சென்று வருக ஷக்தி பிரபா - வாங்க வாங்க வைரை சதீஷ்
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோதரி ஷக்தி பிரபா தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 9 பதிவுகள் இட்டு 80 பதிவர்களை அறிமுகம் செய்து 140 பதிவுகளை அறிமுகம் செய்து ஏறத்தாழ 220 மறு மொழிகள் பெற்றிருக்கிறார்.
இவரது அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் அத்தனையும் அருமையான பதிவுகள். சகோதரி ஷக்தி பிரபாவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் வைரை சதீஷ். இவர் வைரை சதீஷ் என்ற பெயருள்ள தளத்திலேயே எழுதி வருகிறார். இவர் கணினி, கூகுள், மொபைல், பிளாக்கர் டிப்ஸ் எனப் பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். கணினி மற்றும் அலைபேசியில் பயன் படுத்தும் பல மென் பொருள்களைப் பற்றி எழுதி வருகிறார். உங்கள் ஆருயிர் நண்பன் எனத் தளத்தில் விளம்பரப்படுத்தும் இவர் தான் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்களில் இளையவர் ஆவார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். இவரை வருக வருக - அதிக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஷக்தி பிரபா
நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி சீனா அய்யா.
ReplyDeleteவாங்க சதீஷ். இளையவர்கள் கிட்ட கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. சிறப்பா செய்யுங்க! :)
அன்புடன்,
ஷக்தி
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க்கவிருக்கும் வைரை சதீஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அருமையாக உங்கள் எண்ணக் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மிக்க நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு .
சென்ற வாரம் ஆசிரியராக பொறுப்பேற்று தனது பணியை செவ்வனே செய்த சக்திபிரபா அவர்களுக்கும் இந்தவாரம் பொறுப்பேற்கும் சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteநல்வாழ்த்துகள் ஷக்தி பிரபா
ReplyDeleteநல்வாழ்த்துகள் வைரை சதீஷ்
இனிய வாழ்த்துகள்..
தம்பிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஎனக்கு ஷக்திப் பிரபாவை வழியனுப்பவே மனசில்லை. அருமையா செயல்பட்ட அவங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்! இளைய ஆசிரியர் வைரை சதீஷ்க்கு நல்வரவு! அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாய்யா சதீசு.....
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!!!
வாழ்த்துக்கள் ஷக்திப்ரபா @ வைரை சதீஷ்.
ReplyDeleteநன்றி சீனா ஐயா. லண்டன் வந்தால் வீட்டுக்கு வாங்க. :) நானும் அப்படியே.
ReplyDeleteநன்றி அனைவருக்கும் :)
ReplyDelete