07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 25, 2011

சிவரஞ்சனியும் நன்றியுரையும்

அனைவருக்கும் வணக்கம்.




குட்டிப் பதிவு தான் ஹிஹி :D


நன்றி சொல்லி விடைபெறும் நேரம். என்னை சிபாரிசு செய்து  தொடர் உற்சாகம் அளித்த வை.கோ. சாருக்கும், அழைத்த சீனா அய்யா, மற்றும் வலைக்குழுவுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.






நீ............ண்ட பதிவுகளை பொறுமையாக படித்து, பின்னூட்டமிட்ட, இடாத அனைத்து  சகோதர சகோதரிகளுக்கும்,  பணிவான நன்றி. வோட் எல்லாம்  வேற போட்டு மகிழ்விச்சிருக்கீங்க. கோடி கோடி நன்றி, தாங்க்ஸ்,  தன்யவாதகளு... உங்களுக்கெல்லாம் இதோ நீல ஓர்சிட்ஸ் மலர்கள் 



பிடித்த பல பிரபல பதிவர்களின் இடுகைகளுக்கு நடுவே, அதிகம் அறியப்படாத ஆனால் திறமையான எழுத்தை தம் வசம் வைத்திருக்கும்  சில பதிவர்களையும் முக்கியமாக அறிமுகப்படுத்தவே அதிகம் முயற்சி எடுத்திருந்தேன். திறமை வாய்ந்த பலப்பல பதிவர்கள் நடுவே  சில பதிவுகளை மட்டும் சரத்தில் தொடுப்பது என்பதைத் தான்  உண்மையில் சிரமமாக உணர்ந்தேன்.

வெவ்வேறு தலைப்புகளில் சுட்டிகள் தரவேண்டும் என்ற எண்ணமிருந்தாலும்,  நடுநடுவே மனது எப்படியும் கதை கவிதை, வானவியல் சார்ந்த அறிவியல்  இடுகைகளுக்குச் சென்று விட்டது. தொழில்நுட்பம் குறித்து பல பதிவுகள் முன்னிருந்த ஆசிரியர்கள் அதிக திறம்பட செய்திருந்தார்கள். அதனால் அதையெல்லாம் தொடவே இல்லை.

என் ஆன்மாவில் ஒட்டிக்கொண்ட சிவரஞ்சனி ராகத்துடன் முடிக்காவிட்டால் ராத்திரி சோறு இறங்காது. I would feel incomplete.  எனக்கு உயிர் போன்ற விஷயம் ஆன்கீகம் மற்றும் "இசை".  தமிழ்/ஹிந்தி திரைப்பட பாடல்கள் அதிகம்  பிடிக்கும். (யாருக்குத்தான் பிடிக்காது!)  குறிப்பாக இளையராஜா அவர்களின் இன்னிசை சிறகின்றியே வேறுலகம் இட்டுச்செல்லும்.

சிவரஞ்சனி ராகம்,  "reminiscences" என்று சொல்லப்படும் பழங்கால நினைவுகளை தட்டி  எழுப்ப வல்லது. மஹாராஜபுரம் அவர்களின் 'சிவரஞ்சனி' தில்லானா கேட்டுக்  கொண்டே இருக்கலாம். திரைப்பட பாடல்களில்,

["ஒரு ஜீவன் தான்" - "வாவா அன்பே அன்பே", - "அடி ஆத்தாடி,  -"உன்னைத்தானே"-"தேரே மேரே பீச் மேன்" - "ஓசாதி ரே" -என்று பாடல் வரிசை நீளும், விருப்பமுள்ளோர்  youtube சென்று கேட்டு மகிழுங்கள்  ]


இந்த ராகத்தில் அமைந்த நெஞ்சை அள்ளும் ஒரே ஒரு தமிழ்பாடலின் சுட்டியுடன்  வலைச்சரப் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன். இதன் original  இசையமைப்பாளர்: p.ramesh naidu. (இந்தப்பதிவும் நீ...ண்டு விட்டது சுருங்கச் சொல்லி  விளங்க வைக்கும் கலை வரவே வராது போல.... :)) )




உங்களனைவருடனும் இணைந்திருந்த இவ்வாரப்பொழுது இனிமையாய் என்றும் என் நினைவிலிருக்கும். எல்லாருக்கும் மெர்ரி க்ருஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அடுத்து பொறுப்பேற்கவிருக்கும் பதிவருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள். தொடருங்கள்...








15 comments:

  1. உங்களுக்கு மட்டுமல்ல... இந்த வாரம் எனக்கும் நீண்ட நாள் நினைவில் இனிப்பாகத் தங்கியிருக்கும். நன்றி.

    ReplyDelete
  2. இனிமையான இசைப் பகிர்வு. நிறைவாகச் செய்தீர்கள். எங்கள் நன்றி ஷக்தி!

    ReplyDelete
  3. நிறைவாக தங்கள் பணியை செய்தீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப ரொம்ப நன்றி கணேஷ், ராமலக்ஷ்மி, லக்ஷ்மீம்மா :)

    புத்தாண்டு மற்றும் க்ருஸ்மஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நினைவில் நின்ற பதிவுகள்.சிறந்த பணியாற்றியமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. // கோடி கோடி நன்றி, தாங்க்ஸ், தன்யவாதகளு... //

    இதை நான் மிகவும் ரஸித்தேன்.
    உங்கள் நட்பு கிடைத்ததில் நானும் தன்யனானேன்.

    உங்களுக்கு இருக்கும் அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும், ஆசைகளுக்கும், துணிவுகளுக்கும்,
    இறக்கை கட்டிப்பறப்பது போன்ற சுறுசுறுப்புக்கும் உங்களுக்கான வலைச்சர ஆசிரியர், என்ற பதவிக்காலம் ஒரே ஒரு வாரம் மட்டுமே, என்பது போதவே போதாது தான்.

    வலைச்சர பொறுப்பாசிரியர் திரு சீனா ஐயா அவர்களுக்கு அன்புடன் ஓர் வேண்டுகோள் எங்கள் அனைவரின் சார்பிலும் இங்கு வைக்கிறேன்.

    திருமதி ஷக்திபிரபா அவர்களுக்குத் தொடர்ந்து மற்றொரு வாய்ப்பு, அதுவும் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு (ஒரு முழு மாதம் - முழு பெளர்ணமி நிலா போல)
    அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அப்போது தான் அவரின் முழுத்திறமைகளை அவர் வெளிப்படுத்த முடியும்.

    அதன் மூலம் நாம் பல நல்ல பதிவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

    தயவுசெய்து என் இந்த அன்புக் கோரிக்கையை நிறைவேற்றித்தருவீர்களா! ஐயா.

    ஆவலுடன் தங்களின் பதிலை எதிர்பார்க்கும் .....

    உங்கள் பிரியமுள்ள vgk

    ooooooooooooooooooooooo

    கொடுத்த பணியை கொடுத்த நேரத்திற்குள் மிகச்சிறப்பாகச் செய்து முடித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி.

    இன்றுடன் விடைபெற்றுச் செல்ல இருக்கிறீர்களே என்று நினைக்கும் போதே நான் என் ’ஷக்தி’ இழந்ததாக உணர்கிறேன். எல்லோருமே இப்படித் தான் உணர்ந்திருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.

    அன்பான வாழ்த்துக்கள்!

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  7. நன்றி கோகுல், ரத்னவேல் சார் :)
    தொடர்ந்து ஊக்கமளித்தீர்கள்! நன்றி.

    ReplyDelete
  8. வாங்க வை.கோ sir,

    //வலைச்சர பொறுப்பாசிரியர் திரு சீனா ஐயா அவர்களுக்கு அன்புடன் ஓர் வேண்டுகோள் எங்கள் அனைவரின் சார்பிலும் இங்கு வைக்கிறேன்.
    //

    பணியை மேலும் திறம்பட செய்ய பல பதிவர்கள் தொடர்வார்கள் சார். :) அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    உங்களின் அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இதயபூர்வ நன்றி :)


    //இன்றுடன் விடைபெற்றுச் செல்ல இருக்கிறீர்களே என்று நினைக்கும் போதே நான் என் ’ஷக்தி’ இழந்ததாக உணர்கிறேன். //

    இப்படி ஒரு பிரியாவிடையா :))
    ரொம்ப நிறைவாக பின்னூட்டங்கள் இட்டு மகிழ்ச்சியிலாழ்த்தினீர்கள். மிக்க நன்றி.....

    நான் எங்கு சென்று விடப் போகிறேன்....என் பின்னுட்டங்கள் தொடரும்...இங்கும், உங்கள் தளத்திலும், நண்பர்கள் அனைவரின் தளத்திலும் :)

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  9. amazed at the following u have.keep it up.
    sk

    ReplyDelete
  10. amazed at the following u have.keep it up.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள், வாழ்த்துகள்

    ReplyDelete
  12. தங்களுக்கு கொடுத்த ஆசிரியர் பணியை மிகவும் திறம்பட செய்தமைக்கு முதலில் எனது வணக்கங்களும், வாழ்த்துகளும். மதிப்பிற்குரிய சீனா ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு இருந்தும், சந்திக்காமல் போய் இருக்கிறேன். இதைப் போல எத்தனையோ நல்ல மனிதர்களை கண்டும் காணாமல் வாழ்வில் சென்று இருக்கிறேன். இதை சீனா ஐயாவிடம் குறிப்பிட்ட போது 'சந்திப்பு எப்பொழுது நிகழ வேண்டுமோ அப்பொழுதுதான் நிகழும்' என்று அழகாக குறிப்பிடுவார். எப்படியாவது வாழ்வில் ஒரு முறை நேரில் பார்த்து பேச வேண்டும் என மனதில் சிலர் குறித்து நினைப்பது உண்டு. என்று தங்களின் திருவண்ணாமலை பயண கட்டுரை படித்தேனோ அன்றிலிருந்தே நான் பார்க்க விரும்பும் மனிதர்கள் என உங்களை எண்ணியதுண்டு, இன்னமும்!

    எப்படி தினமும் ஒரு பதிவு எழுதப் போகிறீர்களோ என்ற கவலையும் வந்து சேர்ந்தது. முதல் பதிவில் உங்களுக்கு 'சகோதரி, தினமும் ஒரு பதிவாவது எழுத வேண்டும்' என கோரிக்கை வைக்க நினைத்த வேளையில் மனதில் 'நிச்சயம் தினமும் குறைந்த பட்சம் ஒரு பதிவு எழுதுவீர்கள்' எனும் நம்பிக்கை வந்ததன் நோக்கம் எதையும் ஏனோதானோ என செய்யாமல் நேர்த்தியாக செய்யும் பாங்கு தங்கள் எழுத்துகளில் தென்பட்டதுதான்.

    இதுவரை நான் தொடர்ந்து இந்த வலைச்சரத்தில் மறுமொழி இட்ட பதிவுகள் தங்களுடையதாகவே இருக்கின்றது என கருதுகிறேன். இனிமேல் தொடர்ந்து இந்த வலைச்சரம் வந்து படித்து செல்லும் நிலையை உருவாக்கி தந்து இருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது. மிக்க நன்றி சகோதரி.

    நீங்கள் இந்த வலைச்சரத்தில் இருந்து விடைபெற்று சென்றாலும் நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளும், உங்கள் எண்ணங்களும் மனதில் வலம் வந்து வளம் சேர்க்கும்.

    ReplyDelete
  13. நன்றி அனைவருக்கும் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது