07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 25, 2010

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!

நான் ரசித்த பாடல் :

மூங்கில் காடுகளே....(சாமுராய்)

எனக்கு பிடிச்ச பாட்டுன்னு யாராவது கேட்டா
சட்டுன்னு நான் சொல்றது சாமுராய் படத்தில்
வரும் மூங்கில் காடுகளே என்பேன்.அந்த பாட்டில்
அனைத்துமே அருமையை இருக்கும்.அந்த பாடலின்
கான்செப்ட் செம.அதை விட அந்த பாடல் வரிகள்
நன்றாக இருக்கும்.இயற்கை அழகை வைரமுத்து
அழகாக சொல்லி இருப்பார்.

************************************************

இன்று கவிதை எழுதுபவர்கள் குறித்து ஒரு பார்வை....

கவிஞர் மீன்துள்ளியான்(செந்தில்):

இவர் அஞ்சு வயசில் இருந்தே கவிதை எழுதி
வருகிறார், இவர் எழுதும் கவிதைகள் அனைத்தும்
சமுதாய சாட்டையடி போன்று இருக்கும்,வருங்காலத்தில்
ஷெல்லி போன்று வருவார் என்று ஊருக்குள் ரெண்டு
பேர் பேசிகொள்கிறார்கள்....இப்படி எல்லாம் பில்ட்-அப்
பண்ண சொன்னவர் சாட்சாத் அதே மீன்துள்ளி தான்.
(மீன்துள்ளி நீர் சொன்ன மாதிரி எழுதிட்டேனா??)


மீன்துள்ளியின் போரும் அமைதியும் என்ற கவிதை
உண்மையில் சூப்பர்ஆக இருக்கும்.என்ன ஆச்சரியம்
படிச்ச முதல் தடவையே புரிந்தது.....நீங்களும்
படிச்சு பாருங்க.....


போரும் அமைதியும்



இவரின் குடைக்குள் மழை என்ற கவிதையை
அழகாக நகைச்சுவை உணர்வோடு முடித்திருப்பார்...
இது மட்டும் அல்ல இது போல் பல கவிதைகளில்
நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி இருப்பார்.


மீன்துள்ளி உங்களை வருங்கால ஷெல்லினு சொன்ன அந்த
ரெண்டு பேரு யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா??

******************************************************

அண்ணன் டாக்டர் D.R.அசோக்:

இவர் பிரபல பதிவர் இருந்தாலும் நான் ஏன் இவரை
அறிமுக பண்றேன்னா அதுக்கு காரணம் இவர் கவிதைதான்.
இவர் கிட்ட பிடிச்ச விஷயமே இதுதான்,லேபிலில்
கவிதைங்களா?? கவிதை மாதிரி?? என்று நம் முடிவுக்கே விட்டுவிடுவார்.


அசோக் அவர்கள் அவர் கண்ணில் பார்த்த காட்சிகளை
தன் கவிதை மூலம் நம் கண்ணில் நிறுத்துவார்....
அவரின் கவிதைகளில் என்னை கவர்ந்தவை.....

வார்த்தை சிதறல்கள்

மனக் கூப்பாடு


அண்ணன்னோட கவிதைகள் அனைத்தும் எனக்கு
புரிந்தது என்று சொல்ல முடியாது இருந்தாலும்,அவரின்
கவிதைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
அண்ணன் அடிக்கடி தான் யூத்துனு சொல்லுவாரு
யாரும் நம்பாதிங்க..!!(நம்ம வேலை முடிஞ்சுது).

*********************************
ஜான்

ஜான் கார்த்திக் கவிதை,கட்டுரை,விமர்சனம் என்று
கலக்கி அடிக்கிறார்.இவர் என்ன சொல்றர்னா

"எனக்குள் இருக்கும் தமிழை காப்பாற்ற நான் எடுத்த
இரண்டாம் முயற்சி இந்த வலைப்பதிவு எழுதுவது."
இப்படி சொல்றவரு...ஏன் ப்ளாக் தலைப்பை மட்டும்
ஆங்கிலத்தில் வச்சார்னு ஒரு புரியாத புதிர்தான்.

இவரின் விவாகரத்து என்ற கவிதை சொல்லனும்னா
" மூணு வரியில் ஒரு நச்"


விவாகரத்து


இவர் கிட்ட இருந்து மேலும் பல விஷயங்களை
எதிர்ப்பார்க்கிறேன்.... டைம் கிடைக்கும் போது
எழுதுங்க ஜான்....


ஜெட்லி......

8 comments:

  1. அண்ணே ஜெட்லி..’ வார்த்தை சிதறலகள்’ லிங் செக் பண்ணுங்கண்ணே.. அது என்ன மீன் துள்ளியான எழுதனது

    ReplyDelete
  2. அண்ணே...பேஸ்ட் பண்ணும் போது தப்பா ஆயிடுச்சு....
    மாத்திட்டேன்....

    ReplyDelete
  3. மகா ஜனங்களே.. டாக்டர் மற்றும் பிரபல பதிவர் என்று 2பொய்கள் சொன்னதை போல நான் ’யூத்தில்லை’ என்ற பொய்யும் சொல்லியிருக்கிறார் அண்ணன் ஜெட்லி. எதையும் நம்பவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்னையும் கவிஞனாக்கிய ஜெட்லிக்கு நன்றி! :)

    ReplyDelete
  4. "வருங்கால ஷெல்லியை அறிமுகப்படுத்தியதற்கு, நன்றி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது வாழ்த்துகள் ஜெட்லி !

    ReplyDelete
  6. ஷெல்லிக்கும் ஜானுக்கும் சகோதரர் அஷோக்குக்கும் வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி ஜெட்லி..

    ReplyDelete
  7. யோவ் ஜெட்லி , buildup எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பா வரலை . அதனாலே கேட்ட payment கிடையாது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது