வணக்கம்
அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தாரணி பிரியா
இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க எல்லாம் பாவம் ஏன்னா நான் எழுதபோறதைதான் படிக்க போறீங்க. உருப்படியா ஒண்ணும் எழுதறதுதான் இல்லை. அட்லீஸ்ட் படிக்கறதுதாவது உருப்படியா ஒழுங்கா படிக்கிறியா பாக்கலாமுன்னு சீனா சார் எனக்கு ஒரு டெஸ்ட் வெச்சு இருக்கார். இந்த டெஸ்டுல நான் நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு.
முதல என்னைய பத்தி சொல்லிடுறேன். என்னை பத்தி பெரிசா மட்டுமில்ல சிறிசா சொல்லறதுக்கு கூட ஒண்ணுமில்லைங்க. கோவையில இருக்கிற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான்
ஒரு தடவை அவள் விகடன்ல ப்ளாக் பத்தி எல்லாம் போட்டு ஒரு கட்டுரை வந்து இருந்தது. அதை படிச்சபிறகுதான் இப்படி ஒரு உலகம் இங்க இருக்கறது தெரிஞ்சு தேடி கண்டு பிடிச்சு அதுல என்னையும் இணைச்சுக்கிட்டேன். நான் எழுதினது எல்லாத்தையுமே கொஞ்சம் கூட யோசிக்கமா மொக்கை இல்லாட்டி செம மொக்கை வகையில சேர்த்துக்கலாம். எனக்கு பிடித்ததே அடுத்தவங்களை சங்கடப்படுத்தாத நகைச்சுவை, காமெடி, கிண்டல்தான்.
வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். வந்தது வந்தீங்க அப்படியே இங்க ஒருஎட்டு போய் பார்த்திட்டு ஏதாவது ஒரு போஸ்டாவது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாங்களேன் ப்ளீஸ்












