டைரி சுமக்கும் ரகசியங்கள்
➦➠ by:
shakthiprabha,
சக்திப்ரபா,
ஷக்திப்ரபா
முதிரும் நீரோடை
அன்புள்ள டைரி,
உன்னோட பேசலைனா எனக்கு பொழுதே போகாது. நீ என் வாழ்கைல முக்கிய அங்கமில்லையா? அங்கம் மட்டுமா, நமக்குள்ள புதைந்து கிடக்குற ரகசியம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். சின்ன வயசில் பெட்டி டேவிஸ் உன்னை அறிமுகப்படுத்திய நாள்லிருந்து இன்னி வரை என்னோட ஆருயிர் தோழி நீ தான்.
வரவர இளமைபருவத்தோட எல்லையில முதிர்ச்சியின் முனைல நிக்கறதாலையோ என்னவோ ரொம்ப அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். படிக்கற சில கவிதைகள் அப்படியே பச்சக்னு மனசுல ஒட்டிக்குறது. அது மாதிரி எழுதற சில பேர்ல "வீணாப்போனவன்" அவர்களொடகவிதை எனக்கு ரொம்ப பிடித்தம்னு முன்ன உனக்கு சொல்லியிருந்தேன். அவர வலைதளத்தில் இப்பொல்லாம் எழுதறதில்லையான்னு தெரியல. :(
அதே மாதிரி ராஜா சந்திரசேகர் கவிதைகளும், ரவி ஆதித்யா கவிதைகளும் ரொம்பவும் என் மனதுல நிக்ககூடியவை. பொதுவா எழுத்துல சொல்லாததையும் புரியவைக்கும் கவிதைகள் சிறப்பு. அப்படி தனிச்சு நிக்கறது இவங்க கவிதைகள். ராஜா சந்திரசேகர் கவிதைல ரயில் ஸ்னேகம் மாதிரி வாழ்கைய படம் பிடிச்சு காட்டுற ஒரு கவிதை கொஞ்சம் வலி உண்டு பண்ணிச்சு.
ரொம்ப நாள் முன்ன வலைதளத்துக்கு புதுசா வந்தப்ப ரவி ஆதித்யா பதிவுகள் நிறைய படிச்சதுண்டு. அவரோட மிடில் க்ளாஸ் மொட்டமாடி பத்திய பதிவு என்னோட ஃபேவெரிட். சின்னவயசை நினைவு படுத்திச்சு. உனக்கு அடுத்து நம்ம வீட்டு மொட்டை மாடியும் என் நெருங்கிய சினேகிதின்னு உனக்கே தெரியும். மொட்டை மாடில தொலைச்ச கனவை பத்தி சிறப்பான கவிதை கூட எழுதிருக்கார்.
ஃபளாட் பெருகி வர இந்த காலத்துல நாம மொட்டைமாடியை தொலைச்சுட்டோம். செடி, கொடி, தாவரம், பச்சை புல்வெளி எல்லாமே தொலைச்சுட்டு, நெருப்பு டப்பா சைஸ் வீட்டுல வாழ்ந்துட்டு இருக்கோம். இயற்கை சீர்கேடு இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் ன்னு நெத்தியடி அடிச்சு சொல்லிருக்கார் திரைப்பட பாடலாசிரியர் மதுமதி. நான் தான் என்னோட எழில் கொஞ்சும் இளமையின் எல்லைல நிக்கறேன்னா நம்ம பூமிக்கு என் நிலைமையா வரணும்! :(
இப்புடியே போனா என்னை வெளக்கெண்ண மூஞ்சின்னு வீட்ல திட்டுவாங்கன்னு பயந்து கொஞ்சமானும் சிரிச்சாப்ல முகத்தை வெச்சுகணுமேனு சிரிக்கற சிந்திக்கற விஷயத்தை பத்தி மட்டும் பேசணும் படிக்கணும்னு முடிவுக்கு வந்தேன். அப்போ தான் மின்னல்வரிகள் கணேஷ் சிலேடை பதிவு கண்ணுல பட்டுச்சு. அடடா எப்படியெல்லாம் புலவர்களும் தமிழறிஞர்களும் இலக்கிய ரசத்தை சாமன்ய ஆளும் புரிஞ்சுக்குற மாதிரி பேசியிருக்காங்க என வியந்தேன். அவரோட ப்ளாக்ல சரிதா சரித்திரம் படிக்க படிக்க சிரிப்பு தான். ஷாப்பிங் என்றால் அலர்ஜி கொள்ளும் பெண்களையெல்லாம் ஆண்கள் சந்தித்திருக்கவே மாடாங்களோனு தோணிச்சு.
சிலேடை படிச்ச பாதிப்புல அதே மாதிரி நானும் முயற்சி செய்யணம் நினைச்சு பன்மொழி திறமை வெளிய தெரியற மாதிரி காலைல அத்தை கிட்ட "நேத்து காப்பியே இன்னிக்கு copyஆ" ன்னு கேட்டேன். 'காலைலையே மொக்க போடாத' ன்னு கடுப்பா சொல்லிட்டு போய்ட்டாங்க. என் மனசு மேலும் உடைஞ்சு போச்சு. இலக்கிய ஆர்வத்துக்கு அஸ்திவாரம் கூட போட விடமாட்றாங்க. அப்புறம் தானே கட்டடம் கட்டி வளர்க்கறது.
திறமை இருந்தாக் கூட அதது இருக்கறவங்க கிட்ட இருந்தா மட்டும் தான் உலகம் திரும்பிப் பாக்குது. அதே திறமை சாமான்ய மனுஷங்க கிட்ட இருந்தா, யாரு அதை கவனிச்சு ரெண்டு நல்ல வார்த்தை சொல்லறாங்க?! எத்தனையோ திறமையுள்ள மனுஷங்க வாய்ப்பும், அதிர்ஷ்டமும் இல்லைன்னா முடங்கித் தான் போறாங்க. ரிஷபன் பகிர்ந்திட்ட செய்தி ரொம்பவே யோசிக்க வெச்சுடுச்சு. நேரமில்லையா? ரசனை போதலையா? இல்லை brandedனு உறுதியா தெரிஞ்சா மட்டும் தான் மதிப்பா? இத்தனை பிஸி வேளைலையும் நமக்கு குட்டி குட்டி எஸ்-எம்-எஸ் அனுப்பறவங்க 'make our day'.
என்னை மாதிரி புலம்பியே பிராணனை வாங்குறவங்க ஒரு பக்கம், தமிழ்பறவை மாதிரி சிலர் தன் உழைப்பை, உற்சாகத்தோட சலிக்காம செஞ்சுட்டு இருக்காங்க. தமிழ்பறவை தன்னோட அபார ஓவியத் திறமையை ஒவ்வொரு பதிவிலும் பகிர்ந்திட்டு வரார். சும்மாவா சொன்னாங்க "Choose a job you love, and you will never have to work a day in your life". சேகுவாரா முதல், இளையராஜா, பெங்களூர் palace, புத்தம்புது காலை, இன்னும் பல ஓவியங்கள் சொல்லிட்டே போகலாம். சமீபத்தில் அவரது ஓவியம் அச்சு பதிப்பிலும் வந்திருக்குன்னு தன்னோட சந்தோஷத்தை பகிர்ந்திருந்தார். இவருக்கும் இவர் ஓவியங்களுக்கும் இன்னும் அதிகமான வரவேற்பு எதிர்காலத்துல இருக்குன்னு நம்பிக்கை பிறக்குது.
ஹாஸ்ய கலந்த நச் கதை மூலமாத்தான் எனக்கு வை.கோபாலக்ருஷ்ணன் அவங்களோட வலைதளம் அறிமுகமாச்சு. எழுத்து மூலமா ஒருத்தரை சிரிக்க வெக்கறது எப்படி சிறந்ததோ, அதே மாதிரி நம்பிக்கை தர எழுத்துக்கள் இருந்தாலும் உற்சாகம் பிறக்கும் இல்லையா?! உன்கிட்ட முன்னமே அவரோட ஒவ்வொரு கதைகளையும் சொல்லி சிலாகிச்சிருக்கேன். பிடிச்ச பல கதைகள் இருக்கு, ஆனாலும் "பூபாலன்" கதை நமக்கு சொல்ற கருத்து பல கோணங்களில கால நேரம் தாண்டி விரிவடைஞ்சுட்டே இருக்குற மாதிரி தோணுது. இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.
நம்பிக்கை தான் வாழ்கை. பிரச்சனை இல்லாத மனுஷன் யாரு. எல்லாருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. எவ்ளோ பெரிய ப்ரபஞ்சத்துல நாம ஒரு கடுகு விச்சு தன்னோட பதிவுல சொன்னது தான் நினைவு வரது. நாமளே கடுகுன்னா நம்ம பிரச்சனையும் அதை விட சின்னதுன்னு தோணி போய்டுது. பூதாகாரமா பார்க்காம போய்ட்டே இருந்த வண்டி சுலபமா ஓடும்.
இதையேத் தான் எதிர் விட்டு நித்தி கிட்ட சொன்னேன். அவ சின்னதா இருக்கறதால கடுகுன்னு சொன்னதா தப்பா புரிஞ்சுட்டு சண்டைக்கு வந்துட்டா. எனக்கு பேசவே தெரியலை அப்புறம் தானே பேச்சை எப்படி முடிப்பதுனு யோசிக்குறது. நல்லது சொன்னாலும் புடிக்காத பொல்லாத உலகம்டான்னு நினைச்சுகிட்டேன். நம்ப "காது காது" ன்னா அவங்க "லேது லேது"ன்னு புரிஞ்சுக்ககுறாங்க. Communication gap காது கெக்கலைனா வருது, சரியா புரிஞ்சுக்கலைனாலும் இதே பிரச்சனை.
கம்யூனிகேஷன் பத்தி கூகில் தேடி அதைப் பத்தி படிக்க போன நான், கம்யூனிகேஷன் சரியா இல்லாததால ஒரு மாமா பட்ட கஷ்டத்தை ஜவஹர் எழுதியிருந்ததை படிச்சு சிரிச்சுட்டேன். எப்படியெல்லாம் ஒருத்தனுக்கு சோதனை வருது பாரு! நாம சொல்ற விஷயம் எப்படி தவறா போய் சேருதுன்னு சொல்ற சின்ன வயசு "passing the secret" விளையாட்டு நினைவு வந்தது. ஜெஃப்ரி ஆர்ச்சருடைய குட்டிக் கதையின் தாக்கத்தை தமிழில் எழுதி செம்மை வெற்றி பெற்றிருக்கார் ஜவஹர். எனக்கு இதயமே நின்னுபோச்சு :O
எழுதி எழுதி உன் பேஜும் தீர்ந்து போச்சு. இது வரை என் பொலம்பலை கேட்ட உனக்கு புது வருஷத்துக்கு உனக்கு 2012 மாடல் புது ட்ரெஸ் உண்டு :)
~~~
என்ன பெரிசா குடி முழுகிப் போச்சு! முதிர்ச்சிங்கற பருவத்துல, வயசுல, அறிவுல, மனசுல, முதிர்ச்சி அடைஞ்சா காய் கனிஞ்சா கிடைக்கற சுவை வாழ்கைல கிடைக்குது. ரொம்ப அட்வைஸ் பண்றதால எனக்கும் பக்குவம் வந்துடுச்சுன்னு தப்பான அபிப்ராயம் அரசல் புரசலா ஊர்ல உலவுது.
சரி, டிவில "செல்லமே" சீரியல் இன்னிகானும் முடியுதான்னு பார்க்க கிளம்பணம். எத்தனை பிரச்சனை மனுஷனுக்கு!
இப்படிக்கு,
முதிரும் நீரோடை
****************
கோபம் வரும், சலிப்பு வரும் ஆனாலும் அதையும் போகிற போக்கில் விட்டு கொல்லுனு சிரிக்க பழகிக்கணும். நண்பர்கள் உறவினர்கள் என இருந்த மனிதன், சலிப்பு, வேலை பளு, உடல் ஆரோகியம் ஆகிய பல காரணங்களால் நிச்சயமாக இந்தக் காலகட்டத்தில் குடும்பத்திற்குள் தன்னை குறுக்கிக்கொள்கிறான்.
நடுத்திர வயதின் குணாதிசயங்களை புட்டுப் புட்டு வைக்கும் இந்தப் பாட்டை விட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.
இன்றைய அறிமுகங்களில் ஏறக்குறைய அனைவரும் பிரபலமான பதிவர்களாகி விட்டனர். அதனால் எனக்கு பிடித்த பதிவுகள் வரிசையிலே அடுக்கிவிடுங்கள்.
இனி துவளும் .............
|
|
நன்றி சக்திபிரபா.
ReplyDeleteநன்றி sir, வருகைக்கும் ....நல்ல கவிதைகளுக்கும். :)
ReplyDelete//காலைல அத்தை கிட்ட "நேத்து காப்பியே இன்னிக்கு copyஆ" ன்னு கேட்டேன். 'காலைலையே மொக்க m' ன்னு கடுப்பா சொல்லிட்டு போய்ட்டாங்க. என் மனசு மேலும் உடைஞ்சு போச்சு. இலக்கிய ஆர்வத்துக்கு அஸ்திவாரம் கூட போட விடமாட்றாங்க. அப்புறம் தானே கட்டடம் கட்டி வளர்க்கறது.//
ReplyDeleteஉங்களின் விளையாட்டான நகைச்சுவையை மிகவும் ரஸித்தேன்.
இன்றைய அறிமுகங்கள் யாவும் மிக அருமையே.
அதிலும் என் ஆருயிர் நண்பரும், நலம் விரும்பியும், பிரபல எழுத்தாளரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் சார் + எனக்கு சமீபத்தில் வலைத்தளம் மூலம் பழக்கமானவரும், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரும், திரைப்படப்பாடல் ஆசிரியருமான திரு. மதுமதி அவர்களையும் பாராட்டியுள்ளதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடரும்.... vgk
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களை தொகுத்து வழங்கிய விதம் அருமை..
ReplyDeleteஅதிகமாக யோசிக்கும் வயதை சுட்டிக்காட்டாமால்
'வரவர இளமைப்பருவத்தோட எல்லையில முதிர்ச்சியின் முனைல நிக்கறதாலையோ என்னவோ ரொம்ப அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்'
என்று சொன்னவிதம் அருமை..
தாங்கள் இன்றைய அறிமுகங்களில் என் பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..எனக்கு முன்னதாக எனது பதிவை சுட்டிக் காட்டியமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது நன்றி..
//ஹாஸ்ய கலந்த நச் கதை மூலமாத்தான் எனக்கு வை.கோபாலகிருஷ்ணன் அவங்களோட வலைதளம் அறிமுகமாச்சு.//
ReplyDeleteதங்களின் அறிமுகப்படலம் என் தமிழ்மண நட்சத்திரப்பதிவுகளில் [6.11.2011 To 13.11.2011]சென்ற மாதம் தான் தொடங்கியது.
தங்களில் ஆர்வமான எழுத்துக்களை எனக்குத் தாங்கள் அளித்த பின்னூட்டங்களில் கண்ட நான்,
HAPPY இன்று முதல் HAPPY என்ற 13/11/2011 அன்று நாள் வெளியிட்ட பதிவில், முன்பின் தெரியாத, உங்களை மிகவும் பாராட்டி கூட எழுதியிருந்தேன்.
http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html
//[**** புதிதாக வருகை தந்துள்ள Ms. ஷக்திபிரபா அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலும், ஊன்றிப்படித்தல் என்ற தனித்தன்மையும், மிகச்சரியாக திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் கருத்துக்களும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன. அவர்களுக்கு என்னுடைய கூடுதல் சிறப்பு நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் **** ]//
அதற்குள் எவ்ளோ தூரம் நம் நட்பு வளர்ந்துள்ளது என நினைக்கையில், மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
தொடர்வேன் ..... vgk
//எழுத்து மூலமா ஒருத்தரை சிரிக்க வெக்கறது எப்படி சிறந்ததோ, அதே மாதிரி நம்பிக்கை தர எழுத்துக்கள் இருந்தாலும் உற்சாகம் பிறக்கும் இல்லையா?! உன்கிட்ட முன்னமே அவரோட ஒவ்வொரு கதைகளையும் சொல்லி சிலாகிச்சிருக்கேன். //
ReplyDeleteஅடடா! ஏற்கனவே மார்கழி மாதம்!! ஒரே குளிர் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். இப்படி கிலோக் கணக்கா ஐஸ்கட்டியை என் தலையிலே வைச்சுட்டீங்களே!
தங்களின் அன்பென்ற ஐஸ் கட்டிகளில் கரைந்து கொண்டிருக்கும் “முதிரும் நீரோடைகள்” - நல்ல தலைப்பே!
தொடரும் ..... vgk
//பிடிச்ச பல கதைகள் இருக்கு, ஆனாலும் "பூபாலன்" கதை நமக்கு சொல்ற கருத்து பல கோணங்களில கால நேரம் தாண்டி விரிவடைஞ்சுட்டே இருக்குற மாதிரி தோணுது. இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.//
ReplyDeleteஎன்னென்னவெல்லாமோ சொல்லி
என்னைப்போலவே மிகச்சாதாரண, படிக்காத, கடைநிலை ஊழியரான, தெருகூட்டும் தொழிலாளியான “பூபாலன்” னுக்கு, “பிரமோஷன்” கொடுத்து “ஜாங்கிரி” யும் கொடுத்து அசத்திவிட்டீர்களே!
நீங்க .... நீங்கதான்.
வலைச்சர ஆசிரியர் அல்ல டீச்சர் சொன்னாக் கேட்டுக்கத்தான் வேண்டும்.
நீங்க எது சொன்னாலும் சரியே ... டீச்சர். OK டீச்சர். Bye Bye Teacher!!!
நன்றி, நன்றி, நன்றி!!!
என்றும் பிரியமுள்ள vgk
இன்றைய அறிமுகங்களும் சிறப்பாக செய்திருக்கீங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடாடா... அறிமுகங்களை தாங்கள் தொகுத்து வழங்கிய விதத்தை மிகவும் ரசித்தேன். அதில் பல பெரியவர்களுக்கு இடையில் இச்சிறியேனையும் சேர்த்து பெருமைப்படுத்தியதற்கு என் இதயம் கனிந்த நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகத்திற்கு மனப் பூர்வமாய் நன்றி.
ReplyDeleteவணக்கம் வை.கோ sir. வாங்க!
ReplyDelete//அதிலும் என் ஆருயிர் நண்பரும், நலம் விரும்பியும், பிரபல எழுத்தாளரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் சார் + எனக்கு சமீபத்தில் வலைத்தளம் மூலம் பழக்கமானவரும், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரும், திரைப்படப்பாடல் ஆசிரியருமான திரு. மதுமதி அவர்களையும் பாராட்டியுள்ளதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
//
நானும் பெரிதும் மகிழ்கிறேன்.
//HAPPY இன்று முதல் HAPPY என்ற 13/11/2011 அன்று நாள் வெளியிட்ட பதிவில், முன்பின் தெரியாத, உங்களை மிகவும் பாராட்டி கூட எழுதியிருந்தேன்.
//
எப்படி மறப்பேன்...உங்கள் பாராட்டும் ஊக்கத்திற்கும் பணிவான நன்றி :)
//அடடா! ஏற்கனவே மார்கழி மாதம்!! ஒரே குளிர் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். இப்படி கிலோக் கணக்கா ஐஸ்கட்டியை என் தலையிலே வைச்சுட்டீங்களே!
//
இது ஐஸ் இல்லை நிஜம். உங்க கதைகளை இதே காரணம் கூறி என் கணவரிடமும் அம்மாவிடமும், பகிர்ந்திருக்கிறேன் :)
//மிகச்சாதாரண, படிக்காத, கடைநிலை ஊழியரான, தெருகூட்டும் தொழிலாளியான “பூபாலன்” னுக்கு, “பிரமோஷன்” கொடுத்து “ஜாங்கிரி” யும் கொடுத்து அசத்திவிட்டீர்களே!//
பூபாலன் செய்யும் தொழ்லும் அருமை. அவர் மனதின் பக்குவத்திற்கு ஜாங்கிரி பிரமோஷன் கூட பத்தாது :)
நன்றி சார்....வருகைக்கும்....மிகுந்து ஊக்கமளித்து வரும் தங்கள் பின்னூட்டத்திற்கும் :)
வாங்க மதுமதி மிக்க நன்றி :)
ReplyDeleteசுட்டெரிக்கும் சூரியன் என் மனதில் பதிந்த ஆக்கம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
வாங்க லக்ஷ்மீம்மா ரொம்ப ரொம்ப நன்றி :) தொடர் வருகையும் படித்து கருத்திடுவதற்கும்....
ReplyDeleteவாங்க கணேஷ்,
ReplyDeleteஉங்க சரிதா பக்கம் களை கட்டுது :)
சரிதா அவங்க கணவனின் குட்டை உடைத்த பதிவும் சூப்பர் :)
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
//வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு மனப் பூர்வமாய் நன்றி. //
ReplyDeleteவாங்க ரிஷபன் sir. வலைச்சரத்திற்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றி. :)
பல சிறப்பான அறிமுகங்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
ReplyDeleteமிகச் சுவாரஸ்யமாய் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள் அனைவரையும்...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டவர்களில், ராஜாசந்திரசேகர்,ரவி ஆதித்யா, ஜவஹர்லால் ஆகியோரின் பதிவுகள் எனக்கும் பிடிக்கும்...!
அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஷக்திப்ரபா...!
இன்னும் நிறைய வரைய ஊக்கமளிக்கிறது...!
இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..
சரி, டிவில "செல்லம்மா" சீரியல் இன்னிகானும் முடியுதான்னு பார்க்க கிளம்பணம். எத்தனை பிரச்சனை மனுஷனுக்கு!??????????!!!!!!!!
ReplyDeleteமுதிரும் நீரோடை
ReplyDeleteஅருமையான தலைப்பு !
ஒவ்வொருவரையும் நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம்
ReplyDeleteமிக அழகு.
வை.கோ. ஐயா, நண்பர் கணேஷ், ரிஷபன் ஆகியோரின் எழுத்துக்கள்
எனக்கு பரிச்சயம்...
அழகான எழுத்துச் சித்தர்கள் அவர்கள்.
சிறப்பான பதிவர்களை டைரியுடன் பேசி அறிமுகம் செய்த விதம் மேலும் சிறப்பு ஷக்தி!
ReplyDeleteமிக்க நன்றி விச்சு ...உங்களின் ஆக்கம் எனக்கு பிடித்திருந்தது :)
ReplyDeleteவாங்க தமிழ்ப்பறவை,
ReplyDeleteஉங்களுக்கும் பிடிக்குமா! மகிழ்ச்சி :)
//இன்னும் நிறைய வரைய ஊக்கமளிக்கிறது...!
//
பிரமாதமான கலை கைவரப்பெற்றிருக்கிறீர்கள். தத்ரூபமாய் model வைத்து வரைவதும் அருமை. வாழ்த்துக்கள்...தொடருங்கள்
வருகைக்கு ஊக்கத்திற்கும் நன்றி ராஜேஸ்வரி :)
ReplyDelete"செல்லமே" என்றிருக்க வேண்டுமா?
சீரியல் எல்லாம் பார்க்காத ரகம் நான். தெரிந்த மாதிரி கதை விட்டால் மாட்டிக்கொண்டேன் :D
நன்றி :) திருத்திக்கொண்டேன்.
வாங்க மகேந்திரன், தினமும் வந்து, படித்து, நீங்க தரும் ஊக்கம், எனக்கு சந்தோஷம். :)
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி, உங்கள் ஊக்கத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)
ReplyDeleteஎல்லேமே நல்ல பகிர்வுகள் , நல்ல ரசனை
ReplyDeleteஅறிமுகங்கள் புதுமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாய்பிரசாத் :)
ReplyDeleteவாங்க nizamudeen. தினம் வந்து படிச்சு பாராட்டுறதுக்கு அனேக நன்றி :)
மிகவும் சுவாரஸ்யமாக டைரியுடன் பேசிய விதம் பாராட்டுக்குரியது. புது புது விசயங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றிகள். எவ்வளவோ படிக்க வேண்டி இருக்கிறது.
ReplyDelete//கோபம் வரும், சலிப்பு வரும் ஆனாலும் அதையும் போகிற போக்கில் விட்டு கொல்லுனு சிரிக்க பழகிக்கணும். நண்பர்கள் உறவினர்கள் என இருந்த மனிதன், சலிப்பு, வேலை பளு, உடல் ஆரோகியம் ஆகிய பல காரணங்களால் நிச்சயமாக இந்தக் காலகட்டத்தில் குடும்பத்திற்குள் தன்னை குறுக்கிக்கொள்கிறான்.//
ரசித்தேன்
இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை. இவர்களுள் பெரும்பாலானவர்களின் பதிவுகளைப் படித்திருக்கிறேன். பதிவர்களுக்கும் அறிமுகப்படுத்தியத் தங்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாக்ருஷ்ணன், கீதா :)
ReplyDeletelooks like a big world out there.i mean valaicharam
ReplyDeletesk
looks like 'valaicharam'is a big world out there unexplored by us.
ReplyDeletesk
நன்றி நீலா/sk :)
ReplyDelete