07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 16, 2010

கண்ணாடி (முகம் பார்க்க)


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
-திருக்குறள்

வலைச்சரம் என்ற கடலுக்குள் முத்தெடுத்த சூரியன்களுக்கு மத்தியில் சிறு சுள்ளியாய் நான்... நண்பர்கள் எல்லாம் இமயமலையாய் எழுந்து நிற்க சிறு குன்றாய் நான்... இது அடக்கமும் அல்ல... அகந்தையும் அல்ல... உள்ளத்து உண்மை.

கடந்த வாரம் நண்பர் பின்னோக்கி மிகவும் அருமையாக சரம் தொடுத்தார். அவர் அளவுக்கு நம்மால் முடியுமா என்பது தெரியவில்லை. இருந்தும் நீங்களும் பின் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் என் பாணியில் தொடர்கிறேன்...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பின்னோக்கி...

வலைப்பூ என்னும் கடலுக்குள் நானும் எழுதுகிறேன் பேர்வழி என்று குதித்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில் வலைச்சரத்தில் ஒரு வார காலம் ஆசியராக இருக்க முடியுமா? என்று சீனா ஐயாவிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஜாம்பவான்கள் முத்தெடுத்த வலைச்சரத்தில் சாமானியன் ஆசிரியனா? யோசித்தேன். .. யோசனையின் முடிவில் 'வாய்ப்பை நழுவ விடாதேடா கிறுக்கா' என்றது மனசு (சத்தியமா என்னோட வலை இல்லைங்க... நம்ம மனசுதாங்க) சில வார அவகாசத்துடன் உடனே சரி சொல்லியாச்சு . இப்ப ஒரு வாரம் உங்க முன்னாடி வந்தாச்சு... பெரியவா எல்லாம் வந்து போன பூமி... அடியேனுக்கும் ஆதரவு கொடுங்க... எதோ என்னால முடிஞ்சதை எழுதுறேன். தப்பு இருந்த சுட்டிக்காட்டுங்க... நல்லாயிருந்தா தட்டிக்கொடுங்க.

சுய தம்பட்டம் (இது வேறயான்னு நிறைய குரல் கேக்குது)

நம்ம பேரு குமாருங்க (அப்பா, அம்மா வச்சது... இப்ப மக கூப்பிடுவது) பொறந்தது தேவகோட்டை அருகில் பரியன் வயல்ங்கிற சின்ன கிராமத்துலங்க. படிச்சு குப்பை கொட்டுனதெல்லாம் தேவகோட்டையிலதாங்க. தேவகோட்டையில நமக்கு ஒரு நட்பு (பெரிசு முதல் சிறுசு வரை...) வட்டமே இருக்குங்க . சில காலம் கணிப்பொறி ஆசிரியர் பணிங்க... அப்புறம் சென்னையில சில காலம் பத்திரிக்கையில் வேலை. குழந்தைகள், குடும்பம் என்ற வாழ்க்கை சக்கரத்தில் பணம் என்பது பிரதானமானதால் அதை துரத்திப் பிடிக்க கடல் கடந்து வந்து பொட்டிதாங்க தட்டுறோம்...

ஆர்வக் கோளாறால வலைப்பூ ஆரம்பித்தபோது நான்கு வலைகளை மேய்த்துப்பார்த்து இப்ப ஒரு வலைக்கு வந்தாச்சு. நம்ம எழுதுறதை படிச்சுட்டு பின்னூட்டம் இட்டு ஊக்கம் கொடுக்கிற இந்த நட்பு இருக்கே அதுதான் இப்ப நம்ம தனிமைக்கு கிடைத்த ஆறுதல்.

இனி நம்ம பக்கத்துல இருந்து சில பகிர்வுகளை பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன். நல்லா இருந்தா இங்க சொல்லுங்க... வேற மாதிரின்னா தனியா நம்ம வலைக்கு வந்துருங்க... என்ன வேணாலும் பேசிக்கலாம்.... ஆவ்வ்வ்வ்வ்.

நான் பிரசவித்த எல்லாமே நல்லவைதான். நான் எப்படி அதில் இதுதான் சிறந்ததென சொல்ல முடியும்?. ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் ஒண்ணு 100 மார்க் வாங்கினால் ஒண்ணு 40 மார்க் வாங்கும் அதுபோலதான் என் ஆக்கங்களும்... அதில் இது நல்லாயிருக்கும் அது நல்லாயிருக்கும் என்று நான் சொல்வதைவிட நீங்களே படித்துச் சொல்லுங்களேன். நான் தற்போது மனசோடு நின்றுவிட்டாலும் உங்கள் பார்வைக்காக எனது எல்லா வலைப்பூக்களுக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். அதை கிளிக் செய்து உங்கள் மனதில்பட்டதை பின்னூட்டமிடுங்கள். எனக்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கும்.





இனி இந்த வார வலைச்சரத்தில் நான் தொடுக்க இருக்கும் பூக்களின் சிறு முன்னோட்டம் உங்களுக்காக...

செவ்வாய் - தித்திக்கும் தமிழ்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதால் நமது வலைச்சரத்தில் வலைப்பூ பகிர்வின் முதல் இடுகையாக வலைப்பூவில் தமிழ் வளர்க்கும் நம் நட்புக்கள் சிலரின் பக்கங்களை பார்வையிடலாம்.

புதன் - கவி(தை) ஊர்வலம்

வலைப்பூவில் அதிகம் ஊர்வலம் வருவது கவிதைகள் என்பது எல்லோரும் அறிந்ததே. அது தாய்மையாக, காதலாக, நட்பாக, சமூகமாக, பிரிவாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பா.ரா. அண்ணன் எழுதுவது போல் நம்மை சுற்றிய நிகழ்வாகவும் இருக்கலாம். அதனால் அதில் ஊர்வலம் போக மனசு காத்திருக்கிறது.

வியாழன் - சிறுகதை சிற்பிகள்

சிறுகதை எழுதுவதற்கு திறமை முக்கியம் என்பது என் எண்ணம். சொல்ல நினைப்பதை சிலர் நான் கு பக்கத்தில் சொல்லலாம். சிலர் ஒரே பக்கத்தில் சொல்லலாம். அது அவரவரின் திறமைதான். எனக்கு சிறுகதை மிகவும் பிடிக்கும் என்பதால் அதை செதுக்கும் சில சிற்பிகளைப் பற்றி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

வெள்ளி - விளைச்சல்கள்

நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாய வேலைகள் எல்லாம் பார்த்தவன் என்பதால் அதுகுறித்து எழுதும் நண்பர்களை தேடிப்பிடித்து பகிரலாம் என்ற எண்ணம் எனக்குள்ளே சம்மணமிட்டு உட்கார்ந்துள்ளது. கதை, கவிதை தளங்களை கண்டுபிடிப்பது சுலபமானது. இது கொஞ்சம் கடினம்தான். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க முயல்கிறேன்.

சனி - சாப்பிடலாம் வாங்க

என்னதான் இருந்தாலும் வாழையிலையில் விருந்து சாப்பிடுவது என்பது ஒரு சுகமான சமாச்சாரம்தான். அதுவும் செட்டிநாட்டுக் காரணான நான் சமையல் வலைக்குள் விழாமல் இருந்தால் நல்லாயிருக்காது. அதனால் சமையல் குறித்த தளங்களை இதில் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

ஞாயிறு - வானவில்

இதில் எனக்குப் பிடித்த சில பதிவர்களைப் பற்றி சொல்லி விடைபெறலாம் என்றிருக்கிறேன்.

நண்பர்களே...



இன்று நம்ம இடுகை மட்டுமே... பாருங்கள்... படியுங்கள்...



நாளை புதிய அறிமுகங்களுடன் உங்கள் முன் வருகிறேன் அதற்கு முன் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அன்பு ஐயா சீனா அவர்களுக்கும் வலைச்சர குழுவில் இருக்கும் எழுத்தாள பெருமக்களுக்கும் வலைச்சர வாரத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கும் இனி இருக்கப் போறவர்களுக்கும் வலைச்சர நட்பிற்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நட்புடன்
-சே.குமார்

35 comments:

  1. ஸ்டார்ட் மியூசிக்.....:)

    ReplyDelete
  2. வந்து கலக்குங்க...

    ReplyDelete
  3. அமர்க்களமா தொடருங்க குமார்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கலக்குங்க நண்பரே..

    ReplyDelete
  5. கலக்குங்க

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள், கிளப்புங்கள்

    ReplyDelete
  7. ஆரம்பமே கலக்கலா இருக்கே..... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. குமார், ட்ரெய்லர்லாம் போட்டு கலக்கிட்டீங்க. வித்தியாசமான பாணி. தொடருங்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஐயா.

    எழுதுங்கள்; படிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. அருமையான அறிமுகம்... காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பரே. வந்து கலக்குங்கள்.

    வெங்கட்.

    ReplyDelete
  12. அறிமுகமே அசத்தலாக இருக்கே.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. vazhthukkal sekar....

    ReplyDelete
  15. //நம்ம எழுதுறதை படிச்சுட்டு பின்னூட்டம் இட்டு ஊக்கம் கொடுக்கிற இந்த நட்பு இருக்கே அதுதான் இப்ப நம்ம தனிமைக்கு கிடைத்த ஆறுதல்.//

    உண்மை தான்..
    தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. அன்பின் குமார்

    சுய அறிமுகம் அருமை - கலக்குங்க

    நல்வாழ்த்துகள் குமார்
    நட்புடன் சீனா

    பி.கு : லேபிளில் குமார் எனப் பெயர் சேர்த்தால் தான் தேடும் போது அனைத்து இடுகைகளும் கிடைக்கும் - சேர்த்துக் கொள்க

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் குமார். கிழமை வாரியாக தலைப்புகளை பட்டியலிட்டு ஒரு முன்னோட்டம் கொடுத்தீர்கள் பாருங்கள் அதுவே ஒரு டிரெயிலர் பார்த்த மாதிரி இருந்தது. ஜமாயுங்கள்

    ReplyDelete
  19. நல்வரவேற்பு!
    நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அமர்களமான அறிமுகத்துடன் .... சூப்பர்...குமார். தேவகேட்டை ரஸ்தாவில் இருந்து வரவேற்கிறேன். நட்புடன் ...

    ReplyDelete
  22. வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. அசத்துங்க! அசத்துங்க!!

    ReplyDelete
  24. முன்னோட்டம் வேறா? சீனா சார் நல்ல ஆளைப் பிடிச்சீங்க!

    ReplyDelete
  25. முன்னோட்டம் வேறா? சீனா சார் நல்ல ஆளைப் பிடிச்சீங்க!

    ReplyDelete
  26. அன்பின் சீனா ஐயா,

    கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி சீனா ஐயா..!
    எனது வலையில் எத்தனை பின்னூட்டங்கள் உங்களிடம் இருந்து... அப்பா மலைத்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  27. வாங்க ஜெய்...

    வாங்க செந்தில்...

    வாங்க சத்ரியன்...

    வாங்க ராதாகிருஷ்ணன் சார்...

    வாங்க கமலேஷ்...

    வாங்க ஜில்தண்ணி - யோகேஷ்...

    வாங்க அருண் பிரசாத்...

    வாங்க சித்ரா...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும்...

    ReplyDelete
  28. வாங்க பின்னோக்கி...

    வாங்க நம்பி சார்...

    வாங்க வினோ...

    வாங்க வெங்கட் நாகராஜ் சார்...

    வாங்க ஆயிஜா மேடம்...

    வாங்க கண்ணகி மேடம்...

    வாங்க தமிழரசி மேடம்...

    வாங்க இந்திரா மேடம்...

    வாங்க மேனகா மேடம்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும்...

    ReplyDelete
  29. வாங்க சம்பத்...

    வாங்க நிஜாமுதீன்...

    வாங்க ஜெட்லி...

    வாங்க சரவணன்...

    வாங்க கயல்...

    வாங்க தேவன் மாயம் சார்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும்...

    ReplyDelete
  30. மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  31. இந்த அளவுக்கு எழுதுவீங்கன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலைங்க....யப்பா....சூப்பர்ங்க....

    சந்தோஷமா இருக்கு...இதுக்கெல்லாம் எப்படிங்க நேரம் இருக்கு....எழுதி தள்ளுறீங்க....

    ( செவ்வாய் - தித்திக்கும் தமிழ், புதன் - கவி(தை) ஊர்வலம், வியாழன் - சிறுகதை சிற்பிகள், வெள்ளி - விளைச்சல்கள், சனி - சாப்பிடலாம் வாங்க, ஞாயிறு - வானவில் எப்படிங்க இப்படியெல்லாம்....)

    ReplyDelete
  32. வாழ்த்துகள் குமார்.. கலக்குங்க..

    ReplyDelete
  33. வாங்க ஷைலஜா...

    வாங்க சசிரேகா...

    வாங்க ஸ்டார்ஜன்...

    வாங்க சிநேகிதன் அக்பர்...

    உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது