சென்று வருக தாரிக் அஹமது - வாங்க வாங்க ஷக்தி பிரபா
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற தாரிக் அஹமதிற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.
நாளை முதல் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த சகோதரி ஷக்தி பிரபா மின்மினிப்பூச்சிகள் என்ற தளத்தில் எழுதி வருகிறார். கற்றல்' என்பதில் ஆர்வம் இவருக்கு இன்னமும் குறையாதிருப்பதால், என்றென்றும் மாணவி. பத்து வயது குட்டிப் பெண்ணின் தாய். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. இவரது வலைத்தளத்தில் "எங்கே பிராமணன்" தொடரில் 'சோ' அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆன்மீக கதைகளை/விளக்கங்களை மட்டும் தொகுத்து வருகிறார். அது தவிர இவருக்கு கதை கவிதைகளில் ஆர்வம் அதிகம். ஆன்மீகம் தொடர்பாக அவ்வப்பொழுதேனும் சின்னச் சின்ன விஷயங்களைப் படிப்பதும், பகிர்ந்து கொள்வதையும் இவரது தலையாய கடமையாய் நினைக்கிறார்.
சகோதரி ஷக்திப் பிரபாவினை வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் தாரிக் அஹமது
நல்வாழ்த்துகள் ஷக்தி பிரபா
நட்புடன் சீனா
|
|
|



சோதனை மறுமொழி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த, வாசிப்பு அனுபவங்கள் நிறைந்த, ஆற்றலும் ஆர்வமும் ஒருங்கே அமைந்த எங்கள் பேரன்புக்குரிய திருமதி ஷக்திப் பிரபா அவர்களை வருக! வருக!! வருக!!! என இரு கரம் கூப்பி வரவேற்பு அளிப்பதில் மகிழ்கிறோம்.
ReplyDeleteஇந்த வார அறிமுகங்கள் மிகவும் ஷக்தி மிக்கதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மிகச்சரியானதொரு நபரைத் தேர்ந்தெடுத்துள்ள என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி ஷக்தி பிரபா அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் பணி மிகச்சிறப்பாக அமையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
என் மனமார்ந்த ஆசிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பிரியமுள்ள vgk
புதிதாக ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் சகோதரியை வரவேற்கிறோம்,
ReplyDeleteசிறப்புடன் பணியாற்றிய சகோதரருக்கும்,பொறுப்பேற்கவுள்ள சகோதரிக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த பதிவுலகில் புதியவன். இந்த தளத்திற்கு இன்று தான் வருகிறேன். உதவிய தங்கம் பழனி நண்பருக்கு நன்றி. திருமதி சக்தி பிரபா அவர்களை வரவேற்கிறேன். பதிவுகளை நானும் படிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி!
ReplyDeleteஇந்த வாரம் என் வலையில் புது பதிவு :
"நீங்க மரமாக போறீங்க..." (என்ன மரம் ஆவீங்க?)
சென்ற வார வலைச்சரத்தை அழகுற
ReplyDeleteஅலங்கரித்த நண்பர் தாரிக் அகமத்
அவர்களுக்கும்,
இந்த வார வலைச்சரத்த இனிதே
தொடுக்க வரும் சகோதரி சக்தி பிரபா
அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சீனா ஐயா,
ReplyDeleteவைகோ சார். (ரொம்பவே நம்பிக்கை வெச்சிருக்கீங்க!)
நன்றி & வாழ்த்துக்கள் தாரிக். சிறப்பான பணியை நிறைவேற்றினீர்கள். பெண்களுக்கான பதிவும், photography பற்றிய பதிவும் படித்தேன். பிடித்திருந்தது. நன்றி :)
வரவேற்புக்கு மிக்க நன்றி கோகுல், திண்டுக்கல் தனபாலன், மகேந்திரன் :)