07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 21, 2011

ரமேஷுக்கு என்ன ஆச்சு....


பொலியும் மழை




ரமேஷுக்கு அன்னிக்கு இருப்பே கொள்ளல. இருகாதா பின்ன! எல்லாருக்கும் ஜோடியா திரியறச்ச நமக்கு ஒண்ணுமே மாட்ட மாட்டேங்குதேங்கற கவலையில கொஞ்சம் இளைச்சு கூட போய்ட்டான். போன வாரம் சிரிச்சு பேசின நீலா கூட காரணமே இல்லாம ரெண்டு நாளா பேசல.

அன்னைக்கு காண்டீனில மோட்டு வளைய பார்த்துகிட்டு, பரிதாபமா டீயும் பன்னும் சாப்பிடற போது, உலுக்கி குலுக்கி கூப்பிட்டப்புறமும் பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்திருந்ததால கூட வேலை பாக்குற உமேஷுக்கு ரொம்ப கவலையா போய்டுச்சு.

'ஏண்டா ரமேஷ் உன்கிட்ட கொஞ்சம் பேசணம்ன்னு இருந்தேன், நீ எந்த கோட்டைய புடிக்க காண்டீன் சுவத்த பார்த்துட்டு இருக்க...என்ன ஆச்சு உனக்கு? ராத்திரி மோஹினி பேய் வந்து புடிச்சிடுச்சா'ன்னு கெட்டான்.

"ஹ்ம்ம்...மோஹினியெல்லாம் எனக்கு வேணாம். நம்ம நீலா வந்து புடிச்சுகிட்டா நல்லா இருக்கும்" சோகமா பதில்  சொன்ன ரமேஷோட மனசு டபால்-ன்னு புரிஞ்சு போச்சு உமேஷுக்கு.

என்ன விஷ்யம். எனிதிங் இம்பார்டண்ட்?

இம்பார்டண்ட் அண்ட் யூஸ்ஃபுல். நம்ம முத்துச்சரம் ராமலக்ஷ்மி ப்ளாக் படிச்சியா?

இப்பொ ரீசண்டா நட்சத்திர பதிவரா கூட இருந்தாங்களே அவங்க தானே..நான் அவங்க சமூக சிந்தனை தூண்டற கட்டுரை, புகைப்படக்கலை, கவிதைக்கெல்லாம் ரசிகன் தெரியுமா. லால்பாக் ஃபளவர் ஷோ, ஆப்ரிக பறவைகள் புகைப்படமெல்லாம் நேர்ல பார்க்குற நேர்த்தி!

அவங்களே தான். அவங்க நட்சத்திர பதிவுல நம்ம மாதிரி இளைஞர்கள் ஜனக்ரஹா அமைப்புல எப்படி உபயோகமா நேரத்தை செலவிட்டு பலவகையிலும் மக்களுக்கு பயனுள்ள தீர்வு கண்டிருகாங்கன்னு எழுதி அவங்களுக்கு பூங்கொத்தெல்லாம் குடுத்திருக்காங்க. நாமும் அங்க போய் சேர்ந்த்து நம்மாலானதை செஞ்சா என்னன்னு தோணிச்சு. நான், நீ ன்னு வாழாம 'நாம்' ன்னு வாழறதுல கிடைக்கற நிம்மதி வேற எங்க. ராமலக்ஷ்மி குறுங்கவிதையும் இதைத் தான் சொல்லுது.

'நல்ல யோசனை தான்.  நான் கூட 'நாம்' ஆகத்தான் ட்ரை  பண்றேன்..நீலா மனசு வெக்க மாட்டேங்கறாளே' அப்டீன்னு சொல்ல நினைச்சதை ரமேஷ் சொல்லலை.

முதல்ல ஊழலை ஒழிக்க பெரிய திட்டம் கொண்டு வரணம். அதுக்கு ஒவ்வொரு மனுஷனும் தன்னாலானதை செய்யணும். நம்ம வேலை முடியுறதுக்கு நூறு ரூபாய் அதிகமா கேட்டாலும் குடுக்க கூடாது. சாலை விதிகள மதிக்கணும், அப்படியே தடம் மாறி தவறுதலா மாட்டினா ரூபா  நோட்டைத் தள்ளி தப்பிக்க கூடாது.


நம்ம நாடெல்லாம் எங்க உருப்புட போகுது..என்னக் கேட்டா பேசாம நாடு இனம் மொழி  கடந்த ஒரு உலகத்துக்கு போயிடலாம்ன்னு தோணுது. நான் கூட பாகிஸ்தான் எல்லை கிட்ட போயி பார்த்திருக்கேன். எந்தபபக்கம் பொனாலும் இந்திய நாட்டை சுத்தி அன்னிய நாடுகளின் பார்டர் டெஷன். இதெல்லாம் இல்லாம சில யூரோப் நாடுகள்ல மனித சுதந்திரம் இருக்குன்னு ப்ரெஞ்சுக்காரன் எழுதிருக்கற மாதிரியான நாட்டுல வாழணம். நூத்தியெட்டு ஜாதி சண்டை கலவரம் நடக்கற நம்ம இந்தியாவுல எங்க இதெல்லாம்! வெறும் கனவு.!! எல்லைகள் இல்லாத உலகத்துல, கால் ஒரு நாட்டுலையும் தலையை இன்னொரு நாட்டுலையும் வெச்சு படுத்துக்கணும். அங்கேயும் இங்கேயும் தாண்டி குதிக்கணும். கிட்டத் தட்ட என்னை மாதிரியே பிரெஞ்சுகாரரும் சந்தோஷப்பட்டிருகார். "எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அது போல் விளங்கும்" அன்னிக்கே தலைவர் சொல்லிட்டார். என்னவோ போ நம்ம நாடு நம்ம தேசம் ன்னு பற்று வெக்கறோம். எந்த தேசத்துக்கு பொனாலும் நம்ம கலை, நம்ம நாடு ன்னு நினைச்சு பெருமை படுறோம்.  நாம வெக்கற பற்றுக்கு அரசியல்வாதிங்க  ஆப்பு வெக்கறாங்க!

நிறுத்துடா நிறுத்து, நீ பேசுறது சரியே இல்லை. இதை பத்தி தான் கௌசல்யா சொல்லிருக்காங்க. மனதோடு மட்டும் ன்னு இவங்க பதிவை படிக்கவே ஒரு நாள் ஆபீஸ் லீவ் போடணம். சமூகம் குடும்பநலம் விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு கட்டுரைகள எழுதறாங்க. எழுதுறதோட விடாம, இவங்க அமைப்பு மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வராங்க . நாடு நமக்கென்ன் செஞ்சுதுன்னு கேக்காம நாம நாட்டுக்கு என்ன செய்ய போறோம் ன்னு யோசிக்கணும். பேசிட்டா போதாது.  செயல்படுத்தணம். நீ நாட்டுக்கு என்ன செஞ்ச...?

ஹ்ம்ம்..சரி கிளம்பு...நாளைக்கே இந்திய எல்லைக் கோடுகளை சுத்தி இருக்கற பாதுகாப்பை எப்படி மாத்தி அமைக்கறதுன்னு சட்டசபை கூட்டலாம்.

நக்கல் பேச்சை நிறுத்தி உபயோகமா பேசேன். எப்பொ பாரு வராது, முடியாது. இல்லைன்னு நொட்ட சொல்லிகிட்டு.  

உனக்கென்னப்பா சிக்குனு ஒரு பொண்ணு கிடைச்சு லைஃப் ல செட்டில் ஆகிட்ட. என்னைப் பாரு "என்னவள் என்பவள் யார்" ன்னு நானும் கூவி கூவி ஹரீஷ் ராகவேந்த்ரா மாதிரி பாட முயற்சி பண்றேன், என் குரல் சரியில்லைன்னு கழுதை கூட பதிலுக்கு கத்த மாட்டேங்குது. தொ பாரு......ஒரு குருவி.......ஒரு குருவி கூட ஃபீலிங்க்ஸோட தன் பெட்டைகுருவிக்கு வெய்ட் பண்ணுறத கவிதையாக்கி தமிழ்விரும்பி கிட்ட சொல்லிருக்கு. அவரும் பதிலுக்கு குருவிகிட்ட அவருடைய ஆதங்கத்தை கவிதையா சிந்தியிருக்கிறார்.  'மயில், குயில், குருவி, கிளி'  எந்த ரேஞ்சுக்கும் எனக்குத் தான் கிடைக்க மாட்டெங்குது. "கடவுள் என்பவர் யார்" ன்னு தேடி போயிடலாமான்னு யோசிக்கறேன்.  எனக்கு தமிழ்விரும்பி தான் guide. ஹ்ம்ம்ம்...

என்னது குருவி பாடிச்சா? இப்ப நம்ம உலகத்தை சீரழிச்சிட்டு இருக்கறதுக்கு குருவிங்க ஒண்ணு ரெண்டு கண்ணுல பட்டா பாதுகாத்து rare species வகைன்னு சொல்லி அரசாங்கத்துல தெரிவிக்கணும். நீ பாடி கிழிச்சாச்சு, இனிமே கவிதை எழுதறது தான் மிச்சம். முதல்ல ஹைக்கூ கவிதை முயற்சி பண்ணேன். ஹைக்கூவை பத்தி சுவாரஸ்யமான light hearted  விஷயங்கள் சமுத்ரா. இதுல எழுதிருக்கார். அணு முதல் அண்டம் வரை எல்லாத்தை பத்தியும் எழுதறார். எந்த கோட்டையோ புடிக்க யோசனை பண்ணுறதை நிறுத்தி இதை மாதிரி ஆரோக்யமான பொழுது போக்கை வளர்த்துக்கலாம்.


தாங்க்ஸ்டாப்பா பெரிய மனுஷா.... நான் கதை எழுத நினைச்சதை சொல்லவே இல்லையே. சர்வேசன் நச் பொட்டின்னு சொன்னாலும் சொன்னார், நானும் ஒரே கதைல ரெண்டு தடவை நச்சு நச்சு ன்னு புடுங்கற பொண்டாட்டியோட கதையை எழுதி போட நினைச்சு, அப்புறம் எங்க எனக்கு முதல் பரிசு கொடுத்துட்டா மிச்சவங்களுக்கு இல்லாம போயிடுமேன்னு  கடசீ நேரத்துல பதிவை போடல. பரந்த மனசு பாரு.

அட மட சாம்பிராணி அது வேற நச். அந்த போட்டில வந்த கதைல சதங்கா வோட நெல்லிமரம் கதை ரொம்பவே புடிச்சுது. பெரியவங்களா பாத்து நிச்சயம் பண்ணி பதவிசான பொண்ணா தேடி திருமணம் செய்யறாங்க. வாழ்கைல சரியான துணை அமைஞ்சா அப்புறம் ஒரே இனிமை தான். கதையில செம்ம நச் திருப்பம். இவங்க இப்பொவெல்லாம் எழுதறதாவே தெரியலை :(

அடுத்த பௌர்ணமிக்கு ஊர்ல திருவிழா உமேஷ். நான் கூட ரெண்டு நாள் லீவ்ல போய்ட்டு  வரலாம் ன்னு இருக்கேன்.

நல்ல விஷயம் தான். செய். எல்லார் வாழ்கைலையும் ஒரு திருப்பம் வரும். உனக்கு வரும் பாரு. டேக் இட் ஈஸி மை பாய்.. ஒவ்வொருத்தன் எதையெல்லாமோ சாதிக்க நினைக்கறான். அப்படிபட்டவங்களுக்கே சில நேரம்  தலையெழுத்து சரியா அமையலைன்னா அதோட வலி, என்னன்னு பட்டவனுக்கு தான் தெரியும். உமாஜீ சொல்ற மாதிரி இதெல்லாம் நிராகரிப்போட ஆறாத வலி எத்தனை வயசுலையும் தழும்பா நிக்கும். அவனவன் தலைழுத்து மின்ன வேண்டிய நேரத்துல முடியாம போய் நொடிச்சு போயிடறாங்க.  நீ இல்லாத ஒரு சோகத்துகாக ஏண்டா எல்லார் ப்ராணனையும் வாங்கற!?

ஹி ஹி உமாஜீயோட ரீசண்ட் பதிவை படிச்சேன். ஒஸ்தி படம் பார்க்க காசு குடுத்தா கூட போகக் கூடாதுன்னு நினைச்சுகிட்டேன்.  சும்மா சொல்ல கூடாது உமாஜீ ஒரு ஞானி! நான் என்னனென்ன கூகிள் சர்ச் போடுவேன்னு அவருக்கே தெரிஞ்சிருக்கு.

சரியா அதே நேரம் நீல சல்வார் பறக்க, கட்டாத கருங்கூந்தலோட, ஷாம்பூ விளம்பரத்துக்கு தலை கோதியபடி வந்தா நீலா.

"ஹல்லோ உங்க conversationல நானும் ஜாயின் பண்ணிக்கலாமா"

"வாங்க நீலா சும்மாத் தான் வெட்டியா.... கொஞ்சம்   யூஸ்ஃபுலா... பேசிட்டு இருந்தோம்  ஹி ஹி"

என்ன ஹாட் டாபிக்?

"டாபிக்கென்ன...வழக்கம் போல தேவதை மாதிரி இருக்கற பொண்ணுங்க கல்யாணம் ஆனதும் எப்பிடி ராட்சசிகளா மாறுறாங்கன்னு ஒரு ஆராய்ச்சி. சுதந்திரமா சிரிச்சி கிரிச்சு பேசிட்டு இருந்தவங்கள ஓபாமா ரேஞ்சுக்கு கவலை பட வெச்சு சோர்வாக்கிடறாங்க. கல்யாணம் எல்லாம் பெரியவங்க செய்யற சாடிஸ்டிக் சதி"

"ஹல்லோ...இதெல்லாம் ரொம்ப ஓவர். உண்மையிலயே  சுதந்திரம் இழக்கறது நாங்க தான்...வீட்டுலையும் அடக்க ஒடுக்கமா இருந்துகிட்டு, வெளியவும் போய் குப்ப கொட்டி பேரு சம்பாதிக்க வேண்டிருக்கு."

என்னை மாதிரி ஒரு இளைஞர் பிரபுராம் தன்னோட கதைல எப்படி இந்த கால யூத் கல்யாணத்தைக் கண்டு மிரண்டு போயிருக்காங்கன்னு எழுதிருக்கார்.

ஓ பிரபுராமா! அவரொட வலைதளத்துக்கு நான் அடிக்கடி போவேனே. சின்ன வயசா இருந்தாலும் கம்பராமயாணம் இலக்கியம்ன்னு ஆழமா பேசுறார். ஆங்கில பதிவுகளிலும் அவரோட சொல்லாட்சி அசர வைக்குது. சில கம்பர் பாடல்களை பத்தியெல்லாம் ரசிச்சு எழுதிருக்கார்.  ஒலிநாடா வடிவில கூட வித்தியாசமான பதிவெல்லாம் போட்டிருகாரே! அவரோட "கடும் நகை" கதை ரொம்பவே creativeஆக கையாளாபட்டிருக்கு. நேரத்தை பயனுள்ளதா நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தறது  ரொம்ப அருமையான விஷயம் இல்லையா. அடிக்கடி எழுதினா...I am sure he would go places."

தன் வயதொத்த இன்னொருவனை ஒரு பெண், அதுவும் நீலா புகழ்ந்து பேசுவது ரமேஷுக்கு  கடுப்பேற்றியது.

இதே போலத்தான் நர்சிம் கூட நிறைய சங்க காலத்து பாடல்களை சொல்லி அதுக்கு விளக்கமும் எழுதறார். காதலன் காதலி ரெண்டு நிமிஷம் பிரிஞ்சாலே நாலு எஸ்.எம்.எஸ் அனுப்பி அம்பானியை பணக்காரனாக்கிட்டு இருக்குது இந்தக் காலம். அந்த காலத்துல  அன்னபறவை ஒண்ணு தான் தூது போகும் போஸ்ட்மேன். மிச்சத்துக்கு போஸ்டல் அறிவு  போதல.

ரமேஷின் ஹுயூமருக்கு வாய் விட்டு சிரிச்சா நீலா. இவர்கள் நடுவில் தேமே என்று எதை பேசுவது என்று தெரியாமல் பூஜை நேரத்து கரடியா இருக்கோமோன்னு ஒரு சந்தேகத்துல  உமேஷ் நெளிஞ்சிட்டு இருந்தான்.

அப்புறம் ... சொல்லுங்க ரெண்டு நாளா ஒரே பிசி போல இருக்கே

அதெல்லாம் ஒண்ணும் இல்ல. வீட்ல பொண்ணு பாக்க வந்திருந்தாங்க. அதான் கொஞ்சம் பிசி.

மடார் என்று இதயம் வெடித்த சத்தம் ரமேஷுக்கும் உமேஷுக்கும் மட்டும் கேட்டுச்சு.

யாருக்கு...உங்களுக்கா?

சீச்சி என் தங்கச்சிக்கு. அவ யாரையோ வேத்து மதத்துகாரனை லவ் பண்ணிட்டா. தமிழன் கூட இல்ல. அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம். அப்புறமா இப்போ சமாதானம் ஆகிடுச்சு.

மறுபடி ரமேஷின் இதயம் பறக்க துவங்கிடுச்சு.

நம்ம அன்பு எழுதின கதை மாதிரியில்ல இருக்கு! இப்படி சுபமா காதல் முடிஞ்சிடுச்சுன்னா நண்பர்கள் பாடு  ஜாலி. இல்லாட்டி அன்னபட்சி இல்லாத இந்த காலத்துல நண்பர்களை ராத்திரி நேரத்துல தொல்ல படுத்தி தனுஷ் மாதிரி காதல் தொல்வி பாட்டெல்லாம் பாட வேண்டியிருக்கும்.

இந்த மாதிரி சிறந்த மொக்கையை  இதுக்கு முன்ன கேட்டு பழக்கமில்லாத நீலா வாய் விட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா. 'நம்ம மொக்கைக்கு இப்படி ஒரு ரியாக்ஷனா'ங்குற சந்தோஷ்த்துல ரமேஷும் சிரிக்க, ஒரு மணிநேர மின்வெட்டையும் தாண்டி அங்கே மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி உமேஷுக்கு தோணிச்சு. டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு நைசா டாட்டா சொல்லி நழுவிட்டான். சாப்பாடு நேரம் முடிஞ்சதால நாமளும் எஸ்கேப் ஆகிடலாம்.

என்னது?! ரமேஷ் நீலா பேச்சு எதுல முடிஞ்சுது...காதலா கனிஞ்சுதான்னு கவலை படறீங்களா?  "எல்லார் வாழ்கையிலையும் நல்ல திருப்பம் வரும்" ன்னு உமேஷ் தான் முன்னமே சொல்லிட்டாரே. அதுக்காக பஸ்ல போறப்ப வர திருப்பத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க.

சுபம்.

******************************************

 
உபரி தகவல்: கதை கவிதை இதெல்லாம் தான் வரல. மொக்க பதிவுகள் எழுதினா என்னன்னு ரமேஷ் தீவிரமா யோசிக்கறதா கேள்வி.

*****************************************
பொலியும் பருவம் என்றாலே எல்லோருக்கும் இளமைப் பருவம் தான் நினைவுக்கும் வரும். வானவில் பருவம் என்று  சொல்லலாம்.  எல்லாமே ஜாலியா கலர்ஃபுலா இருக்கும்.  சரியான தீர்வு எடுத்து ஆரோக்யமா இந்த பருவத்தை அமைச்சுகிட்டா பாதி கிணறு சிறப்பா தாண்டின மாதிரி. மகிழ்ச்சியும் மழையா நம்ம வாழ்கைல பொழியும்.

"நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்..." எவ்வளவு அழகான பாடல். உதாரணமாய் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை தழுவிய படம். அதிலிருந்து நமக்குத் தேவையான ஒரே ஒரு பாடலுடன் விடை பெறுகிறேன்.


வாழும் வலைச்சரத்துடன் நாளை வருவேன்.

29 comments:

  1. //ராத்திரி மோஹினி பேய் வந்து புடிச்சிடுச்சா'ன்னு கெட்டான்.

    "ஹ்ம்ம்...மோஹினியெல்லாம் எனக்கு வேணாம். நம்ம நீலா வந்து புடிச்சுகிட்டா நல்லா இருக்கும்" //


    சூப்பர்! ஷக்திமிக்க பதில்!! ;)))))

    இந்த ஒரு வாக்கியத்தினாலேயே இன்றைய அறிமுகங்கள் சூப்பரோ சூப்பராக உணர்கிறோம்! vgk

    ReplyDelete
  2. நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்..."

    வாழும் வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வித்தியாசம்மா அறிமுகப்படுத்தி இருக்கீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாருங்கள் vgk sir,

    ///இந்த ஒரு வாக்கியத்தினாலேயே இன்றைய அறிமுகங்கள் சூப்பரோ சூப்பராக உணர்கிறோம்///

    இதுல ஏதோ அர்த்தம் இருக்குமோ :)

    வருகைக்கும் உற்சாகத்துக்கும் கொள்ளை நன்றி :)

    ReplyDelete
  5. //வாழும் வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்...

    //

    உங்கள் வாழ்த்து மேலும் மெருகூட்டும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி ராஜேஸ்வரி :)

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் உதயம். :)


    நன்றி ரத்தினவேல் sir :)

    அனைவருக்கும் மிக்க நன்றி :)

    உங்கள் அத்தனை பேரின் கருத்தும் வருகையும் மகிழ்ச்சியளிக்கிறது...

    ReplyDelete
  7. வித்யாசமான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ரொம்ப ரொம்ப வித்தியாசமான அறிமுகம்...இன்னும் நிறைய பதிவர்கள் இருக்காங்களே ..

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி லக்ஷ்மி madam.
    தொடர் வருகைக்கு மகிழ்ச்சி :)

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி கோவை நேரம். :)

    //ரொம்ப ரொம்ப வித்தியாசமான அறிமுகம்...இன்னும் நிறைய பதிவர்கள் இருக்காங்களே ..
    ///


    நிறைய நிறைய குறிப்பிடத்தக்க வலைதளங்களும் மிக அருமையான பதிவுகளும் இருக்கு...என்னால இந்த ஒருவாரத்தில் எவ்வளவு பேரை குறிப்பிட முடியுமோ குறிப்பிடுகிறேன்.

    பெரிய கடலில் சிறு துளியை சுட்டிக் காட்டியுள்ளேன்.

    உங்கள் வருகையும் கருத்தும் makes me feel good. நன்றி :)

    ReplyDelete
  11. மகிழ்ச்சியும் நன்றியும் ஷக்தி:)! தொகுத்து வழங்கிய விதம் புதுமையாகவும் அருமையாகவும் உள்ளது. உங்களுக்கும் அறிமுகமாகியிருக்கும் பிற பதிவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. இன்றைய அறிமுகங்களுக்கு
    வாழ்த்துக்கள்
    அறிமுகப் படுத்தும் விதம் அழகு
    நன்று சகோதரி.

    ReplyDelete
  13. தேடித் தேர்ந்தெடுத்த பதிவுகளை அடையாளங்காட்டினீர்கள். நனறி!

    ReplyDelete
  14. ரொம்ப அழகா பதிவர்களையும் பதிவுகளையும் தொகுத்திருக்கீங்க. தொகுத்த விதமும் அசத்தல். அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  15. எனது பதிவை அறிமுகம் செய்ததற்கு...
    மிக்க நன்றி சகோதிரி...

    ReplyDelete
  16. மிக்க நன்றி சகோதரி குறிப்பா நீங்க தேர்ந்தெடுத்த பதிவுக்காக!

    நீங்கள் அறிமுகப்படுத்தும்விதம் சுவாரஷ்யமாக இருக்கறது!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நன்றி ராமலக்ஷ்மி, அருமையான பதிவை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர்வருகைக்கு உற்சாகத்துக்கும் உங்களுக்கு பூச்செண்டு :)

    ReplyDelete
  18. வாருங்கள் மகேந்திரன்,

    தொடர்ந்து பின்னூட்டமிட்டு u pep me...thanks a lot! உங்களுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ் :)

    ReplyDelete
  19. வாருங்கள் nizamudeen,

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் :) எனக்கு அந்த வாக்கியம் பிடித்திருந்தது. திறமைகள் கொட்டிக் கிடைக்கும் வலையுலகில் தேர்தெடுப்பது சுலபமாக இல்லை :(

    தொடர் வருகை தந்து மனதை மகிழ்ச்சியிலாழ்த்துகிறீர்கள் நன்றி :)

    ReplyDelete
  20. வாங்க கீதா :) பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  21. வணக்கம் தமிழ்விரும்பி :)

    உங்கள் கவிதை என் மனதை கொள்ளை கொண்டது... இணைத்தது எனக்கு மகிழ்ச்சி :) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  22. நன்றி ஜீ :) உங்களின் வலி பதிவின் தாக்கம் வலைச்சரத்தில் கோர்த்தும் தீரவில்லை :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  23. வித்யாசமான அறிமுகங்கள்

    ReplyDelete
  24. வாங்க சமுத்ரா :) வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி :)

    ReplyDelete
  25. நன்றி.
    நீலாவைக் கேட்டதாகச் சொல்லவும் :-)

    ReplyDelete
  26. வாங்க பிரபுராம்

    சொல்லிட்டாப்போச்சு :))

    ReplyDelete
  27. வித்தியாசமான முறையில் மிகவும் ரசிக்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துகள். அருமை சகோதரி.

    ReplyDelete
  28. நன்றி :) தினம் ஊக்கம் கொடுத்ததற்கும் :)

    ReplyDelete
  29. நன்றி ஷக்தி !!

    'நெல்லிமரம்' சில ஆண்டுகள் முன்னர் எழுதியதென்றாலும், இன்றும் நினைவில் இருத்தி, வலைச்சரத்தில் தொடுத்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி.

    அறிமுகங்கள் அனைத்தும் அருமை ! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது