07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 21, 2012

விழாமலிமூதூரிலிருந்து…

மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ (சிலம்பு 24;5) என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது. அது மட்டுமின்றி, தமிழ் மாதங்களின் பெயர்களாலேயே தெருப்பெயர்கள் அமைந்துள்ளதும் மதுரையின் மற்றுமொரு சிறப்பாகும். மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.       -நீரின்றி(தானம் அறக்கட்டளை நூலிலிருந்து)

திருவிழாக்களின் நகரம் என்றால் மதுரைதான். சித்திரைத்திருவிழாவை திருவிழாக்களின் திருவிழா எனலாம். அதுவும் சித்திரைத்திருவிழாவென்றால் பொருள்காட்சியும், சர்க்கஸூம் என ஊரே கொண்டாட்டமாயிருக்கும். நர்சிம், ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி பதிவுகளை வாசித்துப்பாருங்கள். சித்திரைத்திருவிழா, தெப்பத்திருவிழா குறித்து கவிதை நடையில் வாசிக்க பட்டறிவும்பாடமும் தளத்தைப்பாருங்கள். தீபாவளியின் போது வந்த அம்புலிமாமாவின் அட்டைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? டீ குடித்த ஆண்டாளைக் கேள்விப்பட்டீருக்கிறீர்களா? வாசித்துப்பாருங்கள்.
ஜெயமோகன் நண்பர்களுடன் திற்பரப்பு சென்ற அனுபவம் குறித்த பதிவை வாசித்துப் பாருங்கள். அப்படியே கீற்றில் சுற்றுலா பகுதியை வாசித்துப் பார்த்து இந்த விடுமுறைக்கு ஊர் சுற்றி வாருங்கள். விடுமுறையென்றாலே விளையாட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. எந்நேரமும் விளையாட்டுத்தான். மக்களாட்சி என்னும் தளத்தில் மறைந்துவரும் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது என படங்களுடன் அழகாக விளக்குகிறார். கூடுதளத்திலும் விளையாட்டுக்கள் குறித்த பதிவை வாசியுங்கள். கிரிக்கெட்தவிர நிறைய நல்ல விளையாட்டுகள் உள்ளன.
தபூசங்கரின் கவிதைகள் வாசித்திருக்கிறீர்களா? விகடனில் தேவதைகளின் தேவதை தொடர் வந்த போதெல்லாம் நான் அவரின் தீவிர ரசிகன். அவரின் காதல் கவிதை புத்தகங்களை எல்லாம் நிறைய வாங்கி வாசித்திருக்கிறேன். சுந்தர்ஜி, நிலாரசிகன், ஊர்சுத்தி, ஃபஹீமாஜஹானின் கவிதைகளையும் வாசித்துப்பாருங்கள். ரத்னவேல் நடராஜன் அவர்களின் தளத்தைப் பாருங்கள். நல்ல தகவல்களாக தொகுத்து வருகிறார். தோல்பாவைக்கூத்து குறித்து அறிந்து கொள்ள ஜீவாவின் ஓவியக்கூடம் வாருங்கள்.
ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு சென்றிருந்தேன். அதில் முக்கியமான ஆளுமைகள் பதினைந்து பேரைத்தேர்ந்தெடுத்து கௌரவித்தார்கள். வம்சி சிறுகதைப்போட்டி நடத்தியது. அதில் வெற்றிபெற்ற பதிவர்களின் சிறுகதைகளை வாசித்துப்பாருங்கள். வம்சி புத்தகமாக அந்த சிறுகதைகளை வெளியிட்டது. மதுரையில் நடந்த அந்த விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்வுக்கு வந்திருந்த பட்சிகளின் வானம் அசோக்குமார் அவர்களுடன் சித்திரவீதிகளில் சுற்றினேன். 

அடிக்கிற வெயில்ல தண்ணி தாகமெடுத்து நாமே அலையும் போது பாவம் பறவைகள் என்ன செய்யும்? அவைகளுக்கு தினமும் கொஞ்சம் உணவும், குடிக்க தண்ணீரும் வைக்கலாமே. நம் வீட்டையே பறவைகளின் சரணாலயமாக்குவோம்.
மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

5 comments:

  1. விழாமலி மூதூர்’ அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. துவக்கம் அருமை ..,

    அறிந்திராத சில தகவல்களுடன் ..! :)

    ReplyDelete
  4. வம்சி விழாவுக்குப் போயிருந்தீர்களா? சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிட்டேனே!
    இத்தனை பதிவுகளைத் தொடர்ந்து படிப்பது மலைப்பாக இருக்கிறது.. அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது