07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 1, 2010

வலைச்சரம் இறுதிநாள் - புலவன் புலிகேசி

நமது பிள்ளைகளுக்கு சாதி வரலாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் மனித இனத்திற்கு நடந்த துரோக வரலாறு சொல்லிக் கொடுப்பதில்லை. 2 திசம்பர் 1984 இன்று போல் ஒரு ஞாயிறு செய்வதறியாமல் இறந்து போன அந்த உயிர்களைப் பற்றி இப்போதிருக்கும் இளைங்கர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

இவை எல்லாம் நம் தமிழ் நாட்டில் நடக்கத் தொடங்கியாயிற்று. ஆம் நாமெல்லாம் சுற்றுலா சென்று வரும் கொடைக்கானலில் பாதரசம் முலம் இன்னொரு போபால் உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்புறம் சமிபத்திய பாக்ஸ்கான் சம்பவம் இவற்றின் அறிகுறியாகவே தோன்றுகிறது. இது பற்றி தெரியாமலே நம் சந்ததிகள் மடிந்து போகக் குடும். அவர்களுக்கு இதன் கொடுமைகளை எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை. இன்று அந்த துயர சம்பவம் குறித்து நம் பதிவர்கள் எழுதிய பதிவுகளை உங்களுக்காக இங்கே தொகுக்கிறேன். அவசியம் படியுங்கள்.


"பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய்"


"ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை "


"26 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆலையில் பணியாற்றிய இந்திய உயர் அதிகாரிகள் எட்டு பேருக்கு போனால் போகிறது என்று இரண்டு வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறார்கள். ஆண்டர்சனும், டோ கெமிக்கல்சிடம் ஒளிந்திருக்கும் யூனியன் கார்பைடு நிறுவனும் இதை கோக் குடித்தவாறு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இரசித்திருப்பார்கள். எய்தவன் இறுமாந்திருக்க அம்புகளுக்கு மட்டும் அதுவும் ஒரு கொசுக்கடித் தண்டனை"


போபால் சம்பவம் குருத்து தெரியாதவர்கள், விபரம் வேண்டுபவர்கள் இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் பி.தி.எப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.


"சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை..."




"கொஞ்சம் கூடவா நமக்கு சுரணையில்லாம போச்சு, இது எப்படி நீதியாகும், லட்ச லட்சமா சாமானியன் செத்தாலும் குற்றம் செய்தவன விசாரிக்க கூட செய்யாது நம்ம நீதிதுறை, அப்படியே தண்டனைக் குடுத்தாலும் காலையில இரண்டு வருட சிறை, சாய்ங்காலம் பணை விடுதலை, சீ! கேவலமாயில்ல, பகுத்தறிவு அற்ற விலங்குகள் கூட ஏத்துக்காது இப்படி ஓர் கேவலத்தை நீதியென்று, ஆனால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட நாம் ஏற்போம்!"


"கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. "


ஆனால், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வேண்டும்.... இனி, ஒரு இந்திய சகோதரன் அழும் போது, கைகளில் டிவி ரிமோட் வைத்து கொண்டு, "அடுத்து என்ன ப்ரோக்ராம்?" என்று தேடி கொண்டு இருக்காமல், அதே கையால், அழுபவரின் கண்ணீர் துடைக்க மனம் பதற வேண்டிய உள்ளம் வேண்டும். அந்த மாறுதல் வரும் போது, இந்த மாதிரி மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பற்ற சூழ்நிலையோ - இல்லை, அதற்கு இப்படி ஒரு "கண்துடைப்பு" தீர்ப்போ எப்படி வர இயலும்?

இன்றுடன் எனது வலைச்சரப் பணி நிறைவடைகிறது. ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பணியை ஓரளவுக்கு செய்திருக்கிறேன் என நம்புகிறேன். நன்றி சீனா ஐயா. அடுத்து வரும் ஆசிரியருக்கு என் வரவேற்புகள்.

நன்றி,
புலவன் புலிகேசி

7 comments:

  1. பதிவர்கள் எழுதிய பதிவுகளை 'போபால் படுகொலை' கொடுமைகளை தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி.

    Asiriyaraai sirappaga pani seythamaikku vazhththukkal.

    ReplyDelete
  2. நல்ல பதிவு ..கொஞ்சம் பிசி அதான் தொடர்ந்து வர முடியவில்லை..!!

    ReplyDelete
  3. சிறப்பான வாரமாக இருந்தது நண்பரே.

    பல‌ நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் - போபாலைப் பற்றிய இடுகைகள்

    நல்வாழ்த்துகள் புலிகேசி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. போபாலை பற்றி படிக்க வேண்டிய பதிவுகள்

    அதன் தாக்கம் இந்த பதிவுகளை படித்தாலே உணர முடிகிறது

    வாழ்த்துக்கள் அண்ணா :)

    ReplyDelete
  6. பதிவர்கள், இப்படி கூடி வந்து குரல் கொடுக்க தந்த வாய்ப்புக்கு நன்றிங்க. மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது