். இவரோட க்ரைம் தொடர்கதையை படிச்சிப் பாருங்க. சுஜாதாவோ, பெரிமேசனோ மனசுக்கு புடிச்ச எழுத்தாளர் கவனம் வருவாரு. எந்த இடுகை சொடக்கினாலும் அங்க முகிலன் அப்பா இருப்பாரு.

க‌.பாலாசி: என் சமகால பதிவர். கொங்குநாட்டு குசும்பு மொத்தத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துட்டாருண்ணே. 25வயசுல  75 வயது பெருசு மாதிரி உலகத்த பார்க்குற பார்வை எங்க படிச்ச பாலாசி. சொல்லிக் கொடேன்! பதிவுலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி பரிசுன்னு ஒரு மெடல் படம் குடுக்குறோமே. அந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நேர்த்தியா எங்கனயாச்சும் படிச்சிங்களா சொல்லுங்க!

புதுசா எழுத வந்து 'அட' போட வச்ச ரெண்டு மூணு பேர சொல்லியாகணும்.

பிரபாகர்: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூ தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் நூற்றுக்கும் அதிகமான இடுகைகள், கவிதைகள்னு அசத்தினவரு . அண்ணன் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டதாக சரித்திரமில்லை. ஒரு கிராமத்து வாலிபனின் அலப்பறைகளை படிப்பவர் சிரிக்காமல் இருக்க முடியாது.

பாலவாசகன்:மருத்துவக் கல்லூரி மாணவன். யாழ்ப்பாணத் தமிழில் உணர்வு சொல்லக் கற்றவர். சிறகுகள் என்ற வலைப்பூவில எழுதுறாருண்ணே. படிக்கையிலயே அந்த மண் வாசனை, கடல் காற்று, அழகு தமிழ் மனச அள்ளிக்கிட்டு போயிருதுண்ணே. சிரிப்போடு வலியும் சொல்லத் தெரிஞ்சவருண்ணே.  இதப் படிச்சி பாருங்கண்ணே. மனசு எங்கிட்டோ ஒரு பக்கம் பிச்சி கொண்டு போயிட்டா மாதிரி வலிக்கும்.

சித்ரா: கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு ஒரு வலைப்பூ வச்சிருக்காய்ங்க.  எண்ட்ரீயே அசத்தலா ஆரம்பிச்சி அசத்துறவங்க. ஒருக்கா பாருங்க உங்களுக்கே புரியும்.

சரிண்ணே! பொழப்பப் பார்க்கலாம் வாங்க. நாளை சந்திப்போம்.

45 comments:

 1. அன்பின் பாலா

  சூப்பர் - அறிமுகம் அத்தனையும் அருமை - புதியவர்களையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியது அருமை - சுட்டப்பட்ட சுட்டிகள் - பலே பலே

  நல்வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 2. சூப்பரு... டூப்பரு... ஹிஹி... என்னோட அபிமான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய வானம்பாடிகள் வாழ்க..!

  ReplyDelete
 3. அய்யா,

  உங்களுக்கே உரிய பாணியில் அறிமுகப்படுத்தல். அதில் நானும் இருக்கிறேன் என்பது என்னை வியப்பிலாழ்த்தி திக்கு முக்காடச் செய்கிறது.

  நன்றிங்கய்யா. இன்னும் நிறைய எழுத வேண்டும் எனும் உத்வேகம் அதிகரிக்கிறது.

  பிரபாகர்.

  ReplyDelete
 4. //டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே//

  //புதியவர்களையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியது அருமை //

  !!!!!!!!

  ReplyDelete
 5. நல்ல பதிவர்கள், நல்ல அறிமுகம். மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 6. மொத பால்ல..யே சிக்ஸரா.... அசத்தல்..

  //அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது. //

  அதிலும் இது டாப்பு...::))

  ReplyDelete
 7. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

  அதிகம் புதிய சுட்டிகள் அவசியம் படித்திடுவோம் - நன்றி.

  ReplyDelete
 8. நட்சத்திரப் பதிவர்களோட என்னையும் அறிமுகப்படுத்துனதுக்கு நன்றி.

  நேத்திக்கு டெஸ்ட் மேட்ச் ஃபர்ஸ்ட் செஸ்ஸன் மாதிரி நிதானம்னா இன்னிக்கு அதே ஃபர்ஸ்ட் செஸ்ஸன்ல சேவாக் ஆடுன மாதிரி அதிரடி

  ReplyDelete
 9. அட பாதிப்பேரு நம்மாளுக... மிக்க மகிழ்ச்சி

  அதுசரி
  பாலவாசகன்
  முகிலன்
  சித்ரா.... இவர்களை இனி வாசிக்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 10. // Kavithayini said...
  நட்சத்திரப் பதிவர்களோட என்னையும் அறிமுகப்படுத்துனதுக்கு நன்றி.

  நேத்திக்கு டெஸ்ட் மேட்ச் ஃபர்ஸ்ட் செஸ்ஸன் மாதிரி நிதானம்னா இன்னிக்கு அதே ஃபர்ஸ்ட் செஸ்ஸன்ல சேவாக் ஆடுன மாதிரி அதிரடி
  //

  இது நான் போட்ட பின்னூட்டம்தான். தங்கமணி லாகின் பண்ணியிருந்ததப் பாக்காம தட்டிட்டேன்

  ReplyDelete
 11. இன்னும் அதுவரி சாரி அதுசரிய மட்டும் பாக்கல. பார்த்திடுவோம்.

  டேய் யார்ரா அது க.பாலாசி... இனிமேயாவது ஒழுங்கா எழுதுடா.....(மனசாட்சி)

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள் பாலா சார். அதுவும் உங்க பாணி மாறாமல் துண்டு அப்பப்ப இடம் மாறி அசத்துது.

  ReplyDelete
 13. எல்லாமே கலக்கல் தான். எல்லா ப்ளாக் படிச்சுருக்கேன்.

  ReplyDelete
 14. அறிமுகப் படுத்தியவர் அனைவரும் மிக நன்றாக எழுதுபவர்கள். நீங்கள் அறிமுகப் படுத்திய விதம் அழகு.

  இரண்டாம் நால் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. முதல் கவிதை உருக்கம் இரண்டாவது ...குறும்பு மூன்றாவது...குளிர்...நானகாவது குசும்பு...

  சரியா சார்.


  ஓரே பதிவுன்னா பின்னூட்டமும் ஒண்ணாதான் போடுவேன்

  ReplyDelete
 16. பாலாண்ணே, நெகிழ்ச்சியா இருக்குங்க... உங்களுக்காகவே அந்தத் தொடர் மறுபடியும் தொடரும்... ஊருக்கு போனதும்!

  ReplyDelete
 17. நல்ல பகிர்வு தல!

  ReplyDelete
 18. 2nd day அட்டெண்டென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

  present sir

  இதுதானே எனக்கு கிடைக்குற நேரம் எப்பிடியோ கிளாஸ்க்கு மறக்காம வந்துடுறோமா இல்லியா...?

  ReplyDelete
 19. //மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? //

  சமயத்தில கர்சீப்கூட...

  :)))))))

  ReplyDelete
 20. // நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?
  //

  கண்டிப்பா...!

  ஆனா முத்த பாத்து எப்பிடி படிச்சு எழுதி பழகுறது?

  :))

  ReplyDelete
 21. //பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க. //

  ஓஹ்...

  கண்டிப்பா...!

  பழமைபேசியார் உண்மையிலே...!

  ReplyDelete
 22. // எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க?//

  தல போல வருமா?

  ட்ட்ட்டிட்டுண்டின்

  தல போல வருமா?

  நடையில்,எழுத்தில்,அழகில் தல போல வருமா?

  ReplyDelete
 23. அது சரி இன்னிக்குத்தான் ஃபாலோஅப்பு குடுத்துருக்கேன்...

  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

  ReplyDelete
 24. முகிலன்

  நம்மூருப்பக்கந்தேன்...!

  வாசிக்கிறோம்ல பட்டாசு கிளப்புறாரு

  அந்த KKP விளக்கமும் ம்ம் டாப்பு...!

  ReplyDelete
 25. //க‌.பாலாசி: என் சமகால பதிவர்.//

  உங்களுக்கே ஓவரா தெரில இளஞ்சிங்கத்தை போயிஉங்க கூட சேக்குறீங்க பாலாசி பொறுத்துட்டா இருந்தீங்க...!

  ReplyDelete
 26. //பாலவாசகன்://

  வாழ்த்துக்கள் வாசு தொடர்ந்து எழுதுங்க நைனாவோட ஆசி கிடைச்சிடுச்சு பின்ன என்ன?

  ReplyDelete
 27. //சித்ரா//

  //பிரபாகர்//

  வாழ்த்துக்கள்ங்க...!

  ReplyDelete
 28. cheena (சீனா) said...

  /அன்பின் பாலா

  சூப்பர் - அறிமுகம் அத்தனையும் அருமை - புதியவர்களையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியது அருமை - சுட்டப்பட்ட சுட்டிகள் - பலே பலே

  நல்வாழ்த்துகள் பாலா/

  நன்றிங்க சீனா.

  ReplyDelete
 29. /கலகலப்ரியா said...

  சூப்பரு... டூப்பரு... ஹிஹி... என்னோட அபிமான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய வானம்பாடிகள் வாழ்க..!/

  ம்ம். நன்றி அம்மா.

  ReplyDelete
 30. பிரபாகர் said...

  அய்யா,

  உங்களுக்கே உரிய பாணியில் அறிமுகப்படுத்தல். அதில் நானும் இருக்கிறேன் என்பது என்னை வியப்பிலாழ்த்தி திக்கு முக்காடச் செய்கிறது.

  நன்றிங்கய்யா. இன்னும் நிறைய எழுத வேண்டும் எனும் உத்வேகம் அதிகரிக்கிறது.

  பிரபாகர்.//

  அசத்துங்க பிரபாகர்.

  ReplyDelete
 31. T.V.Radhakrishnan said...

  //டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே//

  //புதியவர்களையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியது அருமை //

  !!!!!!!!

  :). என்ன சார்.

  ReplyDelete
 32. பித்தனின் வாக்கு said...

  /நல்ல பதிவர்கள், நல்ல அறிமுகம். மிக்க நன்றி அய்யா./

  நன்றிங்க.

  ReplyDelete
 33. பலா பட்டறை said...

  மொத பால்ல..யே சிக்ஸரா.... அசத்தல்..

  //அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது. //

  அதிலும் இது டாப்பு...::))//

  நன்றிங்க.

  ReplyDelete
 34. நட்புடன் ஜமால் said...

  /இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

  அதிகம் புதிய சுட்டிகள் அவசியம் படித்திடுவோம் - நன்றி.//

  நன்றிங்க ஜமால்.

  ReplyDelete
 35. Kavithayini & முகிலன் said...

  நட்சத்திரப் பதிவர்களோட என்னையும் அறிமுகப்படுத்துனதுக்கு நன்றி.

  நேத்திக்கு டெஸ்ட் மேட்ச் ஃபர்ஸ்ட் செஸ்ஸன் மாதிரி நிதானம்னா இன்னிக்கு அதே ஃபர்ஸ்ட் செஸ்ஸன்ல சேவாக் ஆடுன மாதிரி அதிரடி//

  நன்றிங்க.:)

  ReplyDelete
 36. ஈரோடு கதிர் said...

  /அட பாதிப்பேரு நம்மாளுக... மிக்க மகிழ்ச்சி

  அதுசரி
  பாலவாசகன்
  முகிலன்
  சித்ரா.... இவர்களை இனி வாசிக்கிறேன்//

  வாங்க கதிர் நன்றி.

  ReplyDelete
 37. க.பாலாசி said...

  //இன்னும் அதுவரி சாரி அதுசரிய மட்டும் பாக்கல. பார்த்திடுவோம்.

  டேய் யார்ரா அது க.பாலாசி... இனிமேயாவது ஒழுங்கா எழுதுடா.....(மனசாட்சி)//

  அதான் சொல்லிட்டன்ல கொங்கு குசும்பு மொத்தக் குத்தகைன்னு. :))

  ReplyDelete
 38. S.A. நவாஸுதீன் said...

  /நல்ல அறிமுகங்கள் பாலா சார். அதுவும் உங்க பாணி மாறாமல் துண்டு அப்பப்ப இடம் மாறி அசத்துது.//

  நன்றிங்க நவாசுதீன்.

  ReplyDelete
 39. பின்னோக்கி said...

  /எல்லாமே கலக்கல் தான். எல்லா ப்ளாக் படிச்சுருக்கேன்.//

  நன்றிங்க.

  ReplyDelete
 40. இராகவன் நைஜிரியா said...

  /அறிமுகப் படுத்தியவர் அனைவரும் மிக நன்றாக எழுதுபவர்கள். நீங்கள் அறிமுகப் படுத்திய விதம் அழகு.

  இரண்டாம் நால் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்./

  நன்றிங்கண்ணே.

  ReplyDelete
 41. Balavasakan said...

  / ஓரே பதிவுன்னா பின்னூட்டமும் ஒண்ணாதான் போடுவேன்//

  வாசு தயாராயிட்டாரு அரச மருத்துவராக. எல்லா நோவுக்கும் ஒரே வெள்ள மாத்திரை:))

  ReplyDelete
 42. பழமைபேசி said...

  / பாலாண்ணே, நெகிழ்ச்சியா இருக்குங்க... உங்களுக்காகவே அந்தத் தொடர் மறுபடியும் தொடரும்... ஊருக்கு போனதும்!//

  பொங்கல் பரிசா:). நன்றி பழமை.

  ReplyDelete
 43. வால்பையன் said...

  /நல்ல பகிர்வு தல!/

  நன்றி அருண்.

  ReplyDelete
 44. பிரியமுடன்...வசந்த் said...

  // 2nd day அட்டெண்டென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

  present sir

  இதுதானே எனக்கு கிடைக்குற நேரம் எப்பிடியோ கிளாஸ்க்கு மறக்காம வந்துடுறோமா இல்லியா...?//

  அது சரி:))

  /சமயத்தில கர்சீப்கூட...

  :)))))))/

  டவல கர்சீப்புன்னு சொல்றவய்ங்களும் நம்மாளுங்கதான்.

  / பிரியமுடன்...வசந்த் said...

  // நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?
  //

  கண்டிப்பா...!

  ஆனா முத்த பாத்து எப்பிடி படிச்சு எழுதி பழகுறது?/

  ம்ம். முத்துமுத்தான எழுத்து.

  /நம்மூருப்பக்கந்தேன்...!

  வாசிக்கிறோம்ல பட்டாசு கிளப்புறாரு

  அந்த KKP விளக்கமும் ம்ம் டாப்பு...!/

  ஆமாம்

  /உங்களுக்கே ஓவரா தெரில இளஞ்சிங்கத்தை போயிஉங்க கூட சேக்குறீங்க பாலாசி பொறுத்துட்டா இருந்தீங்க...!/

  தப்புத்தான். ஆனா என் இமேஜ் பத்தி யோசிக்காம இவன பக்கத்துல சேர்த்த நேர்மைய பாராட்டணுமா இல்லையா.

  நன்றி.

  ReplyDelete
 45. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
  you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது