07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 19, 2010

சிறுகதை சிற்பிகள்



வணக்கம் நண்பர்களே, உங்கள் உடலும் உள்ளமும் சுகந்தானே? நேற்று கவிஞர்களின் கவிமழையில் நனைந்த நாம் இன்று சிறுகதை சிற்பிகளின் செதுக்கல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

அதற்கு முன்னர் கடந்த இரண்டு தினங்களில் தமிழுக்காக உ.வே.சாவையும் கவிதைக்காக பாரதியையும் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்ட நான் இன்று சிறுகதைக்காக அதேபோல் ஒரு பகிர்வுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சிறுகதை இலக்கியத்தில் ஜீவா, வல்லிக்கண்ணன், பொன்னீலன் உள்ளிட்ட ஜாம்பவான் ஜொலித்த தமிழகத்தில் நான் எல்லோரும் அறிந்த எழுத்தாளரை பகிர்ந்து கொள்வதைவிட நான் மதிக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன்.

அவர் எனது கல்வித்தந்தை பேராசான் மு.பழனி இராகுலதாசன்.

மதுரைக்கு அருகில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிறந்தவர். பழனி என்ற தனது பெயருடன் புத்தரின் மகனான இராகுலனின் பெயரையும் சேர்த்து பழனி இராகுலதாசன் எனற புனைப்பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என முப்பரிமானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்மீதான காதலால் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் படித்து தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது பணிக்காலத்தில் மாணாக்கர்கள் மேல் பேரண்பு கொண்டு அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்தவர், தற்போதும் செய்து வருபவர்.

அகில இந்திய இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமிக்காக நான்கு நூல்கள் படைத்தவர். இவரது நிகழ்காலங்கள் சிறுகதைத் தொகுப்பு 1989ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ''ஜீவா விருது" பெற்றது.

சிறுகதை குறித்த இவரின் கருத்து "சிறுகதை என்னும் மிக நுண்மையான உருவம் இன்னும் கைக்குள் அகப்படத்தான் இல்லை. நழுவி நழுவிப் போய்விடுகிறது. எழுத்துலகில் இமயம்போல் நிற்கின்ற கார்க்கியும் கூட தனது படைப்புக்களில் 'கிழவி இஸெர்கில்' என்ற படைப்பில் மட்டும்தான் இசைவான வடிவமைப்பு அமைந்துள்ளதாக கருதுகிறான். எனது கருத்துகளுக்கு உருவம் கொடுக்க முனைந்து தோல்வியுற்றதின் அடையாளங்களாகவே எனது கதைகளை கருதலாம்." இதுதான்.

சரி, இனி நாம கதைக்குள்ள போவோமா...?

"டேய் மணி... அங்க என்னடா பண்றே... நான் கழுதையா கத்துறது காதுல கேட்கலை... அந்த கம்பியூட்டர் பொட்டியில அப்புடி என்னதான் வச்சிருக்கியோ...?"

"ஏம்மா... கத்துறே.. இப்ப உனக்கு என்ன வேணும்...?"

"இங்க வாடா... அங்கிருந்து கத்தாம... உங்கப்பா மாடசாமி அண்ணன் கடைக்கு பொயிட்டாரு வெட்டிப்பேச்சு பேச... நேரத்துக்கு சாப்பிட வரமாட்டாரு... போயி வரச்சொல்லுடா..."

"ஏம்மா... போன் பண்ணி வரச்சொல்லும்மா..."

"ஏந்தொரை... போகமாட்டிங்களோ... அப்படியே சித்ரா அத்தைக்கிட்ட பணம் கேட்டிருந்தேன் அதையும் வாங்கிட்டு வாடா... உங்கப்பனுக்கு தெரியவேண்டாம்..."

"ஆமா... இந்த வெயில்ல போகணுமாக்கும்..."

"என்னடா முணங்குறே... கம்பியூட்டரை கட்டிக்கிட்டு அழுகுறே... அதை தொலைச்சாத்தான் நீ உருப்புடுவே..."

"இப்ப என்ன... தேவையில்லாம பேசாதே... இந்தா போறேன்..."

அடச்சே... பதிவர் அறிமுகமுன்னு சொல்லிட்டு நான் கதை சொல்லிக்கிட்டு இருக்கேனே... என்ன சீனா ஐயா நீங்களாவது ஞாபகப்படுத்தக்கூடாதா?

சரி... சரி... கதை எழுதுவதில் சிறந்த சகோதரிகள் பவித்ரா, ஹேமா நண்பர்கள் ஸ்டார்ஜன், அக்பர் இவங்கிட்ட விட்டுடுறேன். இனி இந்தக் கதையை அவங்க பார்த்துப்பாங்க.

இப்ப பதிவர்களோட அறிமுகம் பார்க்கலாம். இவருதான் அவரு.... இந்த பேர்ல எழுதுறாரு... அவரோட பதிவுல சில வரிகள்ன்னு கவிதை ஊர்வலத்தில் போட்டது போலில்லாமல் சற்று மாறுதலாய் பதிவர் அறிமுகம் இஙகே.

ப.செல்வக்குமாரின் 'பெட்டிக்கடை எங்கே ..??'

"ஐயா ,இங்க பக்கத்துல பொட்டிக்கடை ஏதாவது இருக்குதுங்களா ..?

"பொட்டிக்கடையா எதுக்கு ..?

"ஒரு Cigarette வாங்கலாம்னு கேட்டேனுங்க ..!

"உனக்கு என்ன வயசாச்சு தம்பி ..?

"22 ங்க..

"பாத்தா படிச்சா பையனாட்டம் தெரியுற , Cigarette பிடிக்கறது தப்புன்னு தெரியாத..?"

விஜய் மகேந்திரனின் 'அடைபடும் காற்று'

திருவாளர் மகாலிங்கம் பிள்ளை அவர்களுக்கு,

வணக்கம்.

நலந்தானே. நீங்கள் சென்னை நகரத்தை விட்டுச் சென்ற சில நாட்களில் பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இரண்டு நண்பர்கள் மரணமடைந்து விட்டனர். நமது வயதுடைய அவர்களின் மரணமும் பேரடைஸ்ஸோ ஈவினிங் டிரைவ் இன் மூடப்பட்டதும் தான் இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்து விட்டது. செல்போனில் பேச எப்போதும் எனக்கு ஒருவித தயக்கம்.

கடந்த மூன்று வருடங்களில் நாம் பேசிக்கொண்ட தகவல்கள், பகிர்ந்து கொண்ட செய்திகள், உறவுமுறை குறித்த உரையாடல்கள், பரஸ்பர உடல் வியாதி குறித்த காரணங்கள் இவையெல்லாம் ஒரு வகையில் முடிவுக்கு வந்து விட்டன. அது குறித்த வேதனையின் வடிகாலே இக்கடிதம். நாம் இருவரும் இதுவரை செல்போனில் பேசிக்கொண்டதை நினைவு கூர்கிறேன்.

சுப.வீர. சுப்பையாவின் 'ஆட்டியவனும் தள்ளியவனும்'

இராமநாதன் செட்டியார் தன் மனைவி சீதை ஆச்சியுடன் அங்கே போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்து.

வெயில் சூடு பிடிக்கத் தொங்கியிருந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அவர் வீட்டு டிரைவர் ஒரு புளிய மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார். செவர்லே ஸ்டேசன் வாகன் வண்டி. முன்பக்கம் மெட்டல் பாடி, பின்பக்கம் மரத்தினால் பாடி கட்டப்பட்டிருக்கும். ராசியான வண்டி என்பதற்காகச் செட்டியார் அதை விடாமல் வைத்திருந்தார்.

இராமனாதன் செட்டியாருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். இங்கே மட்டுமல்ல, மலேசியா, பினாங். கிள்ளான்ங், சிரம்பான் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் மனைவி சீதை ஆச்சியும் வரும்போது வெள்ளமாகக் கொண்டு வந்தார்கள்.

வானவர்கோனின் 'வயலோர நினைவுகள்'

மோட்டார் சைக்கிளை வீதியால் விரைவாகவும் ஓட்ட முடியுதில்ல, கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும்........ , மோட்டார் சைக்கிளை மெதுவாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று, அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசியையும் கூட்டிக் கொண்டு வயலுக்க போயிற்று வருவம். ஆத்தில குளிச்சி எவ்வளது நாளாயிற்று ?

அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில் தான் நானும் இருக்கிறேனோ!

ஜீவியின் 'சங்கிலி'

அறிவுடைநம்பி ரொம்பவும் சுவாரஸ்யமான மனுஷன். எங்கள் தெருக்கோடியில் 'ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்' வைத்திருக்கிறான். என்னிடம் ஒரு இரண்டாம் கை' மொபெட் இருக்கிறது. அதற்கு அடிக்கடி வரும் 'நோவு'க்கெல்லாம் கைகண்ட மருந்து தரும் வைத்தியன் அறிவுடைநம்பி தான்.

முதல்முறை என் வண்டியை அவனிடம் ரிப்பேருக்குக் கொண்டு போனபோது, "ஸ்டார்ட் ஆகலேப்பா.." என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.

"ஸ்பார்க் ப்ளக் க்ளீன் பண்ணீங்களா?.." என்று கேட்டுவிட்டுக் கீழே குனிந்தான்.

மதிபாலாவின் 'காவ்யா'

ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.

எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..


அந்த வீட்டுத் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டுப் பெண்மணி தான் எடுத்தார். பேசிவிட்டு வந்தவர் கணவனிடம், "கிராமத்திலிருந்து ஃபோன் வந்திருக்கு. என் கூடப் பிறந்த அண்ணன் சீனிச்சாமி இறந்துட்டானாம். நமக்கும், அவனோட பத்து, பதினெஞ்சு வருஷமா தொடர்பே இல்லாமப் போச்சு. என்ன பண்றது? கூடப் பொறந்துத் தொலைச்சுட்டானே" என்றார்.

கணவர், "இப்ப என்ன பண்ணலாம்? சாவுக்குப் போகலாமா, வேண்டாமா?".

மனோகரன் கிருட்ணனின் 'மனக்கதவுகள் நனைகின்றன'

“ டேய் மழையிலே நனையதடா காச்சல் வந்துட போதுடா” என்று அம்மா கத்தும் கத்தல் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

மழைக் காலங்களில் மழையில் நனைந்து காச்சல் வந்தது போல் நடித்து மறுநாள் பள்ளிக்கு மட்டம் போட நினைத்து மழையோடு ஒட்டிக் கொண்டு அண்ணனிடம் அடி வாங்கிய நினைவுகள் எல்லாம் எள்ளி நகையாடுகின்றன.

“ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... ஜூரமாவது மன்னாங்கட்டியாவது. போடா ஸ்கூலுக்கு” என்று துரத்தும் அண்ணனும். வந்து வந்து தலையை அனைத்துபடி முகத்தில் கையை வைத்து தொட்டுப் பார்த்து காச்சல் அடிக்குதா கண்ணு ஏன்று தாலாட்டும் தாயின் பாசமும் மழைக்காலத்தில் நிழற்படமாய் விரிந்துக் கொண்டிருந்தன

நாகூர் இஸ்மாயில் 'ராத்திரி சாப்பாடு'

எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,

மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்.

ப்பாதுரையின் 'கடைசி வண்டி'

'இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு' என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான்.

பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தான். தன் தொழிலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இருபதாயிரம் கேலன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்தொட்டி பொருத்திய பதினெட்டு சக்கர க்ராஸ்லேன்ட் டிரக்கில், விஸ்கான்சின்-மினசோடா எல்லையருகே வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். பால் ஏற்றி வரும்போது அதிக எடை காரணமாகச் சோதனை அதிகாரிகளிடம் பலமுறை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

துக்ளக்கின் 'நாயம்'

காலைல முளிச்சபோதே தெரிஞ்சு போச்சு. இன்னக்கி பொளுது போனாப்புலதான்னு. மானம் வேற கொஞ்சம் மப்பாவே இருந்துச்சு. காந்திராசு சைக்கிளுக்கு சேண்டு போட்டு நிப்பாட்ட முடியாம கன்னுக்குட்டி கட்ற கம்பத்துல சாச்சாப்ல வெச்சுட்டு வந்தான். இவன் எங்க இப்ப இங்கிட்டுன்னு மண்டையை சொறிஞ்சுக்கிட்டே வெளிய வந்தேன்.

செயாவுமு செல்லாளுமு சந்தைக்கி கெளம்பிக்கிட்டுருந்தாங்க. தூக்குப் போசீல டீத்தண்ணி இருந்துச்சு. எனக்குமு, காந்திராசுவுக்குமு கெளாஸ்ல வெச்சுக் குடுத்துப் போட்டு செயா போயிருச்சு. வாயை கொப்புளிச்சுப்போட்டு ரெண்டு பேரும் டீயை குடிச்சுட்டு.....

"அப்பறம்.. .என்ன காலங்காத்தால் இங்கிட்டு?"

மதனின் 'மாறுதல்'

முன்னுரையே இல்லாமல் ஆரமிக்கப்பட்ட கதை போல, தீடீரென்று முன்னால் வந்து ப்ரேக் போகலாமாஎன்றாள் அர்ச்சனா.

அவள் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகி இருந்தது. அலுவலக பேருந்தில் என்னுடன் ஒன்பது மணிக்கு தினம் வருபவள் இன்று பத்து மணிக்கு தான் வந்தாள். எப்போதும் வந்த உடன் GMடா என்று ஒரு ஸ்மைலியுடன் கம்யூனிக்கெட்டரில் பிங் பண்ணுவாள். இன்று அப்படி எதுவும் இல்லாமல்,காலையில் அலுவலக பேருந்தில் என்னோடு வராத காரணத்தை பற்றியோ, எனது செல்லின் அழைப்பை ஏற்காததைப் பற்றியோ எதுவும் பேசாமல் வந்து ப்ரேக் போகலாமா என்கிறாள். ஒருவேளை அதை எல்லாம் சொல்வதற்கு கூட இருக்கலாம்.


"குட்டி எப்போ பார்த்தாலும் இப்படி tom & jerry பார்த்துக்கிட்டு இருக்கியே உனக்கு tom & jerry பைத்தியம் தான் பிடிக்க போகுது பாரு."

"நீயும் தான் மம்மி டெய்லி சூப்பர் சிங்கர் பார்க்குற, அப்போ உனக்கும் தான் சூப்பர் சிங்கர் பைத்தியம் பிடிக்க போகுது.."

"எதுக்கெடுத்தாலும் இப்படி எடக்கு முடக்கா பேசிக்கிட்டே இரு உன் அப்பா மாதிரி.."

என்ன நண்பர்களே மேலே பகிர்ந்திருப்பவை துளிதான். இந்த தளங்களுக்கு சென்று சிற்பிகள் செதுக்கிய சிறுகதைகளை படியுங்கள். நாளை நாம வயக்காட்டுப் பக்கம் போய் விளைச்சல் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வரலாம்.

-நட்புடன்,
சே.குமார்.

25 comments:

  1. ச்சும்மாதான்... பரிசோதனை மறுமொழி.

    ReplyDelete
  2. குமார் வெளியூர் பயணங்களால் தொடர் வருகை முடியாமல் போய் விட்டது.

    நான் நகர்த்த நினைத்த அடுத்தகட்ட வலைச்சரத்தை நீங்கள் வெகு அற்புதமான நடையில் மொழியில் அழகியலோடு நகர்த்தி உள்ளீர்கள்.

    நீங்கள் கொடுத்த பல பின்னோட்டங்களையும், சாதாரண வார்த்தைகளையும் பார்த்து படித்த எனக்கு உங்கள் இந்த ஆளுமை உச்சக்கட்ட வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மறுபடியும் வந்து ஒவ்வொன்றையும் படிக்கின்றேன்.

    தொடருங்கள் குமார்.

    ReplyDelete
  3. இன்னைக்கு அருமை ...

    ReplyDelete
  4. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைங்க.
    என்னோட பெட்டிக்கடை எங்கே சிறுகதைய அறிமுகப்படுத்தி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க. நன்றி அண்ணா ..

    ReplyDelete
  5. 'ஆட்டியவனும் தள்ளியவனும்' சிறுகதையைக் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி ந்ண்பரே!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மிக்க நன்றி :) என்னுடைய சிறுகதை முதல் முறையாக வலைச்சரத்தில் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. ’சிறுகதை சிற்பிகள்’ என்பதை படித்தவுடன் கவிக்கோ சொன்னது நினைவிற்கு வருகிறது..

    ‘அம்மி கொத்த சிற்பி எதுக்கு?’ என்று சினிமா பாடல் எழுத மறுக்கும் விதமாக சினிமா பாடல் மீதான் கோபத்தை கொப்பளித்தார்.

    இங்கே அம்மி கொத்துபவனையும் (ராத்திரி சாப்பாடு) சிற்பிகளோடு இணைத்த சே.குமார் அவர்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  9. அன்பின் சே.குமார்

    எனது சிறுகதை 'சங்கிலி'யை இங்கு 'வலைச்சரத்'தில் எடுத்துச் சொன்ன தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. இத்தகையான அறிமுகங்கள் தொடரும் நட்புகளுக்கு நிச்சயமாக வழிகோலும்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  10. படிக்கவேண்டியதில் சேர்த்தாகிவிட்டது. எவ்வளவு பதிவுகள் ? எப்படித்தான் இவ்வளவு அறிமுகங்கள் செய்ய முடிகிறதோ ?

    ReplyDelete
  11. சே.குமார் அவர்களுக்கு மிக்க நன்றி...படித்ததில் சிறந்ததை பகிர்வது சிறந்த செயல்..வாழத்துக்கள் உங்கள் அறிமுகம் தொடரட்டும் ...நான் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை அடைபடும் காற்று...முதியோர்களை பற்றி பேசும் கதை ....

    ReplyDelete
  12. சிறு துளியாய் இருந்த எந்தன் சிறுகதையை பெரும் மழைத்துளி போல் வலைச்சரத்தில் பதித்தமைக்கு நன்றி ஐயா சே.குமார் அவர்களே.

    அருமையான அறிமுகம். மனம் உவகை கொண்டேன். .வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. ரசனையாக இருக்கிறது தேர்வுகள்... தொடர்வதற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  14. அன்பின்குமார்

    நன்று - நன்று - அறிமுகங்கள் நன்று - அத்தனையும் புதிய அறிமுகங்கள் - படிக்க் வேண்டும் பொறுமையாக - நுனிப்புல் மேய்ந்தேன். மூழ்கி விடுகிறேன்

    நல்வாழ்த்துகள் குமார்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. இரண்டு வாரங்கள் பதிவுகளைத் தவறவிட்டிருக்கிறேன்.வலைச்சரத்தில் அறிமுகங்கள்.சந்தோஷம் குமார்.

    ReplyDelete
  16. நன்றி குமார்...

    நல்ல அறிமுகங்களுக்கு இடையில் எம்மையும் அறிமுகம் செய்தற்க்கு விசேட நன்றிகள்ள் !!

    ReplyDelete
  17. வாங்க ஜோதிஜி...

    உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். எதோ என்னால் முடிந்த நடையில் எழுதுகிறேன். என்னை விட அழகாக வலைச்சர வாரத்தை கொண்டு சென்றவர்கள் நீங்கள் உள்பட பலர்.

    சில பிரச்சினைகளால் நீண்ட பின்னூட்டம் இட வாய்ப்பில்லை. அதனால் சில வரிகள் மட்டுமே போடுவேன். அவவளவுதான்.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  18. வாங்க செந்தில்...

    வாங்க பிரபு...

    வாங்க சித்ரா மேடம்....

    வாங்க செல்வக்குமார்...

    வாங்க சுப்பையா சார்...

    வாங்க அஷீதா மேடம்...

    வாங்க இஸ்மாயில்...

    வாங்க ஜீவி...

    வாங்க பின்னோக்கி...

    வாங்க விஜய் மகேந்திரன்...

    வாங்க மனோகரன்...

    வாங்க தமிழ்ப்பறவை...

    வாங்க் ஹேமா...

    வாங்க மகேஷ்...

    உங்க எல்லோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  19. சீனா ஐயா அவர்களுக்கு...

    அடிப்புல் வரை மேயுங்கள். எல்லாம் அழகான, ஆழமான படைப்புக்கள்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  20. ஆதரவுக்கு உளங்கனிந்த நன்றி, குமார்.

    ReplyDelete
  21. நன்றி அப்பாத்துரை...

    ReplyDelete
  22. அன்பு நண்பருக்கு,

    எனது சிறுகதையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்... இங்கே நீங்கள் பின்னூட்டியிருக்கும் தோழர்களும் , நண்பர்களும் அனேகர் எமக்கு புதியவர்கள்.. அத்தகைய அறிமுகத்திற்கும் நன்றி.

    நியாயமற்ற தாமதத்திற்கு பொருத்தருள்க.

    தோழமையுடன்,
    மதிபாலா

    ReplyDelete
  23. எனது "வயலோர நினைவுகள்" சிறுகதையை வலைச்சரத்தில் இணைத்த சே.குமாருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது