07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 27, 2010

திரைகடலோடித் தேடும் திரை

கலைகளின் சிறகுகளில் அழியாத இடத்தைப் பிடித்தவை திரைப்படங்கள் என்றால் மிகையில்லையென்றே சொல்ல வேண்டும். மாநிலத்தின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தென்னிந்தியாவில் கொடி நாட்டியிருப்பதும் கூட திரைப்படம் என்றால் மிகையில்லை.

அதே சமயம் ஆழ்ந்து பார்க்கும் போது தமிழ் சினிமாவின் எல்லைகள் காதல், சண்டை, தனியாக ஒட்டாமல் இணைந்து வரும் காமடி ட்ராக் என முடங்கிப்போய் விட்டதாகவே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

சினிமாக்களின் மறுபக்கமாக மாற்று மொழிகளில் வரும் பல படங்களை காண முடியும். இது போன்ற படங்களை உலகப்படங்கள் என்ற அடைப்புக்குள் நம் வசதிக்காக அடையாளப்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்க ஆரம்பித்தால், அதுவொரு மிகப் பெரிய வெளியாக பிரமிக்கும் கலையாக கண் முன் விரிகிறது.

சில படங்களை பார்க்கும் முன்பும், சில படங்களை பார்த்தபின்பும் அது குறித்த விமர்சனங்களை வாசிப்பது இனம் புரியாத சுகத்தை புகுத்துகின்ற ஒன்று.


உலகப்படங்கள் குறித்து ஆழ்ந்து எழுதும் பதிவர்களை இங்கு அடையாளப் படுத்துவது என் மனதிற்கு மிக நெருக்கமான, மிக மகிழ்ச்சியான ஒன்று.



மிகப் பெரிய வாசகர் வட்டத்தோடு உலகசினிமா குறித்து தன்னுடைய



என்ற வலைப்பூவில் அழகாக எழுதிவரும் பட்டர்பிளை சூர்யா என்னுடைய நேசிப்புக்குரிய ஒரு பதிவர்.


சமீபத்தில் உலகத் திரைப்படங்கள் குறித்து ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைய செய்திகளைப் பகிர்ந்தவர்.

உலகப்படங்கள் குறித்து அறிந்து கொள்ள தமிழில் இருக்கும் வலைப்பூக்களில் வண்ணத்துப்பூச்சியார் குறிப்பிடத்தகுந்த ஒரு தளம்.



இடுகையில் உலகத்தின் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் மஜித் மஜிதி குறித்து மிக அருமையான தொகுப்பை எழுதி நிறையப் பேருக்கு எடுத்து சென்றவர்.


000000



வலைப்பூவில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக நேர்த்தியாக எழுதிவரும் உமாசக்தியின் எழுத்துகள் வாசிப்பவரை எழுத்தோடு கட்டிப்போடும் வல்லமை கொண்டது.





இடுகையில் இயக்குனர் அபர்னா சென் குறித்த பகிர்வும், அவருடைய தி ஜேபனிஸ் வைஃப் படத்தின் மிக நேர்த்தியான விமர்சனமும் வாசிக்கும் போதே உடன் பயணிக்கச் செய்பவை.


000000


உள்ளூர் சினிமா – உலக சினிமா என




என்ற கொஞ்சம் வித்தியாசமான பெயரில் அமைந்த வலைப்பூவில் இருக்கும் விமர்சனங்கள் வாசிப்புக்கு மிகவும் உகந்தவை.



கிம் கி டுக்வின் 3-iron படத்தின் விமர்சனத்தை ஒரு முறை ஆனந்த விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தில் படிக்கும் போது நொந்து போனேன். அவ்வளவு மோசமாக, பொய்கள் கலந்து ஒரு விமர்சனத்தை பெயர் பெற்ற ஒரு எழுத்தாளரால் எப்படி எழுத முடிந்தது என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.


அந்த ஆற்றாமையை கருந்தேள் கண்ணாயிரம் வலைப்பூவில் ஒரு முறை



வாசித்த போதுதான் கரைத்தேன். இந்தப் படம் குறித்து என் மனதிற்குள் என்ன தோன்றியதோ, அதை அப்படியே அவருடைய எழுத்தில் படிக்கும் போது, ஏனோ என்னையறியாமலே அந்த எழுத்தோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டது.


0000000

18 comments:

  1. தவிர்க்க இயலாத காரணங்களால், நேற்று என்னால் வலைச்சரத்தில் பணியாற்ற முடியவில்லை என்பதை வருத்ததோடு பதிவுசெய்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  2. உமாசக்தி புதியவர்... அறிமுகம் தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  3. பாலாசிய ரிப்பீட்டிக்கிறங்ணா. நாளைக்கு ஓவர்டைம் பண்ணி கழிச்சிக்லாங்ணா:))

    ReplyDelete
  4. சூர்யா, ராஜேஷ்... இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. முத்திரை பதித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அண்ணன் பூச்சி வாழ்க.

    தம்பி தேள் வாழ்க.

    இன்னும் நண்டு, வாத்து, கோழி, தட்டான் என்ற பெயரில் யாராவது உலகப் படங்களை எழுதிக் கொண்டிருந்தால் அவர்களும் வாழ்க.

    ReplyDelete
  7. //அண்ணன் பூச்சி வாழ்க.
    தேள் வாழ்க.
    இன்னும் நண்டு, வாத்து, கோழி, தட்டான் என்ற பெயரில் யாராவது உலகப் படங்களை எழுதிக் கொண்டிருந்தால் அவர்களும் வாழ்க//

    கண்ணா பிண்ணா ரிப்பீட்டே...

    பாலி தல, உலகப்படம் எழுதறவங்க எல்லாம் இப்படி ஏன் அக்றிணை பேர வைக்கிறாங்க...நீங்களும் இனி பாம்பு பாலான்னு பேரை மாத்திடுங்க தல..;)

    ReplyDelete
  8. கதிர்...வண்ணத்துப்பூச்சியாரை நானும் ரசிப்பதுண்டு.
    மற்றவர்கள் புதிது.

    பின்னூட்டங்கள் பார்த்துச் சிரித்துவிட்டேன்.

    ReplyDelete
  9. ஹாஹ்ஹாஹ்ஹா.. ;-)

    பூச்சி, தேள் வரிசையில் அடுத்தது யார்? பாம்பு பாலா ரொம்ப நல்லா இருக்கு.. ;-) இந்த ரீதில சில பதிவர்களுக்குப் பேரு வெச்சா..

    பாம்பு பாலா
    நரி நாஞ்சில்
    கரடி கார்த்தி

    இந்த ரீதில போலாமா? ;-) நண்பர்கள் தெரிவிக்கவும் ;-) ..

    @ ஈரோடு கதிர் - நீங்கள் என்னைப் பற்றி எழுதியுள்ள வரிகளை, அத்தனை திரைப்படப் பதிவர்களைப் பற்றியும் நீங்கள் எழுதியுள்ளதாக நினைத்து, அவர்களை நினைவு கூர்கிறேன்.. நன்றி..

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள் கதிர் அண்ணா

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கதிர்,

    சூர்யாவை பெரும்பாலானோர் அறிந்திருக்கிறோம்.

    உமா- முதல்முறையாக வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. எனக்கு எல்லாம் புதிய அறிமுகங்கள்தான்

    நன்றி

    ReplyDelete
  14. சிறப்பான அறிமுகங்கள். நண்பர் ராஜேஷ் பற்றி அருமையாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. உமாஷக்தியின் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. அறிமுகங்கள் அருமை............ அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. அன்பின் கதிர்

    அறிமுகங்கள் அருமை - பூச்சியைத் தவிர மற்ற இருவரும் எனக்குப் புதியவர்களே !
    சென்று பார்க்கிறேன்

    நல்வாழ்த்துகள் கதிர்
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது