07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 9, 2011

சோத்து மூட்டையும், சிறந்த பதிவுகளும்


கிட்டதட்ட அனைவரும் அறிந்த பெயர்தான்.. இவரின் வலையில் யதார்த்தமான உண்மைகளை தோலுரித்துக் காட்டுகிறார்.. இன்றைய சூழலையும், முந்தின நிலையை ஒப்புமை செய்து சமுதாயத்தில் நிகழும் சீர்கேடுகளை அலசி ஆராய்கிறது இவரது கட்டுரைகளும், கதைகளும்...

போராளி யார் என்ற இந்த பதிவில் இந்தியாவில் இன்று நடக்கும் அரசியல் சார்ந்த கூத்துகளை பகத்சிங் போன்றவர்கள் செய்கைகளுடன் ஒப்பு நோக்கி... எடுத்துரைக்கிறார்.

உண்மைநிலையை எடுத்துரைப்பதால் பதிவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை..

ஒவ்வொரு பதிவிலும் தனது பார்வையில் உண்மைநிலையை உரக்கக் கூறுகிறார்.. காந்தியடிகளும் ஏசுநாதரும் ..........என்ற பதிவில் காந்தியின் உன்னதத்தை மீண்டுமொருமுறை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல்...அஹிம்சையின் இலக்கணத்தை இயல்பாக சொல்லியிருக்கிறார்.

*****


வலைப்பூவின் ஆசிரியர் மோகன்ஜி  அவர்கள்

இவரின் ஒரு ஊதாப்பூ ஒரு அனுபவ சிறுகதையாகவும், கட்டுரை வடிவையும் கொண்டுள்ளது. படிக்க சுவராஸ்யம்.


*****


இவரின் பொம்பளை வண்டி சிறுகதை அடிப்படைஉரிமைகளைக் கூடப் பெறாத நிலையில் இருப்பவர்களின் உளவியலைச் சித்தரிப்பதாய் அமைந்துள்ளது. 


ஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(?!) பயணக் கட்டுரை நம்மை பாரிசுக்கே அழைத்துச் செல்கிறது பதிவினிடையே பகிரப்பட்ட படங்கள் அருமை.


******

எங்கே செல்லும் இந்தப் பாதை

 இனிய கவிதைகள் அங்கங்கே அணிவகுத்து நிற்கிறது.. கருப்பன் உத்தரவு சமுதாய மூடநம்பிக்கை அப்பட்டமாய் அறிவிக்கிறது இக்கவிதை. இன்னும் சில கவிதைகளும் உண்டு.. இனிமையைக் கூட்ட...

****



ஒழுக்காற்று விழுமியங்களும் Mid-Life Crisis ம்வாழ்க்கையின் அனுபவங்களை காட்டும் கட்டுரை.

இதயம் பேசுகிறேன் இந்த வகையைச் சார்ந்ததே. மன ஓட்டங்களை சீராக சொல்லிப்போகிறார் கட்டுரையாளர்.

ஆண் பெண் உறவு - Intimacy  ஆண் பெண் உறவு பற்றி அழகாய் சித்தரிக்கிறார் இந்த கட்டுரையில்.

******



எடுப்பார் கைப்பிள்ளை வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லிப்போகிறார்.


மற்றுமொரு வலைச்சரத்தோடு சந்திக்க முற்படுகிறேன்.நன்றி நண்பர்களே!!!

10 comments:

  1. இன்றைய வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. அறிமுகமான அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  5. என் கட்டுரைகளின், ஒழுக்காற்று விழுமியங்களும் Mid-Life Crisis ம் மற்றும் ஆண் பெண் உறவு - Intimacy அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்களுக்கு
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அறிமுகங்கள் ஏற்கனவே பெரிய எழுத்தாளர்கள் போல் தெரிகிறதே... சென்று பார்த்து விடுகிறேன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது