07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 1, 2009

சிரிச்சுகிட்டே ஆரம்பிக்கலாமா

வணக்கம் எல்லோரும் நல்லா இருக்கிங்களா அப்ப சரி. எனக்கு பொதுவா எந்த செண்டிமெண்டும் கிடையாது. ஆனா ஒரு விஷயத்திலும் மட்டும் உறுதியாய் இருப்பேன். அது என்னன்னா காலையில அழுது வடிஞ்சுகிட்டே சோகமாவோ, கோபமாவோ அந்த நாளை ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சா அன்னிக்கு பூராவும் உர்ருன்னு இஞ்சி தின்ன குரங்கா அலைய வேண்டி இருக்கும். அப்பறம் எதுக்கு முதல் நாள் உன் பதிவை எல்லாம் படிக்க சொன்னேன்னு கேள்வி கேட்கிறவங்களுக்கு மன்னிச்சுடுங்க மக்களே. இன்றைய பொழுது இனி உங்களுக்கு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

இவங்க பதிவை எல்லாம் படிங்க. சிரிப்புக்கு இவங்க கியாரண்டி, வாரண்டி எல்லாம் தருவாங்க.

நான் ஆதவன் ஆதவன் அப்படின்னு பேர் இருக்கே ஆதவன் படம் போல டெரர் ப்ளாக்கோ தப்பா நினைக்காதீங்க. இங்க போன 100% சிரிச்சுட்டு வரலாம் பாஸ். பாஸ் பாஸ்ன்னு நம்மளையும் ஒரு முதலாளியாக்கிடுவார் ஆதவன் பாஸ்

”விளம்பர உலகம்”டா இது! இவர் பதிவுக்கு எப்படி விளம்பரம் குடுத்து இருக்கார் பாருங்க‌

சுசி போலி டாக்டருன்னு சொல்லிகிறாங்க. ஆனா நிஜ டாக்டர் வேலையைதான் பாக்கறாங்க. பின்ன இவங்க பதிவை படிச்சு சிரிக்க ஆரம்பிச்ச பிறகு டென்ஷன் நோ நோ கவலை நோ நோன்னு பாட்டு பாடலாம். இவங்க பதிவுலகம் வந்ததுக்கு ஒரு பாவமன்னிப்பு கேட்டு இருப்பாங்க. கார்க்கியின் மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லி இருப்பாங்க. படிச்சு பாருங்க. சிரிக்காம திரும்ப மாட்டிங்க.

ராஜலட்சுமி பக்கிரிசாமி‍இவங்களும் காமெடியில கலக்கறவங்கதான். இவங்களோட கவிபுலமையை பாருங்களேன்.

லொள்ளு கார்த்திக் இந்த பேரு ஒண்ணே போதும். இவர் பதிவுல போய் சிரிக்காம வந்தா நீங்க நரசிம்மராவை விட சிடுமூஞ்சின்னு சொல்லலாம்.

இன்னிக்கு ஒண்ணாந்தேதி சிரிப்போட இந்த நாளையும் இந்த மாசத்தையும் ஆரம்பிங்க. இந்த மாசம் மட்டுமில்லாம எப்பவுமே சிரிச்சுகிட்டே ஆனந்தமா வேலை செய்ய என் வாழ்த்துக்கள்.

25 comments:

 1. சிரிச்சுகிட்டே ஆரம்பிச்சிருக்கீங்க.

  அருமை அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்ல தொடக்கம்.

  நல்ல அறிமுகங்கள்.நன்றி.

  ReplyDelete
 3. கடைசி ரெண்டு பேரும் தெரியும். மத்தவங்கள படிக்கிறேன். சிரிக்கிறேன். :) :)

  ReplyDelete
 4. :) போலி டாக்டர் தான் எங்களுக்கு நல்லா தெரியும். அப்பறம் நான் ஆதவனும் தெரியும். மத்தவங்களையும் விட்டு வைப்பானேன். :)

  ReplyDelete
 5. :-)))))

  ஆரம்பத்துல ஆரம்பிச்சாச்சா !!! நினைச்சேன்.மொத பதிவே இப்படி தான் இருக்குமுன்னு !!! ரைட்டு நடத்துங்க பாஸூ..

  ReplyDelete
 6. நல்ல தொடக்கம், அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 7. //செ.சரவணக்குமார் said...

  நல்ல தொடக்கம், அறிமுகங்களுக்கு நன்றி.//

  repeattu..! அசத்துங்க..!

  ReplyDelete
 8. சிரிச்சுகிட்டே ஆரம்பிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ப்ரியா....

  ReplyDelete
 11. நலல் அறிமுகங்கள் நாலு - பதிவுகளுக்குச் சென்று வந்தேன் - படித்தேன் - அருமை அருமை

  நல்வாழ்த்துகள் தாரணி ப்ரியா

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள்.நன்றி.

  ReplyDelete
 13. பாஸ் இப்ப தான் இதைப் பார்த்தேன். முதலில் வலைச்சரம் ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் பாஸ்.

  அப்புறம் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் ரொம்ப நன்றி பாஸ்.

  ReplyDelete
 14. நல்ல தொடக்கம், அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 15. நானும் சிரிச்சிகிட்டே பின்னூட்டம் போடுறேன்!

  கலக்கல் அறிமுகங்கள்!

  ReplyDelete
 16. இரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. அறிமுகங்கள் அனைத்தும் சுவையான அறிமுகங்கள்!

  ம்ம்ம்.... தினம் தினம் எல்லாரும் வயிறு வலிக்க சிரிக்கணும்
  அப்படி இருக்கு தாரிணியோட அறிமுகங்கள் :)

  ReplyDelete
 18. aaha nammala pathiaya... thanks madam :)

  ReplyDelete
 19. நல் அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள்ங்க...

  ReplyDelete
 20. தாரணி பிரியா... நீங்க என் பதிவெல்லாம் படிப்பீங்களாஆ? சொல்லவே இல்ல.

  நட்பு ஒண்ணு சொல்லி என்னதுன்னு பாக்கலாம்னு ஓடோடி வந்த என்ன நீங்க ஏமாத்தல.

  பில்டப்புகள் ம்ம்ம்... தாராளம்.

  நன்றி.. நன்றி.. நன்றி..

  இதில என்ன தவிர யாரையும் தெரியல. கண்டிப்பா படிச்சு சிரிக்கிறேன்.

  ReplyDelete
 21. //காலையில அழுது வடிஞ்சுகிட்டே சோகமாவோ, கோபமாவோ அந்த நாளை ஆரம்பிக்க கூடாது//
  சேம் பிளட்டுங்கோவ்...

  //இந்த மாசம் மட்டுமில்லாம எப்பவுமே சிரிச்சுகிட்டே ஆனந்தமா வேலை செய்ய என் வாழ்த்துக்கள்.//
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  தொடர்ந்து அசத்துங்க.

  ReplyDelete
 22. நல்ல அறிமுகம் வாழ்த்துகள் ப்ரியா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது