07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 14, 2012

நாடோடியின் பார்வையில்_இலவச நூல்கள்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

விருப்பமான நூல்களைப் படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம், சிறுவர்களாக இருக்கும் போது படங்களுடன் கூடிய காமிக்ஸ்களை விரும்பிப் படிப்போம், அதன் பிறது வரலாறுச் சார்ந்த நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். இவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் அவரவர் விருப்பமான் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்போம். படிக்கும் சூழ‌லும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அமையும், சிலர் தனியாக இயற்கையை ரசித்தப்படிப் படிப்பார்கள், சிலர் பேருந்தில்/ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் படிப்பார்கள், இன்னும் சிலர் இரவில் கண் விழித்துப் படிப்பார்கள்.

பழைய நூல்களையும், நல்ல நூல்களையும் தேடிப்பிடித்து வாங்குவது என்பது கொஞ்சம் சிரமமானக் காரியம், அதுவும் என்னைப் போல் ஊர்ச் சுற்றிக் கொண்டிருப்பவர்களும், அயல் நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இயலாத காரியம். அப்படியே தேடிப்பிடித்து நான்கு நூல்களை வாங்கினாலும் அதைப் பயணத்தின் போது சுமந்துச் செல்வது என்பதும் கொஞ்சம் கஷ்டம், காரணம் பிளைட்டில் லக்கேஜ் பிரச்சனை, அதுவும் சவுதி போன்ற நாடுகளில் கஸ்டம்ஸ் செக்கிங் என்பதும் ஒரு பிரச்சனை, கலர் படங்களைப் பார்த்தாலே சவுதிப் போலீசுக்கு ஆகாது.

இப்படிப் பல பிரச்சனைகள் இருப்பதால் இணையத்தில் படிப்பது தான் என்னைப் போன்றவர்களுக்கு எளிது. இணையம் அறிமுகமான புதிதில் தினசரி நாளிதழ்களையும், தமிழ் வலைத்தளங்களில் எழுதப்படும் பதிவுகளை மட்டுமே படித்து வந்தேன். பின்பு எனக்குச் சில வலைத்தளங்கள் அறிமுகமாயின. அவைகள் முற்றிலும் பழைய மற்றும் புதிய‌த் தமிழ் நூல்களை மின்னூல்களாகக் கொடுக்கும் வலைத்தளங்கள். இவைகளின் மூலம் நான் பல தமிழ் நூல்களை இலவசமாக‌த் தறவிறக்கம் செய்து படித்துள்ளேன். அவைகளை உங்களுக்கும் நான் அறிமுகம் செய்கிறேன்.

இவர் "தமிழ் புத்தக அலமாரி" என்று வலைத்தளப் பெயரிட்டுப் பல நூல்களை மின்னூல்களாகத் தொகுத்து நமக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் நூல்களைப் பற்றிய ஒரு முன்னுரையும் கொடுக்கிறார். நீங்களும் சென்று தேவையானவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தமிழ் புத்தக அலமாரி

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

இவர் "உங்களுக்காக‌" என்று வலைத்தளப் பெயரிட்டு அதில் இணையத்தில் கிடைக்கும் அனைத்து இலவசத் தறவிறக்கத் தமிழ் மின்னூல் முகவரிகள் எல்லாவற்றையும் ஒரே தொகுப்பின் கீழ் கொண்டு வந்து பதிந்துள்ளார். உங்களுக்குத் தேவையான நூல்களைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

"முயற்சி வெற்றி தரும்" என்று வலைத்தள பெயரிட்டு பல நாவல்களின் தரவிறக்க மின்னூல் முகவரிகளை தொகுத்துள்ளார். நாவல் பிரியர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாவல்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

"எண்டர் பிளஸ்" என்ற இந்த வலைத்தளத்தில் வலைத்தளத்திற்கு உபயோகமான தகவல்களும், மற்றும் பல பயனுள்ள தகவல்களுடன் பல மின் நூல்களையும் தர‌விறக்கம் செய்யும் வசதியையும் கொடுக்கிறது.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

இது முழுமையாக தமிழ் நாவல்களின் தளம். நாவல் விரும்பிகள் கட்டாயம் இணைந்திருக்க வேண்டிய வலைத்தளம். நாவல் ஆசிரியரின் பெயரில் வகைப்படுத்தி தொகுத்துள்ளார்.

தமிழ் நாவல்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அமரர் கல்கி எழுதிய பல நாவல்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.  படிக்க விரும்புபவர்கள் சென்று படிக்கலாம்.

Classical Tamil Stories

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

ஆங்கில நூல்கள், சமையல் நூல்கள் மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் என்று தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் சென்று படித்து பாருங்க.

E-BOOKS

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

கவிதை பிரியர்களுக்கு இந்த வலைத்தளம். தபுசங்கரின் கவிதைகள் மற்றும் வைரமுத்துவின் கவிதைகளை மென் நூல் ஆக மாற்றித் தரவிறக்கம் செய்யத் தருகிறார்.

தபூ சங்கரின் 4 புத்தகங்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

எல்லா தமிழ் செய்தித்தாகளும், வார இதழ்களும் மற்றும் நாவல்களும் மின் நூல்களாக தருகிறார். இங்கும் சென்று படியுங்கள்.

e-News Tamil

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அனைவரும் அறிந்த சில பிரபலமான தரவிறக்கம் செய்ய கூடிய‌ மின்னூல் தளங்களின் முகவரிகளையும் கீழே இணைத்துள்ளேன்.

TAMIL E-BOOKS DOWNLOADS

தமிழ்த் தேனி

அழியாச் சுடர்கள்

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். சில புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....

38 comments:

  1. அனைத்தும் குறித்துவைத்துக் கொள்ளவேண்டிய அருமையான தளங்கள்..

    பகிர்வுக்கு நிறைவான பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அன்பின் நண்பரே...

    பதிவர்கள் மட்டுமல்ல இப்பதிவினை வாசிக்கும் அனைவரும் நிச்சயம் புக்மார்க் செய்யவேண்டிய பதிவு..

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. அருமையான கலக்சன், நிச்சயம் பயனுள்ள பதிவு நண்பரே, தொடருங்கள்!

    ReplyDelete
  4. பலருக்கும் பயன்படும் நல்லதொரு தொகுப்பு...

    இதை விட என்ன வேண்டும்...? பாராட்டுக்கள்...

    மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... (TM 4)

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு , பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  6. புத்தகவாசிப்புதான் ஒவ்வொரு மனிதனையும் மேம்படுத்துகிறது. நல்ல புத்தகங்களை இணையத்தில் வாசிக்க, தரவிறக்க முகவரிகளைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. அட்டகாசமான அறிமுகங்களுக்கு மிக்க நன்றி !
    பயனுள்ள புதுமையான பதிவு நண்பரே !

    ReplyDelete
  8. புத்தகப் பதிவுகள்...மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. @இராஜராஜேஸ்வரி said...
    //அனைத்தும் குறித்துவைத்துக் கொள்ளவேண்டிய அருமையான தளங்கள்..

    பகிர்வுக்கு நிறைவான பாராட்டுக்கள்..//

    வாங்க சகோ,

    வருகைக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  10. @சம்பத்குமார் said...
    //அன்பின் நண்பரே...

    பதிவர்கள் மட்டுமல்ல இப்பதிவினை வாசிக்கும் அனைவரும் நிச்சயம் புக்மார்க் செய்யவேண்டிய பதிவு..

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்//

    நண்பரின் மனமுவர்ந்த பாரட்டுக்கு மிக்க‌ நன்றிகள்..

    ReplyDelete
  11. @வரலாற்று சுவடுகள் said...
    //அருமையான கலக்சன், நிச்சயம் பயனுள்ள பதிவு நண்பரே, தொடருங்கள்!//

    தொடர் வருகைக்கும், வழ்த்துகும் ரெம்ப நன்றி நண்பா..

    ReplyDelete
  12. @திண்டுக்கல் தனபாலன் said...
    //பலருக்கும் பயன்படும் நல்லதொரு தொகுப்பு...

    இதை விட என்ன வேண்டும்...? பாராட்டுக்கள்...

    மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... (TM 4)//

    தொடர் வருகைக்கும், வழ்த்துகும் ரெம்ப நன்றி தனபாலன்..

    ReplyDelete
  13. @Seeni said...
    //sako!

    mikka nantri!//

    தொடர்ந்து வாருங்கள் சகோ..

    ReplyDelete
  14. @Gnanam Sekar said...
    //நல்ல தொகுப்பு , பகிர்வுக்கு நன்றி .//

    தொடர் வருகைக்கும், வழ்த்துக்கும் ரெம்ப நன்றி சேகர்..

    ReplyDelete
  15. @சித்திரவீதிக்காரன் said...
    //புத்தகவாசிப்புதான் ஒவ்வொரு மனிதனையும் மேம்படுத்துகிறது. நல்ல புத்தகங்களை இணையத்தில் வாசிக்க, தரவிறக்க முகவரிகளைத் தொகுத்து தந்தமைக்கு நன்றி.//

    வாங்க மதுரைகாரரே..

    புத்தகம் வாசிப்பது எனக்கும் ரெம்ப பிடித்த ஒன்று.. கருத்துக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. @ஸ்ரவாணி said...
    //அட்டகாசமான அறிமுகங்களுக்கு மிக்க நன்றி !
    பயனுள்ள புதுமையான பதிவு நண்பரே !//

    மனமுவர்ந்த பாரட்டுக்கு மிக்க‌ நன்றிகள் சகோ..

    ReplyDelete
  17. @ kovaikkavi said...
    //புத்தகப் பதிவுகள்...மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.//

    தொடர் வருகைக்கும், வழ்த்துக்கும் ரெம்ப நன்றி ச‌கோ..

    ReplyDelete
  18. என் வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    சுதந்திரதினம் பற்றிய என் பதிவு:
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  19. நமக்கெல்லாம் இப்படி ஏதாவது பண்ணித் தான் வாசிக்கவேண்டியதா இருக்கு. புக்மார்க் பண்ணிட்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  20. நல்லதொருபகிர்வு நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  21. அனைத்தும் அருமையான தளங்கள்.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  22. மிகப் பயனுள்ள தளங்கள்.. தகவல்கள்..
    சேவையை மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  24. @Vijayan.Durairaj said...
    //என் வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    சுதந்திரதினம் பற்றிய என் பதிவு:
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_14.html//
    வாங்க நண்பரே,

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி
    கண்டிப்பாக வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  25. @ஹாலிவுட்ரசிகன் said...
    //நமக்கெல்லாம் இப்படி ஏதாவது பண்ணித் தான் வாசிக்கவேண்டியதா இருக்கு. புக்மார்க் பண்ணிட்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.//

    வாங்க நண்பரே,

    உண்மைதான்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

    ReplyDelete
  26. @நல்லதொருபகிர்வு நன்றி!

    //இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html//

    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சுரேஷ், உங்கள் தளம் வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  27. @சே. குமார் said...
    //அனைத்தும் அருமையான தளங்கள்.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

    வாங்க குமார்

    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  28. @மலரின் நினைவுகள் said...
    //மிகப் பயனுள்ள தளங்கள்.. தகவல்கள்..
    சேவையை மேலும் தொடர வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி சகோ..

    ReplyDelete
  29. @Rasan said...
    //பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே//

    வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  30. எல்லாமே மிகவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. @Lakshmi said...
    //எல்லாமே மிகவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.//

    உங்களின் வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  32. உபயோகமான தகவல்கள் தோழரே உங்களின் இந்த பதிவு! வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  33. புத்தகங்களைக் கையில் பிடித்து, நினைத்த மாதிரி அமர்ந்து - படுத்து - நின்று - படிப்பதே சுகம். எனினும், காலத்தின் கட்டாயத்தால் இதுபோன்ற ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’களுக்கும் மாற வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  34. @Ayesha Farook said...
    //உபயோகமான தகவல்கள் தோழரே உங்களின் இந்த பதிவு! வாழ்த்துக்கள்....//

    வாங்க சகோ,

    உங்களுக்கு உபயோகமான‌ தளங்களை அறிய தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  35. @ஹுஸைனம்மா said...
    //புத்தகங்களைக் கையில் பிடித்து, நினைத்த மாதிரி அமர்ந்து - படுத்து - நின்று - படிப்பதே சுகம். எனினும், காலத்தின் கட்டாயத்தால் இதுபோன்ற ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’களுக்கும் மாற வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பயனுள்ள பதிவு. நன்றி.//

    வாங்க சகோ,

    நீங்கள் சொல்வதும் உண்மைதான். அமைதியான சூழலில் படிப்பது எனக்கும் ரெம்ப பிடித்த ஒன்று. ஆனால் நமக்கும் அந்த வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே..

    ReplyDelete
  36. மிகத் தேவையான பகிர்வு.மிக்க நன்றி.பகிர்வுகள் எல்லாம் நச்சென்று இருக்கு.பாராட்டுக்கள் பல சகோ.

    ReplyDelete
  37. நண்பர் திண்டுகல் தனபாலன் போல ஏகப்பட்ட நண்பர்களை பெற்றுதந்த பதிவு இது.

    http://tamilebooksdownloads.blogspot.in/

    ஐ அறிமுகம் செய்தமைக்கு நன்றி.,

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது