வணக்கம்!...பல முறை சொன்னேன்...சபையினர் முன்னே!
➦➠ by:
shakthiprabha,
சக்திப்ரபா,
ஷக்திப்ரபா
வணக்கம் நண்பர்களே!
இவ்வார ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு விடுத்த சீனா ஐயாவுக்கும் வலைக்குழுவிற்கும் மிக்க நன்றி.
சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர் வை.கோ சார் அவர்கள். என் மேல் நம்பிக்கை வைத்து, அல்லது என் சிந்தனை / ரசனை / எழுத்து என எதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து என்னை பரிந்துரை செய்திருக்கிறார்.
அதனை ஏற்று அழைப்பு விடுத்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரக் குழுவிற்கும் ஊக்குவித்த வை.கோ சாருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றி தெரிவித்து தொடர்கிறேன்.
"நான் யார் தெரியுமா? எடுத்துச் சொன்னால் புரியுமா!" அப்டீங்கற பாடல் தான் நினைவுக்கு வருது. ஏன்னா எடுத்து சொல்லுற அளவு நான் பெரிய ஆளில்லை. என்னை அதிகம் வலையுலகில் பலருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. பின்ன! அடிக்கடி எழுதினாத் தானே தெரியும்!!
பத்து வயதில் முதல் எனிட்-பிளிடன் கோகுலம் என்று புத்தகத்தில் மூழ்கிப்போனவள். புத்தகத்தில மூழ்கி போயிட்டேனா, மனுஷங்க இருப்பது கூட மறந்து போய்டுவேன். இந்த பயம் என் கணவருக்கு அதிகம் உண்டுங்கறதால, புத்தகக் கண்காட்சிக்கு அழைச்சுட்டு போகவே பயப்புடுவாங்கன்னா பாத்துகுங்க!
சத்தியமா நானும் கோர்வையா வாக்கியமெல்லாம் எழுதுவென்னு பத்து வருஷம் முன்ன வரை கூட நினைச்சதில்ல. சுமார் பத்து வருடம் முன்ன 'மன்றமய்யத்தில்' கவிதைகளுக்கு "கருத்து" சொல்லி "ஆஹா! சூப்பர், இதாங்க கவிதை"ன்னு சொல்ல போனவள "நீயும் எழுது"ன்னு ஊக்கு எல்லாம் வித்தவர் நம்ம 'ஜீவ்ஸ்' என்கிற ஐய்யப்பன் மற்றும் 'லலிதாராம்'. மரத்தடி குழுமத்தில் சேர்ந்த போது பல நண்பர்களின் எழுத்துக்கு நான் விசிறி. நிறைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் நான் சொல்லும் 'தத்தக்கா பித்தக்கா' கருத்துத்தை ரசிச்சு நட்பு கொண்டாங்க. இப்படி ஆரம்பிச்சது 'நானும் கொஞ்சமானும் எழுதணும்' ங்கற ஆசைல கொண்டு போய் விட்டுடுச்சு. அதன் விளைவா சில கதைகள் கவிதைகள்(!!) கூட எழுதியிருக்கேன். அதில எனக்குப் பிடிச்ச சிலதை உங்களோட பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி.
சின்ன வயசு நினைவுகளையெல்லாம் அப்படியே வாசம் புடிச்ச பதிவு இது. சின்ன பொண்ணா நான் வளர்த்த/பார்த்த செடி, கொடி, பூ எல்லாம் எனக்கு ரொம்ப ப்ரியமானவை, என்னோடு வளர்ந்த சகோதரிகள். வண்ணப்பூக்களை நீங்களும் நுகருங்கள்.
நம்ம மேல சில பேர் அபரீமிதமா பாசம் அன்பு வைப்பாங்க. அன்பைத் திரும்ப எதிர்பார்க்காத selfless love ன்னு சோல்லலாம். பிரதிபலன் பார்க்காத அதே அன்பை / காதலை அவங்களுக்கு பரிசா குடுக்க முடியலைன்னா, அதை குடுக்கமுடியாம நாம படுகிற வலியை என்னன்னு சொல்லுற இந்தக் கவிதை என் படைப்புக்களில் எனக்கு மிகவும் ப்ரியமானது.
மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு போன சில கவிதை அல்லது கதை உண்டு. pablo neruda வின் saddest poem எனக்குள்ள அந்த தாக்கத்த உண்டு பண்ணிச்சு. அந்தக் கவிதையில மூழ்கிப் போய்
உருகி அதோட தமிழாக்கத்தை என்னால் இயன்றவரை செதுக்கினேன். எனக்கு ரொம்ப திருப்தி தந்த தமிழாக்கம் நான் பொக்கிஷமா கருதற ஒரு படைப்பு.
பிடிக்காமல் போன நவராத்திரி என்னோட சின்ன வயசு அனுபவத்தை நான் அசை போட்ட பதிவு. இந்த பதிவு போட்டவுடன் ஏற்பட்ட திருப்தில நவராத்திரியும் ரொம்ப புடிச்சு போச்சு.
சிறு வெற்றிக்கான அங்கீகாரம் "சர்வேசன் நச் சிறுகதை" போட்டில எனக்கு கிடைச்சுது. என்னோட ‘பள்ளிக்கூடம் போகமாட்டேன்’ சிறுகதை முதல் இருபது இடங்களில் ஒண்ணை பிடிச்சுது. எனக்கு சூட்டப்பட்ட குட்டி மகுடம். அதனால ரொம்ப ஸ்பெஷல்.
மிச்சப்படி, நான் தொகுத்து வழங்கியிருக்கிற சோவின் எங்கே பிராமணன் ஆன்மீக விளக்கங்கள்/கதைகள், என் ஆன்மாவில ஒட்டி உறவாடுற பதிவுகள். இன்னதென சுட்டிக் காட்ட முடியவில்லை.
இவ்வளவு தானா நான்....?
*****************
'நான்' யார்? மறுபடியும் கேட்டுப் பார்க்கிறேன். என்னுடைய வலைதளத்தின் வரிகள் இதற்கான சரியான விடையை சொல்ல முற்பட்டிருக்கிறது.
" 'நான் யார்' என்று ஆராய முற்படும் போதே, அங்கு 'நான்' என்பது இருப்பதில்லை"
******************
எனக்குப் பிடித்த சில பதிவுகளை ஏழு பாகங்களாக பிரித்துப் பகிர எண்ணியிருக்கிறேன். பிரபஞ்சத்தில் தோன்றி மறையும் எதுவும் (you name it)
"துவங்கி,...
வளர்ந்து,...
பொலிந்து,...
வாழ்ந்து,...
முதிர்ந்து,...
தளர்ந்து,...
அமைதி..... பெறுகிறது.
இக்கருத்துக்களைக் கொண்ட பிரிவுகளாய் வலைச்சரத்தை கோர்க்க எத்தனித்திருக்கிறேன். சரத்தின் துவக்கத்துடன் அடுத்து வருகிறேன்.
|
|
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான தொடக்கம்... வாழ்த்துக்கள்.....
ReplyDelete"வணக்கம்!...பல முறை சொன்னேன்...சபையினர் முன்னே!"
ReplyDeleteஆஹா அழகானதொரு பொருத்தமானப் பாடலுடன் ஆரம்பித்துள்ளீர்களே!
இது ஒன்றே போதாதா!
தாங்கள் யார்?
எப்படிப்பட்டவர்?
உங்கள் ரசனை என்ன?
அறிவென்ன?
ஆற்றலென்ன?
என அனைவரும்
அறிந்துகொள்ள! ;))))).
//" 'நான் யார்' என்று ஆராய முற்படும் போதே, அங்கு 'நான்' என்பது இருப்பதில்லை" //
’நான்’ என்ற ஈகோ இல்லாதவர்களைத் தானே
நாங்களும் தேடிக்கொண்டிருந்தோம்!
புதையல் போலல்லவா கிடைத்துள்ளீர்கள்! ;)))))
மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுகம் மிகச் சிறப்பாக உள்ளது.
//எனக்குப் பிடித்த சில பதிவுகளை ஏழு பாகங்களாக பிரித்துப் பகிர எண்ணியிருக்கிறேன். பிரபஞ்சத்தில் தோன்றி மறையும் எதுவும்
(you name it)
"துவங்கி,...
வளர்ந்து,...
பொலிந்து,...
வாழ்ந்து,...
முதிர்ந்து,...
தளர்ந்து,...
அமைதி..... பெறுகிறது.//
மின்மினிப்பூச்சி ஒன்று பறக்கத் தயாராகிவிட்டது. அதன் வெளிச்சத்தை ஆர்வத்துடன் காண நாங்களும் தயாராகிவிட்டோம்.
வாழ்த்துக்கள். ஆசிகள். பாராட்டுக்கள்.
பிரியமுள்ள vgk
மிக அருமையான சுய அறிமுகம்.வாழ்த்துக்கள் பிரபா.
ReplyDeleteஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பரே....
ReplyDeleteஅருமையான ஆரம்பம் சக்தி. மனமார்ந்த வாழ்த்துகள். சிறுகதையும், நவராத்திரி கட்டுரையும் முன்னரே வாசித்து ரசித்தவை. மற்றவையும் வாசிக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்தி வரவேற்ற நண்பர்கள்
ReplyDeleteதமிழ் உதயம், தமிழ்வாசி பிரகாஷ், வை.கோ sir, ramvi, சசிகுமார், ராமலக்ஷ்மி எல்லோருக்கும் கூடை நிறைய நன்றி :)
வை.கோ sir,
ReplyDeleteஓவர் பில்டப் குடுத்து புஸ்ஸுனு போகிற சில தமிழ்ப்படங்கள் மாதிரி ஆகிடாம இருந்தா சரி :))
உங்கள் ஆசியும், அன்பு உற்சாகமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. :)
வாழ்த்துகள் சகோதரி. சிறந்த வாசிப்பு அனுபவம் உடையவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகிவிடுவார்கள் என்பதற்கு இணையாய் தங்களின் பதிவுகள் இருக்கின்றன. தொடருங்கள்.
ReplyDeleteசுய அறிமுகம் அருமை. வருக - பல முறை சொன்னேன்.
ReplyDeleteவாழ்த்துகள். சுய அறிமுகமே அழகா வந்திருக்கு.
ReplyDeleteஎன் அருமைத்தோழி ஷ்க்திப்ரபா மிகுந்த ஆங்கிலப்புலமை கொண்டவள் சில ஆங்கிலக்கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறாள். அன்பும் அடக்கமுமான பெண்.ஷக்தியின் வலைச்சரம் நம் மனங்களீல் மணக்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகள் சக்தி.
ReplyDeleteநன்றி வி.ராதாக்ருஷ்ணன் :) உங்கள் பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteகருதுக்கும் வரவேற்கும் மிக்க நன்றி nizamudeen. பல முறை வருக சொன்ன உங்களுக்கு ... +1 நன்றி!
ReplyDeleteகோவையிலிருந்து தில்லி சென்றுள்ளீர்களா தோழி! :) வாருங்கள் வருகைக்கு நன்றி :)
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து படித்து கருத்துரையிட்டால் மகிழ்வேன்.
வாருங்கள் ஷைலஜா!
ReplyDeleteஉங்கள் வருகையால் I am honoured! நல்லவிதமா சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ். சொன்ன மாதிரி சாக்லேட் வாங்கி அனுப்பிடறேன்.
@everybody,
தொடர்ந்து வந்து, படித்து உற்சாகப்படுத்த கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நன்றி. (தமிழ்ல நன்றியை தவிர நன்றி சொல்ல வேறு வார்த்தை உண்டா? யாரேனும் சொன்னால் அவர்களுக்கும் fruit and nuts சாக்லேட் உண்டு!)
சுய அறிமுகம் நல்லா இருக்கு ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் லக்ஷ்மி மேடம். ரொம்ப நன்றி. தொடர்ந்து படித்து பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteநல்லதோர் அறிமுகத்துடன் வலைச்சரம் தொடுக்கபோகும் விதம பற்றி கூறியது சிறப்பாயிருக்கு,வாழ்த்துகள்.தொடருங்கள்.
நல்வரவு ஷக்தி.
ReplyDeleteமரத்தடியில் இருந்து நாம் போட்ட மடலாட்டங்கள் நினைத்தாலே இனிக்கும்!!
வலைச்சரத்தை ஒரு கலக்குக் கலக்கிக் 'காமிக்கப்போறீங்க'ன்னு 'பட்சி' சொல்லுதே:-)))))
வாங்க கோகுல். எனக்கும் மிக்க மிகழ்ச்சி. தொடர்வதற்கும் நன்றி.
ReplyDeleteவணக்கம் துளசி....மறக்க முடியாத காலம் தான் அது :)!!
உங்க பட்சிக்கு நிறைய நெல்லும் அரிசியும் தந்து நன்றி தெரிவிச்சுகறேன்.